World Media

World Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from World Media, Media/News Company, .

04/09/2025

Sheza - மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக் கொள்ள அழையுங்கள் - 0767778006

உங்களுக்கு தேவையான வீட்டு உபகரண பொருட்கள், பீங்கான், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இதர சமையலறை பொருட்கள் கிளாஸ் வகைகள், பிளாஸ்டிக் வாளிகள் அது போன்று சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள நம்பிக்கையான ஒரே இடம் சேஷா கல்முனை நம்பத் தகுந்த தரமான பொருட்களை ஒரே கூரையின் கீழ் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக் கொள்ள
இன்றே வாருங்கள் - கல்முனை சாய்ந்தமருது பிரதான வீதியில் மயோன் மாவத்தைக்கு அருகாமையில் பிரதான வீதியில் காட்சி தருகிறது.

தொடர்புகளுக்கு -
0767778006

கச்சதீவு தேவாலயத்துக்கு அண்மையில் உள்ள கடற்படை முகாமின் திறந்தவெளி உணவக மேசையில் அமர்ந்திருப்பது - கச்சதீவுக்கு விஜயம் ச...
02/09/2025

கச்சதீவு தேவாலயத்துக்கு அண்மையில் உள்ள கடற்படை முகாமின் திறந்தவெளி உணவக மேசையில் அமர்ந்திருப்பது - கச்சதீவுக்கு விஜயம் செய்த முதலாவது இலங்கை ஜனாதிபதி.

கச்சதீவை இலங்கைக்கு சொந்தமாக்கிய 1974ம் ஆண்டுக்கு பின்னர் வந்த 09 ஜனாதிபதிகளில் எவரும் கச்சதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருக்கவில்லை.

அதற்கான ஆவணங்களோ, செய்திகளோ கடந்தகாலத்தில் இல்லை என்பதே அதன் அர்த்தம். தனிப்பட்ட விஜயங்களாக செய்திருக்கவும் வாய்ப்புகள் அரிதாகவே தெரிகிறது.

1974 - 2025: கச்சதீவு மீட்பு பற்றி இடைவிடாத சூடான விவாதங்கள் இந்தியாவில் இடம்பெற்றே வந்தன.

இப்படியிருக்க, 2025 ஆகஸ்டில் இந்தியாவின் மதுரை மாநாட்டில் விஜய் கச்சதீவை மீட்க முடியுமா என மோடியை கேட்க, அதிலிருந்து மீண்டும் விடயம் பேசுபொருளாக - தன் தேச எல்லையில் தனது காலடியை - முதலாவது ஜனாதிபதியாக வைத்துள்ளார் அநுர.

மோடி, எவ்வாறு இந்தியாவின் நான்கு திசை எல்லைகளுக்கும் சென்றாரோ அதே போன்ற அணுகுமுறையாக இதை கவனிக்க வேண்டும்.

இந்த காலடி, தீவிர தேசியவாத கொள்கையுடைய - நாட்டை பிளவுபடுத்தவோ தாரைவார்க்கவோ விரும்பாத தரப்புகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒரு பாய்ச்சல்.

பாதாளத்தை வேட்டையாடியஉயர்பொலிஸ் அத்தியட்சகர்யார் இந்த ஓலுகல 01 Sep 2025 இரத்தம் சிந்தாமல் ஜகார்தாவில் பாதாளத்தை வேட்டையா...
01/09/2025

பாதாளத்தை வேட்டையாடிய
உயர்பொலிஸ் அத்தியட்சகர்யார் இந்த ஓலுகல

01 Sep 2025 இரத்தம் சிந்தாமல் ஜகார்தாவில் பாதாளத்தை வேட்டையாடி
மண்டியிடச் செய்த பொலீஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுக்கல

இலங்கையை கொலை கலாசாரத்தால் ஆட்டிப் படைத்த பாதாளத்தின்
6 பிரபலங்களை ஒரே தாவலில்
இரத்தம் சிந்தாமல் மண்டியிடச் செய்து இரண்டு உயர் பொலீஸ் அதிகாரிகள் ஜகார்த்தாவில் மேற்கொண்ட துணிகர
செயற்பாடு பரவலாக பேசப்படுகிறது

இவர்களில் ஒருவர் தான் சுமார் 20
ஆண்டுகளுக்கு முன் இரத்தினபுரி மாவட்ட போலீஸ் அத்தியட்சகராக
கடமையாற்றிய றொஹான் ஓலுகல
என்ற நேர்மையான போலீஸ் அதிகாரி

இவர் பெயர் கேட்டாலே இப்பகுதியில் குற்றவாளிகளை குலை நடுங்க வைத்த
பணத்துக்கோ பதவிகளுக்கோ
விலை போகாத நேர்மையான போலீஸ்
அதிகாரியாக பிரபலமானவர்

