
24/07/2025
கிண்ணியா காரனின் உணவகத்தில் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் Trade inspection ஆனது உணவு ஒவ்வாமை சர்ச்சையினால் நேற்று இரவு (2025-7-23)ம் திகதி அன்று திகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எ.எம்.எம்.அஜித் அவர்களின் தலைமையில் உணவகங்கள் விஷேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் வைத்திருந்தவர்கள், சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்களுக்கு எதிராக 20 குற்றச்சாட்டியின் கீழ் 12 வர்த்தகர்களுக்கு வழக்கு தாக்கல். இரண்டு உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
. இந்த செயற்பாடுகளுக்கு முக்கிய பங்கு வகித்த RDHS, SPHI-D, F&D ,SPHI , குறிஞ்சாக்கேணி MOH அலுவலக SPHI, PHI களுக்கும் மற்றும் எமது அலுவலக PHI களுக்கும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எ.எம்.எம்.அஜித் அவர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்.
எதிர் வரும் காலங்களில் ஏனைய வர்த்தக நிலையங்களும் திடீர் பரிசோதனைக் உட் படுத்தப்பட உள்ளன. என்பதும் குறிப்பிடத்தக்கது.
#இலங்கை சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்ற முடிவுகள் வரும் முன் குற்றவாளிகளாக உணவக உரிமையாளர்களையும் உணவகளையும் பகிரங்கப்படுத்துவது குற்றமாகும்.
#நன்றி