09/04/2025
Healthy life style / ஆரோக்கிய வாழ்வு முறை பற்றிய பேச்சை எடுத்தாலே, நம்மில் பலருக்கு பிடிப்பதில்லை....
வயோதிப காலத்தில், நாக்கின் சுவை மரத்து போன பிறகு, வெறும் மருந்து போல தானியங்களும், கீரை மற்றும் கசப்பான பானங்களையும் எடுத்துக் கொள்வது தான் ஆரோக்கிய உணவு என்கிற நினைப்பு தான் இதற்கு காரணம்.
அதற்கு வயோதிப காலங்களை எட்டும் வரையாவது நாம் உயிர் வாழ வேண்டுமே!
இது 👇அனுராதபுர Hela Bojun Hala (Sri Lankan food court) லவில் இன்று நான் வாங்கிய காலை உணவு.
கோதுமை/மைதா மாவுக்குக்கு பதிலாக அரிசி மா மற்றும் மரவள்ளி கிழங்கு மா சேர்த்து, கூடவே இரும்புச் சத்துக்காக பல வகை கீரைகளையும் உள்ளடக்கி செய்த தேங்காய்ப்பூ ரொட்டி (Pol Rotti).
சுவை தூக்கலாக, ஆரோக்கியத்துக்கும் குறைவில்லாத நிறைவான காலை உணவு.
காலை 7 மணிக்கெல்லாம், பாடசாலை சிறுவர்கள், அலுவலக ஊழியர்கள் என அந்த இடம் நிரம்பி வழிகிறது. விலையும் மிகக் குறைவே!
நம்மூரில் பெரும்பாலான பாடசாலைச் சிறுவர்கள், நேற்று வாங்கிய பழைய பராட்டா, மிஞ்சி போன Fried rice, rolls/parties அல்லது ஏதாவது பேக்கரி உணவுகளைத்தான் காலை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள்.
விளைவு:
5 வயதில் கான்சர், 12 வயதில் நீரழிவு, 36 வயதில் மாரடைப்பு.... நீண்ட கால நோய், வைத்தியசாலை சீரழிவு மற்றும் 40 களிலேயே மரணம் என, எம் சமூகம் அழிந்து கொண்டிருக்கிறது.
மாறுவோம்... மாற்றுவோம் :)