தமிழ்மதி

  • Home
  • தமிழ்மதி

தமிழ்மதி Journalist, news presenter

இயக்கச்சி பகுதியில் கார் - டிப்பர் மோதி விபத்து!மூவர் காயம்!
01/11/2025

இயக்கச்சி பகுதியில் கார் - டிப்பர் மோதி விபத்து!

மூவர் காயம்!

31.10.2025 வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணி 1. நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வடகீழ்ப் பருவத்தில் நிகழும் இட...
31/10/2025

31.10.2025 வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணி

1. நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வடகீழ்ப் பருவத்தில் நிகழும் இடி மின்னல் மழை கிடைக்க தொடங்கும். இன்றும் கூட யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதிகளில் சராசரியாக 55 மி.மீ. மழை கிடைத்தது. நண்பகலை அண்மித்து அல்லது மாலை அல்லது இரவில் இந்த மழை கிடைக்கும். ஆனால் ஒரே நாளில் அல்லது ஒரே நேரத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்காது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் எதிர்வரும் 6ம் திகதிக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இந்த இடி மின்னல் மழை கிடைத்துவிடும்.

2. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் மானாவாரியான மழையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட பல வயல்கள் நீரின்றி பாதிப்படைவதாக பலர் கூறியுள்ளனர். அவர்களுக்கு இந்த மழை வரமாக அமையும்.

3. இந்த முன்னறிவிப்பின் அடிப்படையில் மழை கிடைக்கும் என நம்பி மழைநீரை மட்டும் அடிப்படையாகக் கொண்ட வயல்களுக்கு மருந்து மற்றும் உரமிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். மழை கிடைத்ததன் பின்னர் இதனை மேற்கொள்ளலாம். ஏனெனில் எதிர்வரும் 06.11.2025 வரையான மழை இடி மின்னல் மழை என்பதனால் நாள், நேரம் மற்றும் இடத்தினை உறுதிப்படுத்த முடியாது.

4. அதேவேளை நாளைய தினம்(01.11.2025) மத்திய கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச்சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து பங்களாதேஷில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5. மீண்டும் எதிர்வரும் 06.11.2025 அன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு தாழமுக்கமும் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து கிழக்கு கரையை அண்மித்து கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6. மேற்குறித்த இரண்டில் ஏதாவது ஒன்று புயலாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு புயலாக மாறினால் அதற்கு 'சென்வார்' என பெயரிடப்படும்.

7. வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகி அது எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நேரடி செல்வாக்கு செலுத்தினாலே எமக்கு மழை கிடைப்பது உறுதியாகும். அவ்வாறில்லாமல் அது எமக்கு சற்று தொலைவில் நகர்ந்தால் எமது பிரதேச மழைக்கான ஈரப்பதனையும் உள்ளீர்த்து வேறு இடங்களில் கன மழை கிடைக்கும். ஆனால் அதன்பின் சில நாட்களில் எமது பகுதிகளுக்கு மழையற்ற/ மழை மிகக்குறைவான வானிலையே நிகழும்.

- நாகமுத்து பிரதீபராஜா -

யாழ் பல்கலைக்கழக நூலகத்தின் கூரைக்குள்ளிருந்து ஒரு ரி56 துப்பாக்கி, இரத்த கறைகளுடன் சாறம் மற்றும் மருத்துவப் பொருட்கள் ம...
31/10/2025

யாழ் பல்கலைக்கழக நூலகத்தின் கூரைக்குள்ளிருந்து ஒரு ரி56 துப்பாக்கி, இரத்த கறைகளுடன் சாறம் மற்றும் மருத்துவப் பொருட்கள் மீட்பு!

நூலகத்தின் கூரை திருத்த வேலைகளின் போது இவை இனங்காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டைமுறிப்பு பகுதியில் பொலிஸ் ஜீப் வாகனம் நேற்றைய தினம் விபத்து!
31/10/2025

முல்லைத்தீவு - மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டைமுறிப்பு பகுதியில் பொலிஸ் ஜீப் வாகனம் நேற்றைய தினம் விபத்து!

யாழ் பல்கலைக்கழக நூலகத்தின் கூரைக்குள்ளிருந்து 59 ரவைகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மகசீன்கள் இரண்டு மற்றும...
31/10/2025

யாழ் பல்கலைக்கழக நூலகத்தின் கூரைக்குள்ளிருந்து 59 ரவைகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மகசீன்கள் இரண்டு மற்றும் வயர் என்பன மீட்கப்பட்டுள்ளது.

செல்வச்சந்நிதி சூரன்போர் 🙏
27/10/2025

செல்வச்சந்நிதி சூரன்போர் 🙏

26/10/2025

கே.கே.எஸ் வீதியில் விபத்து - மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய ஹயஸ் - இருவர் படுகாயம்!

25/10/2025

யாழில் இன்று நடந்த விபத்து!

25.10.2025 சனிக்கிழமை இரவு 10.00 மணிமத்திய வங்காள விரிகுடாவில் தோன்றிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல...
25/10/2025

25.10.2025 சனிக்கிழமை இரவு 10.00 மணி

மத்திய வங்காள விரிகுடாவில் தோன்றிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.

தற்போது முல்லைத்தீவுக்கு கிழக்காக 749 கி.மீ. தொலைவில் காணப்படும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 27ம் திகதி புயலாக மாற்றம் பெறும். இது வடமேற்கு மேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 28ம் இரவு அல்லது 29 காலை இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு ' மொந்தா' எனப் பெயரிடப்படும். இந்த பெயரினை தாய்லாந்து நாடு வழங்கியுள்ளது. 2025/2026 வடகீழ்ப் பருவக்காற்று காலத்தில் உருவாகவுள்ள முதலாவது புயலாக இது அமையும்.

இந்த புயலினால் இலங்கையின் இலங்கையின் எந்த ஒரு பகுதிக்கும் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 28.10.2025 வரை மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை கரையோரப் பகுதிகளில் சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது. இடி மின்னல் நிகழ்வுகளும் அவ்வப்போது இடம்பெறும்.

அதே வேளை எதிர்வரும் 27.10.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதியில் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

இந்த புயலினால் அடுத்த சில நாட்களில் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஒரு நெருக்கடி நிலை உருவாகும். அதாவது எங்கள் பகுதி வளிமண்டலத்தில் காணப்படும் ஈரப்பதன் முழுவதையும் இந்த புயல் உள்ளீரத்துக் கொள்ளும் என்பதனால் எதிர்வரும் 28.10.2025 முதல் 06.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மழை கிடைக்காது. ஆனாலும் பருவக் காற்று காரணமாக அவ்வப்போது சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும்.

- நாகமுத்து பிரதீபராஜா -

25/10/2025

நாளை காலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு மின்தடை!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி கோப்பாய் சந்தியில் விபத்து - பல வாகனங்கள் சேதம்!ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அ...
25/10/2025

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி கோப்பாய் சந்தியில் விபத்து - பல வாகனங்கள் சேதம்!

ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு வாகனேரி சந்தியில் KDH மற்றும் டிப்பர் மோதி விபத்து - பலருக்கு காயம்!!
23/10/2025

மட்டக்களப்பு வாகனேரி சந்தியில் KDH மற்றும் டிப்பர் மோதி விபத்து - பலருக்கு காயம்!!

Address


Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்மதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share