Kinniyan News

Kinniyan News Kinniyan Times is the leading news provider to all sections of Sri Lankans and overseas society. our

60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ்ச்சியடையும் என சிலரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சாரம் தவறானது ...
03/10/2022

60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ்ச்சியடையும் என சிலரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சாரம் தவறானது எனவும் நாட்டில் திறமையான இளம் வைத்தியர்கள் அதிகளவில் இருப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெல்லன தெரிவித்தார். . ஏனைய அரச உத்தியோகத்தர்களைப் போலவே வைத்தியர்களும் 60 வயதில் ஓய்வு அளிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் சிறந்த தீர்மானம் எனவும் இளம் வைத்தியர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாக அமையும் என அவர் மேலும் குறிப்பிட்டார். சுமார் 200 வைத்தியர்கள் அரசாங்கத்தின் இந்த ஓய்வு முடிவை ஆதரித்து கடிதம் அனுப்பி உள்ளதுடன், நாட்டில் விசேட நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது....

60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ்ச்சியடையும் என சிலரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சா.....

பருத்தித்துறை - துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் 4 நாட்களாக நீடிக்கும் நிலையில் ஏழு வீடுகள் ச...
04/09/2022

பருத்தித்துறை - துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் 4 நாட்களாக நீடிக்கும் நிலையில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 25 இற்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது வாள்கள், கற்கள் மற்றும் போத்தல்களினால் மோதல்கள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் 7 முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்துள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர். இதன் காரணமாக சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை - துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் 4 நாட்களாக நீடிக்கும் நிலையில் ஏழு...

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் இலங்கை வென்றது. இப்போட...
04/09/2022

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் இலங்கை வென்றது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸின் 84 (45), இப்ராஹிம் ஸட்ரானின் 40 (38), நஜிபுல்லா ஸட்ரானின் 17 (10), ரஷீட் கானின் 09 (07) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பந்துவீச்சில், டில்ஷான் மதுஷங்க 2/37 [4], மகேஷ் தீக்‌ஷன 1/29 [4], அசித பெர்ணாண்டோ 1/34 [4], வனிடு ஹஸரங்க 0/23 [4] என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்....

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் இலங்கை வென.....

மின்சாரம், கனிய எண்ணெய் உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவை என்பனவற்றை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அ...
04/09/2022

மின்சாரம், கனிய எண்ணெய் உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவை என்பனவற்றை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மின்சாரம், கனிய எண்ணெய் உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவை என்பனவற்றை தொடர்ந்தும் அத்தியாவசி.....

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது...
04/09/2022

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (3) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். இதன்போது நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இ.....

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளார். கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட...
03/09/2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளார். கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஜுலை மாதம் 13 ஆம் திகதியன்று மாலைதீவுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜுலை 14 ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி தான் பதவியில் இருந்து விலகுவதாக சபாநாயகரிடம் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். பின்னர் அவர் ஆகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து சென்றடைந்தார். மூன்று வாரங்களாக அங்கு தங்கியிருந்த கோட்டாபயவின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ததை அடுத்து அவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய ச...
03/09/2022

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய சிரமங்களை சமாளிக்கவும், கடன் சுமையை குறைக்கவும், நிலையான வளர்ச்சியை அடையவும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது. இலங்கைக்கு சாதகமாக உதவுவதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

156வது பொலிஸ் தினம் இன்று (03) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ...
03/09/2022

156வது பொலிஸ் தினம் இன்று (03) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தலைமையில் இந்த சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

156வது பொலிஸ் தினம் இன்று (03) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (03) 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப...
03/09/2022

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (03) 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று (03) காலை 08.00 மணி முதல் நாளை (04) அதிகாலை 02.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை மற்றும் கடுவெல மாநகர சபை பகுதிகளுக்கும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகளுக்கும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மேலும், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் ரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களுக்கும் குறித்த காலத்தில் நீர் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தளை நீரேற்று நிலையத்திற்கான மின்சார விநியோகத்தின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாகவே நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (03) 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி...

மட்டக்களப்பு சந்திவெளியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்து சம்பவத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந...
02/09/2022

மட்டக்களப்பு சந்திவெளியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்து சம்பவத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார். விபத்தில் உயிரிழந்த இளைஞன் முருகன் கோவில் வீதி கோரகல்லிமடு கிரான் எனும் இடத்தை சேர்ந்த 21 வயதுடைய ஜீவரெத்தினம் சனுஜன் என்பவரே பலியாகியுள்ளார். அத்தோடு சந்திவெளி சந்தை வீதியை சேர்ந்த சன்முகநாதன் சுதாநிதி என்ற தாயும் நல்லரெட்ணம் யதுஷிகா என்ற 04 வயது மகளுமே பலத்த காயங்களுக்கு உள்ளாகி சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு சந்திவெளியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்து சம்பவத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இ....

மருந்துகள் பொருட்களின் விலைகளை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 43 வகை மருந்து...
02/09/2022

மருந்துகள் பொருட்களின் விலைகளை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 43 வகை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மருந்துகள் பொருட்களின் விலைகளை திருத்தியமைத்து  விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம...
02/09/2022

எனவே, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா,வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்....

https://kinniyantimes.com/archives/3750/

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Address

Periya Kinniya
31100

Alerts

Be the first to know and let us send you an email when Kinniyan News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kinniyan News:

Share