
14/08/2025
ஒலுவில் மண்ணின் பெருமை – ஹாசிக் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..
================================
ஒலுவில் கல்வி வரலாற்றில் ஒரு புதிய பொற்கோலம் பதியப்பட்டுள்ளது. மண்ணிலிருந்து முதன் முதலாக, இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டு, வரலாற்று சாதனையை படைத்துள்ளார் எங்கள் அன்புத் தோழர் ஹாசிக்.
ஹாசிக் அவர்கள், தனது ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை ஒலுவின் ஆல்-ஹம்ரா தேசிய பாடசாலையில் கற்று தனது பட்டப்படிப்பை, பெராதெனிய பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
தன் சொந்த ஊரின் முன்னேற்றத்துக்காக அல்-ஹம்ராவில் ஆசிரியராக உழைத்தார்.
மேலும், தனது தொழில்முறை திறனை உயர்த்துவதற்காக, தேசிய கல்வி நிறுவகத்தில் (NIE) PGDE கற்கையை பூர்த்தி செய்த இவர் தன் கல்வி பயணத்தை மேலும் விரிவாக்கி, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் (OUSL) கல்வி முதுமானி (Master of Education) பட்டமும் பெற்றார்.
2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை (SLTES) பரீட்சையில் சித்தியடைந்து, 2025 ஜூன் 2 அன்று அதிகாரப்பூர்வமாக SLTES அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) பரீட்சையிலும், நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று,
வரும் 2025 செப்டம்பர் 01 அன்று SLEAS அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார்.
ஹாசிக் அவர்களின் பயணம், வெற்றியை விரும்பும் அனைவருக்கும் ஒரு ஊக்கக் கதையாக உள்ளது. தனது ஊரை விட்டுப் பிரியாமல், அதே ஊரில் கல்வி கற்றும், கற்பித்தும், தொடர்ந்து தன்னிறைவு நோக்கி பயணித்து, இன்று தேசிய மட்டத்தில் உயர்ந்த நிலையில் திகழ்வது, ஒலுவின் கல்வி வரலாற்றில் முன்னுதாரணமான நிகழ்வாகும்.
ஒலுவிலில் ஒவ்வொரு இதயத்திலும் பெருமை நிரப்பிய ஹாசிக் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அவரது புதிய பொறுப்பில், இலங்கை கல்வித் துறையின் முன்னேற்றத்திற்கும், எதிர்கால தலைமுறைகளின் அறிவு வளர்ச்சிக்கும் அவர் ஒளியாக இருக்க இறைவன் துணை புரிவானாக.
"உழைப்பும் உறுதியும் இணைந்தால், மண்ணிலிருந்தே உச்சி அடையலாம்" – ஹாசிக் அவர்கள் அதற்கு உதாரணமாக உள்ளார்.
SAFEER HAMEED