Mihraj News

Mihraj News www.mihrajnews.com/ Mihraj News [email protected] call +94775690784, +94774672867

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!15/08/2025
15/08/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
15/08/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் கல்முனை தாருல் அர்கம் மத்ரஸா புனரமைக்கப்பட்ட வக...
14/08/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் கல்முனை தாருல் அர்கம் மத்ரஸா புனரமைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் மாணவர்களின் பாவனைக்கு வழங்கி வைப்பு..!

✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 கல்முனை தாருல் அர்கம் மத்ரஸாவின் வகுப்பறை, கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் YWMA அமைப்பின் அனுசரணையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் குறுகிய காலத்திற்குள் முழுமையாக புனரமைக்கப்பட்டு, மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக (13) உத்தியோகபூர்வமாக திறந்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் தனது பொற்கரங்களால் வகுப்பறையை பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.

நிகழ்வின் போது, பாடசாலை நிர்வாகம் ரஹ்மத் மன்சூர் அவர்களுக்கு சிறப்பான நன்றியை தெரிவித்தது. மேலும், மத்ரஸா,ஆசிரியர்கள் நிர்வாகத்தினர், உலமாக்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த புனரமைப்பு முயற்சி, மாணவர்கள் மேம்பட்ட கல்வி சூழலில் கற்பதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  திண்மக் கழிவகற்றல் கருத்தரங்கு..!✍️  ஏ.எஸ்.எம்.அர்ஹம்𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇✅👉  கல்முனை இஸ்லாமாபா...
14/08/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 திண்மக் கழிவகற்றல் கருத்தரங்கு..!

✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்யாலயத்தில் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவக் கருத்தரங்கு அதிபர் ஏ. ஜீ.எம். றிஷாத் அவர்களின் தலைமையில் 2025.08.14ம்திகதி நடை பெற்றது.

உலக வங்கியின் "Gem project"திட்டத்திகீழ் நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கிற்கு வளவாளராக, கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் சுற்றாடல் கழக ஆணையாளரும், ஆசிரிய ஆலோசகருமான திரு. எம்.எம். சியாம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

திண்மக் கழிவுகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது தொடர்பான பிரயோக செயற்பாடுகளும் நடைபெற்றது.
மேலும் நிகழ்வில் பாடசாலையின் மாணவர்கள் பங்கு பற்றி கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான பூரண விளக்கங்களை பெற்றதோடு செயற்பாடுகளின் ஊடான அனுபவங்களையும் பெற்றுக் கொண்டனர்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  உலகின் சுகாதார வளர்ச்சிக்கு வழிகாட்டும் சவூதி அரேபியா..!✍️ எஸ். சினீஸ் கான் 𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇...
14/08/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 உலகின் சுகாதார வளர்ச்சிக்கு வழிகாட்டும் சவூதி அரேபியா..!

✍️ எஸ். சினீஸ் கான்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 உலக நாடுகள் தற்போது சுகாதார துறையை முன்னேற்றுவதை நோக்கி பயணிக்கின்றன. இந்நிலையில், சவூதி அரேபியா தனது பாரம்பரிய செயற்பாடுகள் மற்றும் பண்பாடுகளுக்கு இணையாக, நவீன மருத்துவ வசதிகள், ஆராய்ச்சித் தளங்கள் மற்றும் மருத்துவக் கல்வி வளங்களை மேம்படுத்தி, உலக சுகாதார மேடையில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளது.

சவூதி அரேபியா, தனது Vision 2030 எனும் தூர நோக்குத் திட்டத்தின் கீழ் பல்துறை முன்னேற்றங்களை அடைந்து வரும் முன்னோடி நாடாக திகழ்கிறது. சமூக, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ற பல மாற்றங்களை இது நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு முக்கிய அங்கமாக, இவ்வருடம் ஒக்டோபர் 27 முதல் 30 வரை, ரியாத்தில் உள்ள Exhibition and Convention Center-இல் 8வது Global Health Exhibition நடைபெறயிருக்கிறது.

“Invest in Health” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாபெரும் கண்காட்சி, உலகளாவிய சுகாதாரத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர்கள், உலகத் தர மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் என அனைத்துத் துறைகளையும் ஒரே மேடையில் ஒன்று சேர்க்கும் சிறப்பான வாய்ப்பு இதுவாகும்.

இந்தக் கண்காட்சியில், டெலிமெடிசின், டிஜிட்டல் ஹெல்த், தடுப்பு மருத்துவம், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த சிகிச்சை முறைகள், மருந்துத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல புதிய முன்னேற்றங்கள் விரிவாக வெளிப்படுத்தப்பட உள்ளன. உலக மக்களின் ஆரோக்கிய வாழ்க்கையை மேம்படுத்தும் புதிய தீர்வுகள் இங்கே உருவாகும்.

