31/10/2025
புதிய குடிசன தொகை மதிப்பீட்டு அறிக்கையின் படி மலையக தமிழர்களின் சனத்தொகையில் கடும் வீழ்ச்சி...!
இலங்கையில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை குறித்த கணக்கெடுப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (30.10.2025) வெளியிட்டது.
நாட்டில் பெருந்தோட்ட பகுதிகளில் சனத்தொகை வீழ்ச்சிப் போக்கைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு 839,504 ஆக காணப்பட்ட மலையகத் தமிழர்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 600,360 ஆக காணப்படுகின்றனர்.
மலையகத் தமிழர் சனத்தொகை சதவீதம் 2012 ஆம் ஆண்டில் நூற்றுக்கு 4.1 சதவீதமாக இருந்ததுடன் 2024 ஆம் ஆண்டின் போது 1.3 சதவீத அலகுகள் குறைந்து நூற்றுக்கு 2.8 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.