12/06/2026
🏥 புழுதி வயல் வைத்தியசாலைக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது...
புழுதி வயல் வைத்தியசாலைக்கு 12 நாட்களுக்குப் பின்னர் நிலுவையில் இருந்த மின்சாரக் கட்டணம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று மீண்டும் மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கியிருந்த சிரமங்கள் நீங்கி, வைத்தியசாலையின் சேவைகள் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளன.
இந்த விடயத்தில் அக்கறையுடன் செயல்பட்டு, மின்சார வசதி மீண்டும் கிடைக்க முயற்சி செய்த அனைத்து தரப்பினருக்கும் பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
📍 புழுதி வயல்
தகவல்: A.R.M. Jasem Rahman
#புழுதிவயல் #வைத்தியசாலை #மின்சாரம் #சமூகசேவை #இலங்கைசெய்திகள்
Ajmil Tahiseen Ajmil Trend Everybody Hate Krissy Jaseem Rahman Siraj Mohamed