Trinco News

Trinco News Trinco News

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் CID-யால் கைதுபாதாள உலகக் குழு உறுப்பினராகக் க...
09/09/2026

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் CID-யால் கைது

பாதாள உலகக் குழு உறுப்பினராகக் கூறப்படும் ரஞ்சித் குமார் என்ற 'கொண்ட ரஞ்சி', டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில், இன்று (09) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, கடந்த ஜனவரி 9 ஆம் திகதி டுபாயில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அப்போது, அவருடன் பயணித்த மனைவியும் குழந்தைகளும் கைது செய்யப்பட்ட போதிலும், விசாரணைகளின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் கொலைச் சம்பவம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, 'கொண்ட ரஞ்சி' இலங்கை பொலிஸாரால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபராகக் கருதப்படுகிறார்.

மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வருகிறது.

திருகோணமலைக்கு வரலாற்று சிறப்பு மிக்க புதிய சேவை! 💊🏥திருகோணமலை மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்த **இராஜ்ய ஒசுசல (...
09/09/2026

திருகோணமலைக்கு வரலாற்று சிறப்பு மிக்க புதிய சேவை! 💊🏥

திருகோணமலை மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்த **இராஜ்ய ஒசுசல (Rajya Osusala)** கிளை, தற்போது தனது இறுதிக்கட்ட பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

திருகோணமலை மாவட்ட வரலாற்றில் முதன்முறையாக** அமைக்கப்படும் இந்த இராஜ்ய ஒசுசல கிளை, மிக விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளது.

தரமான மருந்துகள் மற்றும் நம்பகமான மருந்தக சேவைகளை மக்களுக்கு எளிதில் பெற்றுத்தரும் இந்த முயற்சி, மாவட்டத்தின் சுகாதாரத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும்.

எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேலும் பல **இராஜ்ய ஒசுசல** கிளைகள் நிறுவப்பட்டு மக்களுக்கு சேவையாற்றும் நாளை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

📍 **இடம்:** MPCS கட்டிடம், மெயின் வீதி, திருகோணமலை.

#திருகோணமலை #இராஜ்யஒசுசல #புதியமைல்கல்

அதிகாலை பரபரப்பு – பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததுதிருகோணமலை – முன்றாம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக பா...
06/09/2026

அதிகாலை பரபரப்பு – பாரிய மரம் முறிந்து வீழ்ந்தது

திருகோணமலை – முன்றாம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக பாரிய ஆலமரம் ஒன்று முறிந்து வீதியோரத்தில் விழுந்துள்ளது.

சர்வோதய நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட போதிலும், அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர்ச் சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பில் உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு, மரத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

📍 இடம்: முன்றாம் கட்டை – சர்வோதயத்திற்கு அருகில்
⏰ நேரம்: அதிகாலை
⚠️ உயிர் சேதம்: இல்லை

தகவல்: உள்ளூர் செய்தியாளர்
Photo: SP RAJU

 #ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு #ஏறாவூர் டாக்டர் பதியுதீன் ...
27/08/2026

#ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

#ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (26) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் அதிபர் எம்.பி.நசீப் அலாம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கௌரவ அதிதியாகவும், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் எஸ்.எம்.எம்.அறூஸ், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாப்தீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான எம்.ஏ.எம்.ரபீக் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

ஏறாவூர் பிரதேச முக்கியஸ்தர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஒரு பகுதியாக அதிதிகளால் மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்தும் இத்தகைய சமூக நலன்சார் முன்னெடுப்புகளுக்கு சமூகப் பிரமுகர்களும் பெற்றோர்களும் தமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

தனது சாரதியின் ஓய்வின்போது Smart Phone வழங்கி கௌரவித்த வைத்திய அதிகாரிபொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சு...
25/08/2026

தனது சாரதியின் ஓய்வின்போது Smart Phone வழங்கி கௌரவித்த வைத்திய அதிகாரி

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார சேவை உதவியாளராகவும், சாரதியாகவும் நீண்ட காலமாக பணியாற்றி அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எஸ்.அப்துல் ஜலாலுக்கு சுகாதார வைத்திய அதிகாரி உவைஸ் பாறூக் Smart Phone ஒன்றினை வழங்கி பாராட்டி கௌரவித்தார்.

சிறந்த நன்னடத்தையும் சமூக சிந்தனையும் கொண்ட ஜலால், தனது அரச சேவையில் 10 வருடங்கள் சுகாதார சேவை உதவியாளராகவும், 15 வருடங்கள் சாரதியாகவும் ஒட்டுமொத்தமாக 25 வருடங்கள் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார்.

