Makkalthirai - Ithu namma thirai

Makkalthirai - Ithu namma thirai Entertainment Unlimited

1990 ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான நடிகர் விக்ரமுக்கு, 9 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் பாலாவின் சேதுவே (1999)  திருப்பும...
17/04/2026

1990 ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான நடிகர் விக்ரமுக்கு, 9 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் பாலாவின் சேதுவே (1999) திருப்புமுனையாக அமைந்தது.

தண்ணீரைக் கூட சல்லடையால் அள்ளி விடலாம். ஆனால், அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும்!

- கவிஞர் வைரமுத்து

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 'சியான்' விக்ரம்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி‌ மாற்றம்Thanks | Puthiya Thalaimurai
05/03/2026

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி‌ மாற்றம்

Thanks | Puthiya Thalaimurai

MUGAVAI SANGAMAM - Ramanathapuram 8th Book Fair 2026 (Jan 25th - Feb 4th)
25/01/2026

MUGAVAI SANGAMAM - Ramanathapuram 8th Book Fair 2026 (Jan 25th - Feb 4th)

Whistle Thanks | Puthiya Thalaimurai
22/01/2026

Whistle
Thanks | Puthiya Thalaimurai

Nadichathellam HitThanks | Jaya TV
20/01/2026

Nadichathellam Hit
Thanks | Jaya TV

நீங்கள் திரைத்துறையில் வாய்ப்புத் தேடும் கலைஞரா? நல்ல படங்களை எளிய பொருட்செலவில் தயாரிக்க முடியும் என்று நம்புகிறவரா? த ...
16/01/2026

நீங்கள் திரைத்துறையில் வாய்ப்புத் தேடும் கலைஞரா? நல்ல படங்களை எளிய பொருட்செலவில் தயாரிக்க முடியும் என்று நம்புகிறவரா?

த பிலிம் ஸ்கூலில் திரைமொழியின் அடிப்படைகளை முறையாகக் கற்று,கடந்த ஆறு மாதங்களாகத் திரைக்கதை எழுதி அதில் தேர்வான முப்பத்து நான்கு பேர் படம் எடுக்கத் தயாராகி விட்டார்கள். எல்லாமே முழு நீளத் திரைப்படங்கள்.

அவர்கள் திரைப்படமாக எடுக்கப் போகும் படங்களின் கதை என்ன?பட்ஜெட் என்ன? ‘கதை எல்லாம் நல்லா சொல்லுவாய்ங்க சார்..ஆனா எடுக்கும்போது..’ உங்கள் சந்தேகம் தீர்க்க, தங்கள் படம் குறித்த இரண்டு நிமிட video pitch அவர்களே தயாரித்திருக்கிறார்கள்.

‘கேமரா என் கையில் இருக்கிறது. கதை என் இதயத்தில் இருக்கிறது. என் சினிமாவை என்னால் எடுக்கமுடியும்’ என்று நம்பிக் களம் இறங்குகிற முப்பத்து நான்கு அறிமுக இயக்குனர்கள். அவர்களின் திரைப்படங்களுக்கான துவக்க விழா.

விழா குறித்த விவரங்கள் அழைப்பிதழில் இருக்கிறது. இதையே அழைப்பாக ஏற்று நண்பர்கள் அனைவரும் வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்.

- R Chezhiyan Isc
https://www.facebook.com/share/17xg4VCnZm/

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
15/01/2026

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

பெருவாழ்வும் பேரன்பும் கொண்ட தாய்த்தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!   ‌
15/01/2026

பெருவாழ்வும் பேரன்பும் கொண்ட
தாய்த்தமிழ்ச் சொந்தங்களுக்கு
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!

இலங்கை‌ ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்துகள்!உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) த...
15/01/2026

இலங்கை‌ ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்துகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது.

வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. செழிப்பு மற்றும் நன்றியுணர்வை அடையாளப்படுத்தும் தைப்பொங்கல் பண்டிகை, சிறந்த விளைச்சலுக்கு நன்றி பாராட்டும் ஒரு நிகழ்வு மாத்திரமன்றி, எதிர்காலத்தில் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான அழைப்பாகவும் அமைகிறது.

அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கை அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும், இதுவரை இல்லாத அளவிலான பாரிய புனரமைப்பு செயற்பாட்டில் நாம் ஒன்றாக கைகோர்த்துள்ளோம். அந்த வேலைத்திட்டத்துடன் மென்மேலும் வலுவாக கைகோர்க்க முன்வருமாறு சுபீட்சமான எதிர்பார்ப்புடன் இந்தத் தைப்பொங்கல் திருநாளில், நான் அனைவரிடமும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இயற்கையுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட அதிகமாக உணரப்படும் இந்த நேரத்தில், இயற்கையுடன் ஆழமாக இணைக்கப்பட்ட தைப் பொங்கல் பண்டிகை, நமது வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் உயர்வான அர்த்தத்தைச் சேர்க்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். எந்தவொரு இருளுக்கும் பிறகு ஒளி பிறக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். உறுதியுடனும் ஒற்றுமையுடனும் சவால்களை வென்று 'வளமான நாடு - அழகான வாழ்க்கையை' கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கு இவ்வருட தைப் பொங்கல் பண்டிகை சிறந்த ஆசிர்வாதமாக அமைய பிரார்த்திக்கிறேன்.

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் தின வாழ்த்துகள்.

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2026 ஜனவரி 15 ஆம் திகதி

மலேசிய பிரதமரின் பொங்கல் வாழ்த்துகள்!இயற்கை வளங்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள். தமிழ்...
14/01/2026

மலேசிய பிரதமரின் பொங்கல் வாழ்த்துகள்!

இயற்கை வளங்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள். தமிழ் நாள்காட்டியில் தை மாதத்தின் தொடக்கத்தையும் குறிக்கும் இந்நாளை, தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடி வரும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

இந்த ஆண்டு பொங்கல் திருநாளைக் குடும்பத்தினருடனும் அன்பிற்குரியவர்களுடனும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடனும், அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாட வேண்டும். இந்தப் பண்டிகை, நன்றியுணர்வு, ஒருமித்தக் கருத்து, ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்புகளை நினைவூட்டுகிறது.

கருத்து வேறுபாடுகள், பின்னணி அல்லது நிலைப்பாடுகளில் ஒவ்வொருவரும் வேறுபட்டிருந்தாலும், பரஸ்பரப் புரிதலும் - மரியாதையும் சமூகத்தின் ஒற்றுமைக்கும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் அடித்தளமாகத் திகழ்கின்றன. அமைதியான, வளமான, செழிப்பான நாட்டை உருவாக்க இந்த ஒற்றுமை உணர்வைத் தொடர்ந்து நாம் வலுப்படுத்த வேண்டும்.

இந்திய சமூகத்தினர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்தினையும், புத்தாண்டை வரவேற்கும் அன்பர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Address

Kuala Lumpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makkalthirai - Ithu namma thirai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category