அக்காலப் பகுதி சிங்கள
தமிழ் ஊடக நண்பர்களுடன்
மிகவும் தீவிரமாக களத்தில் இறங்கி
போலீஸ் நீதிமன்றம் அரசியல் தரப்புகளுடன் என உயிர் துடிப்புடன்
ஊடகப் பணியாற்றிய காலம் அது

உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கலாம்
இலங்கையில் கிரீஸ் மனித நாடகம் அரங்கேறிய காலம் இக்காலப்பகுதியில்
தான் இரத்தினபுரி மாவட்ட காவத்தை கொட்டகெதன என்ற குட்டிக் கிராமத்தில்
18 உயிர்கள் தொடராக மர்மமாக இரவிரவாக கொல்லப்பட்டு வந்தனர்

அனைத்து தமிழ் தேசிய ஊடகங்களிலும்
செய்திகள் முதற் பக்கத்தில்
தலைப்புச் செய்திகளாக வெளிவந்தன

இப்போது விடயத்துக்கு வருகிறோம்

2008 ஆம் ஆண்டு அது மூன்று இரட்டைக் கொலைகள் அடங்கலான 18 கொலைகள் இடம் பெற்றன 2015.8.28 அன்று காவத்தை ஓபாவத்தையில் இடம் பெற்ற தமிழ் பெண் தொழிலாளியின் மரணமும் இதில் அடங்கும் கொல்லப்பட்டவர்கள் 19 முதல் 85 வயதுடையவர்கள் ஒரு தாயின் மகளின் கொலையும் இதில் அடங்கும்

இந்த மர்மக் கொலைகள் அனைத்தின் சூத்திரதாரிகளையும் தனது திறமையான புலனாய்வு மற்றும்
தீட்சன்ய புத்தியால் கொலைகாரர்களை
இனங்கண்டு குற்றவாளி கூண்டில் ஏற்றி உரிய இடத்துக்கு அனுப்பியவர்
தான் இந்த ஓலுகல என்ற
விலை போகாத பொலீஸ் அதிகாரி

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் ஊடகவியலாளர்களுடன் மிகவும் அந்நியோன்னியமாக நெருங்கி பழகியவர் தகவல்களை நேரடியாக
அவரே வழங்கி ஒத்துழைத்தவர்

தற்பெருமை கர்வம் இன மத பேதம் அற்றவர் இன
நல்லறவுக்காக பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து முன்மாதிரியான
அதிகாரியாகச் செயற்பட்டவர்

அன்று இவரிடம் காணப்பப்பட்ட
நேர்மை துணிச்சல்
திறமைகள் நிச்சயமாக இவர் நாட்டில் ஒரு சிறந்த பொலீஸ் அதிகாரியாக மிளிர்வார் என்ற நம்பிக்கை மக்கள் அனைவரிலும் இருந்தது

அவரது இந்த துணிச்சலான முயற்சி உண்மையில் மன மகிழ்ச்சி தருகிறது
ஏனெனில் அவர் ஒரு நேர்மையான
தூய்மையான அதிகாரியாக செயல்பட்டவர் என்பதை நன்கறிவேன்

இப்பணியில் ஈடுபட்ட
மற்றைய அதிகாரிக்கும்
பாராட்டுக்களை
வழங்குவதில்
மகிழ்ச்சி அடைகிறோம்

யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் மற்றும் திறப்பு விழாக்கள் என்பவற்றில் பின்ன...
01/09/2025

யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் மற்றும் திறப்பு விழாக்கள் என்பவற்றில் பின்னர் இன்று (01) . யாழ் கச்சதீவிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க மேற்கொண்டார்..

Vacancy Abu Dhabi...Call: 0757453232
01/09/2025

Vacancy Abu Dhabi...
Call: 0757453232

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் உயர்பீடக் கூட்டம்சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் உயர்பீடக் கூட்டம் போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ...
14/08/2025

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் உயர்பீடக் கூட்டம்

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் உயர்பீடக் கூட்டம் போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் JP தலைமையில் நேற்று (13) அட்டாளைச்சேனைAL HAZM BEACH VILLA & RESORT இல் இடம்பெற்றது.

உயர்பீட உறுப்பிர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில் போரத்தினால் இம்மாதம் இறுதி காலப்பகுதியில் நடாத்தவுள்ள விருது விழா தொடர்பில் மிக முக்கியமான தீர்மானங்களும் இக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இளம் ஊடகவியலாளருக்கு கிழக்கு இளைஞர் அமைப்பின் கௌரவிப்பு.கிழக்கு இளைஞர் அமைப்பினரால், சிறந்த இளம் ஊடகவியலாளராக மருதமுனைச்...
14/08/2025

இளம் ஊடகவியலாளருக்கு கிழக்கு இளைஞர் அமைப்பின் கௌரவிப்பு.

