
16/08/2025
"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" திட்டத்தின் கீழ் ஒலுவில் பயனாளிகளுக்கு புதிய வீடுகளுக்கான ஆரம்ப கட்ட வேலைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
Oluvil - Media | 16 - 08 - 2025
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு
"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நேற்று (15.08.2025) வெள்ளிக்கிழமை ஒலுவிலில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சி திட்டம் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் சுல்தான் சத்தார்,
அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உதவி மாவட்ட முகாமையாளர் பாஹிம்,தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியிலாளர்கள் மற்றும் அதிகாரிகள்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர், பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.