20/09/2025
உலகமே வியக்கும் தமிழரின் கண்டுபிடிப்பு
வெறும் 5 லிட்டர் நீரில் 6 மாதம் எரியும் அதிசய அடுப்பு...உலகமே வியக்கும் தமிழரின் கண்டுபிடிப்பு
உலகிலேயே முதல்முறையாக தண்ணீரில் எரியும் அடுப்பினை கண்டுபிடித்து, தமிழர் ஒருவர் அசத்தி இருக்கிறார். இதன் சிறப்பம்சங்கள் பற்றி சிறப்பு விரிவாக பார்க்கலாம்...
நீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி, நீரில் எரியும் அடுப்பினைக் கண்டுபிடித்துள்ள HONC நிறுவனத்தின் நிறுவனர், தமிழ்நாட்டச் சேர்ந்த சேலம் பேளூரைச் சேர்ந்த தமிழர், இராமலிங்கம் கார்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தியாகச் சுத்தமான நீரினைப் பயன்டுத்தி, இயற்கை வளங்களை அழிக்காமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், விபத்துகள் ஏற்படா வண்ணம், பாமர மக்களும் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில், மிகக்குறைந்த மின் பயன்பாட்டுச் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நீரில் எரியும் அடுப்பினை, தம்முடைய 20 ஆண்டுகால ஹைட்ரஜன் குறித்த ஆராய்ச்சியின் விளைவாக அன்புச்சகோதரர் இராமலிங்கம் கார்த்தி அவர்கள் கண்டுபிடித்துச் சாதனை புரிந்துள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது.
நீரினை எரிபொருளாகக் கொண்ட சமையல் அடுப்பினைப் பயன்படுத்துவதன் மூலம், இனிவருங்காலங்களில் எரிபொருள் தேவைக்காக நிலம், நீர், காற்றினை மாசுபடுத்தும் கொடுமைகள் வெகுவாகக் குறைந்துவிடும். அந்த வகையில் இந்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த அரிய கண்டுபிடிப்பு செயற்பாட்டிற்கு வந்தால், அந்நிகழ்வு புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தித்துறையில் மிகப்பெரிய புரட்சியாகவும், அறிவியல் வளர்ச்சியில் மாபெரும் சாதனையாகவும் திகழும்!
| || |