12/09/2026
ஒரு சிலரது வெற்றி, நம்மளே ஜெயிச்ச மாதிரி ஒரு உணர்வை உண்டாக்கும்… ❤️💯
முதலில் சினிமாவே ஓர் அதியுயர் உணர்வு. அந்த உணர்வுக்குள் பல்வேறு வடிவங்களில் பலவிதமான உணர்வுகளை நாம் பெற்றுக்கொள்கிறோம்.
அப்படி இருக்கையில், “பரோட்டா சூரி”யாக ஒரு காமெடியனாக நம் மனதிலும், மூளையிலும் ஆழமாகப் பதிந்த ஒருவரை திடீரென ஒரு ஆக்ஷன் ஹீரோவாகப் பார்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. மிகப்பெரிய சவால்!
எனக்குத் தெரிந்து, சினிமாவில் இப்படியொரு மாற்றத்தை நிகழ்த்திய கலைஞனை கேட்டதும் இல்லை… பார்த்ததும் இல்லை!
அப்படியொரு ஆச்சரியத்தை நிகழ்த்தியிருக்கிறான் இந்த சூரி! 🔥❤️
இது வெறும் வெற்றி அல்ல… பல வருடங்களாக நம்மால் சிரித்துப் பார்க்கப்பட்ட ஒரு கலைஞன், இன்று நம்மை வியந்து பார்க்க வைத்திருக்கும் தருணம். தமிழ் சினிமாவில் அடுத்த தசாப்தத்தை உருவாக்கப் போகிறான் இந்த சூரி! 💯🎥
இவனுடைய வெற்றி… நம்முடைய வெற்றி மாதிரி உணர வைக்கிறது. ❤️