Trinco Media TV

Trinco Media TV "தெரிவிப்பது நாங்கள்
தீர்மானிப்பது நீங்கள்"

போதை பொருள் விற்பனை உச்சத்தில்!!திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவில் ஐஸ் மற்றும் ஹொரோயின் போதைப் பொருள் விற்பனை சில்லறை கடை...
05/09/2026

போதை பொருள் விற்பனை உச்சத்தில்!!

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவில் ஐஸ் மற்றும் ஹொரோயின் போதைப் பொருள் விற்பனை சில்லறை கடையில் பொருட்கள் கொள்வனவு செய்வதை போல முன்னேற்றம் அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் பாரிய சுற்றி வளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு போதைப் பொருள் குறைந்த அளவில் காணப்பட்டது. ஆனாலும் தற்போது போதைப்பொருள் வியாபாரிகள் அச்சமின்றி தங்களது விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டு வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

முப்படைகளிலும் புலனாய்வு உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்ற போதிலும் மொரவெவ பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

இளம் சிறார்கள் போதை பாவனைக்கு அடிமையாகி வருவதுடன் இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகளை பிரசிக்கும் ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இலங்கை அரசாங்கம் போதைப் பொருள் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பாரிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் போதை வியாபாரிகளுக்கு உறுதுணையாகவும் அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் புலன் விசாரணை அதிகாரிகள் புலன் விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

யானை தாக்கியதில் இருவர் மரணம்!!அனுராதபுரம் - கெபித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகலஉஷ்கொள்ளாவ  பகுதியில் யானை தாக...
05/09/2026

யானை தாக்கியதில் இருவர் மரணம்!!

அனுராதபுரம் - கெபித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகலஉஷ்கொள்ளாவ பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (04) மாலை இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கெப்பித்திகொள்ளாவ, -பகலஉஸ்கொள்ளாவ பகுதியைச் சேர்ந்த செனவி ரத்னகே ஸ்ரீ பால (70வயது) மற்றும் சமரக்கோன் அப்புஹாமிலாகே சுகத் சுமனரத்ன (51வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது-தங்களது வாழ்வாதாரமாக சேனை பயிர் செய்கையில் ஈடுபட்டு வரும் குறித்த இருவரும் சிறிய காட்டினை துப்புரவு செய்து கொண்டிருக்கும்போது அருகே வந்த யானை இரண்டு பேரையும் தாக்கியதாகவும் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த கெப்பித்திகொள்ளாவ திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எல். காதர் இரண்டு சடலங்களையும் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலாஸாருக்கு கட்டளையிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாமல் ராஜபக்ச செப்டம்பர் 18 வரை விளக்கறியலில்
04/09/2026

நாமல் ராஜபக்ச செப்டம்பர் 18 வரை விளக்கறியலில்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்!!
04/09/2026

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்!!

வாழ்க்கை செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கவும்.அரசிடம் இம்ரான் எம். பி கோரிக்கை!!வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பொதுமக்கள் ப...
02/09/2026

வாழ்க்கை செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கவும்.
அரசிடம் இம்ரான் எம். பி கோரிக்கை!!

வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பொதுமக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே வாழ்க்கை செலவை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும் மக்களின் வருமானம் அதிகரிக்க வில்லை. இதனால் மூன்று வேளை உணவு உண்பதில் பல குடும்பத்தினர் சிரமப் படுகின்றனர்.

நாட்டில் அதிகமான அரச உத்தியோகத்தர்கள் குறைந்த சம்பளம் பெறுவோராவர். பிள்ளைகளின் கல்விச் செலவு, உணவுச் செலவு என்பவற்றை சமாளிக்க முடியாமல் இவர்கள் கஷ்டப் படுகின்றனர்.

இந்த நிலைமையினால் பிள்ளைகளின் உணவுத்தேவையை சரியாகப் பூர்த்தி செய்ய முடியாத நிலை பெற்றோருக்கு ஏற்படுகின்றது. இதனால் போசாக்கு குறைந்த பிள்ளைகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

மக்களின் வாழ்க்கை தரத்தைப் பேணுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்தப் பொறுப்பை அரசாங்கம் சரிவர நிறைவேற்ற வேண்டும்.

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் உடன் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

01/09/2026

பலாங்கொட மாணவிகள் மூவர் திருகோணமலையில் மீட்பு-

பலாங்கொடயைச் சேர்ந்த மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ள நிலையில் திருகோணமலை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்த நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று மாணவிகளையும் இன்றிரவு (01) 11.00 மணியளவில் சட்ட வைத்திய அதிகாரி அறிக்கைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பொலிஸார் அழைத்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

01/09/2026

திருமலை மாவட்டத்தில் மழை

01/09/2026

திருகோணமலையில் 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலா, முதலீடு மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை சர்வதேச ரீதியில் அறிமுகப்படுத்தும் நோக்கில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுமார் 250 சுற்றுலாப் பயணிகள் இன்று திருகோணமலைக்கு வருகை தந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு விஜயம் செய்து சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலைக்கு வருகை தந்த ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரியமான பரதநாட்டிய நிகழ்வுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் கலை, கலாசாரம் மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு, ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிகழ்வை திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் தலைவர் குமார் ஜெயக்குமாரன், MBA, BSc (Hons) அவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் தலைவர் குமார் ஜெயக்குமாரன் கருத்துத் தெரிவிக்கையில்,

“இது ஒரு ஆரம்பம் மட்டுமே. திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலா வளங்கள், இயற்கை அழகு, வரலாற்று மற்றும் கலாசாரப் பாரம்பரியம், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வர்த்தக சாத்தியக்கூறுகளை ஜப்பான் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான முதல் படியாக இதனை நான் பார்க்கின்றேன்.”

