
04/05/2022
السلام عليكم ورحمة الله وبركاته
انا لله وانا إليه راجعون
இன்று எமது பூகொடை மண்ணிலிருந்து எம்மை விட்டுப் பிரிந்த எமது அன்புச் சகோதரர் பர்தி ( Fardhi ) மற்றும் ஸபீர் (Zafeer) ஆகியவர்களுக்கு இறைவன் மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற சுவனத்தை வழங்குவானாக
அவர்களின் மறுமை வாழ்விற்காக அனைவரும் பிராத்தனை செய்து கொள்வோம்,
சகோதரர் Zafeer, Pist Network
இன் உறுப்பினராக இருந்து சென்ற வருடங்களில் Pist Media இன் பணிகளுக்கு தனது ஒத்துழைப்பை வழங்கியவர். இவரது இழப்பு எமக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. சகோதரர் பர்தி ஊர் மக்களுடன் மிக அன்னியோன்யமாக பழகியவர். இவ்விரு இளைஞர்களின் இழப்பு எமது ஊர் மக்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இவ்விரு இளைஞர்களின் குடும்பத்தினருக்கு எமது Pist உறுப்பினர்களின் ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். யா அல்லாஹ் இவர்களுடைய குடும்பத்தினருக்கு மன ஆறுதலையும் மன தைரியத்தையும் வழங்குவாயாக. யா அல்லாஹ் இவ்விருவருக்கும் மேலான ஜன்னதுல் பிர்தௌஸை வழங்குவாயாக. ஆமீன்.
اللهم اغفر لهما وارحمهما