RJS Tamil News

RJS Tamil News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RJS Tamil News, News & Media Website, Puttalam.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைரூஸ் தெரிவு செய்ய...
27/09/2025

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைரூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற போரத்தின் வருடாந்த மாநாட்டின் போதே இவர் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், புதிய செயலாளராக ஷம்ஸ் பாஹிமும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொருளாளராக கியாஸ் எம் புஹாரி ஏற்கனவே போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விலை குறைப்பு: மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகம்!இன்று (05) நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக அகி...
06/09/2025

விலை குறைப்பு: மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகம்!

இன்று (05) நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக மற்றும் பார் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கறிசோறு, பிரைட் ரைஸ், கொத்து, பிரியாணி, நாசி கோரெங் ஆகியவற்றின் விலையை 25 ரூபாயும், முட்டை ரொட்டி, பரோட்டா, ஷார்ட் ஈட்ஸ் போன்றவற்றின் விலையை 10 ரூபாயும் குறைப்பதாக பெருமையாக அறிவிக்கப்படுகிறது.

ஆனால் மக்களின் மனதில் எழும் முதல் கேள்வி – இன்றைய உண்மையான விலை எவ்வளவு?

ஒரு பிளேட் கறிசோறு ரூ.400க்கு விற்கிறதா? ரூ.500க்கு விற்கிறதா?

அதை வெறும் ரூ.25 குறைப்பது மக்களுக்கு உண்மையான நிவாரணமா? அல்லது மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகமா?

இது வெளிப்படையான நிவாரணம் அல்ல. இது வெறும் கணக்குப் பொய்மை.

உணவக சங்கங்களும், அரசியல் தலைமைகளும் இணைந்து மக்களை சிக்கவைக்கும் புதிய வஞ்சக முறையிது. உண்மையான விலை தெரியாமல் “குறைந்துவிட்டது” என்று அறிவிப்பது, மக்களின் பசி, வலி, துயரங்களை கேலி செய்வது போலவே உள்ளது.

➡️ விலை குறைத்ததாகச் சொல்வதற்கு முன், தற்போதைய உணவுப் பொருட்களின் சரியான விலையை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

➡️ குறைப்பு உண்மையில் நடைமுறைக்கு வருகிறதா என்பதை சுயாதீன கண்காணிப்பு குழுக்கள் மூலம் உறுதி செய்ய வேண்டும்.

➡️ இல்லையெனில் இது பத்திரிகை தலைப்புகளுக்காக மட்டுமே நடத்தப்படும் விளம்பர அரசியல்.

இன்று சாதாரண குடும்பம் ஒரு சாதாரண உணவை வாங்கவே பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறது. அத்தகைய தருணத்தில், “ரூ.25 குறைத்தோம்” என்ற போலியான அறிவிப்பால் மக்களை ஏமாற்றும் செயல், வெறும் அரசியல் பாசாங்கு மட்டுமே.

முடிவாக,

இது மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நடவடிக்கை அல்ல; இது மக்களை ஏமாற்றும் பொய்யான விலை குறைப்பு நாடகம்.

அரசும் வணிக சங்கங்களும் மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்காமல், வெறும் தலைப்புச் செய்திகளுக்காகவே இந்த நடவடிக்கைகளை எடுத்துக் காட்டுகின்றனர்.

✍️ சப்வான் சல்மான்
செயலாளர் – ஐக்கிய காங்கிரஸ்.

ஜனாதிபதியின் தலைமையில் தேசிய மீலாதுன் நபி விழாதேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (05)...
05/09/2025

ஜனாதிபதியின் தலைமையில் தேசிய மீலாதுன் நபி விழா

தேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (05) பிற்பகல் அம்பலாந்தோட்டை, மெலே கொலனி கிராமத்தில், மஸ்ஜிதுல் அரூஸியா ஜும்ஆ பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்றது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இஸ்லாமிய மதத் தலைவர் முஹம்மது நபியின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் இந்த தேசிய விழா ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பிரதேசத்தின் மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களின் ஆதரவும் பங்களிப்பும் இதற்கு கிடைத்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

2025 தேசிய மீலாதுன் நபி விழாவிற்காக வெளியிடப்பட்ட நினைவு முத்திரை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் கலாசார மற்றும் வரலாற்றுப் பெறுமதியை மையமாகக் கொண்டு தொகுக்கப்பட்ட "ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் வரலாறு மற்றும் வளர்ச்சி" என்ற நூலும் வழங்கி வைக்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி பயிலும் இன, மத பேதமின்றி அனைத்து மாணவர்களிடையே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட சித்தரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்றார்.

