Sammanthurai news

Sammanthurai news சம்மாந்துறைச் செய்திகள் உடனுக்குடன்

****** For sale *****Model:- Hero honda hunk Location:- sammanthurai.amparaBike number :- EP UG 1110Price:- 250000/=Cont...
20/05/2025

****** For sale *****
Model:- Hero honda hunk
Location:- sammanthurai.ampara
Bike number :- EP UG 1110
Price:- 250000/=
Contact:- 0784379867 Negotiate the price.
•Good_spare_parts•
•In_Good_condition•
•documents_all_clear

Postal voter's
23/04/2025

Postal voter's

12/04/2025

சம்மாந்துறையில் உள்ள வட்டாரங்களில் 10 வட்டாரங்களை 🏅 வெற்றி கொள்ளுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக வட்டார மக்கள் நாளாந்தம் தெரிவிப்பதனை அவதானிக்க முடிகின்றது

Our Leader ARM. Azartheen ?

🏅 X...

சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தல் இம்முறை சர்வ்ஜன அதிகாரம் 🏅 பதக்க சின்னம்  பேசும் பொருளாக உள்ளது...? மக்களுக்கு இலாபம் க...
11/04/2025

சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தல் இம்முறை சர்வ்ஜன அதிகாரம் 🏅 பதக்க சின்னம் பேசும் பொருளாக உள்ளது...? மக்களுக்கு இலாபம் கிடைக்கும்படி அவர்கள் திட்டம் இருக்கிறது ! அதனை நான் பாராட்டும் விதமாக இந்தப் பதிவினை பதிவிடுகிறேன். வாழ்த்துக்கள் MR.Azartheen

28/03/2025

என்ன ஒரு காலக்கொடுமை 😭 இது ஒரு பக்கம் இருக்க சமூக வலைத்தளத்தில் ஃப்ரீ ப்ரோமோஷன் என்ற பெயரில் முகநூல் பக்கத்தில பதிவுகளை இறக்கி தள்ளுகிறார்கள் SLMC

22/03/2025

சம்மாந்துறை
🌳 SLMC
தேவையில்லை
நல்ல சிந்தித்து முடிவு எடுங்கோ மக்கள்

 #சம்மாந்துறை  #மாவடிப்பள்ளி ஊர் மக்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் அன்னாரின் மறுமை வா...
27/11/2024

#சம்மாந்துறை #மாவடிப்பள்ளி
ஊர் மக்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் அன்னாரின் மறுமை வாழ்க்கைக்காக .

°சமூக வலைதள வாசிகளே மரணித்த ஜனாஸாக்களை புகைப்படம் வைத்து சமூக வலைத்தளத்தில் பரப்ப வேண்டாம் ஏனென்றால் அவர்கள் மரணித்த மரணத்தையே ஏற்றுக் கொள்ள இயலாத மனப்பக்குவத்தில் அவர்களுடைய குடும்பம் இருக்கின்றது இது அவர்களுக்கு அல்ல நமக்கும் ஒரு நாள் நடக்கலாம்

  #புதிய_தலைமுறையே_எழுந்து_வா...!! சம்மாந்துறை ஆண்டிட சந்தியில் வீரமுனை கிராம சேவகர் பிரிவுக்கான வரவேற்பு நுழைவாயில் ஒன்...
20/06/2024


#புதிய_தலைமுறையே_எழுந்து_வா...!!

சம்மாந்துறை ஆண்டிட சந்தியில் வீரமுனை கிராம சேவகர் பிரிவுக்கான வரவேற்பு நுழைவாயில் ஒன்றை இனங்களுக்கிடையில் முறுகலையும் சமாதானக் குலைவையும் ஏற்படுத்தும் வகையில் பிரதேச சபை மற்றும் கட்டிட நிர்மாணத்துடன் தொடர்புபட்ட வேறு எந்த அரச நிறுவனங்களின் அங்கீகாரமும் அனுமதியும் இல்லாமல் நிர்மாணிப்பதற்கு அரசியல் உள்நோக்கம் கொண்ட சில தீய சக்திகளால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை தடுத்து நிறுத்துமாறும் தமிழ் முஸ்லிம் இன நல்லுறவை தொடர்ந்தும் பாதுகாக்குமாறும் நான் உட்பட கௌரவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் Saheel Acm மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா அவர்களின் சம்மாந்துறைக்கான இணைப்பாளர் Ahamed Aakif Ansar மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் காங்கிரஸின் தவிசாளர் Zamil A Jabbar ஆகியோரினால் சம்மாந்துறை போலீஸ் நிலையத்தில் இரண்டு முறைப்பாடுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாடு சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அவர்களால் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தின் கௌரவ நீதிபதி அவர்களுக்கு முன்னிலைப்படுத்தப்பட்டு குறித்த சட்டபூர்வமற்ற நுழைவாயில் கோபுர நிர்மாணத்துக்கு தடை உத்தரவு பெறப்பட்டது.

