CNTV

CNTV business advertisement

10/07/2025
சாவிக் கோர்வை ஒன்று கிடைக்க பெற்றுள்ளது உரியவர்கள் வாழைச்சேனை கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலகத்தில் உள்ளது உரியவர்கள் வ...
09/07/2025

சாவிக் கோர்வை ஒன்று கிடைக்க பெற்றுள்ளது உரியவர்கள் வாழைச்சேனை கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலகத்தில் உள்ளது உரியவர்கள் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

0767656141

உரியவர்களுக்கு கிடைக்கும் வரை பகிரவும்.

இன்று கெளரவ கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் கு...
08/07/2025

இன்று கெளரவ கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் அழைப்பின் பேரில் வைத்தியசாலைக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது வைத்தியசாலையின் குறைபாடுகள் குறித்து வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr FP. மதன் அவர்களினாலும் அபிவிருத்திக் குழு உப தலைவரினாலும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr R. முரலீஸ்வரன் உட்பட வைத்திய அதிகாரிகள் மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் அறிக்கை தொடர்பில் கையெழுத்து பெறும் வேலைத்திட்டம் - அனைவரது ஒத்துழைப்பையும் கோரி நி...
08/07/2025

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் அறிக்கை தொடர்பில்

கையெழுத்து பெறும் வேலைத்திட்டம் - அனைவரது ஒத்துழைப்பையும் கோரி நிற்கும் கல்குடா நலன்விரும்பிகள்

Thehotlinelk

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் கோறளைப்பற்று தெற்கு-கிரான், கோறளைப்பற்று மத்தி-வாழைச்சேனை பிரதேச செயலக எல்லை தொடர்பில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அண்மைய சிபார்சு அறிக்கை தொடர்பிலும் எமது நியாயமான கோரிக்க்கையை ஏற்று உரிமையைப் பெற்றுத்தருமாறு நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் வேலைத்திட்டத்தை கல்குடா நலன்விரும்பிகள் முன்னெடுக்கவுள்ளனர்.

கல்குடாவை மையப்படுத்தி மிக விரைவில் பரவலாக மேற்கொள்ளப்படவுள்ள இக்கையெழுத்து பெறும் வேலைத்திட்டத்திற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் இவ்வேலைத்திட்டத்தில் அனைத்து அமைப்புக்களையும் இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

காவத்தமுனை அல் அமீனுக்கு குப்பைத் தொட்டிகள் அன்பளிப்பு(எச்.எம்.எம்.பர்ஸான்)கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அ...
07/07/2025

காவத்தமுனை அல் அமீனுக்கு குப்பைத் தொட்டிகள் அன்பளிப்பு

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்திற்கு இன்று (7) ஆம் திகதி குப்பைத் தொட்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் அலியார் மீராசாஹிப் (தாஜுதீன்) இதனை அன்பளிப்பு செய்துள்ளார்.

குப்பைத் தொட்டிகளை பிரதேச சபை உறுப்பினர் பாடசாலை அதிபர் ஏ.ருபாய்தீன் மற்றும் பிரதி அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவா ஆகியோர்களிடம் வழங்கி வைத்தார்.

பாடசாலை நலன்கருதி குப்பைத் தொட்டிகளை அன்பளிப்பு செய்த பிரதேச சபை உறுப்பினருக்கு அதிபர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் நகர சபையின் அதிகாரம் SLMC  வசம் தவிசாளராக  MS.நழீம் அரியாசனம் ஏறினார்..............................................
16/06/2025

ஏறாவூர் நகர சபையின் அதிகாரம் SLMC வசம் தவிசாளராக MS.நழீம் அரியாசனம் ஏறினார்.....................................................................

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்யும் வகையிலான அமர்வு இன்று(16-06-2025) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.

17 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை கொண்ட ஏறாவூர் நகர சபையில் தவிசாளர் உப தவிசாளர் தெரிக்வுக்கான இன்றைய அமர்வில் 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை.

இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் அமைப்பாளர் ஒருங்கிணைப்பு செயலாளர் முன்னைய நாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நமீம் முன்மொழிந்து வழிமொழியபட்டார்.

அதனைப் போன்று ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பர்லின் அவர்கள் முன்மொழித்து வழிமொழியப்பட்டார்.

இதன் பிரகாரம் தவிசாளர் தெரிவு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இதன்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட MS.நழீம் அவர்களுக்கு ஆதரவாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 07 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த 01 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியை சேர்ந்த 01 உறுப்பினர் என மொத்தமாக 09 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த MS.சமீம் (பர்லின்) அவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 04 உறுப்பினர்களும், தமிம் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த 02 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 01 உறுப்பினரும் 07 உறுப்பினர் வாக்களித்தர்

இதன் பிரகாரம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த MSM.நழீம் அவர்கள் 02 மேலதிக வாக்குகளால்

ஏறாவூர் நகர சபையின் அதிகாரம் SLMC வசம் MS.நழீம் தவிசாளராக அரியாசனம் ஏறினார்.

ஏறாவூர் நகரசபையின் பிரதி தவிசாளராக ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த ஞானசேகரன் கஜேந்திரன் தெரிவு மேலதிக 02 வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Nawasdeen Msm

Address


Telephone

+94779966556

Website

Alerts

Be the first to know and let us send you an email when CNTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share