மேலும், ஜப்பானின் லிட்டில் ஜப்பான் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ருவான் அவர்களுடன் தொடர்ந்து மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மற்றும் தொடர்புகளின் ஊடாகவே இந்த ஜப்பானிய சுற்றுலா குழுவை திருகோணமலைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் குமார் ஜெயக்குமாரன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலா மற்றும் முதலீட்டுத் திறனை ஜப்பானிய பிரதிநிதிகளுக்கு நேரடியாக அறிமுகப்படுத்துவதுடன், சுற்றுலா மற்றும் முதலீட்டுத் துறைகளில் இலங்கை–ஜப்பான் இணைந்து செயற்படக்கூடிய பொதுவான வாய்ப்புகள் மற்றும் துறைகளை அடையாளம் காண்பதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜப்பானிய பிரதிநிதிகள் குழுவின் தலைவர், திருகோணமலை மாவட்டத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட அன்பான வரவேற்புக்கும் உபசரிப்புக்கும் குமார் ஜெயக்குமாரன் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், திருகோணமலைக்கு தாங்கள் மேற்கொண்ட இந்த விஜயம் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளதாகவும், இப்பகுதியின் இயற்கை அழகு, கலாசாரப் பாரம்பரியம் மற்றும் சுற்றுலா வளங்கள் தங்களை பெரிதும் கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்காலத்தில் மேலும் அதிகமான ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளை திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், இப்பகுதியில் காணப்படும் சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து, சாத்தியமான முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஆர்வம் உள்ளதாகவும் ஜப்பானிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்த விஜயம், திருகோணமலை மாவட்டத்தை ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச சுற்றுலா சந்தையில் மேலும் வலுப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் சுற்றுலா, முதலீடு மற்றும் வர்த்தகத் துறைகளில் இலங்கை–ஜப்பான் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான தொடக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“திருகோணமலையின் சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உலகிற்கு எடுத்துச் செல்லும் பயணத்தின் இது ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும்.

கிழக்கு மாகாண பொதுச் சேவையில் புதிய நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள்கிழக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்நுட்ப மற்றும் த...
01/09/2026

கிழக்கு மாகாண பொதுச் சேவையில் புதிய நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள்

கிழக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை மனித வளங்களை வலுப்படுத்தும் நோக்கில், புதிய நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுக் கடிதங்களை வழங்கும் நிகழ்வானது, கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில், 31 ஆகஸ்ட் 2026 அன்று ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இங்கே,

🔹 சிறப்புத் தரத்திற்கான பதவி உயர்வுகள் – 10 பேர்
🔹 தொழில்நுட்ப அதிகாரிகளுக்கான புதிய நியமனங்கள் – 20 பேர்
🔹 வரைவாளர்களுக்கான புதிய நியமனங்கள் – 06 பேர்

பின்வரும் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

மேலும், முன்னர் நியமிக்கப்பட்ட 53 தொழில்நுட்ப அதிகாரிகள் பதவியேற்றுள்ளனர், அவர்களில் 44 பேர் பொது அடிப்படையிலும், 09 பேர் வரையறுக்கப்பட்ட அடிப்படையிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 07 வரைவாளர்கள் முன்னர் நியமிக்கப்பட்டு பதவியேற்றுள்ளனர்.

இந்த நியமனங்களும் பதவி உயர்வுகளும், கிழக்கு மாகாணத்தில் வளர்ச்சிப் பணிகளைத் திறம்படச் செயல்படுத்துவதற்கும், நிறுவனத் திறனை வலுப்படுத்துவதற்கும், மக்களுக்கு மேலும் திறமையான பொதுச் சேவைகளை வழங்குவதற்கும் ஒரு முக்கியப் படியாக அமையும்.

புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள், தங்களது கடமைகளைத் தொழில்முறைத் திறனுடனும், நேர்மையுடனும், பொறுப்புடனும் ஆற்றி, கிழக்கு மாகாண மக்களுக்குத் தங்களது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தினார்.

கன்னியா விகாரை  வழக்கு செப்டம்பர் 22 வரை ஒத்திவைப்பு-கட்டுமானங்களுக்கு தடை!!திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் ...
31/08/2026

கன்னியா விகாரை வழக்கு செப்டம்பர் 22 வரை ஒத்திவைப்பு-கட்டுமானங்களுக்கு தடை!!

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் புனர்நிர்மாண நடவடிக்கைகளுக்கு எதிராக, காணி உரிமையாளர் கோகிலரமணி தாக்கல் செய்த மனு தொடர்பான வழக்கு இன்று (31.08.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் ஆகியோர் ஆஜராகினர்.

அரச தரப்பில் அரச சட்டத்தரணியுடன், திருகோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் W. W. சுரங்க பெரேராவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

வழக்கு விசாரணையின் போது, 2019ஆம் ஆண்டு இரு தரப்பினருக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் கன்னியா பகுதியில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளே இடம்பெற்றுள்ளதாகவும், அங்கு புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கு எந்தவிதமான இணக்கப்பாடும் வழங்கப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து, குறித்த இடத்தை நேரில் பார்வையிட்டு மேலதிக வாதங்களை முன்வைப்பதற்காக அரச தரப்பினால் கால அவகாசம் கோரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அத்துடன், அடுத்த விசாரணை நடைபெறும் வரையில் குறித்த பகுதியில் எந்தவிதமான புதிய கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளவோ அல்லது ஏற்கனவே உள்ள நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தவோ கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Address

Trincomalee

Alerts

Be the first to know and let us send you an email when Trinco Media TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share