15/11/2024
💁 What do people say about our life, our situation, our country???
No mic, 🎤🎤🎤 no device,💻💻 no cross-examination, 🙆 💁💁casual conversation,💁💁 a lot can be learned
💁 இந்த அழகிய நாட்டின் வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழர் வாழும் பகுதி இதில் தமிழ் தேசியம் தமிழர் அரசியல் என்றால் என்ன?
தமிழர் நாட்டை தமிழர்களே ஆள்வது தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமை.
Fundamental Political Rights.
தமிழர்களின் அரசியல், மொழி , கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, வேளாண்மை, மருத்துவம், அறிவியல், சுற்றுச்சூழல், கனிமவளம், பொருளாதாரம், நீர் மேலாண்மை, உரிமை, வாழ்வாதாரம், சமுதாயம், சமூக அமைப்பு, சமூகநீதி, மெய்யியல், தொன்மை என இவற்றையெல்லாம் காக்க பாதுகாக்க ஒரு அரசியல் உண்டென்றால் அது தமிழ்த்தேச அரசியல்.
தமிழ்த்தேசியம் என்றால் தமிழர்களின் பகை சக்தியையும் இன்ன பிற பகை சக்திகளையும் முறியடித்து தமிழர் உரிமைகளை இறையாண்மையை நிலைநாட்டுவது!
தமிழர்களுக்கான ஒரு அரசியல் அது தமிழ்த்தேசிய அரசியல்!
அனேகமாக அரசியல், மொழி , கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, வேளாண்மை, மருத்துவம், அறிவியல், சுற்றுச்சூழல், கனிமவளம், பொருளாதாரம், நீர் மேலாண்மை, உரிமை, வாழ்வாதாரம், சமுதாயம், சமூக அமைப்பு, சமூக நீதி, மெய்யியல், தொன்மை என இவற்றையெல்லாம் காக்க பாதுகாக்க இதற்கான ஒரு முப்பது வருட போர் இந்த அழகிய தீவை சிதைத்து விட்டிருந்தது. இதில் மூவின மக்களும் பாதிப்பினை எதிர்கொண்டார்கள்.
இருப்பினும்.யுத்தம் 2009ல் முடிவுற்றதும் ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் அரசியல். என்ற நிலை வந்துவிட்டது.
💁 What do people say about our life, our situation, our country???
No mic, 🎤🎤🎤 no device,💻💻 no cross-examination, 🙆 💁💁casual conversation,💁💁 a lot can be learned
💁 தமிழரின் தமிழீழ போராட்டமும் தலைவரின் ஒரு வழி பாதையும் சர்வதேச பேச்சு வார்த்தை தோல்வியும் 2009ல் முடிவுக்கு வந்த போராட்டமும். அந்த போராட்ட இரத்த கரைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திய தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஏனைய தமிழ் அரசியல் தலைமைகளும். 22 ஆசனங்களும் ஏனைய தமிழரின் ஆசனங்களும் தமிழர்களுக்கு ஆன (உரிமை வேண்டாம் ) அபிவிருத்தி என்ற ரீதியில் போரின் பின்னதான தமிழரின் வாழ்வில் எதையும் செய்யவில்லை மாறாக அவர்களின் குடும்பம் அவர்களின் சுற்றம் அவர்களுக்கு வசதியை ஏற்படுத்த கூடிய முதலாளித்துவத்தின் அரவணைப்புக்கும் ஆட்பட்டு அவர்கள் நடத்திய தமிழ்தேசிய அரசியல்
தமிழ் தேச தேசிய கொள்கையை பின்பற்றிய ஒன்றல்ல
👉 ஆனால் தமிழ் தேசியம் காக்க மக்கள் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். புலம் பெயர் தேச மக்களும் இவர்களுக்கு உதவ வேண்டும்.
👉 இந்த தமிழ் அரசியல் வாதிகள் பாராளுமன்றம் சென்று தங்கள் வீராப்பையும் தாங்கள் சேர்த்த சொத்து மணல் ஏற்றியது கல் மண் ஏற்றியது போதை வஸ்து கடத்தியது என சண்டை போட்டார்களே தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை. யாரும் இவர்களை ஒரு பொருட்டாக கருதுவது இல்லை.
👉 ஜனாதிபதி கோத்தபாயவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர தென்பகுதி மக்கள் போராடிய போது வட கிழக்கு மக்களே வாருங்கள் நாம் ஒன்றாக இந்த ஆட்சியை விரட்டி நாம் புதிய தேசத்தை உருவாக்குவோம் என தென்பகுதி மக்கள் அறைகூவல் விடுத்தார்களோ??? அன்றே இந்த தேசத்தின் இனவாதம் எரிந்து போய் விட்டது எனலாம்.