அவரது அர்ப்பணிப்பு மிக்க சேவைகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (22) பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் உவைஸ் பாறுக் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் கௌரவ அதிதியாகவும், டொக்டர் திருமதி சமீரா உவைஸ், ஓய்வுபெற்ற மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம்.அப்துல் மலீக் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்தப் பாராட்டு விழாவின் போது, சுகாதார வைத்திய அதிகாரி உவைஸ் பாறூக் தனது சொந்த நிதியிலிருந்து ஓய்வுபெற்று செல்லும் அப்துல் ஜலால் அவர்களுக்கு Smart Phone ஒன்றினை பரிசாக வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாதம் முதல் தனியார் துறை ஊழியர்கள் ரயில்வே பருவக்கால பயணச்சீட்டுகளைப் பெறுவதற்கு இணையவழி முறையை அறிமுகப்படுத்...
23/08/2026

செப்டம்பர் மாதம் முதல் தனியார் துறை ஊழியர்கள் ரயில்வே பருவக்கால பயணச்சீட்டுகளைப் பெறுவதற்கு இணையவழி முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக பெரும்பாலும் மாற்றமின்றி இருந்த ஒரு செயல்முறைக்கு மாற்றாக, அரசாங்க ஊழியர்களுக்காக சமீபத்தில் இணையவழி முறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வசதி அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

ரயில்வே பருவக்கால பயணச்சீட்டுகளைப் பெறும் செயல்முறையின் ஒரு பகுதியாக, பயணிகள் முன்பு வரிசையில் நின்று தங்கள் பணியிடங்களிலிருந்து கடிதங்களைப் பெற வேண்டியிருந்தது என்றும் அவர் கூறினார்.

பயணிகள் அதிக ரயில்கள், மேம்பட்ட நேரந்தவறாமை மற்றும் ரயிலில் சிறந்த வசதிகளைக் கோருவதால், ரயில்வே சேவை தொடர்ந்து குறிப்பிடத்தக்க குறைபாடுகளை எதிர்கொண்டு வருவதை ரத்நாயக்க ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கணிசமான காலம் எடுக்கும் என்றும், குறிப்பாக புதிய என்ஜின்களை வாங்குதல், தற்போதுள்ள என்ஜின்களைப் பழுதுபார்த்தல் மற்றும் ரயில் தண்டவாளங்களை மேம்படுத்துதல் ஆகியவை நீண்டகால செயல்முறைகள் என்பதால், கடந்த காலத்தில் இவை சரியான நேரத்தில் தொடங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

சிறந்த சேவையை வழங்குவதற்காக ரயில்வே திணைக்களத்தில் உள்ள நிர்வாக மற்றும் நிறுவனக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையில், ரயில் நிலையங்களில் உள்ள வசதிகளை மேம்படுத்துவது உட்பட, விரைவாகச் செயல்படுத்தக்கூடிய மேம்பாடுகளை அரசாங்கம் தொடரும் என்றும், மேம்படுத்தப்பட்ட பல நிலையங்கள் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

"ரயில்வேயில் எங்களால் பெரிய மாற்றங்களை விரைவாகச் செய்ய முடியாது, ஆனால் நாங்கள் தொடர்ந்து மேம்பாடுகளையும் வசதிகளையும் அறிமுகப்படுத்துவோம்," என்று ரத்நாயக்க கூறினார். (நியூஸ்வயர்)

22/08/2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை ...
15/08/2026

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

மிக நீளமான சிறுநீரக கல்லை அகற்றி சாதனை படைத்த திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan) தலைமையில் இன்று (14) குறித்த சத்திர சிகிச்சை இடம்பெற்றது.

பிரேசில் நாட்டில் 2003 ஆம் ஆண்டு 1.9 கிரேம் நிறையுடைய சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் உலக சுகாதார திணைக்கள அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆனாலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (14) வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது 03 கிலோ 100 கிரேம் எடையுள்ள சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

திருகோணமலை பகுதியில் வசித்து வரும் 52 வயதுடைய நபருக்கே குறித்த சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan தலைமையில்
டொக்டர் எம். எம் ரிஷ்லி, டொக்டர் ஜே.எம்.இஹ்ஸான் டொக்டர் சீ. பிரகலாதன் உட்பட மயக்க மருந்து வைத்திய நிபுணர் டொக்டர் அமில ஜெயக்கடு ஆகியோர் முன்னிலையில் சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

50,000 பின்தொடர்பவர்களை எட்டியுள்ளோம்!உங்கள் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும் எங்கள் மிகப்பெரிய பலம்.தொடர்ந்தும் உண்மையான...
15/08/2026

50,000 பின்தொடர்பவர்களை எட்டியுள்ளோம்!
உங்கள் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும் எங்கள் மிகப்பெரிய பலம்.
தொடர்ந்தும் உண்மையான, துல்லியமான மற்றும் விரைவான செய்திகளை உங்களிடம் கொண்டு சேர்ப்போம்.
எங்களுடன் தொடர்ந்து பயணிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! ❤️

අපි අනුගාමිකයින් 50,000ක් ලබාගෙන ඇත!
ඔබගේ ආදරය, විශ්වාසය සහ අඛණ්ඩ සහයෝගයට හෘදයාංගම ස්තුතියි.
ඉදිරියටත් වේගවත්, නිවැරදි හා විශ්වාසදායක පුවත් ඔබ වෙත ගෙන එන්න අපි කැපවී සිටිමු. ❤️

14/08/2026

இந்தியாவில் நடந்த உண்மை சம்பவம் இந்தியாவில் குழந்தை கடத்தல்கள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது இவ்வாறு இலங்கையிலும் நடக்க வெகு தூரம் இல்லை

Address

Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trinco News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trinco News:

Shortcuts

Share