கிழக்கு இளைஞர் அமைப்பினரால், சிறந்த இளம் ஊடகவியலாளராக மருதமுனைச் சேர்ந்த மற்றும் TM News ஊடகவியலாளராக பணியாற்றும் ஹஸீனூல் கமாஸ் நேற்று (12.08.2025) கௌரவிக்கப்பட்டார்.
இவ்விழாவில் அவருக்கு நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டு, ஊடகத் துறையில் அவர் செலுத்தி வரும் பங்களிப்பு பாராட்டப்பட்டது.

35 வது ஷுஹதாக்கள் நினைவு தினம் - ஏறாவூர்.1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி, ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில், தமிழீழ வி...
13/08/2025

35 வது ஷுஹதாக்கள் நினைவு தினம் - ஏறாவூர்.

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி, ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளால் 121 முஸ்லிம்கள் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம், இலங்கை வரலாற்றில் அழியாத கரும்புள்ளியாகவும், பாதிக்கப்பட்ட எங்கள் மனங்களில் ஆறாத வடுவாகவும் இருந்து வருகிறது.

அல்லாஹ் அந்த சுஹதாக்களை பொருந்திக்கொள்ளட்டும். அவர்களுக்கு சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்கட்டும்... 🤲

-- கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

இப்போது உலகெங்கும் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான புற்றுநோய்களை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அவற்றை குணப்...
13/08/2025

இப்போது உலகெங்கும் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான புற்றுநோய்களை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அவற்றை குணப்படுத்துவது இலகு. நம் உடல் சொல்வதை கேட்காது அறிகுறிகளை அலட்சியம் செய்துவிட்டு இது சும்மா ஏதோ என்று இருந்தியள் பிறகு உங்களோட சேர்த்து உங்களுடன் இருப்பவர்க்கும் தொல்லை🙏

எனவே கீழ்க் கண்ட அறிகுறிகள் இருந்தால் தயவு செய்து வைத்தியரை நாடுங்கள். சிலவேளை அவை வேறு காரணங்களுக்காகவும் இருக்கலாம் ஆனால் பரிசோதிப்பது நல்லது. ஆகவே கீழ்கண்ட அறிகுறிகளில் கவனம் செலுத்துங்கள்.


1. காரணமில்லாத எடை குறைவு

உணவு மாற்றமில்லாமல் உடல் எடை திடீரென குறைவது.

2. எப்போதும் சோர்வு

சாதாரண ஓய்வுக்குப் பிறகும் சோர்வு நீடித்தால், இது உடல் நோயுடன் போராடிக்கொண்டு இருக்ப்பதற்கான அகுறியாக இருக்கும்.

3. உடல் சூடாக இருத்தல் / காய்ச்சல்

வழக்கமான தொற்று இல்லாமல் நீண்டநாள் காய்ச்சல் தொடர்ந்தால், இது உடல் நோய் எதிர்ப்பு சக்தியுடன் தொடர்புடையது.

4. இரவு வியர்வை அதிகரிப்பு

அதிரடியாக இரவில் அதிக வியர்வை அது உடல் செயல்பாடு மாற்றத்தை அறிவிக்கும்.

5. உடலில் புதிய புண்கள் அல்லது கட்டிகள்

உடலில் புதிதாக புண்கள் அல்லது கட்டிகள் கண்டால் கவனம் தேவை.

6. தோலில் மாற்றங்கள்

தோலில் ஏற்படும் அசாதாரணமான மாற்றம்

7. நீண்டநாள் சளி அல்லது குரல் மாறுதல்

3 வாரத்திற்கு மேல் தொடரும் சளி, காது குரல் மாறுதல், சளி, தொடர் இருமல், இருமலுடன் இரத்தம் வந்தால் கவனம் தேவை.

8. உணவை விழுங்கும்போது கடினமான உணர்வு

விழுங்கும் போது வலி அல்லது இடர்பாடு இருந்தால் கவனம் தேவை

9. குடல் அல்லது சிறுநீரக பழக்கம் மாறுதல்

திடீரென மலச்சிக்கல், வாயு வெளியேறல், சிறுநீர் மாற்றங்கள் ஏற்பட்டால், உடல் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

10. காரணமில்லாத இரத்த வெளியேற்றம்.

மூக்ககில் இரத்தம், மலத்தில் இரத்தம், சிறுநீரில் இரத்தம் அல்லது உடலில் எளிதில் காயம் வருதல் கவனிக்க வேண்டும்.

11. நீண்டநாள் வலி அல்லது வீக்கம்

உடல் ஒரு பகுதியிலும் தொடர்ச்சியான வலி இருந்தால், அது பாதிக்கப்பட்ட அணுக்களை குறிக்கலாம். வீக்கம் பக்க விளைவை குறிக்கும்.