குறித்த தடைவுத்தரவு பிறப்பிக்க பட்டவர்களை மன்றில் ஆஜராகுமாறு கௌரவ நீதவான் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க குறித்த வழக்கானது இன்று கௌரவ நீதவான் அவர்களின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த சட்டவிரோத நிர்மாணத்துக்கு எதிராக பெறப்பட்ட தடை உத்தரவை வருகின்ற 26 ஆம் தேதி வரைக்கும் நீடிப்பதற்கு கௌரவ மன்று கட்டளையிட்டுள்ளது.

குறித்த வழக்கில் சம்மாந்துறை மண் சார்பாக சம்மாந்துறையின் முச்சபைகளின் வழிநடத்தலில் (Ameer Ibraheem Mohammed Haniffa Abdul Rasheed இந்த மூவரின் பங்களிப்பும் மிகவும் அபரிமிதமானது)

சட்டத்தரணிகளான

#சட்டத்தரணி நசீல் சட்டத்தரணி அரூஸ் #சட்டத்தரணி யூ கே சலீம்
#சட்டத்தரணி ஷாமிலா காதிர்
#சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவரது கனிஷ்ட #சட்டத்தரணி பௌஸான்
#சட்டத்தரணி யூ எல் சமீம்
#சட்டத்தரணி நவாஸ் ஏ ஜப்பார்

போன்றோர் மன்றில் ஆஜராகி குறித்த தடையுத்தரவை நீடிப்பதற்கு வாதிட்டனர்.

குறித்த நிர்மாணம் சட்டபூர்வமற்றதாக இருந்தால் அதனை அகற்றுவதற்கான முழு நடவடிக்கையும் சம்மாந்துறை பிரதேச சபையினுடைய செயலாளர் எடுக்க வேண்டுமென மன்றில் சகல தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இனவாத அரசியலும் இனத்துவ முனைப்புகளும் சமூக நல்லுறவை குலைத்து அதிலேயே தங்களது அரசியலை வளர்க்கும் அளவு மிக மோசமான நிலைமையை நமது ஊரும் இன்று எதிர் கொண்டுள்ளது.

குறித்த விடயத்தை அரசியல் மயப்படுத்துவதற்கு பல்வேறு எத்தனங்களை பல்வேறு தரப்புகளும் செய்து வருவது மிகவும் வேதனையானது.

குறித்த போலீஸ் முறைப்பாடு செய்யப்பட்டிருக்காவிட்டால் குறித்த சட்டவிரோத நிர்மாணம் எவ்வித தடைகளும் இல்லாமல் பலத்த அரசியல் ஆசீர்வாதத்துடன் நிச்சயம் நிறைவேறி இருக்கும் என்பதை யாவரும் அறிவோம்.

அரசியல் பேதங்களைக் கடந்து இந்த விடயத்தில் கைகோர்த்த ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைக்கான அமைப்பாளர் சகோதரர் பாஷித் Basith Str அவர்களுக்கும் ஊரின் நலனை விரும்பி இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வருகை தந்து அக்கறையோடு நீதி வேண்டிய செயற்பாடுகளை அவதானித்த நலன் விரும்பிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அரசியல் பேதங்களைக் கடந்து ஒற்றுமைப்பட்ட இந்த நிகழ்வானது நமது ஊருக்கு ஒரு முக்கிய செய்தியை சொல்லி இருக்கிறது.

நமது ஊர் ஒரு புதிய மாற்றத்தை குறிப்பாக அதனுடைய அரசியல் அனாதைத்தன்மையை நிவர்த்திப்பதற்கு தயாராகி நிற்பதை எனக்கு உணர்த்துகிறது.

மிகப்பெரும் வரலாற்று பெருமை கொண்ட நமது மண் இன்று எல்லாத் துறைகளிலும் சூறையாடப்பட்டும் மலினப்படுத்தப்பட்டும் நிற்கின்ற இந்த நிலைமையில் நமது ஊர் குறித்தும் ஊரின் உடைய செயற்பாடுகள் குறித்தும் மிக மோசமான விமர்சனங்களை குறித்த சட்டபூர்வமற்ற நிர்மாணத்தை செய்ய முனைந்தவர்கள் சமூக ஊடகங்களில் செய்து வருகிறார்கள்.

