Dharussafa NEWS

  • Home
  • Dharussafa NEWS

Dharussafa NEWS Dharussafa Organization

✍️இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய நேற்று (02) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். இதன் போது நி...
03/11/2025

✍️இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய நேற்று (02) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். இதன் போது நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய படசாலையில் நடைபெற்ற புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றி கல்வி சமூகத்திற்கு தெளிவுபடுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்ட போது..

✍️நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்க அணியை 52 ஓட்டங்களில் வீழ்த்தி சாம்பியன்...
03/11/2025

✍️நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்க அணியை 52 ஓட்டங்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி.

✍️உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள...
03/11/2025

✍️உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

✍️தமிழக மீனவர்கள் 35 பேரை கைது செய்த இலங்கை கடற்படை! தமிழகம் மற்றும் புதுச்சேரி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடி...
03/11/2025

✍️தமிழக மீனவர்கள் 35 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு நாட்டுப் படகு, மூன்று விசைப்படகு உள்ளிட்ட 35 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணைக்கு பின் மீனவர்கள் 35 பேரும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாகை, காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

✍️தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியும் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.சுமார் 1.5 மில்லியன் ...
03/11/2025

✍️தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியும் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுமார் 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் இதுவரை கிடைத்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்நாட்களில் அடையாள அட்டைகளை அச்சிடும் பணி முறையாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக தினமும் திணைக்களத்திற்கு வரும் பிற பொது விண்ணப்பதாரர்களுக்கும் தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

✍️கல்முனை அல் - பஹ்றியா மகா வித்தியாலயத்தில்  MOHIDEEN MEMORIAL SMART HALL திறப்பு கல்முனை அல் - பஹ்றியா மகா வித்தியாலத்...
03/11/2025

✍️கல்முனை அல் - பஹ்றியா மகா
வித்தியாலயத்தில் MOHIDEEN
MEMORIAL SMART HALL திறப்பு

கல்முனை அல் - பஹ்றியா மகா வித்தியாலத்தின் மாணவர்களின் எதிர்கால நவீன கல்வித்திட்டத்தின் நலன் கருதி கல்முனையின் பிரபல வர்த்தகரான மர்ஹும் எம்.பி. முஹைடீன் நினைவாக அவரின் புதல்வர் பிரபல வர்த்தகரும் சமூக சேவையாளருமான பி.எம்.நளீம் முஹைடீனின் நிதியுதவியில் M.P.MOHIDEEN MEMORIAL SMART HALL நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.பைசால் தலைமையில் கடந்த 31ஆம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் பிரபல வர்த்தகர் நளீம் முஹைடீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்முனை றோயல் வித்தியாலயத்தின் அதிபர் எம்.அப்துல் ஸலாம், விஷேட அதிதிகளாக பாடசாலையின் பிரதி அதிபர்களான இ,றினோஸ் ஹஜ்மின், யூ.எல்.ஹிதாயா, எம்.எப்.நஸ்மியா புஹாரி, ஏ.ஆர்.எம்.முஸாஜித், சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலய அதிபர் எம்.ஐ,எம்.இல்யாஸ் மற்றும் றியாலுல் ஜன்னா வித்தியாலய அதிபர் எம்.ஏ.அஸ்த்தர் உட்பட பாடசாலையின் பழைய மாணவர் சங்கச் செயலாளர் யூ.எல்.எம். ஹாஜா மற்றும் உறுப்பினர்கள், அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும், பிரதம அதிதியின் சகோதரர்கள் உட்பட பாடசாலையின் ஆசிரிய ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலையின் சார்பாகவும் பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர்கள் சார்பாகவும் பிரதம அதிதி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு சின்னங்களும் வாழ்த்து மடல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது

✍️இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையை வலுப்படுத்தும் நோக்குடன், நாளை 303 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.கொழும்பு...
02/11/2025

✍️இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையை வலுப்படுத்தும் நோக்குடன், நாளை 303 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

கொழும்பு மாவட்டச் செயலக அரங்கில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது .

2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆயுர்வேதத் துறையில் நடைபெறும் மிகப்பாரிய ஆட்சேர்ப்பு இது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

✍️2025 உயர்தரப் பரீட்சை: நவம்பர் 10 முதல் ஆரம்பம் – தேர்வுகள் திணைக்களம் அறிவிப்பு!"​2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் ...
02/11/2025

✍️2025 உயர்தரப் பரீட்சை: நவம்பர் 10 முதல் ஆரம்பம் – தேர்வுகள் திணைக்களம் அறிவிப்பு!
"
​2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

​பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் அவர்கள், நாடு முழுவதும் பரீட்சையைச் சீராக நடத்துவதற்கான விநியோகம் மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். இதற்கெனத் நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன, அத்துடன், கடமைகளுக்காக அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

​2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை அனைத்து முக்கிய பாடத் துறைகளையும் உள்ளடக்கி நடைபெறும்.

​இதற்கிடையில், பரீட்சை தொடர்பான அனைத்துத் தனியார் வகுப்புக்கள் (Tution Classes), கருத்தரங்குகள் (Seminars) மற்றும் செயலமர்வுகள் (Workshops) என்பன நவம்பர் 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும் என்று திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை மீறும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் பரீட்சைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள்.

✍️உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறக்கப்பட்டுள்ளது. எகிப்தில் பிரமிடுகளுக்குப்பின் பெருமை சேர்க்...
02/11/2025

✍️உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறக்கப்பட்டுள்ளது. எகிப்தில் பிரமிடுகளுக்குப்பின் பெருமை சேர்க்கும் மேலும் ஒரு மகுடமாக இந்தக் காட்சியகம் அமைந்துள்ளது.

பன்னெடுங்கால பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் கொண்ட பகுதியான எகிப்தின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் பெரும் அருங்காட்சியகங்களுள் ஒன்றாக ‘கிராண்ட் எகிப்தியன் மியூசியம்’ என்றழைக்கப்படும் எகிப்திய பிரமாண்ட அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் நீண்ட இடைவெளிக்குப்பின் முழுமையாக நேற்று (01) திறக்கப்பட்டுள்ளது.

✍️ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ள வரவு- செலவுத் திட்டத்தை ஆ...
02/11/2025

✍️ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ள வரவு- செலவுத் திட்டத்தை ஆராய்ந்து, தர்க்க ரீதியிலான கருத்துகளை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.

✍️இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலை...
02/11/2025

✍️இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 1995 என்ற புதிய அவசரத் தொலைபேசி இலக்கம் ஊடாக வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க முடியும் என்று சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது

✍️ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப...
02/11/2025

✍️ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை நியமித்துள்ளார்.

அரசியலமைப்பின் 41 (1) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. உலகளாவிய முதலீட்டு கூட்டாண்மை தொடர்பில் ஹனீப் யூசுபிற்கு உள்ள அநுபவம் மற்றும் இலங்கையின் தனியார் துறையின் அபிவிருத்திக்கு அவர் ஆற்றிய நீண்டகால பங்களிப்பை கருத்திற்கொண்டு அரசாங்கத்தின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க அவருக்கு உள்ள இயலுமையை பாராட்டும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Address


Telephone

+94779977474

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dharussafa NEWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share