2025 தேசிய மீலாதுன் நபி விழாவில் பங்கேற்றதற்காக ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்ட முஸ்லிம் மக்களும் முஸ்லிம் ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாக சபையும் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசையும் வழங்கின.

இலங்கையின் ஹஜ் யாத்திரை ஒதுக்கீட்டை மேலும் அதிகரிப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக, இந்த விழாவில் உரையாற்றிய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தெரிவித்தார். அதன்படி, இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்காக செலவிட வேண்டிய தொகையைக் குறைக்கவும், யாத்ரீகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் இரங்கலையும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், அமைதி, ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துதல் ஆகியவை நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல்கள் என்றும் குறிப்பிட்டார்.

அனைத்து மக்களிடையேயும் அமைதியும் நல்லிணக்கமும் நிலைநாட்டப்படும் ஒரு அழகான நாடு என்பதே தற்போதைய அரசாங்கத்தின் அபிலாஷை என்று சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், 2025 தேசிய மீலாதுன் நபி விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு அப்பகுதி மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கியதை நினைவு கூர்ந்ததுடன், இந்த ஒற்றுமை ஒரு அழகான நாட்டின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.

மகா சங்கத்தினர் மற்றும் மதத் தலைவர்கள், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி,புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத், ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் நிஹால் கலபத்தி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. சேனாதீர, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ் ஆகியோருடன் அரச அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப்பிரிவு

புத்தளம் மாவட்ட செயலாளராக வை.ஐ.எம்.சில்வா கடமை பொறுப்பேற்பு!புத்தளம் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக கைத்தொழில் அமைச...
02/09/2025

புத்தளம் மாவட்ட செயலாளராக வை.ஐ.எம்.சில்வா கடமை பொறுப்பேற்பு!

புத்தளம் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) கடமையாற்றிய வை.ஐ.எம்.சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் மாவட்ட செயலாளராக கடமையாற்றி வந்த எச்.எம்.எஸ்.பீ. ஹேரத் , களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றப்பட்டதை அடுத்து, புத்தளம் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா தனது கடமைகளை நேற்று திங்கட்கிழமை (01) தனது உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) புபுதிகா எஸ் பண்டார, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) சதுரக ஜயசிங்க, உதவி மாவட்ட செயலாளர் நிமேஷா ஜயபத்ம, பிரதம கணக்காளர் ஏ.எம்.டபிள்யூ. கே.பிரசன்ன, கணக்காளர் எஸ்.அருண் குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

2004 ஆம் ஆண்டு நொச்சியாகம பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக அரச துறையில் தனது பணியை ஆரம்பித்த இவர், 2007 ஆம் ஆண்டு முதல் பிரதேச செயலாளராக பதவியுயர்த்தப்பட்டார்.

பின்னர் கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் சுங்கத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகவும், விமான நிலைய சுங்கப் பிரிவு பணிப்பாளராகவும், அரச கைத்தொழில் சபையின் (நிர்வாக) பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தரத்தை பெற்றுக் கொண்ட இவர், அதே ஆண்டு செப்படம்பர் மாதம் கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு சுமார் ஒரு வருடங்களாக கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றி வந்த வை.ஐ.எம்.சில்வா, இம்மாதம் முதலாம் திகதியில் இருந்து புத்தளம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் கடந்த 22 வருடங்கள் அனுபவம் கொண்ட இவர், களனிப் பல்கலைக்கழகத்தில் மனித வள முகாமைத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளதுடன், நுவரெலியா காமினி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- ரஸீன் ரஸ்மின்

புத்தளம், பாலாவி - முல்லை ஸ்கீமைச் சேர்ந்த ஜிப்ரி முஹம்மது ரிஸ்வான் என்பவருடைய சாரதி அனுமதிப் பத்திரம், தேசிய அடையாள அட்...
31/08/2025

புத்தளம், பாலாவி - முல்லை ஸ்கீமைச் சேர்ந்த ஜிப்ரி முஹம்மது ரிஸ்வான் என்பவருடைய சாரதி அனுமதிப் பத்திரம், தேசிய அடையாள அட்டை மற்றும் மோட்டார் சைக்கிள் ஆவணங்கள் என்பன கடந்த வெள்ளிக்கிழமை (2025.08.29) சிலாபத்தில் இருந்து புத்தளம் நோக்கி வரும் வழியில் பிரதான வீதியில் தவறிவிட்டது. எனவே, இதனை யாராவது கண்டெடுத்தால் உடனடியாக 0710888925, 071 328 2024 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.