இந்நிகழ்வு, அரசு மற்றும் தனியார் துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, மருத்துவ முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இதன் மூலம், சவூதி அரேபியாவின் சுகாதாரத் துறையில் தன்னிறைவு பெறும் இலக்கிற்கு இது வலுவான அடித்தளமாக அமையும்.

இத்தகைய முயற்சிகள், மக்களின் நலனுக்காக சேவையாற்றும் சவூதி அரசின் வினைத்திறனை பிரதிபலிக்கின்றன. கட்டமைப்புப் புரட்சி, அறிவியல் முன்னேற்றம், மற்றும் மனிதநேயம் சார்ந்த அணுகுமுறை ஆகியவற்றின் மேன்மைதான், இன்று சவூதி அரேபியாவை உலக சுகாதார மேடையில் ஒரு முன்னணி இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 ரஹ்மத் மன்சூர் அவர்களின் தாயார் சுஹாரா மன்சூர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குழாய் கி...
14/08/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 ரஹ்மத் மன்சூர் அவர்களின் தாயார் சுஹாரா மன்சூர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குழாய் கிணறு வழங்கும் நிகழ்வு..!

✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில், கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் அன்புத் தாயார் சுஹாரா மேடம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கல்முனை பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு குழாய் கிணறு இன்று (14) வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், ரஹ்மத் மன்சூர் அவர்கள் தனது பொற்கரங்களால் பயனாளிகளுக்கு நேரடியாக குழாய் கிணறுகளை வழங்கி வைத்தார். குழாய் கிணறுகளைப் பெற்ற பயனாளிகள் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். நிகழ்வில் பயனாளிகள், நலன்விரும்பிகள், பவுண்டேசன் உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் இறுதியில், சுஹாரா மேடம் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை இடம்பெற்றது. இதில், அல்லாஹ்வின் அருள், பரிபூரண ஆரோக்கியம், மனநிறைவு, நீண்ட ஆயுள் மற்றும் இவ்வுலகிலும் பரலோகத்திலும் நன்மை நிறைந்த வாழ்வு கிடைக்க வேண்டுமென அனைவரும் ஒன்றுபட்டு வேண்டினர். மேலும், அவர் சமூக நலனுக்காக வழங்கும் ஆதரவும் அர்ப்பணிப்பும் தொடர அல்லாஹ் வழிகாட்டிட பிரார்த்தனை செய்யப்பட்டது.

இத்தகைய நற்பணிகள் ஊர் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் பாராட்டினர்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  நீதிகோரிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசு கட்சியுடன் இணைக்க அரசியல் செய்யும் முஸ்லிம...
14/08/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 நீதிகோரிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசு கட்சியுடன் இணைக்க அரசியல் செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும் : காரைதீவு சபை அமர்வில் கோரிக்கை..!

✍️ நூருல் ஹுதா உமர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 காரைதீவு பிரதேச சபையின் 04 ஆவது சபையின் இரண்டாவது அமர்வு பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் சகல உறுப்பினர்களினதும் பிரசன்னத்துடன் இன்று 14.08.2025 பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழில் ஒலிபரப்பப்பட்ட தேசிய கீதத்துடன் ஆரம்பமான இந்த அமர்வில் முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் இராணுவத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படும் காணாமல்போன நிலையில் முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் கபில்ராஜ் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பிரதேச சபையின் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தொகையில் 80% மாத்திரமே மீள்நிரப்பல் மூலமாக அரசினால் வழங்கப்படுகின்றது. மிகுதியான 20% தொகையானது சபை நிதிமூலம் வழங்கப்பட்டு வருவதனால் மக்களுக்கான அபிவிருத்தி வேலைகளை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரசினால் வழங்கப்படும் மீள் நிரப்பல் தொகையினை 100% ஆக வழங்குவதற்கு அரசினை கோருவதற்கு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை அனுமதி வழங்கியது.

மேலும் வர்த்தமானி அறிவித்தலுக்கமைவாக தொலைபேசி பாவனைக்காக மாதாந்தம் தவிசாளர் (2500/-), உபதவிசாளர்(1500/-), உறுப்பினர்களுக்கு மாதாந்தம் (1000/-), எனும் உச்ச தொகை வழங்க சபை அனுமதி வழங்கியதுடன் பிரதேச சபையின் வாகனத்தினை தவிசாளர் அலுவலக நோக்கத்திற்கு பயன்படுத்தும் போது மாதமொன்றுக்கு பயன்படுத்தும் எரிபொருள் அளவை (லீற்றரில்) தீர்மானித்து சபை அனுமதி வழங்கியது.

