26/12/2025
From Sri Ramar Temple, Penang
Sri Vaigunda Egathesi 2025
🙏ஜெய் ஸ்ரீராம்🙏
🙏ஓம் நமோ வேங்கடேஸாய 🙏
வைகுண்ட ஏகாதசி பெருவிழா-2025
நிகழம் மங்களகரமாண விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 15ம் நாள்(30.12.2025) செவ்வாய்க்கிழமை,ஏகாதசி திதியில் காலை 5.30 மணிக்கு வைகுண்ட வாசல்(சொர்க வாசல்) திறக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெறவுள்ளது.
மாலை வெங்கடேஸ்வர பெருமாளுக்கு விசேஷ சஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும்.
மறுநாள் காலை 5.30 மணிக்கு வைகுண்ட வாசல் அடைப்பு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
வைகுண்ட ஏகாதசி அன்று உபவாசமாக இருந்து, அன்று இரவு கண் விழித்து, மறு நாள் காலை பாரணை(விரதம் முடித்தல்) செய்து, பல வகையான காய்கறிகள் சமைத்து, உபவாசத்தை நிறைவு செய்ய வேண்டும்.
பெருமாளுக்குரிய மந்திரங்களை சொல்லி, தொடர்ந்து வழிபட வேண்டும். அன்றைய தினம் உணவு, உடை உள்ளிட்ட பொருட்களை இல்லாதவர்களுக்கு தானமாக வழங்கி உதவி செய்வது சிறப்பு.
அனைத்து பக்தர்களும் தவறாமல் கலந்து கொண்டு பெருமாளின் அருள் பெற அழைக்கின்றோம்.
🙏பெருமாளின் அருள் பெறுக🙏