👉 அன்று ஏற்பட்ட தற்காலிக ஆட்சி மாற்றத்தை கூட ஏற்காத மக்கள் பொறுமையாக ஒரு தேர்தலை எதிர்பார்த்து தக்க தண்டனை வழங்கினார்கள். அதில் தமிழர்களாகிய நாம் பூரண பங்கேற்காவிட்டாலும் இரண்டாம் பாராளுமன்ற தேர்தலில் நமது ஆதரவை கொடுத்து தென்பகுதி மக்களின் கரங்களை பற்றிக்கொண்டுவிட்டார்கள்..
👉 இரண்டாம் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களும் தமிழ் தேசியத்தை ஒரு பக்கம் போட்டுவிட்டு பெருமளவில் தமது பங்களிப்பு வழங்கியதன் நோக்கம். இந்த நாட்டிலும் குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் தலைவிரித்தாடிய லஞ்சமும் ஊழலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதேயாகும்.
👉 தமிழர் தேசியம் என்ற ரீதியில் தமிழ் அரசியல்வாதிகளின் சுயநல அரசியல், சுயலாப அரசியல் பாதைகளையும் புதைத்து விட்ட தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் இந்த நாட்டின் மீதும் தங்கள் பிள்ளைகளின் தங்கள் சந்ததியின் எதிர்காலம் குறித்தும் சிந்தித்தவர்களாவர். மொழி , கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, வேளாண்மை, மருத்துவம், அறிவியல், சுற்றுச்சூழல், கனிமவளம், பொருளாதாரம், நீர் மேலாண்மை, உரிமை, வாழ்வாதாரம், சமுதாயம், சமூக அமைப்பு, என ஒரு ஒன்றுபட்ட ஒரு அரசியல் சக்திக்குள் சென்றுள்ளார்கள். அரசியல் உரிமையை காரணமாக பயன்படுத்தி இலங்கை தீவை தமது கட்டுக்குள் வைக்கலாம் என்ற சர்வதேச கனவையும் கலைத்து விட்டார்கள்.
👉 இங்குதான் இலங்கை மக்களின் புத்திசாலித்தனத்தை சர்வதேச அரசியல் உணரும் நிலையையும் உருவாக்கி விட்டார்கள். ஒன்றுபட்ட இலங்கையில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வோம் எங்களுக்கு பிரச்சனை வேண்டாம் என எஞ்சிய தமிழ் தேசிய அரசியல் வாதிகளையும் தூக்கி வீசி போகும் நாளும் தொலைவில் இல்லை . இதற்கான பச்சைகொடியை தென்பகுதி அரசியல் தலைமைக்கு காட்டிவிட்டார்கள்.
👉 சில அரசியல்வாதிகள் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் வெளிப்படை தன்மையாக மக்கள் முன் வந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்கள் தண்டிக்க பட வேண்டும் என உறுதி கொண்டுள்ளார்கள்
👉 இது போலவே சுய லாப அரசியலின் பின் நின்ற ஊது குழல் அரச அதிகாரிகளுக்கும் விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கும் தார்மீக கடமையுடன் ஒட்டு மொத்த நாட்டின் லஞ்சம் ஊழல் மோசடிகளை இல்லாது செய்யும் ஆணையை மக்கள் சட்ட ரீதியான அங்கிகாரத்தை 150+ தங்கள் வாக்குகளால் வழங்கிவிட்டார்கள். அனைத்து அரசியல் குற்றவாளிகளும். சட்ட ரீதியாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு
👉 தமிழர்கள் அரசியலில் அரசியல் சுயலாப சிந்தனை போக்கில் சிதைவடைந்து சர்வதேச அரசியல் ஸ்தீர தன்மையில் தேவையான உறுதிப்பாடு உடைந்து போகின்ற நிலை மேலும் வலுவடைந்து செல்கின்றமையே காணப்படுகின்றது.
👉 "பருவத்தே பயிர் செய்" பயிர் மட்டுமல்ல நமது தமிழர் போராட்டம் ஆகினும் தமிழர் அரசியல் ஆகினும் பருவத்தே பயனற்று போனதால் அதன் தாக்கத்தில் வரலாற்று தடங்களிலும் அவர்களின் வாழ்வியல் கண்டு வந்த வழித்தடங்கள் அழிவு நிலை நோக்கி போய்விட்டது. தமிழர் ஒரு குடையின் கீழ் ஒன்றினையும் நிலை ஒரு போவதும் வரப்போவது இல்லை இந்த நினைவோடும் கண்ணீரோடும் வாழ்வில் வயது போய்விட்டது இண்டைக்கோ!!! நாளைக்கோ!!!
சலிப்போடு கூறும் பெரியவர்கள்.
புதிய திசை நோக்கி போகும் இளைய சமுதாயம்.
🙏🙏🙏🙏🙏 ஜனாதிபதி அவர்களுக்கும் புதிய அரசுக்கும் எமது வாழ்த்துக்கள்
இன்றைய நாள் இலங்கையில் மக்கள் தங்கள் நாட்டை புதுப்பித்தார்கள்
👉👉👉👉👉👉👉👉 நாளை என்ன??? Wait and see 👳👳👳👱👱👵👨👩👦🙆💆💇💑👫🏃🚶👼🙇👮👮