Biz Insights

Biz Insights Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Biz Insights, Media/News Company, .

புதிய கார்களை அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து வாங்குவதன் முக்கியத்துவம்புத்தம் புதிய காரை செலுத்துவதில் ஒரு தனித்து...
22/10/2025

புதிய கார்களை அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து வாங்குவதன் முக்கியத்துவம்

புத்தம் புதிய காரை செலுத்துவதில் ஒரு தனித்துவமான தன்னம்பிக்கை உள்ளது. இது, நேர்த்தியான வடிவமைப்பையோ அல்லது சீரான செயல்திறனையோ பற்றியது மாத்திரமன்றி, திறப்பைத் திருகும் கணத்திலிருந்து, ஒவ்வொரு கிலோமீற்றரும் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் மற்றும் முழுமையாக உங்களுக்கே சொந்தமானது என்பதையும் அறிந்துகொள்வதில் கிடைக்கும் மன அமைதியில் தங்கியுள்ளது. இதில் மறைக்கப்படும் குறைபாடுகளோ, கடந்த கால பயண தூரம் தொடர்பான கவலைகளோ இருப்பதில்லை. இந்த உறுதிப்பாடு அனைத்தும் நுகர்வோர் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் இருந்து ஒரு வாகனத்தை வாங்கும் தருணத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

Read More : https://bizinsights.lk/?p=14200

‘ருஹுணு வட்டம்’: இலங்கையின் தென்கரையின் கதையை சொல்லும் ஒரு புதிய அத்தியாயம்ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலினால் ஆரம்பிக்கப்...
22/10/2025

‘ருஹுணு வட்டம்’: இலங்கையின் தென்கரையின் கதையை சொல்லும் ஒரு புதிய அத்தியாயம்

ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொலைநோக்குக் கருத்தாக்கமான ‘ருஹுணு வட்டம்’ (Ruhunu Ring) மூலம், இலங்கையின் தெற்கு கரையோரப் பகுதியானது, ஒரு முதன்மையான பயணத் தலமாக உத்தியோகபூர்வமாக அதற்கே உரித்தான இடத்தைப் பிடித்துள்ளது. இக்கருத்தாக்கமானது, அப்பகுதியின் கதையைக் கூறுவதற்கும் சுற்றுலா விரிவாக்கத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில், 2025 இலங்கைச் சுற்றுலா எக்ஸ்போ (Sri Lanka Tourism Expo 2025) நிகழ்வின் இறுதி நிகழ்வு மற்றும் 2025 சர்வதேச சுற்றுலாத் தலைவர்கள் உச்சிமாநாடு (International Tourism Leaders Summit 2025) ஆகிய நிகழ்வுடன் இதன் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

Read More : https://bizinsights.lk/%e0%ae%b0%e0%af%81%e0%ae%b9%e0%af%81%e0%ae%a3%e0%af%81-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9/

2025ஸ்ரீ லங்கா பரோமீட்டர் கருத்தாய்வு அறிக்கை வெளியீடு: நல்லிணக்கம், ஆளுகை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு குறித்த புதிய கண்ண...
22/10/2025

2025ஸ்ரீ லங்கா பரோமீட்டர் கருத்தாய்வு அறிக்கை வெளியீடு: நல்லிணக்கம், ஆளுகை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு குறித்த புதிய கண்ணோட்டங்கள்

2025 ஸ்ரீ லங்கா பரோமீட்டர் (SLB) ஆய்வு அறிக்கையானது இன்று, கொழும்பு தாஜ் சமுத்திராவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இக்கருத்தாய்வானது, பொது மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயுத மோதலுக்கு பின்னரான நல்லிணக்கம், ஆளுகை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு போன்ற முக்கிய துறைகளில் பொதுமக்களின் கருத்து காலவோட்டத்தில் மாறுபடும் போக்கை கண்காணிக்கின்றது.

Read More : https://bizinsights.lk/2025%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8b%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0/

எதிர்கால தலைவர்களை வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணியை அமைக்கும் Hemas Consumer Brands (HCB) மற்றும் ஸ்ரீ ஜ...
21/10/2025

எதிர்கால தலைவர்களை வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணியை அமைக்கும் Hemas Consumer Brands (HCB) மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

இலங்கையின் வீட்டுப் பராமரிப்பு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னோடியாக திகழும் Hemas Consumer Brands (HCB) நிறுவனம், அண்மையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் (USJ) ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மாணவர்களை வேலைவாய்ப்புகளுக்காக மட்டுமன்றி, தேசிய முன்னேற்றத்திற்காகவும் நிலைபேறான வளர்ச்சியைம் உருவாக்கும் அர்த்தமுள்ள தொழில்துறையாளர்களாகவும் தயார் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய அபிவிருத்தி குறிக்கோள்களுடன் இணைந்தவாறு, வேலைவாய்ப்புத் திறன்களை ஆதரிப்பதன் மூலம், தங்கள் துறைகளில் நிரூபிக்கப்பட்ட சாதனைகளைக் கொண்ட இரு நம்பகமான நிறுவனங்களை இக்கூட்டாண்மை ஒன்றிணைத்துள்ளது. கல்வித் துறையும் கைத்தொழில் துறையும் இணையும் இந்த மூலோபாய கூட்டாண்மையானது, இலங்கையின் அடுத்த தலைமுறை தொழில்முறை நிபுணர்கள், புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கான பாதையை திறக்கிறது. புத்தாக்கம் மற்றும் சமூகப் பொறுப்புடன் எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு சிந்திக்கும் ஒரு நிறுவனமான Hemas Consumer Brands இன் உறுதியான அர்ப்பணிப்பை இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் எடுத்துக் காட்டுகிறது.

