Osisnews

Osisnews உண்மைகள் தோற்பதில்லை. அவைகள் நிரூபிக்கப்படுகின்றன. Facts never fail. They are proven.

வைத்திய பீட மாணவன் மஸூதின் அகால மரணம் நம்ப முடியாத பேரிழப்பாக உள்ளது. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.நேற்று காலை ஆ...
24/11/2025

வைத்திய பீட மாணவன் மஸூதின் அகால மரணம் நம்ப முடியாத பேரிழப்பாக உள்ளது. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

நேற்று காலை ஆறு மணிக்கு எனது வீட்டுக்கு வந்து எனது மகனுக்கு தொடர்ச்சியாக மூன்று மணித்தியாலங்கள் இரசாயன பாடம் கற்பித்து விட்டு சென்றார்.

இன்றைக்கு யூனிவர்சிட்டி முடிந்து மாலை எட்டு மணிக்கு கற்பிப்பதற்கு வருவதாகவும் கூறிச்சென்றவர் இவ்வுலகை விட்டு பிரிந்து அவருடைய நிரந்தர வாழ்க்கையை தெரிவு செய்துள்ளார்.

அன்பு மகனாரை இறைவன் பொருந்திக்கொள்வானாக.

ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவின் விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு ஆளுனர் மட் / மம  /ஒட்டமாவடி பாத்திமா பாலி...
06/11/2025

ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவின் விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு ஆளுனர்

மட் / மம /ஒட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய வரலாற்றில் முதன் முறையாக அறிமுகப்படுததப்பட்ட புhத்தியமியன்ஸ் அதி உயர் விருது வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகான ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர பிரதம அதீதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

நேற்று 05-11-2025 புதன் கிழமை பாடசாலையின் மண்டபத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வானது ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் கற்று பல்கலைகழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கும் க.பொ.த சாதாரண தரம் கற்று சகல பாடங்களிலும் அதி உயர் சித்தியை பெற்ற மாணவர்களுக்குமான பாத்திமியன்ஸ் அதி உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, இவ்விருது வழங்கும் நிகழ்வானது இப்பாடசாலையின் அதிபர் ஏ.எல் அஸ்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேலும், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் முறைசார் கல்வி மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் திறமைகளை வெளிக்காட்டி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு இவ்விருது இப்பாடசாலையின் சமூகத்தினால் தொடர்ச்சியாக வழங்கப்பட விருக்கின்றது. இவ்விருதினை பெறும் பாத்தியமியன்ஸ்களில் பதிவுகளை தொடர்ச்சியாக இப்பாடசாலை ஆவணப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு, இப்பாத்தியமின்ஸ் அதி உயர் விருதினை முதற்தடவையாக கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ பேராசியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களினால மாணவிகளுக்கு வழங்கப்பட்டதனால் இப்பாடசாலை பெருமிதம் அடைவதாகவும் பாடசாலையின் நிருவாகத்தினதும், மற்றும் அபிவிருத்திசங்கத்தினது கருத்தாக இருக்கின்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.எல் அஸ்கர் அவர்களின் தலைமை உரையாற்றுகையில்.... பாடசாலையின் தேவைகள் குறித்தும் பாடசாலை எதிர்காலத்தில் அடைவிருக்கும் இலக்குகள் குறித்தும் விரிவாக உரையாற்றியதோடு அதனை தொடர்நது உரையாற்ற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் எதிர்காலத்தில் புதிய கல்வி கொள்கைகளுக்கு அமைவாக பாடசாலை நவீன கல்வி உபகரணங்களுடன் அபிவிருத்தி பாதை ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் கல்வி வளர்ச்சி பெறுவதற்கு அரசாங்கம் மிகுநத அக்கறையுடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பாடசாலையின் வரலாறு, சாதனைகள் மற்றும் பாடசாலை அடைய வேண்டிய தேவைப்பாடுகள் தொடர்பாக தரம் 11 சேர்ந்த ரமீஸ் ரபா அவர்களினால் சிறப்பு பேச்சு ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டது.

