முஹம்மட் பாரிஸ்

முஹம்மட் பாரிஸ் If anyone needs 🅱️ +Blood please contact me

25/03/2024
வரி படிவம் நிரப்பும் விதம் https://eservices.ird.gov.lk/Registration/TINRegistration/ShowRequestHeaderஇந்த படிவம் புதிதா...
03/01/2024

வரி படிவம் நிரப்பும் விதம்

https://eservices.ird.gov.lk/Registration/TINRegistration/ShowRequestHeader

இந்த படிவம் புதிதான ஒரு விடயம் அல்ல..யாரும் இதனை ஒரு பெரும் விடயமாக எண்ணி அச்சப்பட தேவை இல்லை..

நீங்களாகவே உங்களது தொலைபேசியின் ஊடாக கூட இந்த படிவத்தை நிரப்ப முடியும்.
குறிப்பு

வீணாக பணம் செலவழித்து இப்படிவத்தை நிரப்பி கொள்ள வேண்டாம்..நீங்களாகவே செய்து கொள்ளலாம்..

"இலங்கை"1. இலங்கை எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?9 மாகாணங்கள் அவையாவன:► வடக்கு மாகாணம்► கிழக்கு மாகாணம்► வடமத்திய...
31/12/2023

"இலங்கை"
1. இலங்கை எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?
9 மாகாணங்கள் அவையாவன:
► வடக்கு மாகாணம்
► கிழக்கு மாகாணம்
► வடமத்திய மாகாணம்
► வடமேல் மாகாணம்
► மத்திய மாகாணம்
► சபரகமுவை மாகாணம்
► ஊவா மாகாணம்
► தென் மாகாணம்
► மேல் மாகாணம்

2. இலங்கையில் எத்தனை அரச சேவை மாவட்டங்கள் உள்ளன? - 25 மாவட்டங்கள். அவையாவன:
1) கொழும்பு
2) கம்பகா
3) கழுத்துறை
4) கண்டி
5) மாத்தளை
6) நுவரெலியா
7) காலி
8) மாத்தறை
9) அம்பாந்தோட்டை
10) யாழ்ப்பாணம்
11) மன்னார்
12) வவுனியா
13) முல்லைத்தீவு
14) கிளிநொச்சி
15) மட்டக்களப்பு
16) அம்பாறை
17) திருகோணமலை
18) குருநாகல்
19) புத்தளம்
20) அனுராதபுரம்
21) பொலன்னறுவ
22) பதுளை
23) மொனராகலை
24) இரத்தினபுரி
25) கேகாலை

3. இலங்கையில் எத்தனை தேர்தல் மாவட்டங்கள் உள்ளன? - 22

4. இலங்கையின் தலை நகரம் எது?
ஸ்ரீ ஜயவர்தனபுர

5. இலங்கையின் பெரிய நகரம் எது? - கொழும்பு

6. இலங்கையின் பரப்பளவு என்ன?
65,610 கிமீ² / 25,332 சதுரமைல்
பூமியின் பரப்பளவு : 196,936,481 - சதுர மைல் பூமியின் நிலப் பரப்பளவு : 57,505,431 - சதுர மைல் பூமியின் நீர்ப் பரப்பளவு : 139,431,011 - சதுர மைல் இந்தியாவின் பரப்பளவு : 1,222,559 - சதுர மைல்

7. இலங்கை எப்போது (பிரித்தானியவிடம் இருந்து) சுதந்திரம் பெற்றது?. - 04.02.1948ல்

8. இலங்கை அரசை எவ்வாறு அழைக்கப்படுகின்றது? –
இலங்கை சனநாயக சமத்துவ குடியரசு
(Democratic Socialist Republic of Sri Lanka)

09. இலங்கையில் உயர்ந்த நீவீழ்ச்சி எது? - பம்பரகந்த.

10. இலங்கையில் நீளமான ஆறு எது? – மகாவலி கங்கை 335 கி. மீ

11. இலங்கையின் உயர்ந்த மலை எது? - பிதுருதலாகல (Pidurutalagala) கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி)

12. மக்கள் தொகை என்ன? 2009 மதிப்பீடு 20,238,000 - July 2008 குடிமதிப்பு 21,324,791

13. இலங்கையில் பாவனையில் உள்ள நாணயம் என்ன?: இலங்கை ரூபாய் (LKR)

14. இலங்கையின் நேர வலயம்: (ஒ.ச.நே + 5.30 மணி (கிறீன்வீச் நேரத்துடன் 5.30 மணி கூட்டவேண்டும்)

15. இலங்கையின் இணையக் குறி என்ன?: lk

16. இலங்கையின் தொலைபேசி எண் என்ன?: +94

17. இலங்கையில் பாவனையில் உள்ள மின்னழுத்தம் எது?: 230V

18. இலங்கை எங்கே அமைந்துள்ளது?: இந்து சமுத்திரத்தில் மையக்கோட்டிற்கு வடக்காக 6 பாகை 54 கலைக்கும் (6°54’ - 6° 9’N), நெட்டாங்கிற்கு கிழக்காக 79°54’ - 79°9’E வும் அமைந்துள்ளது.

