Fast view

Fast view fastviewnews

07/09/2026

சட்டமும் நீதியும் வென்றது: திருடன் - போலீஸ் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜனாதிபதி அநுர!

06/09/2026
22 கட்டாயம் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அறிவிப்பு*உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப்...
06/09/2026

22 கட்டாயம் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அறிவிப்பு*

உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீண்டும் தெரிவித்துள்ளார்.

இன்று (06) புலத்சிங்ஹல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த தீர்ப்பு கிடைத்தவுடன் அது பாராளுமன்றில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அங்கு வலியுறுத்தினார்.

நாங்கள் சட்டத் திருத்தங்களை உருவாக்கியுள்ளோம். அதற்காகத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களையும் செய்துள்ளோம்.

நாங்கள் பயமின்றி முன்னோக்கிச் செல்வோம். அப்போது என்ன நடக்கும்? கறுப்புச் சட்டங்களின் பாதுகாப்பில் இருந்தவர்கள் அச்சமடைவார்கள்.

தூதரகங்களை நோக்கி ஓடுவார்கள். உலக அமைப்புகளுக்குக் கடிதம் எழுதுவார்கள்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாங்கள் இந்தத் தீர்மானங்களையும் மக்களுக்காகவே எடுக்கிறோம். எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் நாங்கள் திரும்பப் பெறமாட்டோம்.

22ஆவது திருத்தம் குறித்த தீர்ப்பு விரைவில் கிடைக்கும். பத்திரிகைகளில் 18ஆம் திகதி போன்ற ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருப்பதை நான் கண்டேன்.

தீர்ப்பு கிடைத்ததும் அதனை விரைவில் நிறைவேற்றுவோம்.

இந்த ஊழல்வாதிகளுக்கு நாங்கள் தண்டனை வழங்க வேண்டும். அப்படித்தான் இந்தக் கறுப்பு ராஜ்யத்தை தகர்க்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் சலே தன்னை விடுவிக்கும்படி கோரி சமர்ப்பித்த ஆவணம் போலியானது எனஇன்று நீதிமன்றத்தில் அம்பலமாகிய சம்பவம்✍🏻 ஹுஸ்னி ஜாப...
03/09/2026

சுரேஷ் சலே தன்னை விடுவிக்கும்படி கோரி சமர்ப்பித்த ஆவணம் போலியானது என
இன்று நீதிமன்றத்தில் அம்பலமாகிய சம்பவம்

✍🏻 ஹுஸ்னி ஜாபிர்

தன்னை கைது செய்தது பிழை என்றும், காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என்றும் தன்னை விடுவிக்கும்படியும் கோரி சுரேஷ் ஸலே ரிட் மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அதில் தன் தரப்பு வாதத்துக்கு ஆதரவாக “ஜயகி டி அல்விஸ் ஆணைக்குழு அறிக்கை” என்ற பெயரில் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து இருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக நியமிக்கப்பட்ட மூன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களில் மூன்றாவது தான் ஜயகி டி அல்விஸ் ஆணைக்குழு. முன்னைய இரண்டு விசாரணை ஆணை குழுக்களிலும் வந்திருந்த தகவல்களை மறுப்பதற்காக என்றே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஆணை குழு தான் இது. ஆனால் இந்த ஆணைக் குழுவின் அறிக்கை எந்த இடத்திலும் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே “ஜயகி டி அல்விஸ் ஆணைக்குழு அறிக்கை” என்ற பெயரில் எந்த உத்தியோகபூர் ஆவணங்களும் இல்லை.

சுரேஷ் சலே தன் ரிட் மனுவை சமர்ப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், உதய கம்மன்பில “ஜயகி டி அல்விஸ் ஆணைக்குழு அறிக்கை” என்ற பெயரில் ஒரு கட்டுரையை பகிரங்கப்படுத்தினார்.