ஆதனை தொடர்ந்து பிரதம அதிதி கௌரவ பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின உரையாற்றுகையில் அவரது கல்வியை கற்று முன்னேறிய முறை தொடர்பாகவும் கல்வியிலுள்ள மூன்று படித்தரங்களில் அறிவு திறன் மனப்பாங்கு வளர்ச்சியில் மாற்றங்களை கொண்டு வருவதின் ஊடாக பாடசாலை மாணவர்கள் சமூகத்தில் நற்பிரஜைகளாக வர முடியும் என்றும், இப்பாடசாலை தொடர்பாக கர்சனை கொண்டு எதிர்காலத்தில் கல்வி துறையினரோடு கலந்துரையாடி இப்பாடசாலையிலுள்ள விடயங்களை பூர்த்தி செய்வதற்கு தன்னால் முடியுமான உதவிகளை செய்வேன் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் கௌரவ ஆளுநர் அவர்கள் பாடசாலையின் சூழலை நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் பாடசாலையின் சமூகத்தின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது .

மேலும், பிரதம அதிதியாக கௌரவ பேராசிரியர் ஜயந்த லால் ரத்ன சேகர அவர்களும் சிறப்பு விருந்தினாராக மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமனற் உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களும் கௌரவ விருந்தினராக கிழக்கு பல்கலை கழக சிரேஸ்ட விரிவுரையாளர் டாக்டர் எச்.எம்.ஜே நசீபா ,தென்கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளர் விரிவுரையாளர் நுஸ்கியா ஹஸன் அவர்களும் விசேட அதிதியாக பாடசாலையின் முதல் அதிபரும் ஓய்வு பெற்ற வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ஜ சேகுஅலி அவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, மாணவர்களினால் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அரகேற்றப்பட்டது

இவ்விழாவினை சிறப்பாகவும் வெகுவிமர்சையாகவும் நடாத்துவதற்கு பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவும், பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினர் அயராது முயற்சி செய்தமை முக்கிய விடயமாக பார்க்கப்பட்டது.



#கந்தசாமிபிரபு #தேசியமக்கள்சக்தி

ஓட்டமாவடி வாவிக்கரை கொங்றீட் வீதி பிரபு எம்.பியினால் திறந்து வைப்பு.+++++++++++++++++++++++இருபது இலட்சம் ரூபாய்கள் செலவ...
05/11/2025

ஓட்டமாவடி வாவிக்கரை கொங்றீட் வீதி பிரபு எம்.பியினால் திறந்து வைப்பு.
+++++++++++++++++++++++

இருபது இலட்சம் ரூபாய்கள் செலவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஓட்டமாவடி பிரதான பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள வாவிக்கரைக்கு செல்லும் வீதியானது கொங்றீட் வீதியாக மாற்றுவதற்கான அடிக்கல்லினை தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கந்தசாமி பிரபுவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த வகையில் கொங்றீட் வீதியாக பூரணமாக்கப்பட்டுள்ள குறித்த வீதியானது இன்று 05-11-2025 புதன்கிழை பிரபு எம்.பியினால் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டதுடன், ஏற்கனவே குறித்த வாவிக்கரையானது கேட்பார் பார்பார் அற்ற நிலையிலும், போதைப்பொருள் பாவனையாளர்களின் வாஸ்தஸ்தலமாக இருந்து வந்த நிலையிலும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் முயற்சியினால் தேசிய மக்கள் சக்தி அரசின் 3 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பிரபு எம்.பியின் பங்கு பற்றுதலுடனும் வாவிக்கரையானது உள்ளூர் சுற்றுலாப்பயணிகளும் பிரதேச மக்களும் ஓய்வெடுத்துக்கொள்ளும் இடமாக மாற்றியமைக்கப்பட்டமை முக்கிய விடயமாகும்.