இலங்கையின் முக்கிய நிலையங்கள்
-------------------------------------------------------------------

1. செய்மதி தகவல் தொடர்பு நிலையம் - பாதுக்கை
2. புடைவைக் கைத்தொழில் நிலையம் - வியாங்கொடை, பூகொட துல்கிரிய
3. எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் - சப்புகஸ்கந்த
4. பிறிமா மாவு ஆலை - திருகோணமலை
5. விவசாய ஆராட்சி நிலையம் - மகாஇலுப்பள்ளம, இங்குராகொட, பதல்கொட
6. தாவரவியல் பூங்காக்கள் - பேராதனை, கனோபத்த, ஹக்கல
7. தேயிலை ஆராட்சி நிலையம் - தலவாக்கலை
8. சோயா ஆராட்சி நிலையம் - பல்லேகலை, கண்ணொறுவ
9. ரயர் (டயர், டியூப்) தொழிற்சாலை - களனி
10. இறப்பர் ஆராட்சி நிலையம் - அகலவத்தை
11. வனவிலங்குச் சரணாலயம் - வில்பத்து, யால, உடவளவை, றுகுணு, லகுகல
12. பருத்தி ஆராட்சி நிலையம் - அம்பாந்தோட்டை
13. உருளைக்கிழங்கு ஆராட்சி நிலையம் - நுவரேலியா
14. சீமெந்து தொழிற்சாலை – புத்தளம், காலி, திருகோணமலை
15. ஓட்டுத் தொழிற்சாலை - அம்பாறை
16. ஆயுர்வேத ஆராட்சி நிலையம் - நாவின்ன
17. அரசினர் சுதேச வைத்தியசாலை - இராஜகிரிய
18. பறவைகள் சரணாலயம் - முத்துராஜவெல, குமண, பூந்தல
19. குஷ்டரோக வைத்தியசாலை - மாந்தீவு மட்டக்களப்பு
20. கலாசார முக்கோண வலையம் - கண்டி, அனுராதபுரம், பொலநறுவை
21. சீனித் தொழிற்சாலை – கந்தளாய்
22. காரீயச் சுரங்கம் - போகலை
23. புற்றுநோய் வைத்தியசாலை - மகரகம
24. துறைமுகங்கள் - கொழும்பு, திருகோணமலை, காலி, அம்பாந்தோட்டை, காங்கேசந்துறை
25. காகிதத் தொழிற்சாலை - வாளைச்சேனை
26, ஏற்றுமதிப் பொருட்கள் - தேயிலை, றபர், கறுவா
27. மிருகக்காட்சிச்சாலை - தெஹிவளை

இலங்கையின் தேசிய சின்னங்கள்
---------------------------------------------------------------
1. இலங்கையின் தேசிய மரம் - நாகமரம்
2. இலங்கையின் தேசியப் பறவை - காட்டுக்கோழி
3. இலங்கையின் தேசிய மிருகம் -மர அணில்
4. இலங்கையின் தேசிய மலர் - நீலஅல்லி

புலமைத்தாத்தா
புலமை வளாகம்
கொழும்பு

ஸஊதி அரேபியாவுக்கு நிதியுதவி வழங்கிய இலங்கை முஸ்லிம்கள்.----------------------------by Hafiz Issadeenசுமார் 40 வருடங்களு...
24/12/2023

ஸஊதி அரேபியாவுக்கு நிதியுதவி வழங்கிய இலங்கை முஸ்லிம்கள்.
----------------------------by Hafiz Issadeen
சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் பழைய குறிப்புப் புத்தகம் ஒன்று என் கைக்கு கிடைத்தது. அது எப்படி என்னிடம் வந்தது என்பது நினைவில் இல்லை. 1945ம் ஆண்டு காலப் பகுதியில் மைப் பேனாவால் எழுதப்பட்டிருந்த அந்த மொனிட்டர் அப்பியாசக் கொப்பியில் 'மக்கா - மதீனா பஞ்ச நிவாரண நிதி சேகரிப்பு' எனத் தலைப்பிடப்பட்டு இருந்தது. அடுத்து வந்த பக்கங்களில் அந்த நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர் விபரம் எழுதப்பட்டிருந்து. 50 சதம், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என ஒவ்வொருவரும் அன்பளிப்புச் செய்த தொகை குறிப்பிடப்பட்டிருந்தது நினைவில் இருக்கிறது.