12. கழுத்து, கை இடுக்கில் ,இடுப்பில், கவட்டில் கட்டிகள்

இந்த இடங்களில் ஏற்படும் lumps பெரும்பாலும் லிம்ப் சுருக்குகளின் வீக்கம் அல்லது growth ஆக இருக்கலாம்.

13. மூச்சு விடுவது கடினம்

மூச்சு திணறல், சுவாச பிரச்சனை நோய் இருப்பதைக் குறிக்கும்.

14. பசி குறைவு

திடீரென அதிக நாள்களுக்கு பசியில்லாமல் இருப்பதும் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

15. குடல் பிரச்சனை அல்லது வயிற்று வலி

நீண்டநாள் நீர் விழுங்கும் போது சளி, குமட்டல், வயிற்றுப்பிணி போன்றவை ஏற்பட்டால் கவனிக்க வேண்டும்.

16. குரல் அல்லது பேச்சு மாறுதல்

திடீரென குரல் மாறுதல், பேசுவதில் சிரமம் இருந்தால், இது வாய்மூலம் அல்லது சுவாச பாதையில் பிரச்சனையாக இருக்கலாம்.

17. நீண்டநாள் தலைவலி

தாங்க முடியாத தலைவலி, கண்கள் மங்கல் போன்றவை கண்ணை அல்லது மூளை பாதிப்பைக் குறிக்கலாம்.

18. காரணம் இல்லாத தசை பலவீனம்

திடீரென தசைகள் பலவீனமானால்.

19. இரவில் கால்கள் வலி அல்லது மாற்றம்.

கால்கள் வலி அல்லது கால் வீக்கம் அதிகமாக இருந்தால், நரம்பு பிரச்சனைக்கான அறிகுறி

20. மயக்கம், திடீரென தூக்கம், உடல்நிலை தளம்பல்

இப்படி அறிகுறி அல்லது சந்தேகமும் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுதல் சிறந்தது.

உது DCC meetings போனதால வருகுது இல்லை அந்த videos பாத்ததால இருக்குமோ என்றோ, அல்லது மனைவி என்ர phone ஐ பார்க்கிறா அதால, அல்லது மனைவிக்கு பயந்து எனக்கு இப்படி வருகுது அதுவுமில்லை அர்ச்சுனா எம்பி, ADK, சுமி, சேகர் மாமா இவையின்ர பேச்சை கேட்டு வருகுது, இல்லை புலித்தலைவருக்கு விளக்கேத்தினதை யோசிச்சு வருகுது, இல்ல கனடா தமிழ் அமைப்புகளை நினைத்து வருகுது, அதுவும் இல்லை தவாவின்ர facebook பார்க்கிறதால வருகுது என்று கவனிக்காமல் விட்டியள் பிறகு அது வில்லங்கத்துல கொண்டுபோய் விடும்

வாழ்க நலமுடனும் வளமுடனும்

சவூதியின் இரு தேச தீர்வு முயற்சி : நம்பிக்கையா? ஏமாற்றமா?எம்.என்.எம்.யஸீர் அறபாத் – ஓட்டமாவடி.பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடா...
12/08/2025

சவூதியின் இரு தேச தீர்வு முயற்சி : நம்பிக்கையா? ஏமாற்றமா?

எம்.என்.எம்.யஸீர் அறபாத் – ஓட்டமாவடி.

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் ஆக்கிரமிப்பும் அவலமும் மனிதப்பேரழிவும் உலகளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பையும் மக்கள் போராட்டத்தையும் சந்தித்து வரும் அதே வேளை, இஸ்ரேலிலும் மனிதாபிமானமுள்ள மக்கள் மத்தியில் நெத்தன்யாஹு அரசின் மீது அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளதுடன், மனிதக்கொலைகளால் உள்நாட்டிலும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார். அத்துடன், உலக சமாதானத்தைச்சீர்குலைக்கும் செயற்பாடாகவும் இருந்து வருகின்றது.

இம்மனிதகுல பேரவலத்தை நிறைவுக்கு கொண்டு வர வேண்டுமென உலகின் பல்வேறு அரபு, மேற்குல நாடுகள் முயற்சியின் பின்னணியில் சவூதி அரேபியாவும் அதன் தலைமையிலான அரபு உலகமும் இரு தேச தீர்வு (Two-State Solution) எனப்படும் வழி மூலம் இச்சிக்கலை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றது.

இரு தேச தீர்வு (Two-State Solution) என்ற கருத்தை முதன்முதலில் 1937ம் ஆண்டு பிரித்தானிய
அரசின் பீல் ஆணைக்குழு முன்மொழிந்தது. இதனை முதல் சர்வதேசளவிலான அதிகாரபூர்வ திட்டமாக 1947ல் ஐ.நா பொதுச்சபை தீர்மானம் (181) கொண்டு வரப்பட்டது.

இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தரப்பால் இரு தேச தீர்வு (Two-State Solution) திட்டம் முன்வைக்கப்பட்டாலும் உள்ளக முரண்பாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அந்த வகையில், சவூதி அரேபியாவின் இரு தேச தீர்வு (Two-State Solution) திட்டமான தற்போதைய யோசனை என்பது புதிதாகத்தோன்றியதல்ல. இது 2002ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட அரபு சமாதான முன்மொழிவு (Arab Peace Initiative) என்பது தான் இத்திட்டத்தின் அடிப்படையாகும்.

சவூதி அரேபியா தலைமையிலான இந்த யோசனையானது 1967ம் ஆண்டைய எல்லைகளுக்குள் கிழக்கு ஜெரூசலாமை தலைநகராகக்கொண்டு சுயாட்சி பாலஸ்தீன அரசை ஏனைய நாடுகளின் ஆதரவுடன் நிறுவும் திட்டமாகும்.

தற்போது சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் மன்னரின் ஆலோசகராக முக்கிய பொறுப்புகளை ஏற்றுச் செயற்படும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் உட்பட அரச உயர் மட்டத்தினர் பலஸ்தீனத்திற்கு தீர்வு வேண்டி இரு பக்கத்தினருடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் தொடர்ந்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறான சவூதியின் முயற்சியின் பலனாக இத்திட்டத்திற்கு ஐநா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. இவையனைத்தும் அமைதியை அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

இத்திட்டத்தை இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு தலைமையில் கடுமையான வலதுசாரி அரசு பலஸ்தீன அரசு ஒழுங்குபடுத்தப்படாதது. ஹமாஸ் போன்ற இயக்கங்கள் பயங்கரவாதப் பின்னணியில் இருப்பதான காரணங்களை முன்வைத்து இரு தேச தீர்வைத்தள்ளிப்போடுகிறார்கள்.

மேலும், பலஸ்தீனம் தனி நாடாக உருவாவது தங்களது நாட்டுக்கு ஆபத்து என்ற அடிப்படையிலும் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

இவ்விடயத்தில், ஹமாஸ் அமைப்பின் நிலைமை மிகவும் மாறுபட்டது. அவர்கள் இஸ்ரேலின் நிலைப்பாட்டை முழுமையாக ஏற்கவில்லை. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் பலஸ்தீனத்தேசம் உருவாகுவதை ஏற்கும் வகையில் சில சமரசங்களை முன்வைத்துள்ளனர்.

எனினும், இஸ்ரேலின் காசா மீதான இராணுவத் தாக்குதல்கள் மற்றும் கணிசமான பாதுகாப்பு நிபந்தனைகள், ஹமாஸை தீர்வுக்குத்தயாராக மறுக்கும் சூழ்நிலைக்கே இட்டுச்செல்கின்றன.

இஸ்ரேலானது ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். காசா நெருங்க முடியாத பாதுகாப்பு பரப்பாக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்கின்றது. ஹமாஸ் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்விவகாரத்தில் பலஸ்தீனத்தின் நிலைப்பாடாக
பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பி.எல்.ஓ (PLO) அமைப்பு, இரு தேச தீர்வுக்கு ஆதரவளிக்கிறது.

அவர்கள் 1967 எல்லைகளை அடிப்படையாகக்கொண்டு, கிழக்கு ஜெரூசலேம் தலைநகராகும் ஒரு சுயாதீன தேசம் வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளனர். ஆனால், இஸ்ரேலின் குடியிருப்புப்போக்குகள், அமெரிக்காவின் அதிருப்தியான நடத்தை அவர்களின் நம்பிக்கையையே சீர்குலைக்கின்றன.

இவ்விடயத்தில் மேற்குலகத்தை நம்பலாமா?

கடந்த காலங்களில் நடைபெற்ற வரலாற்றுப்பிழைகள், இஸ்ரேலின் நலன்சார் நிலைப்பாடுகள், வணிக, பாதுகாப்பு நலன்கள் உள்ளிட்டவற்றால் மேற்குலகம் பலஸ்தீனத்திற்கு சீரான நீதியை வழங்குமென்பதில் பலரும் சந்தேகம் கொண்டுள்ளனர். “மேற்குலகம் கொடுக்கும் வாக்குறுதிகள், வார்த்தைகளாகவே மாறி விடக்கூடாது” என்ற கருத்தும் பலஸ்தீன ஆதரவாளர்களிடையே நிலவுகிறது.

இரு தேச தீர்வுத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் சாதகங்களாகப் பார்க்கும் போது, இரு தேச தீர்வு பலஸ்தீன மக்களுக்கு நீண்டநாள் எதிர்பார்த்த சுதந்திரத்தை வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

இஸ்லாமிய நாடுகளுக்கும் மேற்குலக நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேம்படும்.