அத்தோடு , குறித்த வாவிக்கரையினை அண்டிய பிரதேசத்தினை மேலதீக வசதிகளுடன் அபிவிருத்தி செய்து மாவட்டத்தில் சிறந்ததொரு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாத்தளமாகவும், மக்கள் ஓய்வெடுக்கின்ற இடமாகவும் மாற்றியமைத்து தருவதாக குறித்த நிகழ்வில் உரையாற்றும் பொழுது பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல்.சமீம், அப்துல் லத்தீப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சி.நியாஸ்த்தீன், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச நிறை வேற்றுக்குழு உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், ஆர்.டி.எஸ்.சங்க உறுப்பினர்கள், பலரும் கலந்து கொணடார்கள்.



#கந்தசாமிபிரபு #தேசியமக்கள்சக்தி

பிரபு எம்பி தலைமையில் ஓட்டமாவடியில் முதியோருக்கு கட்டில், மெத்தை வழங்கும் நிகழ்வு.சமூக சேவைகள் மற்றும் சமூக மேம்பாட்டலுவ...
05/11/2025

பிரபு எம்பி தலைமையில் ஓட்டமாவடியில் முதியோருக்கு கட்டில், மெத்தை வழங்கும் நிகழ்வு.

சமூக சேவைகள் மற்றும் சமூக மேம்பாட்டலுவல்கள் அமைச்சினூடாக அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கான உள்ளகத்தேவைகளை கருத்திற்கொண்டு ஓட்டமாவடியில் கட்டில்களும் அதற்கான மெத்தைகளும் வழங்கி வைக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் இன்று (05.11.2025) புதன்கிழமை இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முதற்கட்டமாக நோய்வாய்பட்ட மற்றும் அறுபது வயதிற்கு மேற்பட்ட 38 நபர்களுக்கான கட்டில்களும் அதற்கான மெத்தை, தலையனைகள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு, கல்வித்தேவைக்காக மூன்று நபர்களுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டதோடு, தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல்.சமீம், அப்துல் லத்தீப், செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற வேட்பாளர் எம்.ஏ.சி.நியாஸ்தீன், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், செயலகத்தின் உ.தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

தகவல்
அஹமட் இர்ஷாத்,
தேசிய மக்கள் சக்தி

28/10/2025

தம்பி அக்கீலின் திருமண நிகாஹ்

26/10/2025

வீடியோ....தவிசாளர் புறக்கணித்தாலும் மக்களின் ஆதரவுடன் தேவையான வேலைகளை செய்கின்றோம். NPP உறுப்பினர் சமீம்.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட மாவடிச்சேனை கிராம செயலக பிரிவில் அமைந்துள்ள வடிகான்களை துப்புரவு செய்வதற்காக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் என்ற வகையில் கோறளைப்பற்று வாழைச்சேனை ஆளும் TNA தவிசாளரிடம் பலமுறை எழுத்து வடிவிலும், சபையில் உரையாற்றியும் வேண்டுகோள் விடுத்தும் கண்டும் காணாதது போல் தவிசாளர் புறக்கணிப்புடன் நடந்து வருவதாக செம்மண்ணோடை மாவடிச்சேனைக்கான தேசிய மக்கள் சக்தியின் வட்டாரக்குழு தலைவரும் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.சமீம் குற்றம் சுமத்துகின்றார்.

அதனால் எதிர் வருகின்ற பருவ பெயர்ச்சி மழைகாரணமாக வெள்ள நீர் அபாயத்தில் இருந்து பிரதேசத்தினை பாதுகாக்கும் பொருட்டு இன்று ஞாயிற்றுகிழமை 26-10-2025) காலை மாவடிச்சேனை கொழும்பு பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள 2006ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட வடிகான்கள் துப்புரவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கு பிரதே சமூக செயற்பாட்டாளர்களின் பங்களிப்பு கிடைத்ததோடு தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற வேட்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.ஏ.சிநியாஸ்த்தீன் களத்தில் நின்று செயற்பட்டதோடு, ஓட்டமாவடி பிரதேச சபையிக்கு கட்டணம் செலுத்தப்பட்டு உழவு இயந்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான உதவிகளை சபையின் தவிசாளர் காதர் மொஹம்மட் பைரூஸ்செய்து கொடுத்ததாகவும் சமீம் தெரிவித்தார்.