உபசரணைச் செலவுக்கும், அலுவலகத்திற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் சபை அங்கீகாரம் வழங்கியதுடன் பிரதேச சபை ஊழியர்களுக்கு இடர்கடனாக ஒவ்வொருவருக்கும் ரூ.100,000.00 தொகையினை வழங்க தவிசாளர் முன்வைத்த பிரேரணைக்கு உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்ததுடன் தொகையை சபையின் வருமானத்தை கொண்டு அதிகரிப்பது தொடர்பில் உறுப்பினர்களிடம் வாதபிரதி வாதங்கள் எழுந்தது.

இதன்போது மாவடிப்பள்ளி கிராமத்திற்கு சிறுவர் பூங்கா ஒன்றினை அமைக்குமாறும், அதற்கான காணி கிராம சேவை உத்தியோகத்தரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 29.07.2025 நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கடந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைய குறிப்பிட்ட காணியினை குறித்த வட்டார கௌரவ உறுப்பினர்களுடன் பார்வையிட்டு பெற்றுக்கொள்வதற்கான தொடர் மேற்கொள்ள சபை அனுமதி கோரப்பட்ட போது மாவடிப்பள்ளியை சேர்ந்த இரு உறுப்பினர்களும் காணிப்பெறுவதில் உள்ள விடயனங்களை சபைக்கு முன்வைத்து தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், பிரதேச சபை உறுப்பினருமான கி. ஜெயசிறில் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு நடைபெற்ற அநியாயங்கள் தொடர்பில் சபையில் விசேட உரையாற்றி எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு மலையக தலைவர்கள் ஆதரவு தந்தது போன்று எங்களுடன் இணைக்க அரசியல் அரசியல் செய்யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஏனைய அரசியல் கட்சிகளும் ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  கல்முனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் முன்னாள் எம்.பி ஹரீஸின் 50 லட்சம் ஒதுக்கீட்டில் சோலார்...
13/08/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 கல்முனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் முன்னாள் எம்.பி ஹரீஸின் 50 லட்சம் ஒதுக்கீட்டில் சோலார் பொருத்தப்பட்டது..!

✍️ சர்ஜுன் லாபீர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 நாட்டின் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பல்வேறு சமூக கட்டமைப்புக்களும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளமைக்கு நிவாரணமளிக்கும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு அங்கமாக கல்முனை முஹைத்தீன் பெரிய பள்ளிவாசலுக்கு 44KW திறன் கொண்ட சோலார் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

கல்முனை முஹைத்தீன் பெரிய பள்ளிவாசலின் நீண்டநாள் பிரச்சினையாக இருந்து வந்த பெருந்தொகை மின்சார கட்டண பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் விதமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் தனது டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 லட்சம் பெறுமதியான சோலார் சிஸ்டம் கல்முனை முஹைத்தீன் பெரிய பள்ளிவாசலின் மேல்தளத்தில் பொருத்தப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் நிறைவு பணிகளை கள விஜயம் செய்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் இன்று(13)பார்வையிட்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் முன்னெடுத்த இந்த சோலார் சிஸ்டம் பொருத்தும் வேலைத்திட்டத்தினால் பள்ளிவாசல் மாதாந்தம் இலங்கை மின்சார சபைக்கு செலுத்திவந்த மின் பட்டியல் கட்டணம் 135,000ஆயிரம் இப்போது இல்லாமலாகி எவ்வித கட்டணமும் இப்போது நாங்கள் செலுத்துவதில்லை என்றும் இந்த சோலார் மூலம் மாதாந்தம் 120,000ஆயிரம் பள்ளிவாசலுக்கு மேலதிகமாக வருமானமாக வருவதாகவும் இந்த வருமானத்தினூடாக பள்ளிவாசலின் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் இப்படியான நிலையான வருமான மூலங்கள் கிடைக்க உதவிய முன்னாள் எம்.பி எச்.எம்.எம். ஹரீஸுக்கு நன்றிகளையும் தமது பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக கல்முனை முஹைத்தீன் பெரிய பள்ளிவாசல் செயலாளர் முபாரிஸ் ஹனீபா இதன்போது தெரிவித்தார்.

மேலும் இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் ,கல்முனை பிரதேச செயலாளர் டி.எம்.எம் அன்சார்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம் ஜெளபர் நம்பிகையாளர் சபைத் தலைவர் எம்.ஐ அப்துல் அஸீஸ்,செயலாளர் எம்.எச் முபாரிஸ்,பொருளாளர் எஸ்.எம் ரிப்னாஸ் ,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எச் கலீலூர் ரஹ்மான்,பிரிலியன் விளையாட்டு கழக தலைவர் எம்.எஸ்.எம் பழீல்,தேசமானிய ஏ.பி ஜெளபர் உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  சிறந்த இளம் ஊடகவியலாளராக கிழக்கு இளைஞர் அமைப்பினரால் நேற்று (2025.08.12) நினைவுச் சின்ன...
13/08/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 சிறந்த இளம் ஊடகவியலாளராக கிழக்கு இளைஞர் அமைப்பினரால் நேற்று (2025.08.12) நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவித்தார். மருதமுனையின் இளம் ஊடகவியலாளரும் TM News முகாமையாளருமாகிய ஹஸீனூல் கமாஸ் அவர்களுக்கு வழங்கி வைத்தார்கள்.

