தினப்புயல் செய்திகள் - Thinappuyal News Tamil

  • Home
  • Sri Lanka
  • Vavuniya
  • தினப்புயல் செய்திகள் - Thinappuyal News Tamil

தினப்புயல் செய்திகள் - Thinappuyal News Tamil Tamil News

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்   அம்பாறை மாவட...
29/05/2025

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலக மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது .

இந்நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குரிய பல நாள் மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கப்படுவதால், அம்மீனவர்களின் மீன் அறுவடையை ஆழ்கடலில் களவெடுப்பதற்கு அமைய, விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் இது தொடர்பாக பேசி, இம்மீன் கொள்ளையை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவினால் பிரேரணை முன்வைக்கப்பட்டது. இந்தப் பிரேரணை ஆராயப்பட்டு, அது தொடர்பாக அறிக்கை ஒன்றினை உடனடியாக ஜனாதிபதிக்கும் மீன்பிடி அமைச்சிக்கும் அதுபோன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி மீன் கொள்ளை தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானமும் அம்பாறை மாவட்ட செயலகத்தில் பெறப்பட்டது.

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், மு. கா. பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் அஷ்ரப் தாஹிர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக, பிரியந்த விஜயரத்ன, ஏ.எம்.எம்.ரத்வத்த மற்றும் திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அத்துடன் மீனவர்களின் மற்றுமொரு பிரச்சினையான கடல் அரிப்பு தொடர்பாக ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா ஸ்தலத்திற்கு விஜயம் செய்ததோடு கல்முனை பிரதேசத்தில் உள்ள கடலரிப்புக்குள்ளான பிரதேசங்களில் உடனடியாக கடல் அரிப்பைத் தடுப்பதற்கான கற் தடைகளை ஏற்படுத்துவதற்காக வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இந்நிகழ்வில் கரையோரப் பாதுகாப்பு திணைக்களப் பொறியியலாளர் துளசிதாசன் மற்றும் கரையோரப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டதோடு மீனவர்களும் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினருடன் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் இனப்படுகொலைக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் இவர்களால் கொல்லப்பட்ட 140000 ஆன்மாக்கள்...
29/05/2025

முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் இனப்படுகொலைக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் இவர்களால் கொல்லப்பட்ட 140000 ஆன்மாக்கள் சும்மா விடாது
https://www.thinappuyalnews.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%90%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/

சட்டவிரோத வருவாய் ரூ. 2 ஆண்டுகளில் 150 மில்லியன் ரூபாய் சொத்துக்கள்:மேர்வின் சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்மகன் 'ம...
29/05/2025

சட்டவிரோத வருவாய் ரூ. 2 ஆண்டுகளில் 150 மில்லியன் ரூபாய் சொத்துக்கள்:
மேர்வின் சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
மகன் 'மாலகா'வுக்கு 323 லட்சம்,
பென்ஸ் உட்பட 4 சொகுசு கார்கள்!
----------------------------------------------------------
இரண்டு வருட காலப்பகுதியில் தனது சம்பளம் மற்றும் சம்பாத்தியத்தில் இருந்து சம்பாதிக்க முடியாத 150 மில்லியன் ரூபாவிற்கு மேல் செலவழித்து, மிக அதிக விலைக்கு பல சொத்துக்கள் மற்றும் சொகுசு வாகனங்களை வாங்கியதாகவும், பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது லஞ்ச ஊழல் விசாரணை ஆணையம் நேற்று முன்தினம் (மே 27) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மார்ச் 31, 2010 முதல் மார்ச் 31, 2012 வரை தனது சட்டப்பூர்வ வருமானத்திற்கு அப்பால் இந்தப் பணத்தையும் சொத்தையும் குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன்படி, லஞ்ச ஒழிப்பு ஆணையம் பிரதிவாதிக்கு எதிராக ரூ. கொழும்பு 07, எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் ஒரு நிலத்தை வாங்குவதற்கு 71.3 மில்லியன் மற்றும் கடவத்தை பகுதியில் ஒரு நிலத்தை வாங்க ரூ. 13.9 மில்லியன் மற்றும் தனது மகன் மலாக்க சில்வாவுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் வாங்க ரூ. 32.3 மில்லியன் மற்றும் 32.3 மில்லியன் மற்றும் தனது சொந்த உபயோகத்திற்காக பென்ஸ் கார் வாங்கினார். டிஸ்கவர் ஸ்போர்ட்ஸ் V8 ஜீப்பை வாங்க 28 மில்லியன் மற்றும் 55 மில்லியன், மற்றும் ரூ. ஒரு ஹூண்டாய் காரை வாங்க 55 மில்லியன்.