மேலும் , அராசாங்கத்தின் கிளீன்சிறீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மாவடிச்சேனை கட்சியின் பிரதேச நிறை வேற்றுக்குழு உறுப்பினர் எம்.ஏ.சி.நியாஸ்த்தீன் ஜும்மாபள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத்தலைவர் தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அல்-பத்தாஹ், ஆர்.டி.எஸ் உறுப்பினர்கள், கிராம சேவையாளர், சமூக நலன் விரும்பிகள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

#கந்தசாமிபிரபு #தேசியமக்கள்சக்தி

ஏறாவூர் புற்று நோய்யாளர் பராமரிப்பு நிலையத்திற்கு  JVPயின் செயலாளர் தில்வின் சில்வா வருகை.மக்கள் விடுதலை முன்னணியின் (JV...
26/10/2025

ஏறாவூர் புற்று நோய்யாளர் பராமரிப்பு நிலையத்திற்கு JVPயின் செயலாளர் தில்வின் சில்வா வருகை.

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா நேற்று(25.10.2025) ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு( ESSCA)விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

புற்று நோயாளர்களுக்கு மிகவும் முக்கியமான வைத்தியசாலையாகை சேவைகளை வழங்கி வரும் குறித்த நிலையத்தின் செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், எதிர்காலச் சமூக நலத் திட்டங்கள் குறித்து பயனுள்ள கலந்துரையாடலிலும் தோழர்தில்வின் சில்வா ஈடுடட்டார்.

மேலும் இவ்விஜயத்தின்போது, தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்தி குழுதலைவருமான தோழர் கந்தசாமி பிரபு மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஏறாவூர் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள்,தேசியமக்கள் சக்தியின் யின் கல்குடாவிற்கான நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட பயிலுனர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரன்., தொழிலதிபர் அமீர், வைத்திய நிபுணர்கள், நிலையத்தின் செயற்பாட்டு குழு நிருவாக.தினர் எனபலரும் உடன் இருந்தனர்.

#கந்தசாமிபிரபு #தேசியமக்கள்சக்தி

24/10/2025

எட்டு மாதங்களுக்கு முன்னர் தேர்தல் மேடையில் பேசிய விடையம் படிப்படியாக நடந்துகொண்டிருக்கின்றது. தோழர் அநுரவின் முழுமையான ஆட்சியில் நாட்டு மக்கள் எதிர்பார்த்தது எல்லாம் முழுமையாக நடந்தே தீரும்.

#கந்தசாமிபிரபு #தேசியமக்கள்சக்தி

கல்குடாவில் அபிவிருத்தி என ஆரம்பித்து பல்துறைகளில் மக்கள்மனங்களில் இடம் பிடித்துவரும் எங்கள்தோழர் மாவடிச்சேனை சமீம்.
19/10/2025

கல்குடாவில் அபிவிருத்தி என ஆரம்பித்து பல்துறைகளில் மக்கள்மனங்களில் இடம் பிடித்துவரும் எங்கள்தோழர் மாவடிச்சேனை சமீம்.

Video  வெற்றிகரமாக இடம் பெற்ற கோறளைப்பற்று மத்தி கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் சுத்தம்செய்யும் பணி.++++++++++++++++...
18/10/2025

Video வெற்றிகரமாக இடம் பெற்ற கோறளைப்பற்று மத்தி கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் சுத்தம்செய்யும் பணி.
++++++++++++++++++++++++++

க்ளீன் சிறிலங்கா' நமது பிரதேச சுற்றுச் சூழலை சுத்தமாக்கும் வேலைத்திட்டம்! அந்த வகையில் அரசாங்கத்தின் க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நமது சுற்றுச் சூழலை சுத்தமாக பேணுவது எமது பொறுப்பாகும், இதனூடாக எமது குடும்பமும் எமது பிரதேசமும் அழகான வாழ்க்கையை அனுபவிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுகிறது. தாங்கள் குடியிருக்கும் பகுதி பிரதான பாதைக்கு அருகில் உள்ளதாலும், இது உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற ஒரு பிரதேசம் என்பதாலும் அதனை சுத்தமாக பேணுவது அத்தியவசியமாகவுள்ளது.