உதயகம்மன்பில வெளியிட்ட கட்டுரையை “ஜயகி டி அல்விஸ் ஆணைக்குழு அறிக்கை”
என்ற பெயரில் சுரேஷ் சலே நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தார். நீதிமன்றத்திற்கு ஆவணம் ஒன்றை சமர்ப்பிக்கும் பொழுது, குறித்த ஆவணம் சரியானது தான் என்று உறுதிப்படுத்தி (authentication) நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் பழக்கம் இருக்கின்றது. ஆனால் குறித்து ஆவணம் போலி என்பதால் அவ்வாறு உறுதிப்படுத்த முடியமல், வெற்றுக் கட்டுரை ஒன்றாகவே குறித்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று நீதிமன்றத்தில் சட்டத்தரணி சுரேன் டி பெரேரா இந்த போலி ஆவணம் பற்றி சுட்டி காட்டினார். குறித்த ஆவணம் போலியானது என்று நீதிமன்றத்திற்கு வெளியே பல தடவை பேசப்பட்டாலும், நீதிமன்றத்தில் குறித்த தரப்பிற்கு இன்று தான் அது பற்றி சுட்டிக்காட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

03/09/2026

திட்வா பேரிடர்: திருகோணமலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகள் வழங்கி வைப்பு

திருகோணமலை:
திட்வா பேரிடர் காரணமாகத் தமது மீன்பிடி வலைகளை இழந்த மீனவர்களுக்குப் புதிய வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (02) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இப்பேரிடரினால் வலைகளை இழந்த சுமார் 75 மீனவர்கள் ஆரம்பக் கட்டமாக அடையாளம் காணப்பட்டனர். அவர்களுள் முதற்கட்டமாக 40 மீனவர்களுக்கு நேற்றைய தினம் புதிய வலைகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

தொடர்ந்து, இரண்டாம் கட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள 35 மீனவர்களின் சேதமடைந்த வலைகளுக்குப் பதிலாகப் புதிய வலைகள் விரைவில் வழங்கி வைக்கப்படவுள்ளன.

மேலும், திட்வா பேரிடரின் போது தமது மீன்பிடிப் படகுகளை முழுமையாக இழந்த மீனவர்களுக்குப் புதிய படகுகளை பெற்றுக்கொடுப்பதற்கான சிறப்புத் திட்டமும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Fast view

இலங்கையின் தென்னை மற்றும் ஏற்றுமதி விவசாயத்தை வலுப்படுத்த “சிலோன் கிங் தென்னை கிராமம்” தேசியத் திட்டம் துவக்கம்திருகோணமல...
02/09/2026

இலங்கையின் தென்னை மற்றும் ஏற்றுமதி விவசாயத்தை வலுப்படுத்த “சிலோன் கிங் தென்னை கிராமம்” தேசியத் திட்டம் துவக்கம்

திருகோணமலை: இலங்கையின் தென்னை சாகுபடியைப் புதிய நிலைக்குக் கொண்டு செல்வதுடன், தென்னை உற்பத்தியைப் பெருக்கவும் சர்வதேசச் சந்தையை விரிவுபடுத்தவும் வழிவகுக்கும் “சிலோன் கிங் தென்னை கிராமம்” (Ceylon King Coconut Village) என்ற தேசியத் திட்டம்

திருகோணமலை மாவட்டத்தின் மொரவேவ வடக்கு கிராமத்தில் இன்று (02) முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தீவு முழுவதும் 250 தென்னை கிராமங்களை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:

தென்னை மேம்பாடு: நாடு முழுவதும் 212,500 புதிய தென்னைக் கன்றுகள் நடப்படுவதுடன், தற்போதிருக்கும் 221,500 தென்னை மரங்கள் புனரமைக்கப்படும்.

தொழில்நுட்ப வசதிகள்: ஒவ்வொரு தென்னை கிராமத்திலும் ஒரு நுண் பதப்படுத்தும் (Micro-processing) வசதி ஏற்படுத்தப்படும்.

