Tamiltubelk

Tamiltubelk News Videos at its best...
වීඩියෝ ප්‍රවෘත්ති සඳහා එකම විසඳුම...
வீடியோ செய்திகளின் உங்களுக்கான தளம்...

https://youtu.be/1GH7SItaiYI?si=7dvF3ybRN7qEfgtHகொழும்பு கொம்பெனித் தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந...
21/07/2025

https://youtu.be/1GH7SItaiYI?si=7dvF3ybRN7qEfgtH

கொழும்பு கொம்பெனித் தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தங்கத் தேர் திருவிழா...‌

இலங்கைத் திருநாட்டின் தலைநகரமாக விளங்கும் கொழும்பு மாநகர் கொம்பனித்தெருவில் வீற்றிருந்து வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்பாலித்துவரும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு சிவசுப்பிரமணியப்பெருமானின் வருடாந்த மஹோற்சவம் நிகழும் விசுவாவசு வருடம் ஆனித்திங்கள் 27ம் நாள் (11-07-2025) வெள்ளிக்கிழமை காலை பூராட நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து காலை, மாலை உற்சவங்கள் நடைபெற்று கார்த்திகை தினமான ஆடித்திங்கள் 4ம் நாளாகிய நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஆறுமுகப்பெருமான் தங்கத்தேரில் வெளிவீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்...

கொழும்பு மாநகரில் தனித்துவமிக்க தங்கத்தேரை தன்னகத்தே கொண்ட வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிக்கு மகோத்சவ குருவும் ஆலய பிரதம குருவுமாகிய "சிவாலய பிரதிஷ்ட கலாநிதி" சிவ ஸ்ரீ வரத அரவிந் சிவாச்சாரியாரினால் ஸ்நபனாபிஷேகம், ஸ்தம்ப பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை ஆகியவை செய்யப்பட்டு தங்கத்தேரிற்கு எழுந்தருளச் செய்யப்பட்டதோடு, தங்கத்தேரானது புனித யானை முன்செல்ல மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் மற்றும் கேரள சண்டை மேள தாளம் முழங்க கொம்பனித்தெருவின் முக்கிய வீதிகளில் வெளி வீதியுலா வரச்செய்யப்பட்டது. இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், அடியார்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும் அடி வழிபாடு செய்தும் பறவை காவடி மற்றும் அலகு குத்தியும், கற்பூர சட்டி ஏந்தியும், தேர் வடம் பிடித்தும், பஜனைகள் பாடிக் கொண்டு தேரோடு பக்திப் பரவசத்துடன் முருகப்பெருமானின் அரோகரா கோஷங்களை எழுப்பியவாரு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியமையை காணக்கூடியதாக இருந்தது.

அத்துடன் நண்பகல் வேளையில் ஆலயத்தை தங்கத்தேர் வந்தடைந்ததுடன் சுவாமிக்கு பச்சை சாத்தி ஆலயத்தினுள் கொண்டு சென்று பிராயச்சித்த அபிஷேகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து அடியார்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டதோடு தங்கத்தேர் திருவிழா இனிதே நிறைவுபெற்றது.

கொழும்பு கொம்பெனித் தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தங்கத் தேர் திருவிழா...‌இலங...

20/07/2025

கொழும்பு கொம்பெனி தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய தங்க தேர் திருவிழா....

30/06/2025

இன, மத பேதமின்றி கொழும்பு மாநகர சபை வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்... - கொழும்பு மாநகர சபை முதல்வர் வ்ராய் கெலி பல்தசார்

நேற்றைய தினம் மாலை கொழும்பு மேற்கு தொகுதியிலுள்ள கொட்டாஞ்சேனை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமாரின் ஏற்பாட்டில் கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக பொறுப்பேற்றுள்ள விராய் கெலி பல்சதார் அவர்கள் மற்றும் பிரதி மாநகர சபை முதல்வர் ஹேமந்த குமார உட்பட குழுவினர்களின் பங்களிப்பில் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், புதிய மாநகர சபை முதல்வராக பொறுப்பேற்றமைக்காக அவருக்கு இறை ஆசி வேண்டியதுடன் அவருக்கும் பிரதி மாநகர சபை முதல்வர் ஹேமந்த குமார மற்றும் மாநகர சபை உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமார் ஆகியோருக்கு ஆலய நிர்வாகத்தினரால் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, நினைவுக்கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் கள். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கொழும்பு மாநகர சபை முதல்வர் விராய் கெலி பல்தசார் - இந்த ஆலயமும் ஆலய நிர்வாகமும், விசேடமாக இந்த கொட்டாஞ்சனை வாழ் தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் எம்மை இங்கு வரவேற்க ஒன்று கூடினர்.
பல்வேறு தனித்துவத்தை தன்னகத்தே கொண்ட நகரம் இந்த கொழும்பு மாநகரமாகும் இந்தத் தனித்துவத்தையும் இதன் மதிப்பையும் எமது நகர சபையும் எமது தலைமைத்துவமும் மதிப்பளிக்கின்றன. ஆகவே இந்த 'அன்பிற்கு நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாகவே இருப்போம்' என்றார்....

27/06/2025

Vibu naa vibe than...

21/03/2025

English Day celebration at Colombo Kanapathy Hindu Ladies' Maha Vidyalayam

25/12/2024

Kazakhstan's Flight acc!dent...

11/12/2024

Justice for Mahara Prisoners...

Protest and rally held at Colombo fort

11/12/2024

Special Raid for Dry fish in Colombo Pettah market

06/12/2024

Stop Violence against Bangladesh Hindus and Buddhist... A silent protest held in front of Colombo UN office

03/11/2024

The Boss... Sanath Jayasuriya warn's Banuka Rajapakshe for disciplinary action...

05/10/2024

What's going on in Colombo... 05/10/2024

At Reclamation road, Colombo 01.

A man stab*bed to dea*th

Address


Telephone

+94777664878

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamiltubelk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share