Micah Tv

Micah Tv Braking News

24/01/2025

*🛑பாடசாலை மாணவர்களுக்கான நலன்புரி திட்டங்களை விரிவுபடுத்த தீர்மானம் - பிரதமர்!*


❇️பாடசாலை மாணவர்களுக்கான நலன்புரி திட்டங்களை விரிவுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 250 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளின் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச பாதணி வழங்கப்படும்.

❇️பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் தரப்பின் உறுப்பினர் ரவீந்திர பண்டார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

❇️அவர் மேலும் பதிலளித்ததாவது,
கல்வி மறுசீரமைப்புக்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன. நவீன உலகுக்கு பொருத்தமான வகையில் கல்வி கொள்கைத் திட்டம் அமுல்படுத்தப்படும். பரீட்சை முறைமைக்கு பதிலாக மாணவர்களுக்கு இணக்கமானதாக அமையும் கல்வி முறைமையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

❇️பாடசாலைகளில் காணப்படும் மனித மற்றும் பௌதீக வள பற்றாக்குறைக்கு கட்டம் கட்டமாக தீர்வு காண்பதற்கு கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கு சமமான வளங்களை பகிர்ந்தளித்தால் பாடசாலைகளுக்கு இடையில் போட்டித்தன்மை நிலவாது.

❇️250 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு இலவச காலணி வழங்கப்படும்.இதற்கமைய சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கு இவ்வாறு காலணிகள் வழங்கப்படும்.

23/01/2025

𝘽𝙍𝙀𝘼𝙆𝙄𝙉𝙂 𝙉𝙀𝙒𝙎

*🛑புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!*

❇️2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

❇️அதன்படி, https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

❇️செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

23/01/2025

*🛑உயர்தர மாணவன் விபரீத முடிவால் உயிரிழப்பு!*

❇️கொழும்பு, கெஸ்பவை பிரதேசத்தில் தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு தமிழ் மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நகர் பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவனே நேற்றுமுன்தினம் இரவு இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

❇️குடும்பத்தினருடனான முரண்பாடு காரணமாக மேற்படி மாணவன் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

❇️சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

23/01/2025

கண்டி-கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்!*

❇️நிட்டம்புவ ஸ்ரீ விஜேராமய விகாரையில் வருடாந்த "துருது நத" மகா பெரஹெர ஊர்வலம் காரணமாக வீதி போக்குவரத்து மட்டுப்பாடு தொடர்பில் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

❇️அதன்படி, நாளை (24) இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பெரஹெர ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

❇️இந்த ஊர்வலம் நிட்டம்புவ அத்தனகல்ல வீதியில் உள்ள களுவாகஸ்வில ஸ்ரீ விஜயராமய விகாரையில் இருந்து தொடங்கி, நிட்டம்புவ நகரத்தை அடைந்து, இடதுபுறம் திரும்பி கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கொழும்பை நோக்கிச் சென்று, வால்வத்த சந்தியில் வலதுபுறம் திரும்பி ஸ்ரீ போதி விகாரையை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.

❇️பெரஹெர நிகழ்வைக் காண ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கண்டி-கொழும்பு பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

❇️எனவே, நிட்டம்புவ நகரத்திலிருந்து மல்வத்த சந்தி வரையிலான வீதியின் ஒரு வழித்தடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கொழும்பு-நோக்கியும், கண்டி நோக்கியும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.

23/01/2025

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்ட சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்கள் - உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை!*

M I C A H Tv
23/01/2025

❇️புறக்கோட்டை கதிரேசன் வீதியில், உரிய ஆவணங்கள் இன்றி தரமற்ற மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் என்பவற்றை விற்பனை செய்த அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்று நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் நேற்றையதினம் சோதனைக்குட்படுத்தபட்டது.

❇️இதன் போது சட்ட விரோதமாக மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் கிறீம் வகைகள் என்பன கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

❇️குறித்த மருந்து பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் என்பன அதிகாரிகளால் எடுத்தது செல்லப்பட்டதுடன் ,குறித்த விடயம் தொடர்பாக எதிர்காலத்தில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

23/01/2025

எல்ல ஒடிஸி ஈ-டிக்கெட் மாஃபியா - ஒருவர் கைது!*

M I C A H Tv
`23/01/2025`

❇️வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

❇️கண்டி குற்றத் தடுப்பு பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (22) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கண்டி சுதுஹும்பொல பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

❇️கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி, சுதுஹும்பொல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

❇️ஒடிஸி ரயிலுக்காக ஒன்லைனில் வாங்கிய 21 ரயில் டிக்கெட்டுகளும், அந்த ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதன் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 130,670 ரூபாய் பணமும், இதற்கு முன்னர் ரயில் டிக்கெட் விற்பனை பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்ட 130 குறிப்புகளும், கையடக்க தொலைபேசி ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

❇️சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!*

23/01/2025

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
M I C A H Tv

*`23/01/2025`*

ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 50 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைச் சாரல்களின் கிழக்கு சரிவுகளிலும்,வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மாவட்டத்திலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு, பொத்துவில், ஹம்பாந்தோட்டை , காலி ஊடாக கொழும்பு வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

23/01/2025

*அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான உதவியாளர்களின் எண்ணிக்கையில் மட்டுப்பாடு*