இஸ்ரேல் 1967ம் ஆண்டு எல்லைக்குள் திரும்ப வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகின்றது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான மோதல்கள் குறையலாம்.

இவ்வாறான பல நன்மைகள் இத்திட்டத்தினூடாக ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இத்திட்டத்தீர்வு செயற்படுத்தப்பட முடியாமல் போனால், பலஸ்தீனர்கள் மற்றும் சுயாதீன பலஸ்தீனை விரும்பும் உலக மக்களும் மீண்டும் ஏமாற்றமடைவார்கள்.

இஸ்ரேலின் பாதுகாப்பு நிபந்தனைகள் பலஸ்தீனத்தின் முழுமையான சுதந்திரத்துக்கு தடையாக அமையலாம். ஹமாஸ் போன்ற அமைப்புகள் ஒதுக்கப்பட்டால், உள்நாட்டு முரண்பாடுகள் தீவிரமாகலாம் போன்ற இவ்வாறான பாதகங்களும் ஏற்படலாம்.

நீண்டு கொண்டு செல்லும் பலஸ்தீன, காசா போரையும் அதனால் ஏற்படும் அழிவுகளையும் தொடர்ந்தும் அனுமதிக்காது, ஊகங்கள், சந்தேகங்களை அடைப்படையாகக்கொண்டு இது சரி வருமா? இல்லையா? என்று விவாதம் செய்து காலத்தை கடத்தாது, இப்பிரச்சினைக்கு தீர்வாக இரு தேச தீர்வுத்திட்டத்தை சவூதி முன்வைத்திருப்பதை முன்மாதிரியான செயலாக பார்ப்பதோடு, இது தொடர்பான சவூதி அரேபியாவின் கடப்பாடு என்ன என்ற கேள்வுகளுக்கு பதிலை பின்வருமாறு பார்க்கலாம்.

சவூதி அரேபியா என்ற நாடு, ஒரே நேரத்தில் இஸ்லாமிய உலகத்தின் தலைமை பொறுப்பையும், மேற்குலகத்துடனான நட்பு நிலையையும் சமநிலைப்படுத்தும் கடினமான பணியை மேற்கொண்டு வருகிறது.

புனித ஹஜ்/உம்ரா கடமைகளுக்காகவும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவும் சவூதி உலகத்தில் நம்பிக்கை பெறும் நாடாகவே திகழ்கிறது.

இதற்கேற்ப, பலஸ்தீனத்திற்கு நீதி வழங்குவதில் முனைப்புடன் செயற்பட வேண்டியது சவூதியின் நீதி, சமாதானக்கடமை மட்டுமின்றி, மதப்பொறுப்பாகவும் இருக்கிறது.

பலஸ்தீனம் அதற்கான நியாயமான எல்லைகளோடு சுதந்திர நாடாக உருவாகும் வரை இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கப்போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாடோடு, இஸ்ரேல் தொடர்ந்து செய்து வரும் அட்டூழியங்களைக்கண்டித்தும் அதற்கெதிராக செயற்பட்டும் வருகிறது.

எனவே, இதுவொரு நம்பிக்கையின் சந்தர்ப்பமாக மாறுமா? அல்லது மீண்டும் ஏமாற்றத்தை தருமா? என்பது உலகம் எப்படி பதிலளிக்கிறது என்பதில் தான் இருக்கிறது.

உலக நாடுகள் இவ்விடயத்தில் அமெரிக்காவையோ இஸ்ரேலையோ பகைத்துக்கொண்டு பலஸ்தீனத்திற்கு தீர்வு வழங்க வேண்டிய எவ்விதத்தேவைகளும் இல்லாத நிலையில், பலஸ்தீனத்தில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு உலக நாடுகளில் வாழும் மக்களின் போராட்டங்களும் சற்று உலக நாடுகளை பலஸ்தீன விவகாரத்தில் திரும்பிப்பார்க்க வைத்தாலும், பலஸ்தீன பிரச்சினைக்குத்தீர்வு என்று வரும் போதும் சவூதி அரேபியாவின் தீர்வை ஆதரிப்பதால் சவூதியுடனான நட்பும் அதன் பயன்களும் தங்களுக்குத்தேவை என்ற அடிப்படையில் பல நாடுகள் இன்று பலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மனநிலைக்கு வந்திருப்பதைப் பார்க்கலாம்.

இவ்விவகாரத்தில் சவூதி அரேபியா தனது பங்களிப்பை முழுமையாக வழங்கி வரும் இந்நேரத்தில், உலக நாடுகளும் நீதியுடனும் மனமுடைந்த பலஸ்தீன மக்களது குரலுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகின்றது. உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதோடு, அவற்றின் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும் கடப்பாடு சவூதி அரேபியாவிற்கு இருக்கிறது.

சவூதி அரேபியாவின் தீர்வுத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் அரபுலகிலும் உலக நாடுகள் மத்தியிலும் பெரும் செல்வாக்குமிக்க பலமான நாடாக சவூதி மாறி விடுமென்பதால் சவூதியின் எதிரிகள் இத்தீர்வு வருவதை ஒரு போதும் விரும்பமாட்டார்கள்.

சவூதி அண்மையில் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களை நிறுத்த, சர்வதேச சமூகம் வலுவான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் பாலஸ்தீன மக்களைச்சூழ்ந்துள்ள மனிதப்பேரழிவை முடிவுக்கு கொண்டு வரலாம்” 1967ம் ஆண்டு எல்லைகளுக்குள் கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராகக் கொண்டு சுயாட்சி பாலஸ்தீன அரசை உருவாக்கும் இரு நாடு தீர்வே நீடித்த அமைதிக்கான ஒரே வழி” என உறுதியாகத்தெரிவித்துள்ளது.

இவற்றைத்தடுப்பதற்கான குழப்பங்களை ஏற்படுத்த தவறான கருத்துக்களையும் சந்தேகங்களையும் பரப்பும் வேலைகளை திட்டமிட்ட அடிப்படையில் எதிரிகள் செய்வார்கள். அண்மைக்காலமாக இவ்வாறான சில செயற்பாடுகளும் நடந்ததைப் பார்க்கலாம்.

எனவே, இரு தேச தீர்வு என்ற திட்டம் தொடர்பான விமர்சனங்கள், ஐயப்பாடுகள், ஊகங்களை விட்டுவிட்டு இறைவனிடம் இத்தீர்வு பலஸ்தீனத்திற்கான விடிவாக அமைய வேண்டுமென பிரார்த்தனை செய்வோம்.

நிச்சயமாக இறைவன் எமது பிரார்த்தனையை ஏற்று ஹுதைய்பியா உடன்படிக்கையின் பின்னராக கிடைத்த வெற்றி போல பலஸ்தீனத்திற்கான வெற்றியை வழங்கப்போதுமானவன்.

இலங்கையின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவரும் பொத்துவில் பிரதேச  சட்டவிரோத சபாத் இல்லங்களை பிரதேச சபை தவிசாளர் மூட...
09/08/2025

இலங்கையின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவரும் பொத்துவில் பிரதேச சட்டவிரோத சபாத் இல்லங்களை பிரதேச சபை தவிசாளர் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கல்முனையில் எடுத்துரைப்பு.

(எஸ்.அஷ்ரப்கான்)

இலங்கையின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவரும் சட்டவிரோத சபாத் இல்லங்களை பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

கல்முனை மயோன் பிளாஸா மண்டபத்தில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பால், இன்று (09) மாலை ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இக்கருத்து முன்வைக்கப்பட்டது.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால், செயலாளர் நாயகம், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் மற்றும் கட்சியின் இணைப்பு செயலாளர் ஏ.எம்.
அஹுவர் ஆகியோர் இங்கு உரையாற்றினர்.

இங்கே தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்கள்,

இந்த நாட்டின் பிரதான வருமான வழிகளில் சுற்றுலாத்துறை முக்கியத்துவமானது. அதனை மேம்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதற்காக நாட்டின் இறைமையை பாதிக்கும் விடயங்களுக்கு அனுமதிக்க முடியாது. அது முஸ்லிம் நாடுகளாக இருந்தாலும் சரி, மேற்கத்தைய நாடுகளாக இருந்தாலும் சரி. இந்த அத்துமீறல்களை இஸ்ரேல் அல்ல பங்களாதேஷ், துருக்கி போன்ற முஸ்லிம் நாடுகள் செய்தாலும் சரி நாங்கள் அதை எதிர்ப்போம். எங்களை அரச சம்பளம் பெறும் ஒரு படையினர் பின்னாலேயே கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களின் எரிபொருள் விரையமாகுமே தவிர வேறு எதையும் எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாது.

பொத்துவில் அறுகம்பே பகுதியில் அரச அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக இயங்கும் இஸ்ரேலிய வழிபாட்டு தளத்தினால் அருகில் இருக்கும் பள்ளிவாசலும் இருள் சூழ்ந்து இஸ்ரேலிய வழிபாட்டு தளத்தின் வாகன தரிப்பிடம் போன்று மாறியுள்ளது. கிழக்கில் அரசியல் செய்யும் மூன்று காங்கிரஸ் தலைவர்களும் இந்த விடயங்களில் கவனம் செலுத்தி அந்த பள்ளிவாசலை எதிர்காலத்தில் குறைந்தது மூடிவிடுவதிலிருந்தாவது பாதுகாக்க வேண்டும்.