நான் கவனமாக எடுத்து வைத்திருந்த அந்த குறிப்புப் புத்தகத்தை இப்போது தேடிக் கொள்ள முடியவில்லை. அது பழைய பேப்பர் காரனிடம் போய்ச் சேர்ந்து விட்டதோ தெரியாது.

அதற்குப் பல வருடங்களின் பின்னர் தான் கீழே காட்டப்பட்டுள்ள 30/04/1945 திகதியிடப்பட்ட பத்திரத்தை வாசிக்கக் கிடைத்தது. அதிலிருந்து இந்த விடயம் தொடர்பான முழு விபரத்தையும் அறிந்து கொள்ள முடிந்தது.

1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகப்போர் நடந்தது. இக்காலப் பகுதியில் ஹஜ்ஜுக்கு வெளிநாட்டவர்கள் செல்வது தடைப்பட்டது. ஹஜ் யாத்திரிகர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தங்கியிருந்த மக்காவாசிகளும் மதீனாவாசிகளும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார்கள். அப்பகுதிகளில் பஞ்சம் நிலவத் தொடங்கியது.

இந்த நிலையில்தான் கொழும்பில் வாழ்ந்த முஸ்லிம்கள் 'மக்கா - மதீனா பஞ்ச நிவாரணக் கமிட்டி' என்ற பெயரில் அமைப்பொன்றை ஏற்படுத்தி நிவாரண நிதி சேகரிக்கத் தொடங்கினர். இந்த குழு டாக்டர் எம். ஸீ. எம் கலீல் (இலங்கை முஸ்லிம் லீக் தலைவர்) அவர்களின் தலைமையில் செயல்பட்டிருக்கிறது. அக்காலத்தில் அவர் State Council என்னும் ராஜாங்க சபையின் உறுப்பினர். இக்குழுவின் செயலாளராக பீ.எஸ். அப்துல் காதிர் என்பவர் இருந்துள்ளார். கொழும்பு உட்பட 86 ஊர்களில் இந்த நிதி சேகரிப்பு நடந்திருக்கிறது.

மொத்தம் 71,832 ரூபா 81 சதம் சேகரிக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக 50,000/- ரூபாவும் அதனை அடுத்து 20,000/- ரூபாவும் என மொத்தம் 70,000/- ரூபாய் கொழும்பில் இருந்த Eastern Bank ஊடாக Telegraphic Transfer மூலம் ஸஊதி மன்னர் அப்துல் அஸீஸ் இப்னு சுவூத் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு நன்றி தெரிவித்து பதில் தந்தியும் மன்னரிடமிருந்து வந்துள்ளது.

குறிப்பிட்ட வருடத்தில் ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 3/- ரூபாவாக இருந்திருக்கிறது. அதன்படி பார்த்தால் சுமார் 23,300 டொலருக்கு சமமான பணத்தை இலங்கை முஸ்லிம்கள் ஸவூதி அரேபியாவுக்கு நன்கொடையாக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தப் பத்திரத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

