11/01/2025
☑️பேனா துளிகள்'யின் 06வது சஞ்சிகைக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன!
🔰இதழ்: அச்சு இதழ்
🔰வகை: காலாண்டு இதழ்
🔰காலம்: ஜனவரி - மார்ச்
🔰ஆண்டு: 2025
உங்களது ஆக்கங்கள் யாவும் கீழ்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதை கவனத்திற் கொள்க, அதனால் முழுமையாக மற்றும் தெளிவாக வாசியுங்கள்:
01: கீழ்வரும் வகைகளை சார்ந்த உங்களது சொந்த ஆக்கங்களை எமக்கு அனுப்பி வைக்க முடியும்.
🖇️கலை மற்றும் இலக்கியம்
🖇️சமயம் சார்ந்த ஆக்கபூர்வமான ஆக்கங்கள்
🖇️நிகழ்கால பிரச்சினைகள் மற்றும் சமூக கட்டுரைகள்
🖇️வாழ்க்கை முறைகள் மற்றும் ஆரோக்கியம்
🖇️இலங்கை மற்றும் உலக வரலாறு
🖇️பழமொழிகள் மற்றும் பாரம்பரியங்கள்
🖇️உலகலாவிய விளையாட்டுகள் பற்றிய உங்களது பார்வை நகைச்சுவை அம்சங்கள்
🖇️இளைய தலைமுறைக்கு பயனுள்ள தகவல்கள்
🖇️நகைச்சுவை மற்றும் சுயவிவரங்கள்
🖇️கவிதைகள், கட்டுரைகள், ஓவியங்கங்கள், பேனா துளிகள் பற்றிய வாசகர்களின் (உங்களுடைய) கருத்துப் பகிர்வுகள்
02: ஆண் - பெண் சார்ந்த காதல் ஆக்கங்கள் முற்றாக தடை. உங்களது ஆக்கம் ஆக்கபூர்வமானதாகவும் சமூகத்திற்கு ஏதாவது ஒரு விடயத்தை கூற முனையும் கருப்பொருளை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
03: சஞ்சிகைக்கு அனுப்பும் ஆக்கம் இதற்கு முன்னர் சமூக வளைத்தளங்களிலோ, வேறு பத்திரிகைகளிலோ எங்கும் பகிரப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பின் அத்தகைய ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளபடாது.
04: பிறரது கருத்துக்களையோ அல்லது பிறரது படைப்புகளையோ உங்களது பெயரில் அனுப்பும் பட்சத்தில் அத்தகைய ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
05: பேனா துளிகள் வட்ஸப் குழுமத்தில் இல்லாதவர்களின் ஆக்கங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
06: தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் - மும்மொழியிலும் எழுதி அனுப்ப முடியும்.
07: உங்களது ஆக்கங்களை 31.01.2025 க்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு பின்னர் அனுப்பப்டும் ஆக்கங்கள் நிராகிக்கப்படும்.
08: "சஞ்சிகைக்கான ஆக்கம்" என்று தெளிவாக குறிப்பிட்டு, உங்களது பெயர் மற்றும் ஊர் என்பவற்றை அனுப்பி வைக்கவும்.
09: ஆக்கங்கள் யாவும் +94 75 805 5139 எனும் பேனா துளிகள்'யின் உத்தியோகபூர்வ WhatsApp இலக்கத்திற்கு மாத்திரம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
10: இயலுமான வரை எழுத்துப் பிழைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
☑️குறிப்பு - எமது WhatsApp குழுமத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் கீழுள்ள Google Form யினை நிரப்புவதினூடாக இணைந்து கொள்ள முடியும்:
https://bit.ly/3ZxfeSf
-பேனா துளிகள் நிர்வாகம்-