05/11/2025
அல்-பாஷிர் இன அழிப்பில் 2,000 பொதுமக்கள் படுகொலை!
சூடான்: அல்-பாஷிர் மற்றும் அருகிலுள்ள ஸம்ஸம் முகாம் பகுதிகளில் தீப்பிடித்த கட்டிடங்களை செயற்கைக்கோள் படங்கள் காட்டியுள்ளன. இந்த படங்களில், தரையில் இரத்தக் கறைகள் காணப்படுவதாக பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். விண்வெளியில் இருந்து முதல் முறையாக இரத்தக் கறைகள் கண்டறியப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என்றும் கூறப்படுகிறது.
விரைவு ஆதரவு படைகள் (Rapid Support Forces - RSF) அல்-பாஷிரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து நடந்த கூட்டுப் படுகொலைகளின் காட்சிகளையே இந்த படங்கள் பதிவு செய்துள்ளன. இந்த தாக்குதல்களில் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனிதாபிமான கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏப்ரல் 2023 முதல் RSF மற்றும் சூடானிய இராணுவப் படைகளிடையே நடந்து வரும் இந்த மோதல்களில், இதுவரை 1,50,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 14 மில்லியன்களுக்கும் மேற்பட்டோர் வீடிழந்துள்ளனர். அல்-பாஷிர் மற்றும் அதன் முக்கியமான இராணுவத் தளத்தை RSF கைப்பற்றியமை இந்தப் போரில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
யேல் பல்கலைக்கழகத்தின் மனிதாபிமான ஆராய்ச்சி ஆய்வகம், இந்த வன்முறையை ருவாண்டா இனப்படுகொலையின் முதல் 24 மணி நேர அழிவுடன் ஒப்பிட்டுள்ளது.
RSF பிரதேசத்தைக் கைப்பற்றிய பின்னர், அங்குள்ள சவூதி மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் மட்டும் கிட்டத்தட்ட 500 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது