PolonnaruwaNET

  • Home
  • PolonnaruwaNET

PolonnaruwaNET Polonnaruwa's Fastest News Service!! It is a social service organization working from polonnaruwa.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தில் மாற்றம்எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடிமக்களின் பேராதரவைப்பெற்ற செல்வாக்கா...
18/06/2025

முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தில் மாற்றம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி

மக்களின் பேராதரவைப்பெற்ற செல்வாக்கான அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், இயக்கங்கள் என்பவற்றின் தலைவர்கள் எதிர்நோக்கும் உள்ளக ரீதியான சவால்களில் ஒன்று "அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்" என்ற எதிர்பார்ப்புடன் சிலர் தங்களுக்குள் இருப்பதாகும்.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விதிவிலக்கல்ல என்பதை மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் காலம் தொட்டு இன்றுவரை பார்த்து வருகிறோம். இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற அரசியல் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கிறது. தனி நபர் செல்வாக்கை விட கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகமென்பதால் அரசியல் முகவரி இழந்தவர்களும் அடைக்கலம் தேடும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் காணப்படுகிறது.

மறைந்த தலைவர் அஷ்ரப் கட்சியை ஆரம்பித்து பல சவால்கள், உயிரச்சுறுத்தல்களையும் எதிர்கொண்ட சந்தர்ப்பங்களிலும் தனது நேசத்துக்குரியவர்கள் தனக்கு துரோகம் செய்த போதும் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் அரச ஆதரவோடு அதிகாரங்களைப்பெற்று முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக வந்த போதும், முஸ்லிம் சமூகத்திற்கும் இந்தக்கட்சிக்கும் பல விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டு உறுதியான தலைமைத்துவத்தைக் கொடுத்தார்.

இவ்வாறான சவாலான சந்தர்ப்பங்களில் தலைமைக்கு பக்க பலமாக தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் இருந்தார் என்பதாலும், ரவூப் ஹக்கீமிடம் இருக்கும் பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற உயரிய குணங்கள், விவேகம், மும்மொழி தேர்ச்சி, சிறந்த அணுகுமுறை, சட்டஅறிவு போன்ற ஆளுமைகளை தனக்குள் வைத்திருப்பதைக்கூட இருந்து கண்காணித்ததன் காரணமாக தனக்குப்பின் இக்கட்சியை வழிநடாத்த சிறந்த தலைவராக பல சந்தர்ப்பங்களில் அஷ்ரப் அவர்களால் ரவூப் ஹக்கீம் அடையாளப்படுத்தப்பட்டார் என்பது உண்மை.

தலைவர் அஷ்ரப் மறைந்ததன் பின்னர் தலைமைத்துவப் போட்டி கட்சிக்குள் ஏற்பட்ட போது தான், தான் தலைவர் என சிலர் கோசமெழுப்பி தலைமைத்துவத்தை அடையமுயற்சித்த போது அவை வெற்றியளிக்கவில்லை.

மாறாக, மர்ஹும் தலைவர் அஷ்ரப் அவர்களின் பாசறையில் வளர்தெடுக்கப்பட்ட போராளிகளால் மர்ஹும் தலைவரின் விருப்பப்படி தலைவராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.

அன்று தொடக்கம் இன்றுவரை தலைமைத்துவ சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டு வருகிறார். தலைமைத்துவ போட்டியினால் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து சிலர் அரச ஆதரவோடு பிரிந்து தனிக்கட்சி அமைத்து தங்களை தலைவர்களாகக்காட்டிக் கொண்டாலும் மக்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் அதன் தலைமைக்குமான மௌசு குறைந்தபாடில்லை.

பல தடவைகள் பலரும் இக்கட்சிக்குள்ளிருந்து கொண்டும் வெளியிலிருந்தும் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கெதிராக வெற்றுக்கோசங்களை எழுப்பிய போதல்லாம் கட்சியின் போராளிகளாலும் ஆதரவாளர்களாலும் தலைமைத்துவம் பலப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பது எதார்தமான விடயமாகும்.

தேர்தல்களில் தோல்வியடையாது தொடராக மக்கள் ஆதரவோடு வலம் வரும் ரவூப் ஹக்கீமைத்தோற்கடிக்க காலத்திற்கு காலம் அரச அனுசரணையில் பலர் முயற்சித்து தோல்வி கண்ட நிலையில், கடந்த பாராளுமன்றத்தேர்தலில் அனுர அலையில் ரவூப் ஹக்கீமை கண்டியில் மூழ்கடித்து விடலாம் என எதிரிகளை விட கட்சிக்குள்ளிருக்கும் துரோகிகளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட துரோகிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டவேளையில் இறை உதவியோடு மக்களின் ஆதரவோடு வெற்றிவாகை சூடினார்.