தற்போதைய அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் உதவிக்காக நியமிக்கப்படக்கூடிய அதிகபட்ச ஊழியர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமைச்சர்களுக்கான உதவி ஊழியர்கள் அதிகபட்சமாக 15 பேருக்கு உட்பட்டவர்கள் என்பதோடு, பிரதி அமைச்சர்களுக்கான உதவியாளர்களின் எண்ணிக்கை 12 பேருக்கு மேற்படாத வகையில் காணப்பட வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் கடமைகளை மிகவும் திறமையாக மற்றும் அனைத்து தரப்பினருடனும் நல்ல ஒருங்கிணைப்புடன் பணிகளை முன்னெடுத்துச் செல்ல இந்த உதவி ஊழியர்களை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் ஊழியர்களின் எண்ணிக்கையானது அதிகபட்ச எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று ஜனாதிபதி செயலாளர் என்.எஸ் குமாநாயக்க அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

22/01/2025

பெருந்தோட்ட மக்களுக்கு 4,350 புதிய வீடுகள்!



2025 ஆம் ஆண்டுக்குள் பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்பட்ட பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சில் நேற்று (21) நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட மக்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி அவர்களை வறுமையிலிருந்து விடுவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.

முன்னர், அரசியல் சலுகைகளின் அடிப்படையில் வீடுகள் கட்டப்பட்டு பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன என்றும், புதிய அரசாங்கத்தின் கீழ், இந்த புதிய வீடுகள் தகுதியான பெருந்தோட்ட மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் வீட்டு உரிமையைப் பொறுத்தவரை, அது தேசிய அளவில் 83.75% ஆகவும், பெருந்தோட்டங்களில் 5.6% ஆகவும் உள்ளதுடன், இது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேசிய வறுமை விகிதம் 11.9% ஆக இருந்தாலும், பெருந்தோட்டங்களில் வறுமை விகிதம் 29.7% ஆக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

22/01/2025

இன்று முதல் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதோச நிறுவனத்தால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த பொருட்கள் இன்று (22) முதல் குறைந்த விலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதோச விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு கிலோ கிராம் நிலக்கடலையின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 995 ரூபாயாகும்.

ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 300 ரூபாயாகும்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 180 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ கிராம் சிவப்பு கௌப்பியின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 765 ரூபாயாகும்.

ஒரு கிலோ கிராம் நெத்திலியின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 940 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாயின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 830 ரூபாயாகும்.

பாஸ்மதி அரிசி கிலோ கிராம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 645 ரூபாயாகும்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 230 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 288 ரூபாயாகும்.

ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 240 ரூபாயாகும்.

22/01/2025

வெள்ளவத்தையில் பெண் கடத்தல் ; முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கடந்த 18 ஆம் திகதி வெள்ளவத்தையில் உள்ள தனியார் வைத்தியசாலை விடுதிக்கு வெளியே பெண்ணொருவருவர் வேன் ஒன்றில் கடத்தப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து 31,500 ரூபாய் மற்றும் பிற பெறுமதியான பொருட்களை கொள்ளை அடித்துக்கொண்டு வெலிக்கடையில் பெண்ணை கைவிட்டு சென்றுள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் முன்னர் பொலிஸ் பிரிவில் கடமையாற்றி சேவையிலிருந்து பணி இடைநிறுத்தப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.

❇️
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

22/01/2025

*🛑பயங்கரவாத தடைச் சட்டம் விரைவில் நீக்கப்படும் - நீதியமைச்சர்!*


பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.

இனப்பிரச்சினை தொடர்பான தெளிவான நிலைப்பாட்டைத் தேசிய மக்கள் சக்தி இதுவரையில் முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

75 ஆண்டு காலமாக நிலவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஜே.வி.பியினருக்கும் இந்த சட்டத்தின் பாதிப்பு நன்றாகவே தெரியும்.

இந்த சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் கொண்டுவரப்படும் என தேசிய மக்கள் சக்தி தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிட்டு வந்தது.

எனினும், தேர்தலுக்குப் பின்னர், ஒரு வாரம் கழியும் முன்பே தற்போதைய அரசாங்கம் தமது நிலைப்பாட்டிலிருந்து விலகியுள்ளது.

தற்போது கிளிநொச்சி - கோணாவில் பகுதியிலுள்ள ஆசிரியர் ஒருவருக்கு எதிராக பரந்தன் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது.

பாடசாலை நிகழ்வொன்றில் பயன்படுத்தப்பட்ட கலை நிர்மாணம் தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது. கடந்த காலங்களிலும் காவல்துறையினர் இந்த சட்டத்தைப் பிழையாகக் கையாண்டு வந்துள்ளனர்.

நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படும் போது, வடக்கிலும் தெற்கிலும் இந்த சட்டம் முரண்பாடான வகையில் கையாளப்படுகிறதென்றும் அதனை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.

இதனையடுத்து உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கோணாவில் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரிப்பதாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார பயங்கரவாதத் தடை சட்டம் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும், அதற்குரிய அமைச்சரவை பத்திரத்தைத் தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


*🤝ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!*

Address

Trincomalee

Telephone

+94776712116

Website

Alerts

Be the first to know and let us send you an email when Micah Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Micah Tv:

Share