ZAM News

ZAM News இலங்கையின் நாளாந்த செய்தித்தாள்களு?

08/11/2024
06/03/2024

அகில இலங்கை சேவைகளுக்குக்காக 2023 இல் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை முடிவுகள் பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.results.exams.gov.lk/viewresultsforexam.htm

21/11/2023

வரவு செலவுத்திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 45 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

08/07/2023
பிறை தென்பட்டது: உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2023 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை சனிக் கிழமை இ...
21/04/2023

பிறை தென்பட்டது:

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2023 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை சனிக் கிழமை இரவு ஹிஜ்ரி 1444 ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.

அவ்வகையில், 2023 சனிக்கிழமை 22 ஆம் திகதி ஹிஜ்ரி 1444 ஷவ்வால் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.

නවසඳ දිස්විය

හිලාල් අනුකමිටුවල වාර්තාවන්ට අනුව, හිජ්රි 1444 ෂව්වාල් මාසයේ හිලාල් (නවසඳ) 2023 අප්‍රේල් මස 21 වැනි සිකුරාදා දිස්විය.

කොළඹ මහපල්ලිය, සමස්ත ලංකා ඉස්ලාම් ආගමික විද්වතුන්ගේ සභාවේ හිලාල් අංශය හා මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව 1444 ෂව්වාල් මාසයේ පළමු දින අප්‍රේල් 22 වැනිදා බවට ඒකමතිකව ප්‍රකාශ කරන්නේය.

HILAAL SIGHTED:

The Hilaal (Crescent) of the Month of Shawwaal 1444 AH, was sighted on Friday, 21st of April 2023, as per the reports of the Hilaal Subcommittees appointed around the country.

The Colombo Grand Mosque, ACJU Hilaal Division and the Department of Muslim Religious and Cultural Affairs (DMRCA) unanimously declare that the 01st of Shawwaal 1444 is on the 22nd of April 2023.

ZAM Maths Academy இனால் நடாத்தப்படவிருக்கும் 2023 இல் க.பொ.த சா/த  பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான வினாத்தாள் வகுப...
05/02/2023

ZAM Maths Academy இனால் நடாத்தப்படவிருக்கும் 2023 இல் க.பொ.த சா/த பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான வினாத்தாள் வகுப்புக்கள்

அலகுரீதியாக கடந்த கால வினாக்களை உள்ளடக்கியதாக zoom தொழிநுட்பத்தின் ஊடாக முற்றிலும் PowerPoint and Smart Board தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி நடைபெறவிருக்கும் இவ்வகுப்பு எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.30 மணி தொடக்கம் 1.00 மணி வரை இடம்பெறும்.

8 வகுப்புகளுக்கு 500/- மட்டுமே அறவிடப்படும். கட்டணங்களை eZ Cash அல்லது வங்கி முறை மூலம் அனுப்பலாம். கட்டணம் அனுப்பும் விபரங்கள் வட்சப் ஊடாக வழங்கப்படும்.

எமது ZAM Maths Academy வட்சப் குழுவில் இணைந்து கொள்ள கீழ்வரும் லிங்க் கூடாக இணைந்து கொள்ள முடியும்.

மேலதிக தகவல்களை 0772240822 என்ற எண்ணுக்கு மாணவர் பெயர், பாடசாலை, மாவட்டம் என்பதை வட்சப் ஊடாக அனுப்புவதன் மூலம் இணைந்து கொள்ள முடியும்.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு நாளை (2022.12.09) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகின்றது.கல்வியமைச்சு
08/12/2022

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு நாளை (2022.12.09) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகின்றது.
கல்வியமைச்சு

எரிபொருள் விலை குறைப்பு.2022.10.17இன்று 9.00 pm முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. பெற்றோல் ...
17/10/2022

எரிபொருள் விலை குறைப்பு.
2022.10.17

இன்று 9.00 pm முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் விலை
Octane-92 40/- குறைவு (புதிய விலை 370/-)
Auto Diesel 15/- குறைவு (புதிய விலை 415/-)

- கல்முனை அல் பஹ்றியா மாணவர்கள் வரலாற்று சாதனை - யு.எல்.அலி. ஜமாயில்அண்மையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட ...
16/10/2022