தற்போது உள்ளூராட்சித்தேர்தல் முடிந்த கையோடு ஒரு சிலர் மீண்டும் வெற்றுக்கோசங்களை எழுப்புவதை முகநூல்களில் காணலாம். அது எவ்வாறிருக்கிறது என்றால் "ஆடு நனையிது என ஓநாய் அழுத" கதையாகத்தான் இருக்கிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்று சுகயீனப்பட்டாரே தவிற, பலவீனப்படவில்லை. இறை உதவியோடு பலமான தலைவராக தற்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தேசியத்தில் மட்டுமல்ல, சர்வதேச அரங்கிலும் இலங்கை முஸ்லிம்கள் என்ற போது அங்கு நினைவு படுத்தப்படும் நாமம் ரவூப் ஹக்கீம் என்ற நாமம்தான். தேசிய முஸ்லிம்களுக்காக மட்டுமல்ல, சர்வதேச முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுக்கும் தலைவர் என்றால் ரவூப் ஹக்கீம் என்பதில் கடந்தகால நிகழ்வுகள் சாட்சியங்களாக இருக்கின்றது.

ரவூப் ஹக்கீமை எதிர்க்கும் துரோகிகளை விட எதிரிகள் தற்போதைய சூழலில் இலங்கையின் அரசியலில் ரவூப் ஹக்கீமின் அவசியத்தைப்புரிந்து வைத்திருக்கிறார்கள்.

எனவே, ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட சுயநலன்களுக்காக ரவூப் ஹக்கீமை அன்று தொடக்கம் இன்றுவரை எதிர்க்கிறார்கள். இவ்வாறானவர்களின் எதிர்ப்பும் வெற்றுக்கோசங்களும் ரவூப் ஹக்கீமை பலப்படுத்துமே தவிர, ஒரு போதும் பலவீனப்படுத்தாது.

கட்சிப்போராளிகள், ஆதரவாளர்கள், நடுநிலையானவர்கள், சமூக சிந்தனை கொண்ட புத்திஜீவிகளும் தற்கால அரசியலில் ரவூப் ஹக்கீமின் வகிபாகத்தை உணர்ந்திருக்கிறார்கள் என்பது நிதர்சனமானது.

முஷாரப் இணைவு - தடுமாறும் முகாவின் ஜீனியஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில்...
21/05/2025

முஷாரப் இணைவு - தடுமாறும் முகாவின் ஜீனியஸ்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவது தொடர்பாக அக் காட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இருந்த போதிலும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முஷாரப் அவர்களை கட்சியில் உள்வாங்குவதன் மூலம் ஒட்டுமொத்தமாக பொத்துவில் பிரதேசம் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும் மேலும் அம்பாறை மாவட்டத்தின் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியும் என்ற கணக்கில் விடாப்பிடியாக நிற்கின்றார்.

ஆனால் முஷாரப் அவர்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதன் மூலம் எதிர்காலத்தில் தமது பாராளுமன்ற கனவுக்கு பெரும் சவாலாக மாறி விடுவார் என்பது அக்கட்சியின் ஜீனியஸ்களின் எண்ணமாக உள்ளது.

இவ் இணைவை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக பல விதமான காய் நகர்த்தல்களை இவர்கள் ஈடுபட்ட போதிலும் திருப்திகரமான பதில்கள் தலைமையிடம் இருந்து வரவில்லை.

இதனால் முகாவின் தலைமைக்கெதிராக சில கருத்துக்கள் முன் வைக்கின்றனர்

21/05/2025

அரபு தேசங்கள் அமெரிக்காவை வாழவைத்துக் கொண்டிருக்கையில், சீனா தேசம் காசா மக்களை வாழவைப்பதற்காக உணவுப் பொட்டலங்களை போடும் பொருட்டு எகிப்து வழியாக காசாவுக்குள் போர் விமானங்களுடன் நுழையும் காணொளி.

29/04/2025

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025...

ஏறாவூர் நகர சபை..
வெற்றி பெற வைப்போம்.

13/10/2024

இம்முறை பலமான கட்சிகள் 4
SJB
NPP
SLPP

பொலன்னறுவை மாவட்டம் =பாராளுமன்ற தேர்தல்

NPP 2
SJB 1
UNP 1
SarvaJana bala 1
SLPP

13/10/2024

பொலன்னறுவை மாவட்ட செய்திகளை எதிர்பாருகள்

சாதாரண பெரும்பான்மையையும் இழக்கிறது அரசு..!! டக்ளஸ்,  பிள்ளையான், ஜீவன் கைவிரித்தால் ஆப்பு!! இடைக்கால அரசு அமையும் சாத்த...
04/04/2022

சாதாரண பெரும்பான்மையையும் இழக்கிறது அரசு..!! டக்ளஸ், பிள்ளையான், ஜீவன் கைவிரித்தால் ஆப்பு!! இடைக்கால அரசு அமையும் சாத்தியம்!!

