17/04/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
(السلام عليكم ورحمة الله وبركاته)
இந்த செய்தியை பார்க்கும் பொழுது நீங்களும் உங்களுடைய குடும்பமும் நானும் நலமாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் துணைபுரியட்டும். நான் உங்கள் அன்பு சகோதரன் , உங்கள் குடும்பத்தில் ஒருவனான பாறுக் நஜி. இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான பாலமுனை மின்ஹாஜ் வட்டாரத்தில் குதிரை சின்னத்தில் இறைவனை முந்தி இரண்டாவதாக உங்களை நம்பி, உங்கள் பிராத்தனைகள், அன்பான வாக்குகளை நம்பி அரசியல் களம்காண விரும்பாத, ஒரு சமுதாய வாதியாக இருக்க விரும்பினாலும் இறைவன் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார் என்ற காலத்தின் தேவை காரணமாக கன்னி தேர்தலில் போட்டியிடுகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
உங்களுக்கு என்னை பற்றியோ, என் குடும்பத்தை பற்றியோ நான் பெரிதாக பேசவில்லை. காரணம் உங்களுக்கு நன்றாகவே தெரியும்.இந்த ஊரின் மீதும், உங்கள் மீதும் கொண்ட அன்பு, பற்றினால் நான் ஊரில் இருந்தபோதும், இல்லாத போது உங்கள் ஒவ்வொருவர் வீட்டில், வாழ்க்கையில், தனிப்பட்ட பிரச்னைகள், துன்பங்கள், இன்பங்கள், நலவு, கெடுதல்களில் முடிந்தவரை நிற்ப்பவன். அதனை தாண்டி இந்த பால் மனம் கொண்ட பாலமுனை தாயின் பிள்ளையாக ஊருக்காக, ஊர் தாண்டி ஏனைய பிரதேசங்களில் கூட அதன் நலனில் அக்கறை கொண்டவன். கடந்த காலங்கள் தொடக்கம் இந்த நிமிடம் வரை எனக்கு கிடைத்த தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரங்கள், சேவைகள், தணிப்பட்ட பணத்தை, உடல் உழைப்பு என்று இறைவன் அருளிய போதல்லாம் இந்த ஊருக்கு, மக்களுக்கு, இன மதம் கடந்து பிராந்தியம் முழுவதும் செய்துள்ளேன். நான் இறுதியாக வேலை செய்த நிறுவனம் ஊடாக இந்த ஊருக்கு 1.6 கோடி உட்பட்ட முழு அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லையில் சுமார் 7.2 கோடி ரூபாய் நிதி வோலை திட்டத்தை சுமார் ஒரு வருடங்களாக போராடி இறுதி கட்டத்தை அடைந்த நேரத்தில் அமெரிக்கா ஜனாதிபதியின் புதிய அரசியல் சட்டம் காரணமாக அந்த நிதி தற்காலிக தடையில் உள்ளது. இதற்கு சாட்சி எமது ஊரில் உள்ள கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், போது அமைப்புக்கள், பல பொது மக்கள் . இவ்வாறான ஒரு நேரத்தில் இறைவன் நாடினால் இந்த அரசியல் அதிகாரம் ஊடாகவும் இரட்டிப்பாக அதனைத் தொடர்ந்து செல்ல எனக்கும் , அதனைப் பெற உங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
அந்த வகையில் இந்த தேர்தலில் சிலருக்கு இந்த கட்சியை / தலைமையை / கட்சி சார்ந்த சிலரை தனிப்பட்ட ரீதியில் அல்லது பொதுவாக பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இது கட்சி தலைவரின் அல்லது அவர்களது தேர்தலும் அல்ல, கட்சி தலைமை இங்கு சபைக்கு வந்து அமரப் போவதும் இல்லை. மற்றும் நான் அதிகமாக முகநூல் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். அவைகள் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். என்னை அறியாமலே உங்கள் மனதை காயம் செய்தும் இருக்கலாம். ஆனாலும் இந்த நிமிடம் கூட எனக்கு யாரின் மீதும், எந்தவொரு அரசியல் சார்ந்தவர்கள் மீதும் தனிப்பட்ட கோபங்கள் இல்லை. எவையை எழுதினாலும் அதில் ஊர் நலன் அல்லது சமூக நலனை முன்னிறுத்தியே அவை இருக்கும். சிறிய உதாரணமாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் காலத்தில் கூட எல்லோரும் சேர்ந்து ஊருக்கு அதிகாரம் என்று ஓடியதுபோதும் கூட நான் அப்போதே பலமுறை சொன்னேன் நாம் ஒற்றுமையோடு வாக்காளித்தாலும் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக Y எனும் அரசியல்வாதியின் ஆதரவு அவ்வாறு எமக்கு கிடைக்காது என்பதை. இறுதியில் அதுவே சாத்தியம் ஆனது.
இதனை நான் இப்போது சொல்லும் போதும் சில நேரங்களில் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம் அன்பு சகோதர, சகோதரிகளே! மன்னிக்கவும்! எனக்கு நடிக்க தெரியாது. சரியை சரி என்றும் , பிழையை பிழை என்றும் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வதும் ஒருவகை பக்குவமே. அவ்வாறே எனது தந்தையும், ஆசான்களும் என்னை வளர்த்தனர். என மனதை அடைத்து எனது
கழ்பை நான் அடைக்க விரும்பவில்லை.
நான் மரணித்தாலும்
“நான் இன்று உறைத்வைகளை நாளை ஓராயிரம் இதயங்கள் உறைக்கும்” அது காலத்தை மீறி உணர்வுகளை பறைசாற்றும்.
வெற்றி, தோழ்வி இறைவன் அருளியது. அவன் நாடுபவனுக்கு அது கிடைக்கட்டும்.
முயற்சி இன்றி எதுவும் இல்லை.
இன்ஷா அல்லாஹ்! என்னை உங்கள் சகோதரனாக, நண்பனாக, குடும்பத்தில் ஒருவனான, உங்கள் பிள்ளையாக நினைத்து இறைவனிடம் பிரார்த்தனையும் செய்து, வாக்குகளையும் கொண்டு வெற்றிபெற செல்வீர்கள் என முழுமையாக நம்புகிறேன்.
குறிப்பு:-உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் எங்கள் வேட்புமனுக்கள் திட்டமிட்டு அதிகாரம் வர்க்கம் நிறாகறிப்பு செய்து, 25 நாள் தொடர் நீதிமன்ற போராட்டங்களின் பின்னரே வெற்றி பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆகவே May-6ம் திகதி தேர்தல் எங்களுக்கு காலம் குறைவாக உள்ளது, ஏதும் பிழைகள் பதிவில் இருந்தால் மன்னிக்கவும்.
பாறுக் நஜி
உங்களின் ஒருவன்.
17/04/2025