06/06/2026
2026Yala Season paddy cost of cultivation...
ஒரு ஏக்கருக்கான சிறுபோக நெல் உற்பத்தி செலவு தொடர்பாக....
1.நில வாடகை(Land leasing)- ......Nil..
2.உழவு கூலி
( 2time tine tiller with Rotavator) 15000/=
3.விதை நெல்
(seed paddy cost -3Bushel CSP) 15000/=
4.களைநாசி
(weediside- Sofit pritilachlor,Loyand )- 12000/=
5.இரசாயன பசளை- Fertilizer
Urea 90kg×360/- = 32400/=
MOP 24kg×220/=. 5280/=
TSP. 22kg× 270/- 5940/=
Discovery 5kg+ 2Kg Zing. 2500/-
6.பூச்சி நாசினி pesticide
(Vertago+fipronil+ marshal). 10000/=
7.பங்கஸ் நாசினி -Fungicide
(Hexaconozole+Follicular). 3000/=
8. போக்குவரத்துக்கூலி-
Transport cost (seeds, Fertilizer, chemical,
Harvesting paddy &etc) 20000/=
9.கூலியாள் செலவு. Labour cost
(Bund cleaning, sowing, Fertilizer&chemical apply, Harvesting, loading & unloading & Drying) 25unit/Ac ×35000/- = 87500/-
10. அறுவடை பொருட்கள் ( Bag, sanhemp,etc)
...... 2500/-
11. அறுவடை machinery cost .... 15000/=
12.ஏனைய செலவுகள் - Other cost (vaddaikooli, bank interest, fences &koddil ,etc) ......... 10000/=
மொத்த செலவுகள்=. 236120/-
அரச மானியம் 12000/= per ac
மீதிசெலவு. 2 24120/=.
ஒரு ஏக்கரில் கிடைக்கும் அறுவடை 25மூடைநெல். 1650kg...... மட்டக்களப்பு மாவட்டத்தில் 1kg நெல்லிற்கான உற்பத்தி செலவு. ..135/=
தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு மூட்டை(66kg) நெல்லை உற்பத்தி செய்ய சாதாரணமாக 8910/- அண்ணளவாக 9000/-செலவு செய்ய வேண்டும்..
4மாதங்கள் வியர்வை சிந்தி உற்பத்திசெய்தநெல்லை எவ்வளவு விற்பனை செய்யலாம் Friends. ?????
எந்தவோர் பொருளின் உற்பத்தி செலவின் இரு மடங்கே அதன் விற்பனை பெறுமதி யாகும்......
இலங்கையில் நெல் விவசாயம் இலாபகரமானதா.... ???
அரிசி விலை உயர்வடையாவிடின் நெல் விலை உயருமா....?
வரம்புயர நீர் உயரும்..
நீர் உயர நெல் உயரும்..
நெல் உயர குடி உயரும்...
குடி உயர கோன் உயரும் என்று அவ்வையார் சொன்னது அந்த காலத்தில்...
இங்கே அரிசியை வைத்தே அரசியல் நடக்குது இந்த காலகட்டத்தில்....
கோன் உயருமோ இல்லையோ Rice mill Owner மட்டும் இங்கே??? சிந்திக்க ஒரு நிமிடம்...
வாடிக்கையாளர்களை பாதுகாக்க விவசாயிகளின் அடி வயிற்றில் கை வைக்காதீர்கள்.... மட்டக்களப்பு மாவட்ட புத்தி ஜீவிகளின் கவனத்திற்கு...
நன்றி ....
விவசாயிகளின் வாழ்வாதார போராட்டத்தில் பங்குகொள்ளும் ஒருவனாக ...
அன்புடன் T.பிரதீபன்
மட்டக்களப்பு