TNN News

TNN News News 1st

🚨 நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.முன்னர் நாளை (30) முடிவடை...
29/09/2022

🚨 நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னர் நாளை (30) முடிவடைவதாக கூறப்பட்ட நிலையில் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, சமுர்த்தி உறுப்பினர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் பொது உதவிப் பயனாளிகள் ஆவணங்களில் விண்ணப்பித்தவர்கள் மற்றும் பலன்களை எதிர்பார்க்கும் அனைத்து பயனாளிகளும் இந்தப் புதிய பதிவிற்குள் நுழைய வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்கும் அனைத்து நபர்களும் மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த பிரதேச செயலகம், கிராம சேவையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது நன்மைகளைப் பெறும் எந்தவொரு தரப்பினருக்கும் அதனை இழக்கும் அபாயம் இல்லை என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை விண்ணப்ப படிவத்தில் தற்போது எந்ததெந்த நன்மைகளுக்கு அரசின் உதவியை பயனாளிகள் பெறுவது, தொகை என்பதை குறிப்பிட வேண்டும்.

🚨கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில்  வார இறுதியில்  சொகுசு புகையிரத சேவையொன்று எதிர்வரும் முதலாம் திகதி முதல் இயக...
29/09/2022

🚨கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் வார இறுதியில் சொகுசு புகையிரத சேவையொன்று எதிர்வரும் முதலாம் திகதி முதல் இயக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடக மற்றும் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

முன்கூட்டியே ஆசனங்களை முன்பதிவு செய்யும் வசதி கொண்ட இந்த சொகுசு புகையிரதம் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் புகையிரத சேவை இடம்பெறும்

கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கண்டியை காலை 9.18 மணிக்கு சென்றடையும் பின்னர் மாலை 4.50 மணிக்கு கண்டியில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.

முதல் தர ஆசனம் 2000 ரூபாவுக்கும் இரண்டாம் தர ஆசனம் 1500 ரூபாவுக்கும் முன்பதிவு செய்துகொள்ள பெறமுடியும்.

எதிர்வரும் காலங்களில் அநுராதபுரம் வரை சொகுசு புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும் எனவும், அது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

29/09/2022

கொலை சந்தேக நபரை தேடி திருகோணமலை மனையாவெளி பிரதேசத்தில் பொலிஸார் தேடுதல்

கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் நாளை 30 ஆம் திகதி ‘ஹெல் பயர்’ மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. முற்கூட்டியே ரி...
29/09/2022

கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் நாளை 30 ஆம் திகதி ‘ஹெல் பயர்’ மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. முற்கூட்டியே ரிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இதேவேளை அதிக ரிக்கெட் தேவை என அழைப்புக்கள் காரணமாக 6000 மற்றும் 15,000 ரூபா ரிக்கெட்டுகளை நுழைவு வாயிலிலும் கொடுக்க தயார் செய்யப்பட்டுள்ளது.

Happy birthday. உலகின் முதல் தர பணக்கார் இலங்கை ரூபாவில் 2,625,000 கோடி சொத்துக்கள். உலகின் எட்டவது பணக்காரர் waren Buff...
30/08/2022

Happy birthday. உலகின் முதல் தர பணக்கார் இலங்கை ரூபாவில் 2,625,000 கோடி சொத்துக்கள். உலகின் எட்டவது பணக்காரர் waren Buffett இன்று 92வது பிறந்த நாள். மிகச்சிறந்த சமுக சேவையாளர் தனது பணத்தில் மூவாயிரம் கோடி ரூபாவை சமுக சேவைக்கு வழங்கியவர்.

🚨 ஜேர்மனி கடுமையான மின்சார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது . அதன்படி, அந்நாட்டில் மின்சாரத்தின் விலை ஒரு மெகாவோட் மணி நேரத்...
30/08/2022

🚨 ஜேர்மனி கடுமையான மின்சார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது . அதன்படி, அந்நாட்டில் மின்சாரத்தின் விலை ஒரு மெகாவோட் மணி நேரத்திற்கு 1000 யூரோவை நெருங்கி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, நாட்டின் பெரும்பாலான எரிசக்தி வணிகங்கள் திவாலாகும் அபாயத்தில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்களும் வெளிப்படுத்துகின்றன.

ஜேர்மனியில், குடும்பங்கள் தங்கள் சமையல் எரிவாயு கட்டணங்களில் 480 யூரோக்கள் உயர்வை எதிர்கொள்கின்றன , இதனால் மக்கள் விறகுகளை சேமித்து வைப்பதை நாடுகின்றனர் . மர ஆலையின் விறகு விற்பனை தற்போது உள்ளது.

