20/11/2024
நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர் ஒருவர் தேசிய மட்டத்தில் 2 பதக்கங்களுடன் வரலாற்றுச் சாதனை - பாடசாலை விளையாட்டுத் துறையில் தொடர்ச்சியாக தேசியமட்ட ரீதியிலான சான்றிதழ்கள் பதக்கங்கள் சுவீகரித்து கௌரவம்
20 நவம்பர் 2024 | புதன்கிழமை
கல்வி அமைச்சுடன் இணைந்து, இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 2024 ஆம் ஆண்டின் தேசிய மட்ட சேர் ஜோன் ரபட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்சிப் கடந்த மூன்று நாட்களாக(18,19,20) மாத்தறை கொடவில விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
தேசிய மட்ட சேர் ஜோன் றபட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் இரண்டாம் நாளான (19) நேற்று எமது அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை சார்பாக 12 வயதுப்பிரிவைச் சேர்ந்த
MOHAMED HARIS MOHAMED HINZAN எனும் மாணவர் 80M ஓட்டப்பந்த நிகழ்ச்சியில் 11.00 (SEC) வினாடியில் ஓடி முடித்து 03ம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும், அதே போல் இன்றைய தினம்(20) நடைபெற்ற 100M ஓட்டப்பந்தயத்தில் 14.00 (SEC) வினாடியில் ஓடிமுடித்து மீண்டும் மூன்றாமிடம் பெற்று மற்றுமொரு வெண்கலப்பதக்கத்தையும் வென்று, கிழக்கு மாகாணத்திற்கும், பாடசாலைக்கும் வரலாற்று சாதனையை தடம்புகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இதுபோல், பல மாணவர்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தேசியமட்ட பல போட்டிகளில் கலந்து பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள்களை எமது பாடசாலை சுவீகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இளம் வயதில் வியர்வை சிந்தி விளையாட்டுத்துறையில் சாதனை படைத்து வரும் இம்மாணவருக்கு பயிற்றுவித்த பொறுப்பாசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர், மாணவனை அழைத்துச் சென்று வழிநடாத்திய உடற்கல்வி ஆசிரியர் A. HALEEM AHAMETH மற்றும் அனைத்து வழிகளிலும் உதவிபுரிந்து ஒத்துழைப்பு வழங்கிய மாணவனின் அன்பு பெற்றோர்களுக்கும்
அஷ்ரக்கியன் 2021 வகுப்பு பழைய மாணவர்கள் சார்பாக நாமும் வாழ்த்தி, பிரார்த்தித்து, நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
" முன்னேறி வெல்வோம் "
- ஊடகப் பிரிவு -
21` ASHRAQIAN MEDIA UNIT
| | |