விவசாயிகள் பயன்பெறுதல்: இத்திட்டத்தின் மூலம் நேரடியாகச் சுமார் 21,250 தென்னை விவசாயிகள் பயனடைவர்.
ஆரஞ்சுப் பழ ஏற்றுமதி இலக்குகள்:
2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஆண்டு ஆரஞ்சுப் பழ அறுவடையை 25 மில்லியனாக உயர்த்துவதும், இதன் மூலம் ஏற்றுமதி வருவாயை 12 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலாக அதிகரிப்பதும் இத்திட்டத்தின் இலக்காகும்

இதற்காக, 2026-ஆம் ஆண்டில் ரூ. 405 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் தீவு முழுவதும் 75 ஆரஞ்சு கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் பங்குபெறும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுவதோடு, புதிய ஆரஞ்சு நாற்றுகளும் மானிய விலையில் விநியோகிக்கப்படும்.
இன்றைய தொடக்க விழாவில், விவசாயிகளுக்கு ஆரஞ்சு மற்றும் தென்னை நாற்றுகள், மானியக் காசோலைகள், வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் உபகரணங்கள் மற்றும் நவீன விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

மேலும், சிறந்த ஆரஞ்சு விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

22 க்கு எதிரான மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற வியாக்கியானம் சபாநாயகருக்கு*22 ஆம் திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்...
02/09/2026

22 க்கு எதிரான மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற வியாக்கியானம் சபாநாயகருக்கு*

22 ஆம் திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

அந்தச் சட்ட மூலத்தின் அரசியலமைப்பு அமைவுடைமை தொடர்பான இரகசியத் தீர்மானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக இன்று (2) உயர்நீதிமன்றம் அறிவித்தது.

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22 வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையானது நேற்றும் (1) இன்றும் (2) இரண்டு நாட்களாக இடம்பெற்றிருந்தது.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர் அமர்வின் முன்பாக இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதற்கமைய, 22ஆவது திருத்ததை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அவற்றில் 41 மனுக்கள் இணையவழி (Online) மூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரசியலமைப்பு திருத்தம் ஒன்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அதிகூடிய எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

🚀 இலங்கையின் விண்வெளிப் பயணத்தில் ஒரு முக்கியமான சந்தர்ப்பம்அல்ஹம்துலில்லாஹ்!இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற இளம் பெ...
01/09/2026

🚀 இலங்கையின் விண்வெளிப் பயணத்தில் ஒரு முக்கியமான சந்தர்ப்பம்

அல்ஹம்துலில்லாஹ்!

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற இளம் பெண்களுக்கான Mission ShakthiSAT – Phase II விண்வெளி மற்றும் STEM நிகழ்வில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி உத்தியோகபூர்வமாகக் கலந்து கொண்ட மாணவி செனீஸா குணவர்தன (Seneesa Goonewardena) ஆவார். 200 மாணவிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இலங்கை மாணவியாக அவர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.

இந்தப் பயணத்துடன் தொடர்புடைய ஏற்பாடுகள் மற்றும் வழிகாட்டல்களில் Mission ShakthiSAT-இன் இலங்கை Ambassador Dr. Sulochana Segera முக்கிய பங்காற்றியுள்ளார்.

இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த முஹம்மத் நிஜாம் நூரி மற்றும் முஸ்னா முபாரக் ஆகிய இரு மாணவிகளுக்கும் இத்தகைய சர்வதேச விண்வெளி நிகழ்வை நேரில் பார்வையிட்டு அனுபவிக்கும் அரிய வாய்ப்பு கலாநிதி பஸுல் ஜிப்ரி அவர்களின் ஏற்பாட்டில் கிடைத்துள்ளது.

இவர்கள் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக அல்லாமல், பார்வையாளர்களாக நிகழ்வில் கலந்து கொண்டு, அங்கு இடம்பெற்ற பயிற்சிகள் மற்றும் இறுதி நிகழ்வுகளை நேரில் கண்டு அனுபவித்துள்ளனர்.