மேலும், பொது மற்றும் தனியார் வங்கிகளில் பராமரிக்கப்படும் 48 கணக்குகள் மூலம் மேற்படி சொத்து, வாகனங்கள் மற்றும் வாகனங்களை வாங்குதல், சில வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கடன்களைத் தீர்க்க பணத்தைப் பயன்படுத்துதல், இவ்வாறு வாங்கப்பட்ட சொத்துக்களின் உரிமை, மேற்படி பண மற்றும் பணமற்ற சொத்துக்கள் லஞ்சத்திலிருந்து மாற்றப்பட்ட சொத்தாகவோ அல்லது லஞ்சம் மூலம் பெறப்பட்ட எந்தவொரு சொத்தாகவோ லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 23(a)1 இன் கீழ் கருதப்படுகின்றன என்றும், எனவே, லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 23(a)3 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள் செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

கேரம் போர்ட் ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும் முன்னாள் சதொச த...
29/05/2025

கேரம் போர்ட் ஊழல் வழக்கு:
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும் முன்னாள் சதொச தலைவருக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
----------------------------------------------------------------
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.

அதற்கமைய, குறித்த வழக்கு இன்று மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்புக்கு முன்னர் நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்த இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி, இந்த பிரதிவாதிகள் தங்கள் பதவியின் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் தவறான செயலைச் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்தத் தவறு காரணமாக, அரசாங்கம் 53 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பொது வரி வருமானத்தை இழந்துள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இதுபோன்ற குற்றங்களைச் செய்யத் தயாராகி வருபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் வகையிலும் ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தீர்ப்பை வெளியிடுமாறு இலஞ்ச விசாரணை ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கோரினார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர், நீதிபதி மஹேன் வீரமன் தலைமையிலான மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

28/05/2025
https://www.youtube.com/watch?v=AFuZHZ77irI
28/05/2025

https://www.youtube.com/watch?v=AFuZHZ77irI

குருந்தூர் மலையை ஆக்கிரமித்துள்ள பௌத்த பேரினவாதிகள் வெளியேற வேண்டும் அல்லது பௌத்த சிலை உடைக்கப்பட்டு அகற்றப....

மட்டக்களப்புச் சொல்லாட்சி :-ஈழத்தில் மட்டக்களப்புக்கென்று தனித்துவமான சில சொற்களுண்டு. சில வேளைகளில் அவற்றில் சில சொற்கள...
28/05/2025

மட்டக்களப்புச் சொல்லாட்சி :-
ஈழத்தில் மட்டக்களப்புக்கென்று தனித்துவமான சில சொற்களுண்டு. சில வேளைகளில் அவற்றில் சில சொற்களை ஈழத்தின் பிற பகுதியினரால் கூடப் புரிந்து கொள்ள முடியாது, ஆனாலும் அவை ஆழமான பொருள் பொதிந்த பழந் தமிழ் மரபின் தொடர்ச்சியாகக் காணப்படும். காட்டாக: `பரத்தை` என்ற சொல்லின் `விலைமகள்` என்ற பொருள் எல்லோரும் அறிந்தது; மட்டக்களப்பில் இச் சொல்லுக்கு வேறொரு பொருளுமுண்டு. வீடுவேய்தல், வேலியடைத்தல் போன்ற வேலைகளினை உறவினர், அயலவர் எல்லோரும் சேர்ந்து செய்வார்கள். அதன் முடிவில் வேலை செய்து தந்த உறவினருக்கு வழங்கப்படும் உணவும் `பரத்தை` எனப்படும். பரந்த அளவிற் சமைக்கப்படுதல் என்ற பொருளில் `பரத்தை` என அழைக்கப்படுகின்றது. எனவே அங்கு `பரத்தைக்கு வாங்க` எனக் கேட்டால் தவறாகக் கருதக் கூடாது. பரந்தளவில் சமைக்கப்படும் `பரத்தை` போல, `மருங்கை`என்ற ஒன்றுமுண்டு. `மருங்கை’ என்ற பெயரில் உறவினர் மட்டும் கலக்கும் விருந்தும் ஒன்றுமுள்ளது. `கட்டாடி` என்றால் வண்ணான் என்ற பொருள் வேறிடங்களிலுண்டு, மட்டக்களப்பில் பூசாரியினையும் (குறிப்பாக பெண் கடவுள்களுக்கான பூசாரி) கட்டாடி என்பார்கள். அவ்வாறான ஒரு சொற் பட்டியலினைக் கீழே பார்ப்போம். {இவை வேறு பகுதிகளிலும் பயன்பாட்டிலிருக்கலாம்}.

