The Murasu

The Murasu Murasu News is the news website

சபாநாயகர் இராஜினாமா
13/12/2024

சபாநாயகர் இராஜினாமா

பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.சபாநாயகர் அச....

சபாநாயகர் இராஜினாமா கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்த பிரச்சினை சமூகத்தில் எழுந்துள்ளது. எனது கல்வித் தகுதி ...
13/12/2024

சபாநாயகர் இராஜினாமா

கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்த பிரச்சினை சமூகத்தில் எழுந்துள்ளது. எனது கல்வித் தகுதி குறித்து நான் எந்த தவறான கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், தற்போது கல்வித் தகுதியை உறுதிப்படுத்த தேவையான சில ஆவணங்கள் என்னிடம் இல்லாததாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டியதாலும், அந்த ஆவணங்களை உடனடியாக சமர்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனக்கு முனைவர் பட்டம் வழங்கிய ஜப்பானில் உள்ள Waseda பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து தொடர்புடைய கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்கும் திறன் என்னிடம் உள்ளது, மேலும் அவற்றை விரைவில் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

எவ்வாறாயினும், ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எம்மீது நம்பிக்கை வைத்துள்ள அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக நான் தற்போது வகிக்கும் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

13.12.2024

பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்...
12/12/2024

பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பைக்குமிடையிலான சந்திப்பு

கே எ ஹமீட்

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் தமிழ், ஆங்கிலம், உடற்கல்வி, ஆரம்பக்கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இஸ்லாம் பாடங்களுக்கான பயிற்சி பெறும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு விண்ணப்பித்த அனைத்து பயிற்சி ஆசிரியர்களுக்கும் வெவ்வேறு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளதால் பயிற்சி ஆசிரியர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதனால் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் மேற்படி ஆசிரியர்களின் பயிற்சிகளுக்கான அனுமதியினை வழங்க வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம மந்திரியிடம் கோரிக்கை விடுத்ததுடன்

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள பொத்துவில் பிரதேசத்திற்கான புதிய கல்வி வலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொத்துவில் பிரதேசத்திற்கான புதிய கல்வி வலயத்திற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. எனவே பொத்துவில் பிரதேசத்திற்கான புதிய கல்வி வலயத்தினை அமைப்பதற்கான அனுமதியினை வழங்க வேண்டும் என பிரதம மந்திரியிடம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

மேற்படி விடயங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக பிரதம மந்திரி தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்

12/12/2024

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் நால்வர் பெயரிடப்பட்டனர்...

Read More >>> https://news1st.lk/4gvZwMy

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சஜித் தரப்பு எச்சரிக்கை
12/12/2024

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சஜித் தரப்பு எச்சரிக்கை

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கல்வித் தகுதியின் நம்பகத்தன்மையை தெளிவுபடுத்தத் தவறினால், அவருக்கு எதிராக நம...

அநுர தரப்புக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ள சபாநாயகரின் கல்வித் தகைமை தொடர்பான சர்ச்சை
12/12/2024

அநுர தரப்புக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ள சபாநாயகரின் கல்வித் தகைமை தொடர்பான சர்ச்சை

சபாநாயகர் அசோக ரன்வல்லவின்(Ashoka sapumal rangwalla) கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சைகள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(...

நாட்டை விட்டு வெளியேறிய எரிபொருள் தாங்கி கப்பல்
12/12/2024

நாட்டை விட்டு வெளியேறிய எரிபொருள் தாங்கி கப்பல்

எரிபொருள் விநியோக நிறுவனம் ஒன்றுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, 30,000 மெற்றிக் தொன் எரிபொருளை நாட்டுக்கு இறக்கும.....

■ ரணில் விடுத்த கோரிக்கை▪︎கபீர் ஹாசிம், காவிந்த இருவருடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரணில் விடுத்த கோரிக்கை!முன்னாள் ...
12/12/2024

■ ரணில் விடுத்த கோரிக்கை▪︎

கபீர் ஹாசிம், காவிந்த இருவருடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரணில் விடுத்த கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோருக்கே அவர் அழைத்து பேசியுள்ளார்.

தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது எம்.பி.க்களின் கல்வித் தகமைகளை ஆராய தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோருமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாராளுமன்றத்தின் அதியுயர் பதவியான சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினரின் கல்வித் தகைமை தொடர்பில் இன்றைய நாட்களில் பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் குரல் எழுப்பி தலையிட வேண்டுமென சம்பந்தப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

CongratulationsNizam Kariyapper PC,Member of Parliament Secretary General - SLMCஅல்ஹம்துலில்லாஹ், ஐக்கிய மக்கள் சக்தியின...
12/12/2024

Congratulations
Nizam Kariyapper PC,
Member of Parliament
Secretary General - SLMC

அல்ஹம்துலில்லாஹ்,

ஐக்கிய மக்கள் சக்தியின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான
தேசிய பட்டியல் ஊடாக கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவாகள்
பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்கிறார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது ஏற்கணவே இணங்கி கொண்டவாறு தனது தேசியப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்த எமத ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலளார் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் அவர்களுக்கு தேசியப் பட்டியலின் ஊடாக பாரளமன்றம் செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
அல்ஹம்துலில்லாஹ் .
கல்முனை மண் ஜனாதிபதி சட்டத்தரணியும் கட்சியின் செயலளாருமாகிய நிஸாம் காரியப்பர் அவர்களினால் பெருமை அடைகிறது.
சதிகாரனுக்கு எல்லாம் சதிகாரன் அல்லாஹ்! இக்கட்சியை கல்முனையில் இருந்து அழிக்க வேண்டும் என்று பல சதிகளையும்,துரோகங்களையும் செய்து தங்களை தாங்களாகவே அழித்துக் கொண்டார்கள் இக் கட்சியின் ஊடாக விலாசம் பெற்றவர்கள் இக் கட்சியினூடாகவே அழிந்த வரலாறுகள் உள்ளன. அல்லாஹ்வின் உதவியால் நிச்சயமாக என்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைக் கொண்டே கல்முனையையும், முஸ்லிம் சமூகத்தையும் அல்லாஹ் பாதுகாப்பான்.

ஏ.சி.சமால்டீன்(Ex MMC),
மாவட்ட செயற்குழு செயலாளர்,
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
அம்பாறை.
12.12.2024

21/11/2024

21-11-2021 10 ஆவது பாராளுமன்றின் முதல் அமர்வு / ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அக்ராசன உரை.. us on Facebo...

அரசியலமைப்பு மாற்றத்துக்கும், கல்வி  தொழில் புரட்சிக்கு இந்த வெற்றி வித்திடவேண்டும் -  SM சபீஸ் +++++++++++++++++++எதிர்...
19/11/2024

அரசியலமைப்பு மாற்றத்துக்கும், கல்வி தொழில் புரட்சிக்கு இந்த வெற்றி வித்திடவேண்டும் - SM சபீஸ்
+++++++++++++++++++
எதிர்கட்சியில் இருந்து பலமாக இருந்தவர்களை உடைத்து ஒரு வாக்கைப்பெறுவது என்பது கடின உழைப்பின் மூலமே சாத்தியமாகும். அதனை நாங்கள் செய்து காட்டியுள்ளோம். எங்களது கட்சிக்கு ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளோம். அந்த வகையில் எமது கட்சிக்கும் எனக்கும் வாக்களித்தவர்களுக்கு உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட SM.சபீஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் பெற்றுள்ள இமாலைய வெற்றிக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ்வெற்றியின் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவுகள் ஒரே தேர்தலில் நடைபெறும் முறையில் அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் கொண்டுவரப்படல் வேண்டும்.

கல்வி, தொழில், இடப்பங்கீடு, சம உரிமை, நிருவாக சமச்சீர் விடயங்களில் புரட்சியை ஏற்படுத்த நல்லதொரு சந்தர்ப்பத்தினை மக்கள் வழங்கியுள்ளனர்.

இதனை அரசாங்கம் சாதித்துக் காட்ட வேண்டும். எனது தேர்தல் பணிக்காக பணி செய்தோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்தோடு எனக்கு வாக்களித்தவர்களுக்கும், எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Address

Nintavur
32340

Alerts

Be the first to know and let us send you an email when The Murasu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Murasu:

Share