இதனடிப்படையில் ககுறித்த அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வாளைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குட்ட ஓட்டமாவடி பாலம் தொடக்கம் நாவலடி இராணுவ முகாம் வரைக்குமான மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் இரு மருங்குகளையும் சுத்தம் செய்யும் பணியானது இன்று 18-10-2025 சனிக்கிழமை காலை ஆரம்பமாகி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகாத்தின் முழுமையான ஏற்பாட்டிலும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளரும், கோறளைப்பற்று மத்தி செயலகத்தின் தற்காலிக செயலாளருமான ஏ.தாஹிர் (வெட பலண்ண) தலைமையிலும், பிரதேச தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதலோடும் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் MHM.பைறூஸ், Clean Srilanka வேலைத் திட்டத்தின் கோறளைப்பற்று மத்திக்கு பொறுப்பான அமைப்பாளரும்,பிரதேச சபை உறுப்பினருமான AL.சமீம், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று குழு உறுப்பினரும், அல் அகீல் அவசர சேவைப் பிரிவின் ஸ்தாபகருமான MAC.நியாஸ் ஹாஜி, முகைதீன் அப்துல் காதர் வித்தியாலய அதிபர் AUM.நளீம் (ஸலாமி), தியாவட்டவான் தே.ம.சக்தியின் மாவட்ட நிறைவேற்று குழு உறுப்பினர் M.பாறூக், தியாவட்டவான் வட்டார குழு தலைவர் M.பவுர்தீன், ஓட்டமாவடி 1ம் வட்டார குழு தலைவர் அஹமட் இர்ஷாத், மீராவோடை மதுரியா வட்டார குழு தலைவர் SM.இர்ஸாத், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமூக வலுவூட்டல்கள் உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர் MM.அன்வர் சாதாத், சுற்றாடல் உத்தியோகத்தர் ELM.அஷ்ரப், சமூக செயற்பாட்டாளர்களான தொழிலதிபர் அஸீஸ் ஹாஜியார், LTM.இஸ்ஹாக் மெளலவி, ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தொழிலாளர்கள், பொலிசார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள்,மதரஸா மாணவர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
#கந்தசாமிபிரபு #தேசியமக்கள்சக்தி

14/10/2025

மக்கள் தேவைகளை நிறைவேற்றி கொள்வதில் தவிசாளரும் உறுப்பினர்கள் தடையாக உள்ளதாக NPP உறுப்பினர் ஏ.எல்.எம்.சமீம் குற்றச்சாட்டு

மக்களால் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினராக கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினராக இருக்கும் நான் அரசின் முக்கிய செயற்திட்டமாக உள்ள கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் மற்றும் மக்களின் தேவைகளை அறிந்து வாழைச்சேனை, பிறைன்துறைச்சேனை, செம்மண்ணோடை, மாவடிச்சேனை பிரதேச வேலைத்திட்டங்களுக்கு தேவையான நடைமுறைகளை செயற்படுத்த முயற்சிக்கின்ற பொழுது வாழைச்சேனை பிரதேச சபையின் ஆளும் TNA தவிசாளரும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் அதற்கு முற்றிலும் தடையாக செயற்படுகின்றார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.சமீம் குற்றம் சுமத்துகின்றார்.