Read More : https://bizinsights.lk/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/

சாகசத்தை நாளாந்த வாழ்க்கைக்காக மீள்வடிவடிமைக்க, Jeep Wrangler மற்றும் Gladiator  வாகனங்களை இலங்கைக்குக் கொண்டு வரும் DIM...
21/10/2025

சாகசத்தை நாளாந்த வாழ்க்கைக்காக மீள்வடிவடிமைக்க, Jeep Wrangler மற்றும் Gladiator வாகனங்களை இலங்கைக்குக் கொண்டு வரும் DIMO

இலங்கையில் ஜீப் வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், அன்றாடப் பயன்பாடு மற்றும் சாகசம் மிக்க பயணங்கள் ஆகிய இரண்டையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், முற்றிலும் புதிய 2025 Jeep Wrangler மற்றும் Jeep Gladiator ஆகிய வாகனங்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

Read More: https://bizinsights.lk/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/

GWMமற்றும்டேவிட்பீரிஸ்ஆட்டோமொபைல்ஸ்இடையேயானமூலோபாயகூட்டாண்மையை அறிவித்ததைத் தொடர்ந்து ‘Hello, to More’ஐவரவேற்கும் இலங்கை...
17/10/2025

GWMமற்றும்டேவிட்பீரிஸ்ஆட்டோமொபைல்ஸ்இடையேயானமூலோபாயகூட்டாண்மையை அறிவித்ததைத் தொடர்ந்து ‘Hello, to More’ஐவரவேற்கும் இலங்கை

DPA ஆனது இலங்கையில் GWMக்கு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக நியமிக்கப்படுகிறது
ஹைப்ரிட் மற்றும் புதிய மின்சார வாகனத் தொகுப்பை இலங்கையில் அறிமுகப்படுத்துகிறது
டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் மோட்டார் வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகன நிறுவனமான GWMஇன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் மற்றும் விநியோகஸ்தராக இலங்கையில் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கூட்டாண்மை, உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம், அதிக தெரிவு, நம்பகத்தன்மை மற்றும் மதிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் புதிய மின்சார வாகனங்களை (NEVs) அறிமுகப்படுத்துகிறது.

Read More : https://bizinsights.lk/gwm%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%86%e0%ae%9f/

“தூய்மையான உற்பத்திக்கு வலுவூட்டும் சுதேசி” சூரிய மின்சக்தி கட்டமைப்பு மூலம் காபன் வெளியீட்டை குறைத்து, இலங்கையின் வலுசக...
16/10/2025

“தூய்மையான உற்பத்திக்கு வலுவூட்டும் சுதேசி” சூரிய மின்சக்தி கட்டமைப்பு மூலம் காபன் வெளியீட்டை குறைத்து, இலங்கையின் வலுசக்தி திறனை வலுவூட்டுகிறது
மூலிகையுடனான தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் உற்பத்தியில் முன்னோடியாகத் திகழும் சுதேசி இன்டஸ்ட்ரியல் வோர்க்ஸ் பிஎல்சி (The Swadeshi Industrial Works PLC) நிறுவனம், தமது காபன் வெளியீட்டைக் (Carbon Footprint) குறைப்பதற்காகவும், இலங்கையின் வலுசக்திக்கான ஈடுகொடுக்கும் திறனை வலுப்படுத்துவதற்காகவும் சூரிய மின்சக்தி கட்டமைப்பைப் பயன்படுத்தி தூய்மையான உற்பத்திக்கான (Cleaner Production) வலுசக்தியை வழங்க உள்ளது.

Read More :

https://bizinsights.lk/%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/

மூலிகையுடனான தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் உற்பத்தியில்

“Swadeshi is powering cleaner production” solar energy system to reduce carbon footprint & strengthens Sri Lanka’s energ...
15/10/2025

“Swadeshi is powering cleaner production” solar energy system to reduce carbon footprint & strengthens Sri Lanka’s energy resilience.

The Swadeshi Industrial Works PLC the pioneer herbal – personal care products manufacturer is going to power cleaner production with solar energy system to reduce carbon footprint & strengthens Sri Lanka’s energy resilience.

Read More : https://bizinsights.lk/?p=14157

Nations Trust Bank drives a cashless future at CBSL’s “Pay Digital” initiative in DambullaNations Trust Bank was an acti...
15/10/2025

Nations Trust Bank drives a cashless future at CBSL’s “Pay Digital” initiative in Dambulla

Nations Trust Bank was an active partner in the Central Bank of Sri Lanka’s (CBSL) “Pay Digital” Initiative held in Dambulla recently, as a part of its commitment towards building an economy that drives cashless digital payments for economic progress.