ஜேர்மனிய எரிசக்தி நிறுவனமான யூனிபர் தனது வணிகத்தை ஆதரிக்க அரசுக்கு சொந்தமான கடன் வழங்குநரிடமிருந்து 4 பில்லியன் யூரோக்களை கூடுதலாக கோருகிறது. அதிகரித்து வரும் செலவுகள், கூடுதல் ஜேர்மன் எரிசக்தி நிறுவனமான ஒரு நாளைக்கு €100mln இழக்கிறது, ஏனெனில் ரஷ்யா விநியோகங்களின் பற்றாக்குறை இப்போது 80% ஆக உள்ளது

ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா கட்டுப்படுத்துவதால், எரிவாயு மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிவாயுவைக் கொள்முதல் செய்ய முடியாத நிலையே அந்த நிலைக்குக் காரணம்.

மன்னாரில் இந்தியாவின் அதானி நிறுவனத்தால் நிறுவப்படவுள்ள  காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  மன்ன...
29/08/2022

மன்னாரில் இந்தியாவின் அதானி நிறுவனத்தால் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

பாரிய காற்றாலை அமைக்கப்படுவதன் காரணமாக மீன் வளம் பெரிது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த காற்றாலை திட்டம் இங்கு வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

இதில் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சிறுநீரக நோயாளர்களுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட ஒக்சிஜன் சிலிண்டர்களுக்கு பயன்படுத்தப்படும் ஆற...
29/08/2022

சிறுநீரக நோயாளர்களுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட ஒக்சிஜன் சிலிண்டர்களுக்கு பயன்படுத்தப்படும் ஆறு செப்புச் குழாய்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் (எண்-38) இல் பூட்டியிருந்த ஒக்ஸிஜன் அறையின் பூட்டினை உடைத்து அங்கிருந்த 6 செப்புச் குழாய்களை திருடிச் செல்லப்பட்டுள்ளது.

திருடப்பட்ட செப்புச் குழாய்களின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாவை தாண்டும் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

🚨 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கடனை அடைப்பதற்காக இலங்கையின் கேட்டரிங் மற்றும்   தரை கையாளுதல்  நிர்வாகத்தின் 49 சதவீத பங்குகளை...
29/08/2022

🚨 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கடனை அடைப்பதற்காக இலங்கையின் கேட்டரிங் மற்றும் தரை கையாளுதல் நிர்வாகத்தின் 49 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு விற்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனம் லாபம் ஈட்டுகிறது. இந்நிலையில் அதிகமாகக் கேட்டால், அந்த முதலீட்டாளர்களின் தேவைக்கேற்ப அதிக அல்லது சில தொகையைப் வழங்கவும் தீர்மானித்துள்ளோம் என்றார்.

28/08/2022

🚨நாளை 29ம் திகதி 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். வலையங்களான ABCDEFGHIJKLPQRSTUVW பகல் நேரத்தில் 1 மணிநேரம் 40 நிமிடங்களும் இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்கள்.

வலையம் CC - காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள்.

வலையங்கள் MNOXYZ - காலை 5.30 முதல் 8.30 வரை 3 மணி நேரம்.

-பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் -

28/08/2022

🚨டில்லி அருகே நொய்டாவில் உள்ள Supertech இன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இரட்டைக் கோபுரங்கள் பாதுகாப்பாக இன்று (28) சற்றுமுன்னர் பிற்பகல் 2:30 மணிக்கு வெடிமருந்து வைத்து தகர்ப்பட்டது.

அதில் அபெக்ஸ் (32 மாடிகள்) மற்றும் செயேன் (29 மாடிகள்) கோபுரங்கள் ஆகியவை தூள்தூளாக இடிந்து விழுந்தது.

வெடிபொருள் நுட்பத்துடன் தகர்கப்பட்டதில் 3700 கிலோவிற்கு அதிகமாக வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டது. இதில் 55000 தொன் குப்பைகள் அகற்றப்படும். இந்த இரண்டு கோபுரங்களிலும் 94,000 துளைகளை தோண்டி சார்ஜ் செய்யப்பட்ட வெடிபொருட்கள் டைனமைட், குழம்புகள் மற்றும் பிளாஸ்டிக் வெடிபொருட்களால் தகர்க்கப்பட்டது.

கட்டட இடிப்பின் மூலம் குவியும் 55 ஆயிரம் டன் கட்டட இடிபாடுகளை அகற்ற சுமார் 3 மாதங்கள் ஆகும் என தெரிகிறது. கிட்டத்தட்ட 3000 லொறி கட்டட இடிபாடுகள் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தில் 915 வீடுகள், 21 கடைகள் கட்டப்பட்டன. இந்த கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் அலகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இரட்டை கோபுர கட்டிடத்தினை இடிக்க உத்தரவிட்டது.

இதேவேளை அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் மாலை 7 மணிக்குப் பிறகு வீடுகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

Address

Trincomalee
Trincomalee

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+94754352989

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNN News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TNN News:

Share