கச்சதீவு இலங்கையின் உரிமை - தேர்தல் பிரச்சார விளையாட்டுப் பொருள் அல்ல!இலங்கையின் இறையாண்மையையும், நில உரிமையையும் சவாலுக...
31/08/2025

கச்சதீவு இலங்கையின் உரிமை - தேர்தல் பிரச்சார விளையாட்டுப் பொருள் அல்ல!

இலங்கையின் இறையாண்மையையும், நில உரிமையையும் சவாலுக்குட்படுத்தும் வகையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் சமீபத்தில் கச்சதீவை இந்தியாவுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்திருப்பது அரசியல் ரீதியாக ஆபத்தானதும், பிராந்திய ஒற்றுமைக்கு கேடு விளைவிப்பதும் என எமது ஐக்கிய காங்கிரஸ் கட்சி தீவிரமாகக் கண்டிக்கிறது.

📜 வரலாற்று உண்மைகள்

கச்சதீவு தொடர்பான உரிமைத் தகராறு 1974 மற்றும் 1976 ஆண்டுகளில் இலங்கை – இந்தியா இடையே கையெழுத்திடப்பட்ட கடல்சார் எல்லை ஒப்பந்தங்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டது.

அவற்றின் படி:

கச்சதீவு தீவு முழுமையாக இலங்கைக்கு சொந்தமானது என்பதை இந்திய அரசாங்கமே அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

இந்திய மீனவர்கள் அங்கு நிலம் கோர முடியாது; சில சமயங்களில் மத நிகழ்வுகளில் பங்கேற்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

1976ஆம் ஆண்டு கூடுதல் ஒப்பந்தம் மூலம் இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி செய்யும் உரிமையும் தடை செய்யப்பட்டது.

இதனால், சர்வதேச சட்ட ரீதியாகவும், அரசியல் ஒப்பந்த ரீதியாகவும் கச்சதீவு இலங்கையின் பிரிக்க முடியாத நிலப்பகுதி என்பதை யாரும் மறுக்க முடியாது.

🎭 விஜயின் அரசியல் நாடகம்

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் போதெல்லாம் கச்சதீவு விவகாரம் மலிவு அரசியல் அட்டையாக பயன்படுத்தப்படுகிறது.

அரசியல் அனுபவமில்லாத விஜய், தமிழர் உணர்வுகளை தூண்டி வாக்குகளைப் பெறும் நோக்கில், இலங்கையைத் தாக்கும் வகையில் பேச்சாற்றுகிறார். ஆனால், இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை சிதைக்கும் அபாயகரமான செயல் என்பதை அவர் புறக்கணிக்கிறார்.

இலங்கையில் பொருளாதார சவால்கள், சமூக பிரச்சினைகள், அரசியல் நிலைத்தன்மை ஆகியவை குறித்து நாம் போராடிக்கொண்டிருக்கும்போது, வெளிநாட்டு அரசியல்வாதிகள் எமது நிலப்பரப்பை கேள்வி எழுப்புவது எமது நாட்டின் சுயாட்சியை அவமதிப்பதாகும்.

🇱🇰 இலங்கையின் உறுதியான நிலைப்பாடு

எந்த நிலையிலும் இலங்கை அரசு தனது நில உரிமையை விட்டுக் கொடுக்காது.

கச்சதீவு தொடர்பில் எப்போதும் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு காக்கப்படும்.

இலங்கை மக்களின் நம்பிக்கை, தியாகம், ஒற்றுமை – இவை அனைத்தும் எங்கள் நிலப்பரப்பை காப்பதற்கான உறுதியான அடித்தளம்.

⚡ எமது எச்சரிக்கை

👉 விஜய் போன்றோர் தேர்தல் பிரசாரத்திற்காக கச்சதீவை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
👉 இலங்கையை குறிவைக்கும் அரசியல் பிரிவினைவாத சிந்தனைகள் ஒருபோதும் வெற்றி பெறாது.
👉 தமிழ்நாடு அரசியல்வாதிகள் இலங்கையின் சுயாட்சியை மதித்து பேச வேண்டும்.
👉 இலங்கை நிலப்பரப்பை குறித்த எந்த கோரிக்கையும் எங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

✍️
சப்வான் சல்மான்
பொதுச் செயலாளர்
ஐக்கிய காங்கிரஸ்

சிலாபம் புனித பெர்ண தேத் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா!சிலாபம் புனித பெர்ண தேத் கல்லூரியின் மா...
31/08/2025

சிலாபம் புனித பெர்ண தேத் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா!