3-4-45
சென்ற 4, 5 வருடங்களாக யுத்தத்தினால் ஜனங்கள் ஹஜ்ஜுக்கு போதிய அளவில் போகவில்லை. இதனால் ஹிஜாஸில் குறிப்பாய் மக்கா மதீனா நகர சுற்றுப்புறங்களில் வசிக்கும் ஹஜ் கால வரும்படியை எதிர்பார்த்து வாழக்கூடிய அரபிகளுக்கு கஷ்டமேற்பட்டு பஞ்ச நிலமை ஏற்பட்டிருப்பதாக நாமும் அறிந்து நமது முயற்சியின் பேரில் கொழும்பில் "மக்கா - மதீனா பஞ்ச நிவாரண கமிட்டி" என்ற பேரால் ஒரு கமிட்டி ஏற்படுத்தி பண வசூல் செய்தோம். மொத்தம் ரூ 71,832/81 வசூலானது. கொழும்புவுட்பட 86 ஊர்களில் நிதி சேகரித்து அனுப்பியிருந்தனர். மாட்சிமிக்க சுல்தான் அப்துல் அஸீஸ் இப்னு சுவூது மன்னர் அவர்கட்கு முதன்முறையாக ரூ 50,000/- மும் இரண்டாம் முறையாக ரூ 20,000/-மும், ஆக 70,000/- கொழும்பு ஈஸ்டர்ன் பேங்க் மூலமாக T. T. அனுப்பிக் கொடுத்தோம். ஒப்புக்கொண்டு நன்றி பாராட்டி தந்தி சொல்லி இருந்தார்கள்.
கமிட்டிக்குத் தலைவர் ஜனாப் Dr M. C. M. கலீல் M. S. C.
" " காரியதரிசி ஜனாப் P. S. அப்துல் காதிர்
ஆபீஸ் 163, 2ம் குறுக்குத் தெரு,
கொழும்பு.
-------------
குறிப்பு: இதற்கு முன்னர் பலர் இது பற்றி எழுதியிருக்கக்கூடும். புதிய தலைமுறை அறிந்து கொள்ளட்டும் என்று நானும் எழுதினேன்.
- Hafiz Issadeen -23/12/2023

திருகோணமலை மாவட்ட யுவதிகளுக்கு சுய தொழில் ஒன்றை கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம்தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் இயங்...
23/08/2023

திருகோணமலை மாவட்ட யுவதிகளுக்கு
சுய தொழில் ஒன்றை கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் இயங்கும் லவ்லேன் தொழில் பயிற்சி நிலையத்தில் கீழ் குறிப்பிட்ட பயிற்சி நெறியினை ஆறு(06) மாத காலப்பகுதியில் கற்றுக் கொள்ள முடியும்.
நேர்த்தியான முறையில் ஒவ்வொரு பயிலுனர் மீதும் கவனம் செலுத்தப்படும்.
பயிற்சி காலத்தில் உங்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் பணியிட வெற்றிக்குத் தேவையான திறன்களை எவ்வாறு வளர்ப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி பின்னரும் உங்களுக்கான தொடர் வழிகாட்டல் வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு
எஸ்.ஸ்ரனி
நிலைய பொறுப்பதிகாரி
தேசிய இளைஞர் தொழிற் பயிற்சி நிலையம்.
லவ்லேன், திருகோணமலை
0777800034 / 0757800134

குறிப்பு- நீங்கள் இவ் பதிவை பார்த்த பின்பு share பண்ணுவதன் ஊடாக யாரோ ஒருவர் பயன் பெறலாம்.

BSc in Information Technology (IT) Degree Programme (2023/24) @ The Open University of Sri LankaMore Details: https://ou...
14/07/2023

BSc in Information Technology (IT) Degree Programme (2023/24) @ The Open University of Sri Lanka

More Details: https://ou.ac.lk/nsc/programme/bscit/

Closing Date: 2023.08.15

தரம் 04Credit by :yarl master
13/07/2023

தரம் 04

Credit by :yarl master

தரம் 02கணிதம்1ம் தவணை
13/07/2023

தரம் 02
கணிதம்
1ம் தவணை

நீங்களும் வெற்றிகரமான விவசாய தொழில்முயற்சியாளர் ஒருவராக விரும்புகின்றீர்களா?அவ்வாறாயின் இவ் அரிய வாய்ப்பு உங்களுக்கே!+++...
07/07/2023

நீங்களும் வெற்றிகரமான விவசாய தொழில்முயற்சியாளர் ஒருவராக விரும்புகின்றீர்களா?
அவ்வாறாயின் இவ் அரிய வாய்ப்பு உங்களுக்கே!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

Road Development Authority (RDA)01. Electrician• Salary: Rs.3,750.00 Per Day + Rs.468.75 Per Hour for Overtime (OT)• Clo...
06/07/2023

Road Development Authority (RDA)

01. Electrician

• Salary: Rs.3,750.00 Per Day + Rs.468.75 Per Hour for Overtime (OT)
• Closing Date: 2023.07.21

Access Google Drive with a Google account (for personal use) or Google Workspace account (for business use).

04/07/2023

Address

VELLAIMANAL
Trincomali
31053

Telephone

+94762544721

Website

https://farisss.wixsite.com/school, Https://Fariseducation.lk/

Alerts

Be the first to know and let us send you an email when முஹம்மட் பாரிஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to முஹம்மட் பாரிஸ்:

Share