🌎 www.mihrajnews.com

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!12/08/2025
12/08/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
12/08/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  கல்முனை பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப...
11/08/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 கல்முனை பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிநேகபூர்வ சந்திப்பு..!

✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 கல்முனை பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன், ஊரின் தற்போதைய பிரச்சினைகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இன்று (11) கல்முனை பெரிய பள்ளிவாசல் அலுவலக காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், கட்சியின் பொருளாளரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் நகரபிதாவுமான M. முஷரப், காத்தான்குடி நகரசபை முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர், மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிருவாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலில்,

கல்முனை நகரின் அடிப்படை வசதிகள் மேம்பாடு

மக்கள் நலனுக்கான புதிய அபிவிருத்தி திட்டங்கள்

இளைஞர் மற்றும் கல்வி முன்னேற்ற முயற்சிகள் போன்ற பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

இந்த சந்திப்பில் பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் பொதுமக்கள், உலமாக்கள், ஊர் புத்திஜீவிகள் ஆகியோர் பங்கேற்று தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். நிகழ்வு முழுவதும் நட்புறவு மற்றும் ஒருமைப்பாட்டு சூழல் நிலவியது.

🌎 www.mihrajnews.com

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  கல்முனை தொகுதிக்கான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீள் கட்டமைப்பு – சிறப்பு கலந்துரையாட...
11/08/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 கல்முனை தொகுதிக்கான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீள் கட்டமைப்பு – சிறப்பு கலந்துரையாடல்..!

✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 கல்முனை தொகுதிக்கான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீள் கட்டமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் இன்று (11) கல்முனை கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான, கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், கட்சியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், கட்சியின் இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் நகரபிதாவுமான M.முஷரப்,நகர சபை காத்தான்குடி நகரசபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர், கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சீ. சமால்தீன், கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மற்றும் பல ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலில், கட்சியின் எதிர்கால செயல் திட்டங்கள், உறுப்பினர் வலுப்படுத்தல் நடவடிக்கைகள், மற்றும் மக்களுடன் நெருக்கமான உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகள் குறித்து விரிவான விவாதங்கள் இடம்பெற்றன.

நிகழ்வு, ஒன்றுபட்ட செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தி நிறைவுற்றது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  சபாத் இல்லத்தை அகற்ற பொத்துவில் பிரதேச சபை தீர்மானித்தால் அரசாங்கம் மேலதிக நடவடிக்கை எட...
11/08/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 சபாத் இல்லத்தை அகற்ற பொத்துவில் பிரதேச சபை தீர்மானித்தால் அரசாங்கம் மேலதிக நடவடிக்கை எடுக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தங்களிடம் உறுதியளிப்பு : ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மிப்லால்..!

✍️ நூருல் ஹுதா உமர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (11) மாலை அமைச்சில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் அம்பாறை மாவட்ட பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் இயங்கும் சபாத் இல்லம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறித்த சபாத் இல்ல சட்டரீதியான அனுமதி தொடர்பிலும் அமைச்சருடன் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் சபாத் இல்லத்தை மூடிவிடுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், பொத்துவில் பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குள் இருப்பதனையும் அதன் தவிசாளராக தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் இருப்பதையும் அமைச்சருக்கு தெரிவித்ததுடன் குறித்த சபாத் இல்லத்தின் அருகில் அமைந்துள்ள பள்ளிவாசல் தொடர்பிலும் இந்த பள்ளிவாசல் வளாகத்தில் பாதுகாப்பு படையினரின் வாகன தரிப்பிடம் அமைந்துள்ள விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

தொடர்ந்தும் அந்த பிரதேசத்தை சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் வடிவமைத்து இலங்கை முஸ்லிம்களின் வரலாறுகளை அறிந்து கொள்ளும் விதமாக அமைக்க வேண்டிய அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவற்றை கேட்டறிந்த அமைச்சர் விஜித ஹேரத், சபாத் இல்லத்தை மூடிவிடுவது தொடர்பில் பொத்துவில் பிரதேச சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினால் மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றார்.

மேலும் சபாத் இல்லத்தின் அருகில் அமைந்துள்ள பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு படையினரின் வாகன தரிப்பிடத்தை அகற்ற உடனடியாக தான் நடவடிக்கை எடுப்பதாகவும் எங்களிடம் அமைச்சர் உறுதியளித்தார்- என்றார்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mihraj News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mihraj News:

  • Want your business to be the top-listed Media Company?

Share