Read More : https://bizinsights.lk/nations-trust-bank-drives-a-cashless-future-at-cbsls-pay-digital-initiative-in-dambulla/

Nations Trust Bank was an active partner in the Central Bank of Sri Lanka’s (CBSL) “Pay Digital” Initiative held in Dambulla recently, as a part of its co

சரித்திரம் மீள்திரும்புகிறது: உண்மையான சிலோன் மோட்டார் வாகன கண்காட்சி முன்னெப்போதையும் விட பிரமாண்டமாக மீண்டும்வரலாற்றுச...
13/10/2025

சரித்திரம் மீள்திரும்புகிறது: உண்மையான சிலோன் மோட்டார் வாகன கண்காட்சி முன்னெப்போதையும் விட பிரமாண்டமாக மீண்டும்

வரலாற்றுச் சிறப்புமிக்க சிலோன் மோட்டார் வாகன கண்காட்சி 2025 (Ceylon Motor Show 2025) ஆனது, இவ்வருடம் ஒக்டோபர் 24 – 26 வரை கொழும்பு BMICH இல் மீள்பிரவேசம் செய்யவுள்ளது. இது புதிதாகக் நிர்மாணிக்கப்பட்ட மேற்கு வாகனத் தரிப்பிட மண்டபங்களில் முதன்முதலில் இடம்பெறும் நிகழ்வாக முன்னெடுக்கப்படவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வு சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (Ceylon Motor Traders Association – CMTA) மற்றும் சிலோன் கிளசிக் கார் கழகம் (Classic Car Club of Ceylon – CCCC) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், LOLC Holdings PLC நிறுவனம் இதன் பிரதான அனுசரணையாளராக (Title Partner) விளங்குகின்றது. இந்நிகழ்வு, இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க வாகனக் கண்காட்சி (Automotive Exhibition) எனும் அதன் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தவுள்ளது.

Read More : https://bizinsights.lk/%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/

ABEC Premier: முன்னணி கல்வி ஆலோசனை நிறுவனம் அதன் இலக்குகளை உலகளாவிய வெற்றிக் கதைகளாக மாற்றிய 20 வருடத்தை கொண்டாடுகிறதுசர...
13/10/2025

ABEC Premier: முன்னணி கல்வி ஆலோசனை நிறுவனம் அதன் இலக்குகளை உலகளாவிய வெற்றிக் கதைகளாக மாற்றிய 20 வருடத்தை கொண்டாடுகிறது

சர்வதேச கல்வி ஆலோசனையில் முன்னோடியாகத் திகழும் Australian Business Education Centre (ABEC Premier), தனது 20 வருட நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்நிறுவனம் பல ஆண்டுகளாக இலங்கை மாணவர்களின் அபிலாஷைகளை உலகளாவிய வெற்றிக் கதைகளாக மாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளது. கொழும்பில் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில், வெளிநாடுகளில் உயர்கல்வி வாய்ப்புகள் ஒரு சில சலுகை கொண்டவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இந்தக் குறைபாட்டை நீக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ABEC, கணிசமான நிதி வசதி கொண்ட மாணவர்களுக்கும், வெளிநாட்டில் படிக்க ஆர்வமுள்ள இலட்சியமிக்க நடுத்தர வருமானம் கொண்ட மாணவர்களுக்கும் சர்வதேச கல்வியை அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கத்துடன் தனது பயணத்தை ஆரம்பித்தது.

Read More : https://bizinsights.lk/abec-premier-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf/

சர்வதேச கல்வி ஆலோசனையில் முன்னோடியாகத் திகழும் Australian Business Education

‘Avatr 11’ வாகனங்களை இலங்கைக்கு விநியோகிக்கும் Evolution Auto; ஆடம்பர மின்சார வாகனப் போக்குவரத்தின் மைல்கல்Evolution Aut...
13/10/2025

‘Avatr 11’ வாகனங்களை இலங்கைக்கு விநியோகிக்கும் Evolution Auto; ஆடம்பர மின்சார வாகனப் போக்குவரத்தின் மைல்கல்

Evolution Auto (Pvt) Ltd நிறுவனம், இலங்கையில் Avatr நிறுவனத்தின் பிரத்தியேகமான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக உள்ளது. இந்நிறுவனம், அதன் பல்வகை வர்த்தகநாம விற்பனைக்குப் பிந்தைய வளாகத்தில் (Multi-Brand After Sales Complex), முதல் மூன்று ‘Avatr 11’ வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு அண்மையில் வழங்கியதன் மூலம் ஒரு வரலாற்று மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது. இந்த வளாகம் பேலியகொடையில், பிரபல Porsche காட்சியறைக்கு அருகில் அமைந்துள்ளது.

Read More : https://bizinsights.lk/avatr-11-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/

Address


Alerts

Be the first to know and let us send you an email when Biz Insights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share