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் பிறைந்துரைச்சேனை தேசிய மக்கள் சக்தியின் வட்டாரக் குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் கிராம அபிவிருத்திச் சங்க செயலாளருமான ஏ.எம்.சப்ராஸ் தலைமையில் நேற்று 14-10-2024 செவ்வாய் கிழமை வாழைச்சேனை புகையிரத வீதியை அண்டிய பிரதேசத்தில் சுத்தம் செய்கின்ற பணியின் போது முஸ்லிம் காங்கிரசின் பிரதேச சபை உறுப்பினருக்கும் சமீமுக்கும் இடையில் இடம் பெற்ற கருத்து முரண்பாடுகளின் பொழுதே மேற் கண்டவாறு பிரதேச சபை உறுப்பினர் சமீம் தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்தேர்ச்சியாக தவிசாளரினாலும் ஆளும்தரப்பின் அங்கத்தவர்களான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களினால் தனக்கு ஏற்படுத்தப்படுகின்ற தடைகளை குறித்து கிழக்கு மாகாண ஆளுனர், மாவட்ட உள்ளூராட்சி பணிப்பாளருக்கும் எழுத்து மூலமாக அறிவித்திருப்பதாகவும் சமீம் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த கிளீன் சிறீலங்கா நிகழ்விற்கு பிரதேச சபை உறுப்பினரும் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை “கீளின் ஸ்ரீ லங்கா” அமைப்பாளருமான ஏ.எல்.சமீம், NPPயின் பாராளுமன்ற வேட்பாளரும்சமூக செயற்பாட்டாளருமான எம்.ஏ.சீ.நியாஸ்தீன், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச அரசியல் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முறக்கட்டான் சேனை இராணுவ முகாம் வளாகம் பாடசாலையிடம் கையளிப்பு.+++++++++++++++++++++வரலாற்றுத் திருப்புமுனை,முறக்கொட்டான்...
30/09/2025

முறக்கட்டான் சேனை இராணுவ முகாம் வளாகம் பாடசாலையிடம் கையளிப்பு.
+++++++++++++++++++++

வரலாற்றுத் திருப்புமுனை,
முறக்கொட்டான் சேனை படைமுகாம் அகற்றப்பற்று 35 ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களுக்கு மீள்கொடுக்கப்பட்ட நிகழ்வு இன்று 30-09-2025 திங்கட்கிழமை இராணுவ முகாம் வளாகத்தில் உத்தியோகபூர்வமாக இடம் பெற்றது.

அந்த வகையில், கிழக்கு மாகாண மட்டக்களப்பு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகத் திகழ்ந்து வந்த முறக்கொட்டான் சேனை இராமகிருஷ்னா பாடசாலை வளாகத்தில் இயங்கிய குறித்த இராணுவ முகாமானது தற்போது முழுமையாக அகற்றப்பட்டு அப்பகுதி பாடசாலை நிருவாகத்திடமும் மக்களிடமும் மீள ஒப்படைக்கப்டும் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கைத்தொழில் துறை அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி பிரதம அதீதியாக கலந்து முகாம் இருந்த நிலத்தினை உரியவர்களிடம் கையளித்தார்.

சுமார் 35 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த நிலப் பிரச்சினைக்கு, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தீர்வு காணப்பட்டுள்ளது என்பதற்கும் அப்பால் தேசிய மக்கள் சக்தியை விமர்சித்து வரும் போலியான தமிழ்த்தேசியவாதம் பேசும் அரசியல் சக்திகளின் வாய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள பாடசாலைக் காணியினை விடுவித்து மீண்டும் பாடசாலைக்கு அந்த நிலத்தைக் கைளிக்க வேண்டுமென்று மொறக்கட்டான்சேனை கிராமத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் தோழர் தமிழ்ச் செல்வன் கல்குடாதொகுதி அமைப்பாளர் திலீப்குமாரிடம் வேண்டுகோள்விடுத்து அது மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சுனில் ஹந்துன்னெத்தியின் கவன.திக்கு கொண்டுவரப்பட்டது.

மேலும், மேஜர் ஜெனரல் பல்லேகும்பர Major General JSBW Pallekumbura RWP RSP ம
Commander - security forces ( East)
மற்றும் மேஜர் ஜெனரல் குலத்திலக்க
2.Major General GPP Kulatilaka ndc
( General officer commanding - 23 Infantry Division.)

ஆகியோர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த உள்நாடு மற்றும் சர்வதேசம் பார்த்தூக்கொண்டிருக்கின்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட. பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுதலைவருமான கந்தசாமி பிரபு, மாவட்ட செயலாளர் அருள்ராஜ், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் சித்திரவேல், மாகண கல்விப்பணிப்பாளர், இராணுவ உயர் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

#தோழர்பிரபு #கந்தசாமிபிரபு #தேசியமக்கள்சக்தி

Address

Ex Chairman Road
Oddamavadi
0036

Alerts

Be the first to know and let us send you an email when Osisnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share