• புற்கை = பொங்கல் {`உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யோனே ’ என்று பழஞ் செய்யுள் கூறும் புற்கை என்னும் சொல்லே இங்குப் புக்கை ஆயிற்று}
• கால்வாங்குதல் என்பது மகனைக் குறிக்கும்.
• போடியார் = நெற் செய்கைக்கு வேண்டிய முதலைப் போடுபவர்.
• குருவிக்காரன் = வயலிற் குருவிகளை ஓட்டிக் காத்தல் போன்ற குற்றேவல்களுக்காக நியமிக்கப்படும் சிறுவன்

• குருவிமூலை வரவை = குருவிக்காரனுக்கு வயலிலேயே தங்க வழங்கப்பட்ட சிறு குடில்/ இடம்.
• வட்டை வளைத்தல் = வயற் காவல் (வட்ட வடிவமாக வயலினைச் சுற்றி சுற்றிக் காவல் காத்தல்)
• அவுரி திரித்தல் = நெல் தூற்றுதல்
• `களவெட்டி` அல்லது `களவட்டி’= சூடு மிதிக்கும் களம்.
{ களவட்டி - வட்டமாக அமைந்த சூடுபோடும் நிலப் பரப்பு. (களம்+வட்டி. வட்டி = வட்டமானது)}

• ஆயம் = காணிக்குரிய குத்தகை
• அத்திமடக்கு = அரிக்கன்சட்டி (அரித்துக் கல்லே நீக்கும் வகையில் உள்வரிகளமைந்த சட்டி)
• அளைதல் - கைவிரலால் தொடுதல்
• ஆணம் = நீர்த்தன்மையான கறி (சொதி போன்ற)
• ஆண்டார் = நிலா (இரவினை ஆளுபவர்)
• இட்டறுதி = (இட்ட+அறுதி) கடைசிக் காலம்
• எழுவான் = கிழக்கு (எழுவான் கரை- படுவான் கரை ஊர்ப் பெயர்கள்).
• படுவான் = மேற்கு
• கட்டாடியார் = பூசாரி (குறிப்பாக பெண் தெய்வங்களுக்கான பூசாரிகள்)
• கட்டுச் சொல்லுதல் = தெய்வ வாக்குச் சொல்லுதல் (`கட்டுவிச்சி`பழந் தமிழ்ச்சொல்)
• உருவேறுதல்/ சன்னதம் கொள்ளுதல்= சாமி இறங்குதல் (`வெறியாடல்` பழந் தமிழ்ச்சொல்)
• கதியால் (கதி + கால்) = கூரிய அடியை உடையதாக வெட்டப்பட்ட (காட்டுக்)கம்பு.

• கப்புகன் = மண்டூர் முதலிய குறிப்பிட்ட சில ஊர்க் கோவில்களிற் பூசை செய்யும் பார்ப்பனரல்லாத பூசாரி
{ தெய்வத்தினிடம் மக்கள் வேண்டிய தைப் பெறுதற்கு வழிசெய்து கொடுக்கும் `கற்பகதரு` போன்றவன்}

• கப்புகக்குடி = கப்புகன் தோன்றும் மரபு (சாதி அல்ல)
• கமம் = வேளாண்மைச் செய்கை , வயல்.
• கலத்தில் போடுதல் = மண மகனுக்கு மணமகள் முதல் முதல் சோறு உண்பித்தல்.
• கள்ளறை = வீட்டில் மறைவிடமாக உள்ள சிறிய அறை.
• கழிசறை = பலராலும் கழிக்கப்பட்ட நடத்தையுடையவன்.
• கறுவித்தல் = பழிவாங்கக் காத்திருத்தல். {“ கறுவு கொள் நெஞ்சமொடு’ என்னும் திருமுருகாற்றுப்படையிற் போல}

• குச்சிக்குடில் =சிறியவிடு.