சிலாபம் புனித பெர்ண தேத் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா கடந்த புதன்கிழமை (27) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.அஸ்வர்கான் தலைமையிலும் அருட் சகோதரி ரி.தர்ஷினி பெரேராவின் நெறிப்படுத்தலுடனும், ஆரம்பப் பிரிவின் பகுதித் தலைவர் பி. பிரபாகரன் ஆசிரியரின் மேற்பார்வையிலும் மேற்படி நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக சிலாபம் கல்விப் பணிமனையின் தமிழ் பிரிவுக்கான பணிப்பாளர் ஜெ. ஹனிதா, கௌரவ அதிதியாக அருட்தந்தை விநோதன் பிரான்சிஸ் குலாஸ் அடிகளார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் டி.நிஷா பெர்னான்டோ மற்றும் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் ரி.சதீஷ் உட்பட உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான தலைவர்களும், இடைநிலை மற்றும்
சிரேஷ்ட மாணவர்களுக்கான தலைவர்களும் தெரிவு செய்யப்பட்டு குறித்த மாணவர்களின் பெற்றோர்களின் கரங்களால் சின்னம் அணிவிக்கப்பட்டது.

சிரேஷ்ட மாணவத் தலைவனாக டி. லோகேஷ் மற்றும் சிரேஷ்ட மாணவ தலைவியாக எஸ்.ஹரிஸ்ரீ ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதுடன், ஆரம்ப பிரிவின் சிரேஷ்ட மாணவ தலைவனாக கே. அன்ரூ மற்றும் ஆரம்ப பிரிவின் சிரேஷ்ட மாணவ தலைவியாக ஆர். சகஸ்தி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

மாணவ தலைவர்களுக்கான சின்னத்திற்கு திருஞான பிரகாசம் நதியா எப்.எம்.உரிமையாளர் மற்றும் ஆரம்பப் பிரிவு மாணவத் தலைவர்களுக்கான மேலங்கி வழங்கிய 1997 ஆம் ஆண்டு சாதாரண தரமானவர்கள் மற்றும் ஸ்டார் டெய்லர் உரிமையாளர் திருவாளர் கனகலிங்கம் கிருஷ்ணா ஆகியோரும் அனுசரணை வழங்கினர்.

படங்களும், தகவலும்:
#நிஹ்மத் அஸீஸ் - ஆசிரியர்

 : ஊடகவியலாளர்களால் கௌரவிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட செயலாளர்...களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் புத...
30/08/2025

: ஊடகவியலாளர்களால் கௌரவிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட செயலாளர்...

களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பீ. ஹேரத் , புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களினால் கௌரவிக்கப்பட்டார்.

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நேற்று 29 இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட செயலாளராக கடந்த மூன்றரை வருடங்களாக கடமையாற்றி வந்த இவர், செப்டம்பர் மாதம் முதலாம் திகதி களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், புத்தளம் மாவட்டத்தில் வாழும் மூவின மக்களுக்கு இவர் செய்த சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் முகமாக புத்தளம் மாவட்ட தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

புத்தளம் மாவட்ட செயலகத்தின் ஊடக அதிகாரி இந்துனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு புத்தளம் மாவட்ட செயலாளருக்கு நினைவு சின்னத்தை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம்-மதுரங்குளி பொலிஸ் பிரிவின் கடையாமோட்டை கிராம சிவில் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது கற்கள...
20/08/2025

புத்தளம்-மதுரங்குளி பொலிஸ் பிரிவின் கடையாமோட்டை கிராம சிவில் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது கற்கள் , போத்தல்கள் என்பவற்றை பயன்படுத்தி செவ்வாய்க்கிழமை (19) தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முழுமையான வீடியோவுக்கு 👇👇👇

அஸ்வெசும நலன்புரி உதவித் தொகை பெறத் தவறிய தகுதி உள்ள மக்களுக்கு மீண்டும் கணக்கெடுப்பு அவசியம் -  ஐக்கிய காங்கிரஸ் கோரிக்...
24/07/2025

அஸ்வெசும நலன்புரி உதவித் தொகை பெறத் தவறிய தகுதி உள்ள மக்களுக்கு மீண்டும் கணக்கெடுப்பு அவசியம் - ஐக்கிய காங்கிரஸ் கோரிக்கை!

https://rjstamil.blogspot.com/2025/07/blog-post_50.html

Address

Puttalam

Website

Alerts

Be the first to know and let us send you an email when RJS Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share