இந்த விஜயத்தின் முக்கியத்துவம், இதனை ஒரு சாதனையின் நிறைவாகப் பார்ப்பதில் அல்ல; எதிர்கால சாதனைகளுக்கான ஒரு தொடக்கமாகப் பார்ப்பதிலேயே உள்ளது. நமது சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் எதிர்காலத்தில் முறையான வழியில் விண்வெளி, அறிவியல் மற்றும் STEM துறைகளில் இணைந்து சாதிப்பதற்கான ஊக்கத்தை இது ஏற்படுத்தட்டும்.

அத்துடன், இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தாஜ்மஹாலையும் மாணவிகள் பார்வையிட்டுள்ளனர்.

செனீஸா குணவர்தன, Dr. Sulochana Segera, கலாநிதி பஸுல் ஜிப்ரி உள்ளிட்ட இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

🌍 இன்றைய பார்வையாளர்கள்… நாளைய சாதனையாளர்களாக மாறட்டும்! 🚀

திருகோணமலை நகர அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகள் அடையாளம் காண்பதற்கான கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றதுதிருகோணமலைஇலங...
31/08/2026

திருகோணமலை நகர அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகள் அடையாளம் காண்பதற்கான கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது

திருகோணமலை
இலங்கையில் 16 நகரங்களை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், திருகோணமலை மற்றும் கந்தலை ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சகத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வரும் 2027ஆம் ஆண்டு முதல் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்நகரங்களில் வாழும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், அடையாளம் காணப்படும் முன்னுரிமைத் திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஒரு கட்டமாக, திருகோணமலை நகருக்கான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை அடையாளம் காண்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாநகர சபை, பிரதேச சபை உள்ளிட்ட நகருடன் தொடர்புடைய அனைத்து அரசாங்கத் திணைக்களங்களின் அதிகாரிகள், துறை சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் அரசியல் அதிகாரசபைகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு தம் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பகிர்ந்துகொண்டனர்.

31/08/2026

மின்னேரியா தேசிய பூங்காவில் யானைகளைக் காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்:

இயற்கை எழிலில் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்!
மின்னேரியா:

உலகப் புகழ்பெற்ற மின்னேரியா தேசிய பூங்காவிற்கு இம்முறை எதிர்பாராத அளவில் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இயற்கை எழில் கொஞ்சும் சூழலில், யானைகளின் அரிய வாழ்வியல் நிகழ்வுகளை நேரில் கண்டு களிப்பதற்காகவே இப் பகுதியில் பெருந்திரளான மக்கள் குவிந்திருந்தனர்.

சுற்றுலாப் பயணிகள் தங்கள் கண்களால் கண்டு இரசித்த சில முக்கிய காட்சிகள்:

அழகான உணவருந்தும் தருணங்கள்: யானைக் கூட்டங்கள் ஒன்றுசேர்ந்து புற்கள் மற்றும் தாவரங்களை தங்களின் தும்பிக்கையால் நேர்த்தியாக எடுத்து உண்ணும் காட்சிகள்

பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
அமைதியான தூக்கம்: குட்டிகள் முதல் பெரிய யானைகள் வரை, இயற்கைச் சூழலில் எவ்வித இடையூறுகளுமின்றி மிக அமைதியாகவும் அழகாகவும் உறங்கும் அரிய காட்சிகளைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் வியப்படைந்தனர்

பாதுகாப்பு மற்றும் தற்காப்பு உத்திகள்: ஆபத்துகளிலிருந்தும் வெயிலிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள யானைக் கூட்டங்கள் பயன்படுத்தும் உத்திகள், குட்டிகளை பெரிய யானைகள் அரணாக நின்று பாதுகாக்கும் முறை ஆகியவை காண்போரை மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்தன.

இத்தகைய அழகிய தருணங்களையும் யானைகளின் இயல்பான வாழ்வியலையும் மிக அருகில் கண்டு இரசித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இது தங்களுக்கு மறக்க முடியாத ஒரு சிறந்த அனுபவமாக அமைந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்
Fast view
#மின்னேரியா தேசிய #பூங்காவில்

Address

Trincomalee
Trincomalee
31010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fast view posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share