- கல்முனை அல் பஹ்றியா மாணவர்கள் வரலாற்று சாதனை -

யு.எல்.அலி. ஜமாயில்

அண்மையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்கள் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளனர். 80 M தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் செல்வன். MM றிஹான் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கதையும், பெண்களுக்கான 80 M தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் செல்வி MNF ஸஜா முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கதையும் சுவீகரித்துக்கொண்டனர். மேலும், 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான அஞ்சலோட்டப்போட்டியில் செல்வி. MSF. ஸும்றா, MNF. ஸஜா, JF. லுபாப், NF. மின்ஹா உள்ளிட்ட குழுவினர் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தேசிய மட்ட போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது பாடசாலை வரலாற்றில் சாதனைக்குரிய மைல்கல்லாகும். இந்த வெற்றியாளர்களுக்கு உறுதுணையாக பயிற்சிகளை வழங்கிய, உடற்கல்வி ஆசிரியர்களான MH. பழீல், UL ஸிபான் ஆகியோரும், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான, MAM. றியால், AWM. அஸாட்கான், JA. அல் அஸ்ரார் ஆகியோருக்கு பல தரப்பினரும் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிக்கின்றனர். மேலும், இவர்களுக்கு பல வழிகளிலும் வழிகாட்டல்களையும் உதவிகளையும் பாடசாலையின் அதிபர் MSM. பைஷால் அவர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியாளர்களையும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், பக்க பலமாயிருந்த அதிபர் மற்றும் பிரதி அதிபர்களை நகர வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்று வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதன் போது, பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கம், நலன் விரும்பிகள், பள்ளிவாயல் நிர்வாகங்கள், விளையாட்டு கழகங்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், தனவந்தர்கள், பெற்றோர், பிரதேசத்தின் ஏனைய பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் வலயக் கல்விப்பணிமனை அதிகாரிகள் , சாதனையாளர்களை கெளரவித்து பரிசில்கள் வழங்கி பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலை குறைப்பு.2022.10.01இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிபெட்கொ நிறுவனம் ஒக்டேன் 92 மற்றும் 95 ர...
01/10/2022

எரிபொருள் விலை குறைப்பு.
2022.10.01

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிபெட்கொ நிறுவனம் ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோல்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 40 ஆல் குறைக்கப்பட்டு புதிய ரூபா 410 ஆக விற்பனை செய்யபடும் எனவும் ஒக்டேன் 95 மற்றும் யூரோ 4 ரக பெற்றோலின் 30 ஆல் குறைக்கப்பட்டு புதிய விலை ரூப 510 ஆக விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் ஏனையவற்றின் விலைகளில் மாற்றமில்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் உலக சிறுவர் மற்றும் முதியோர் தின செய்தி2022.10.01சமகால சமூகத்தில் வாழும் பெரியவர்களான நாம் அணுகக்கூடிய உலகம...
30/09/2022

ஜனாதிபதியின் உலக சிறுவர் மற்றும் முதியோர் தின செய்தி
2022.10.01

சமகால சமூகத்தில் வாழும் பெரியவர்களான நாம் அணுகக்கூடிய உலகம் அல்ல சிறுவர்களின் உலகம். அது மிகவும் எளிமையானது. அவர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். பெரியவர்களாகிய நாம் இதை புத்திசாலித்தனமாக புரிந்துகொண்டு அவர்களுக்கான உன்னதமான உலகத்தை உருவாக்க வேண்டும்.
இற்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர், சிறுவர்கள் வாழ்ந்த சமூகப் பின்னணியில் இருந்து தற்போதைய சமூகப் பின்னணி மிகவும் வித்தியாசமானது என்பது தெளிவாகிறது. இத்தகைய பின்னணியில், நாட்டின் அனைத்து சிறுவர்களுக்கும் சரியான அளவு கலோரி அடங்கிய ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரச தலைவர் என்ற வகையில் எனது கடமையாகும்.

நாட்டின் தற்போதைய தலைமுறைக்கு போஷாக்கான உணவை வழங்குவதும், எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதுமே இத்தருணத்தில் எனது நோக்கமாகும்.