சிவில் அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் விரல் நீட்டிக்கொண்டிருக்கும் இஸ்ரேலிய ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கடமை அரசியல்வாதிகளுக்கும், ஆன்மீக தலைமைகளுக்கும் எம் எல்லோருக்கும் இருக்கிறது. முஸ்லிம் காங்கிரசை எதிர்த்து பேசி அன்னாசியில் தேர்தல் கேட்டு தற்போது, முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து பொத்துவிலை ஆளும், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப் இலங்கையின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வரும் சட்டவிரோத சபாத் இல்லங்களை மூடிவிட வேண்டும். பின்னர் அதனை யாரை கொண்டு திறக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம்.

சட்டவிரோத நிலையங்களை மூடும் அதிகாரம் பிரதேச சபை தவிசாளருக்கு இருக்கிறது.

தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் வாயால் கதைத்தவற்றை தவிர சமூகத்தின் நலனுக்காக இந்த காங்கிரஸ்காரர்கள் எதுவும் செய்யவில்லை. கடந்த காலங்களில் வாயால் பேசிக்கொண்டிருந்ததையே இப்போதும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். வடக்கை தமிழ் ஒருவரே முதலமைச்சராக வந்து ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடா அங்கு சிங்களவர் ஒருவர் வர முடியாது அது போன்று கிழக்கிலே சிங்களவர் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடாது வேறு யாரும் வரவும் முடியாது முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரே வரவேண்டும் என்ற கொள்கையில் பயணிப்பவர்கள் நாங்கள்.

இக்கொள்கையின்படி, கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம்.
அதற்காக எதிர்வரும் காலங்களில் சகல காங்கிரஸ்காரர்களையும், பெருந்தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை அமைக்கும் பணியை முன்னெடுத்து வருகிறோம்.

இஸ்ரேலிய அத்துமீறல்களை கண்டித்து நாங்கள் அங்கம் வகிக்கும் சபைகளில் கண்டன தீர்மானங்களை நிறைவேற்ற தயாராக உள்ளோம். அது பன்று இச்சந்தர்ப்பத்திலும் இஸ்ரேலியர்களின்
அடர்த்தியான செயற்பாடுகளுக்கு நாங்கள் எதிராக குரல் கொடுப்போம் என்றும் குறிப்பிட்டனர்.

இந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதித் தலைவர் கலாநிதி ஷெரீப் ஹக்கீம் உட்பட உயர்பீட உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

விளையாட்டு அமைச்சு நடாத்தும் 49 வது தேசிய விளையாட்டு விழாவில் பீனிக்ஸ் விளையாட்டு கழக வீரர்கள் சாதனை.(ஏ.எம்.அஜாத்கான்) க...
06/08/2025

விளையாட்டு அமைச்சு நடாத்தும் 49 வது தேசிய விளையாட்டு விழாவில் பீனிக்ஸ் விளையாட்டு கழக வீரர்கள் சாதனை.

(ஏ.எம்.அஜாத்கான்)

கிழக்கு மாகாண விளையாட்டுக்களில் ஒரு பகுதியான "வொடி
Bபில்டர்" போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு பற்றிய அட்டாளைச்சேனை பிரதேச பீனிக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இப் போட்டியில் ஆர்.எம். அஸ்மின் 60 கிலோ கிராம் இடை பிரிவில் தங்கப் பதக்கத்தையும், எம்.எம். பாஷி அஹமட் 85 கிலோ கிராம் இடை பிரிவில் வெள்ளிப் பதக்கத்தினையும், ஆர்.ஏ. ருஸ்லி 70 கிலோ கிராம் இடை பிரிவில் வெள்ளிப் பதக்கத்தினையும், எம்.எம் ரிஸாட் 85 கிலோகிராம் இடை பிரிவில் வெண்கலப் பதக்கத்தினையும் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு சாதனை நிலைநாட்டியுள்ளனர்.

இப் போட்டிக்காக செல்வதற்கு பல வழிகளிலும் ஆலோசனைகளை வழங்கிய அட்டாளைச் சேனைப் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஆர்.றப்ஸான், நாஜி ஜிம் உரிமையாளர், பயிற்றுவிப்பாளர்களான ஆர்.ஏ. ரூஸ்லி, விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எம்.எம்.பாஸி அகமட், உடற்கல்வி ஆசிரியர் ஆர்.நெளஸாத் மற்றும் பீனிக்ஸ் விளையாட்டு கழகத்தின் பொருளாளர் அஸ்லம் ஸஜா அத்துடன் இப்போட்டிக்கு செல்வதற்கு அனுசரணை வழங்கிய அனுசரணையாளர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பீனிக்ஸ் விளையாட்டு கழகத்தின் தலைவர் உடற்கல்வி ஆசிரியர் ஆர். நெளஷாத் தெரிவித்தார்.

Address


Telephone

+94772348508

Website

Alerts

Be the first to know and let us send you an email when World Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share