
18/11/2024
என்றும் என் இருதயத்திற்கு நெருக்கமான
HMM Faiz நேசர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்,
திருகோணமலை மாவட்டத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எமக்கான வேட்பாளர்களுக்காக,
உங்களால் முடியுமான உச்ச பணியை நிறைவேற்றியுள்ளீர்கள்.
அதற்காகவும்,
எமக்காக வாக்களித்த எல்லோரையும் வாழ்த்தி நன்றியையும் தெரிவித்துக்கொண்டு,
உங்கள் அனைவரினதும் அர்ப்பணிப்புகளுக்காக எப்போதும் உங்களின் குரலாக இருப்பேன்!
வெற்றி,தோல்வி இறைவனின் நியதியானது.
அதில் நாம் யாரும் விதிவிலக்கானவர்கள் அல்ல.
எம் முயற்சிகள் தோற்றாலும், நம் நல்லெண்ணங்கள் ஒரு போதும் தோற்காது.
காலம் நமக்கெல்லாம் சிறந்த பாடம்.
அவை கடந்த காலங்களில் பல அனுபவங்களை தந்துள்ளது.
உங்களுக்கான பிரதிநிதித்துவ இழப்பினால் நீங்கள் அடைந்த வேதனையை நன்கு அறிவேன்.
இறை நியதியை ஏற்றுக்கொண்டு,
தொடர்ந்தும் HMM Faiz அவர்களின் கொள்கையோடு பயணிக்க,
உங்களுக்காக பிரார்த்திக்கின்றேன்.
உங்கள் உடன்பிறப்பு
சட்டத்தர்னி
எச் .எம் .எம் . பாயிஸ்
முன்னாள் கிழக்கு மாகாண சபை தவிசாளர்.