14/11/2020
ரெஸ்டாரண்ட் மெனுகார்ட் வடிவமைப்பு...
(டிஜிட்டல் டியூட்ஸின் கைவண்ணத்தில் இருந்து)
Client 1 - AppleBee's - Nintavur
நிந்தவூரின் இன்னுமொரு புதிய வரவுதான் இந்த அப்பிள்பீஸ், பல வகையான உணவுகளை தரத்தின் உச்ச அளவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்பும் ஒரு நிறுவனம். சில் சில் சிலல்லா என்று பாடிக்கொண்டே வரும் சிஸ்லிங்க் ஆகட்டும், பாஸ்மதி அரிசியில் பிரியாணி வகைகளாகட்டும், அவசரத்துக்கு ருசியாய் பாஸ்ட் பூட் வகைகளாகட்டும் என இன்னும் பல வித்தியாசமான உணவுகளை அறிமுகப்படுத்தி இருக்கும் இவ் உணவகம் வளர வாழ்த்துக்கள்.
Client 2 - Fish Beach - Nintavur
நிந்தவூரில் இயங்கி வரும் இந்த ஃபிஸ் எண்ட் பீச் உணவகம். கடலுணவு வகைகளை கடற்கரைக் காற்றோடு குடும்ப சகிதம் புசித்தும் ருசித்தும் மகிழ்வதற்கு ஏற்ற ஒரு உணவகம். மீன், இறால், கணவாய், இறைச்சி, கோழி என அத்தனையும் சுட்டதாகவும், பொரித்ததாகவும் பெறுவதோடு சப்பாத்தி மற்றும் விசேட ரைஸ்களையும் பெற்றுக்கொள்ளக் கூடிய இவ் உணவகத்திற்கு என் வாழ்த்துக்கள் உண்டாகட்டும்!
Client 3 - Vayal Vaadi - Oluvil
தென்கிழக்கு கரையோரத்தில் பாஸ்ட்பூட் உணவகத்திற்காக பிரபலமான உணவகம் இது.
தங்களுடைய 3 வருட நிறைவையொட்டி புதுவிதமான உணவுகளை இவர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள், அதில் விசேடமாக கடலுணவு வகைகள் மற்றும் காடை என சுட்டது மற்றும் பொரித்ததாய் வாடிக்கையாளருக்கு இன்னுமின்னும் விருந்து படைக்க காத்திருக்கும் வயல் வாடிக்கும் எமது வாழ்த்துக்கள்.
Designed By - Matheen Maaraa
from Digital Dudes Brandings...