நான் முன்வைத்த கொள்கை அறிக்கையின் பிரகாரம், ஏழை மற்றும் வசதி குறைந்தவர்களைப் பராமரிப்பதற்குத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாடசாலை மாணவர்களுக்கு நிறை உணவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக 1,080,000 பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவாக போஷாக்குள்ள நிறை உணவு வழங்
கும் பணிகள் நடைபெற்று வருகிறன. இது சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து நிபுணர்களின் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமாகும். அதேபோன்று, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக, உணவுப் பாதுகாப்பு இல்லாத குடும்பங்களுக்கும் மேலதிக கொடுப்பனவு மற்றும் மாதாந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சிறுவர்களின் அழகிய குழந்தைப் பருவத்தையும், நமது நாட்டின் வளர்ச்சிக்காக அளவில்லா தியாகங்களைச் செய்த முதியோர் சமூகத்தையும் பராமரிப்பது நமது கடமையாகும். அது நமது கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. உணவு, கல்வி, விளையாட்டு, அழகியல், ஓய்வு, உறக்கம், மனநலம், உடல் ஆரோக்கியம் போன்றவை சிறுவர்களின் தேவைகளில்
சிலவாகும். அவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் கலாசார ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கடமைப்பட்டுள்ளோம். அவர்களின் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்றுவது, அரசாங்கத்தைத் தவிர பெற்றோர், ஆசிரியர் மற்றும் சிவில் அமைப்புகளின் பொறுப்பாக நான் கருதுகிறேன்.
அனைத்து சிறுவர்களையும் முதியவர்களையும் நம் அன்புக்குரியவர்களாக கருதி, அவர்களை அன்புடன் பராமரிக்கும் ஒரு சகாப்தத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதிபூணுவோம்.

ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு.

அவசர நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான தேவைகளை அடையாளம் காண்பது குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.(பிராந்திய செய்தியாளர்)எமத...
30/09/2022

அவசர நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான தேவைகளை அடையாளம் காண்பது குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

(பிராந்திய செய்தியாளர்)

எமது நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை கையாள்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களில் பொருத்தமான திட்டங்களைக் கண்டறிவதற்கான ஆலோசனை செயலமர்வானது இறக்காமம் பிரதேச சபையில், UNDP அணுசரனையில் பிரதேச சபை செயலாளர் எல்.எம். இர்பான் அவர்களின் ஏற்பாட்டில் இன்று 2022.09.29 ஆம் திகதி வியாழக் கிழமை பிரதேச சபை கேட்போர் கூடத்தில்
இடம்பெற்றது.

கௌரவ தவிசாளர் எம்.எஸ். ஜமீல் காரியப்பர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு கமல் நித்மினி பிரதம அதிதியாகவும் செயலமர்வின் சிறப்பு வளவாளராகவும் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வின் விஷேட விருந்தினர்களாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களான திருமதி பாஹிமா மற்றும் நிர்மலா, Asia Foundation செயற்திட்ட உத்தியோகத்தர் ஏ.ஜவாஹிர் ஆகியோர் கலந்துகொண்டார்.

01. உள்ளுர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துதல்

02. உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்

03. உள்ளுாராட்சி மன்றங்களின் சேவைகளை மேம்படுத்துதல்

மேலே குறிப்பிட்டுள்ள அவசரகால நெருக்கடி நிலையில் இருந்து மீளும் வகையில் அதற்கு பங்களிப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் அல்லது திட்டங்களின் பட்டியலை, பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இனம்காணப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட வேலைத்திட்டங்களை தெரிவு செய்யப்பட்ட துறைசார் திட்டமிடல் குழுவுடன் இணைந்து முன்னுரிமைப்படுத்தல் மற்றும் சாத்தியப்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு " உள்ளுர் மேம்பாட்டு ஆதரவு திட்டத்தின் " ( LDSP ) கீழ் வழங்கப்படும் நிதியைப் பயன்படுத்தி தெரிவு செய்யப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்கான நிதி நவம்பர் 2022 மாதப் பகுதில் " உள்ளூராட்சி மேம்பாட்டு ஆதரவு திட்டத்தின் " (LDSP Project) கீழ் 14-35 மில்லியன் ரூபாய் வரையான நிதியை இறக்காமம் பிரதேச சபை பெற தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டப் போட்டியில் இறக்காமம் பிரதேச சபை அம்பாரை மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும் கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களில் 100 புள்ளிகளைப் பெற்ற 05 சபைகளுள் ஒன்றாகவும் தெரிவு செய்யப்பட்டு 17 மில்லியன் ரூபாவினை பரிசாகப் பெற்று அதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும் இச்செயலமர்வில், கணக்காளர் திருமதி றிம்ஷியா அர்சாட், ஆயுர்வேத வைத்திய பொறுப்பதிகாரி Dr. எம்.ஐ.எம். நிஜாமுடீன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார் ஆகியோர் உட்பட அம்பாரை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், சமுதாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், துறைசார் நிபுனர்கள் மற்றும் சனசமூக பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

முழுநாள் செயலமர்வாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் தெரிவு செய்யப்படும் 14 வேலைத்திட்டங்களுக்கு உள்ளூராட்சி மேம்பாட்டு ஆதரவு திட்டம்" (LDSP Project) இன் நிதிப் பங்களிப்புடன் செயற்படுத்தப் படவுள்ளது.

Address


Telephone

+94772240822

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZAM News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ZAM News:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share