அது குறித்து விழிப்புணர்வுடனும் இந்த நேர்மையான முன்னெடுப்பை அரசியல் காழ்ப்புணர்வுடன் நோக்கும் கயமைத்தனமான அரசியலை பாரம்பரியமாக செய்து வருபவர்கள் குறித்தும் நமது ஊர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

எல்லாவற்றையும் அரசியலாக பார்க்கும் மோசமான மனநிலை ஒழிய வேண்டும்..

தலைவர்களே இல்லை நான் தான் தலைவர் என்று மார்தட்டிக் கொண்டு நிற்கும் பிழைப்புவாத அரசியல் முற்று முழுதாக இந்த மண்ணில் இருந்து ஒழிய வேண்டும்...

இது எங்களுடைய எதிர்காலம்..

உங்களுடைய சுயநலவாத அரசியலை கொஞ்சம் நிறுத்தி ஓய்வெடுங்கள்..

ஒரு புதிய சம்மாந்துறையைக் கட்டி எழுப்பி காட்டுகிறோம்...

நமக்குள்ளே இளம் தலைவர்கள் தாராளமாக நிறைந்து கிடக்கிறார்கள்..

அவர்களுக்கும் களமாட சந்தர்ப்பம் கொடுங்கள்...

எனக்குத் தர மறுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இனிமேலும் இந்த மண்ணில் எந்த இளைஞனுக்கும் மறுக்கப்படக்கூடாது.. உறுதி கொள்ளுங்கள் எல்லாம் சரியாகவே முடியும்.

(குறித்த பதிவானது குறித்த விடயம் தொடர்பாக சில தீய சக்திகளால் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் பொய்யான விடயங்களை தெளிவுபடுத்துவதற்காகவே எழுதப்பட்டது) copy

Sammanthurai news   இன்று ஆண்ட சந்தி விவகாரத்தில் ஊர் பற்றாளர் எல்லாரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் உலமா சபையும் அரசிய...
15/06/2024

Sammanthurai news
இன்று ஆண்ட சந்தி விவகாரத்தில் ஊர் பற்றாளர் எல்லாரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் உலமா சபையும் அரசியல் பிரமுகர்களும்.. pc- rifkan

Eid al-adha
14/06/2024

Eid al-adha

18/12/2023

❤️❤️❤️☝️

Read..                    விவசாயி.......?          23.02.2023 வெள்ளிக்கிழமை அன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்த...
28/02/2023

Read..
விவசாயி.......?

23.02.2023 வெள்ளிக்கிழமை அன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் யானை தாக்கி மரணித்த சம்பவோம்⭕️

இந்த மரணம் ஒட்டுமொத்த இலங்கையரும் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய கடமை இந்த விவசாயி பல கஷ்டங்களை தாங்கி கொண்டு நெல் விதைத்து பசலை போட்டு ஒவ்வொரு நோய்க்கும் நச்சு என்னை அடித்து கடைசில் அறுவடை காலத்தி யானை காவல் குறிவிக்காவல் போன்ற
எல்லவற்றையும் செய்து விட்டு

அவர் விதைத்த நெல்லில் கிடைக்கும் அரிசியில் சோறு சமைச்சி சப்புடகூட கிடைக்கவில்லை ஆனால் அவர் விதைத்த அந்த விதையில் கிடைக்கும் அந்த அரிசி
சிலர் வீட்டில் இருக்கும் அது யார் யாரியென்று பாருங்கள்

1. விவசாயம் என்னவென்று தெரியாதவர்
2. நகர புரத்தில் வாழ்கிறவர்
3. Ministers
4. Doctors
5. Engineers
6. President

இவ்ர்கள் அனைவருக்கும் பசியை தீர்த்த விவசாயி இப்போ தன் பிள்ளைகளின் பசிக்கு பசிதீர்க்க அவர் இப்போ இல்லை

அந்த விவசாயி மரணித்த சம்பவோம் பலருக்கு அது ஒரு விபத்து போலத்தான் இருக்கும் அடுத்த நாளே அதை மறந்து விடுவார்கள் ஆனால் சக விவாசகிகளுக்கு பெரும் இழப்பு
சம்மாந்துறை தீர்ந்த விவசாயிகள் திணறியதை கண்டேன்

நிறையபேர் சம்மாந்துறையில் யானை தாக்கி மரணம் என்ற பதிவுகளை நிறைய பார்த்தேன்.

இந்த விவசாயம்தான் அவேகர்ளின் அடையாளம் விவசாயம் என்றால் ஒரு போர்

அந்த போரில் விளங்குகள் வந்து தாக்கி மரணிக்க விடாதிர்கள் இது கடைசி மரணமாக இருக்கட்டும்.

சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் மாறும் முஸ்லீம் பாராளமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்து கொண்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறான்.

I miss tahir விவசாயி 🚫

Address

Sammanthurai
Sammanthurai
32200

Telephone

+94766019007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sammanthurai news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share