• குஞ்சப்பு=சிறிய தந்தை.

• குஞ்சாத்தை =சிற்றன்னை.

• குடக்குழி = கிணற்றின் நடுவில் (நீர் குறைந்த காலத்து) குடம்/ வாளி.

• குமுதம் = பேரொலிசெய்து விளையாடுதல்
• குளையடித்தல் = ஒருவரது மனத்தை மாற்றுதல்.
• கெளித்தல் = கவிழ்த்து ஊற்றுதல் (கெளுத்தி – கெளிற்றுமீன்..)
• சூம்புதல் = மெலிதல்
• செக்கல் = மாலைநேரம்.
• செத்தை :- ஒலையாற் கட்டப்பட்ட வேலி / சுவர்.
• தப்பிலி = தப்புள்ளவன் { தப்பு+இலி}.
['மங்கலம்' எனப்படும் வழக்கு]
• தயிலாப்பெட்டி = மரத்தாற் செய்யப்பட்டதும் கள்ள அறைகள் உள்ளதுமான சிறுபெட்டி

• தாயதி = வழிவழி வந்த பழஞ் சொத்து; (`தாயம்` என்பதிலிருந்து வந்த சொல்).
• தாயம் = நல்ல தருணம்
• துமித்தல் = மழை தூறுதல்
• ஆண் மாரி / பெண்மாரி = பாலினம் மாறியோர் { மாறி என்பதன் திரிபு ஆக வழங்கும். பெண்ணுய்ப் பிறந்து, ஆண் தன்மையும், ஆணாய்ப் பிறந்து பெண் தன்மை யும் உடையோர்}
• முளிவிசளம் = வீட்டைவிட்டு வெளிக்கிடும்போது ஒருவர் முதலில் சந்திக்கும் நிமித்தம் (சகுனம்).


👉👉👇சில சொற்கள் திரிபடைந்த நிலையிலும் இன்று காணப்படுகின்றன. அவை வருமாறு.

** தலை வழித்தல் >> `மழித்தல்’ என்பதின் சிதைவு
`மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் ’

** சிரைத்தல்>> சிதைத்தல் என்பதின் சிதைவு

** வட்டை>> (வயற் பரப்பு முழுவதும்) வெட்டை என்பதின் சிதைவு

** அத்தக்கூலி >> அற்றைக் கூலி என்பதன் திரிபு ((அன்று + ஐ+கூலி) = நாட்கூலி

**கம்மாலை >> கம்மசாலை என்பதன் திரிபு (பட்டறை)

** கலம்பக்கயிறு >> கதம்பைக்கயிறு என்பதன் திரிபு (தென்னம் தும்பினல் செய்த கயிறு)

**காத்தாடி >> காவுதடி ’ என்பதின் சிதைவு. (கா+தடி)
சுமையினைத் தோளில் வைத்துச் சுமக்க உத வும் கம்பு. இதுவே இன்றைய மதம் சார் `காவடி` ஆக்கப்பட்டுவிட்டது.
🙏🙏🙏

✍இலங்கநாதன் குகநாதன்

28/05/2025

இரவு நேரப் பயணத்தில் எதிர்கொண்ட யானை .....

https://www.youtube.com/watch?v=hO-QzUugXB8
25/05/2025

https://www.youtube.com/watch?v=hO-QzUugXB8

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்றால் JVP யார் ?இலங்கை அரசு வீரத்தளபதிகளுடன் அரிய காட்சி

Address

108 B
Vavuniya
43000

Alerts

Be the first to know and let us send you an email when தினப்புயல் செய்திகள் - Thinappuyal News Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தினப்புயல் செய்திகள் - Thinappuyal News Tamil:

Share