vavuniya news

vavuniya news oll news content

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மன்னார் மக்கள் போராட்டம்..!மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ...
19/09/2025

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மன்னார் மக்கள் போராட்டம்..!

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு

வருகின்றனர்.
மன்னாரில் புதிதாக அமைக்கப்படவுள்ள 14 காற்றாலை மின் கோபுர வேலைத்திட்டங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,

மன்னார் மாவட்டத்தில் கணிய மணல் அகழ்விற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது,

ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளமையினால் மன்னார் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே மக்களின் பிரச்சினைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுகளுக்கு எதிராக மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நேற்றுடன் 47 ஆவது நாட்களை கடந்துள்ளது.

இந்நிலையில் அரசாங்கத்தால் இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன் இன்று மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் தென் பகுதியில் உள்ள சிங்கள சகோதரர்கள், மத தலைவர்கள், புத்திஜீவிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மன்னாரில் இருந்து வந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

38வது திலிபன் கொண்டாட்டத்தை முன்னிட்டு வாவினியா பகுதியில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
19/09/2025

38வது திலிபன் கொண்டாட்டத்தை முன்னிட்டு வாவினியா பகுதியில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

வாவினியாவின் வேலிகுளம் பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
05/09/2025

வாவினியாவின் வேலிகுளம் பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்து: மூவர் காயம் கொழும்பில்  ...
01/09/2025

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்து: மூவர் காயம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதமானது வவுனியாவில் பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து சென்ற புகையிரம் இன்று (01.09) மாலை 3.30 மணியளவில் வவுனியா - மன்னார் வீதி புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட போது மன்னார் வீதி ஊடாக வவுனியா நோக்கி வந்த பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

குறித்த விபத்தில் பட்டாரக வாகனம் புகையிரதத்துடன் மோதி தூக்கி வீசப்பட்ட நிலையில் அதில் பயணித்த தாய், தந்தை, மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக குறித்த வீதிப் பகுதியில் சுமார் அரை மணி நேரத்திறகும் மேலாக புகையிரதம் தரித்து நின்றமையால் வவுனியா - மன்னார் வீதிப் போக்குவரத்துக்கள் பாதிப்படைநதன.

குறித்த புகையிரத கடவைக்கு புகையிரத ஒலிச் சமிக்ஞை கிடைக்கப் பெறாமையால், புகையிரத கடவை மூடப்பட்டிருக்கவில்லை எனவும் இதன் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வன்னியின் இறுதி அரசன் “குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்” 222வது ஞாபகார்த்தவிழா..! வவுனியா மாநகரசபையின் ஏற்பாட்டில் இன்...
25/08/2025

வன்னியின் இறுதி அரசன் “குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்” 222வது ஞாபகார்த்தவிழா..!
வவுனியா மாநகரசபையின் ஏற்பாட்டில் இன்றைய தினம்(25.08.2025) இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது

24/08/2025
வட மாகாணத்தில் சமூக மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சாலை மேம்பாட்டிற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு......................
24/08/2025

வட மாகாணத்தில் சமூக மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சாலை மேம்பாட்டிற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு
...............................................................................

வட மாகாணத்தின் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் திரு. பிமல் ரத்நாயக்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் நான் பங்கேற்றேன்.

அப்போது, ​​வட மாகாணத்தில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மதிப்பாய்வு செய்தோம்.

இந்தக் கலந்துரையாடலின் போது, ​​2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மூலம் மக்களின் வளர்ச்சித் தேவைகள் எவ்வாறு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன, குறிப்பாக, இந்த மாவட்டங்களின் மக்கள் தங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வருமானத்தை ஈட்டவும் உதவும் சமூக மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களில் சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதிக்கு கூடுதலாக ரூ. 200 மில்லியன் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன் மற்றும் ஜெகதேஸ்வரன், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், அனைத்துப் பிரதேச செயலாளர்கள், சாலை மேம்பாட்டு ஆணையம் மற்றும் சாலை மேம்பாட்டுத் துறையின் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

24/08/2025

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்
நாளை (25) பணிப்புறக்கணிப்பில்
- நாடளாவிய ரீதியில் காலை 8.00 மணி முதல்

23/08/2025

Address

Vavuniya Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when vavuniya news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share