பங்காளிகளின் வெளியேற்றம், இராஜாங்க அமைச்சர்களின் இராஜினாமா, ஆளுங்கட்சியினரின் அதிருப்தி ஆகியவற்றுக்கு மத்தியில் தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் வசம் -

✍️ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -117
✍️ஈபிடிபி - 02
✍️தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 01
✍️அரவிந்தகுமார் - 01
✍️டயானா - 01 - 122 ஆசனங்களே உள்ளன.

அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள ஏழு பேர் தயார் நிலையில் இருக்கின்றனர்.

1. சுசில் பிரேமஜயந்த
2. விஜயதாச ராஜபக்ச
3. சந்திம வீரக்கொடி
4. விதுர விக்ரமநாயக்க
5. பிரேமநாத் சீ தொலவத்த
6. நிமல் லான்சா
7. ரொஷான் ரணசிங்க

✍️122 - 7 = 115

✍️ஆக - ஆளுங்கட்சி வசம் தற்போது 115 ஆசனங்களே உள்ளன. இந்நிலையில் அரசிலிருந்து வெளியேற தயார் என்ற அறிவிப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் விடுத்துள்ளது.

✍️115-2 = 113

✍️எனவே, டக்ளஸ், பிள்ளையான் ஆகியோர் ( 2+1 = 3) அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டால் (113 - 3 = 110) நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சாதாரண பெரும்பான்மையை இழந்துவிடும்.

✍️சிலவேளை, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (4), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (02), அலி சப்ரி (புத்தளம்) (01) ஆகியோரின் ஆதரவை பெற்றால் அல்லது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் எதிரணி எம்.பிக்களை வளைத்து போட்டால் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

✍️தற்போதைய சூழ்நிலையில் கட்சி தாவல்கள் என்பது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே! தேசிய மட்டத்திலான தேர்தலொன்றுக்கும் சாத்தியம் குறைவு.

✍️எனவே, இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு அரசு முற்படலாம்.

✍️நாடாளுமன்றத்தின் பதவிகாலம் இரண்டரை வருடங்கள் முடிந்த பின்னர் 2023 பெப்ரவரியில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு கலைக்கலாம். ( தற்போதைய சூழ்நிலையில் இதுவே ஏற்புடைய நடவடிக்கையென அரசியல் கட்சிகள் கருதுகின்றன.) ஏனெனில் சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணியின் நிலைப்பாடு இதுவாகவே உள்ளது.

✍️பொதுத்தேர்தலில் மொட்டு கட்சி (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் ஆசனங்கள் சகிதம்) 145ஆசனங்களை வென்றது.

✍️இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி - 14 (நா.உ)
தேசிய சுதந்திர முன்னணி - 06
ஜனநாயக இடதுசாரி முன்னணி - 02
பிவிதுரு ஹெல உறுமய - 01
கம்யூனிஸ் கட்சி - 01
லங்கா சமசமாஜக்கட்சி - 01 (தேசியப்பட்டியல்)
‘யுதுகம’ - 01 ஆகியன அரசை எதிர்க்கும் நிலைப்பாட்டில் உள்ளன.

✍️145 -26 = 119
எமது மக்கள் சக்தி - 01
தேசிய காங்கிரஸ் - 01 என்பவனும் 11 கட்சிகளின் கூட்டணியில் உள்ளன. 119 -2 = 117 ( அரசு வசம் தற்போது உள்ள ஆசனங்கள்) எனவேதான், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் தற்போது 117 ஆசனங்களே உள்ளன என்று மேலே குறிக்கப்பட்டுள்ளது.

✍️அவசரகால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்தாலும் அதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அதனை நிறைவேற்றிக்கொள்வதற்குகூட அரசு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

ஆர்.சனத்

அவுஸ்திரேலியாவிலும் இலங்கை அரசுக்கு ஆர்ப்பாட்டங்கள்!இலங்கையில் இடம்பெறும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவாக அவுஸ்...
04/04/2022

அவுஸ்திரேலியாவிலும் இலங்கை அரசுக்கு ஆர்ப்பாட்டங்கள்!

இலங்கையில் இடம்பெறும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மெல்பேர்ன் சிட்னி பிரிஸ்பேர்ன் பேர்த் உட்பட பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Address


Telephone

+94 776569681

Website

Alerts

Be the first to know and let us send you an email when PolonnaruwaNET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PolonnaruwaNET:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share