10/03/2025
5,026 இணைய சூதாட்ட தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன
MCMCயின் நடவடிக்கை வரவேற்கதக்கது
சிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர் சங்கம் வரவேற்பு
கோலாலம்பூர், மார்ச் 8-
நாட்டில் 2022 தொடங்கி 1 பிப்ரவரி 2025 வரை 5,026 இணைய சூதாட்ட தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) தெரிவித்துள்ளது வரவேற்கதக்கது என்று சிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர் சங்கத்தின் ஆலோசகர் ஆறுமுகம் செல்லப்பா கூறினார்.
இந்த காலகட்டத்தில் இணைய சேவை வழங்குநர்களுடன் இணைந்து செயல்பட்ட MCMC, சமூக ஊடகங்களில் இருந்த 224,403 சட்டவிரோத சூதாட்ட உள்ளடக்கங்களை நீக்கியது என்றும் அறிவித்துள்ளதானது சட்டவிரோத சூதாட்டங்களை அழிக்க உதவும் என்று ஆறுமுகம் செல்லப்பா தெரிவித்தார்.
இது குறித்து தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஜில் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் நீக்கப்பட்ட உள்ளடக்கங்களில் 93.14% (209,006) பேஸ்புக் தளத்தில் இருந்ததாகக் கூறப்பட்டது.
"பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான இணைய சூழலை உருவாக்க, MCMC புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது" என்று அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஜில் சொன்னார்.
1 ஜனவரி 2025 முதல், மலேசியாவில் 80 லட்சம் பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட அனைத்து சமூக ஊடக மற்றும் மெசேஜிங் சேவைகளும், தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998-ன் கீழ் "விண்ணப்ப சேவை வழங்குநர் வகை உரிமம்" பெற கட்டாயப்படுத்தப்படும் நடவடிக்கையும் சிறந்த ஒன்று என்று ஆறுமுகம் செல்லப்பா கூறினார்.
இந்த நடவடிக்கை, சட்டம் 588 மற்றும் MCMC வெளியிட்ட நடத்தை விதிமுறைகளுக்கு (சிறந்த நடைமுறைகள்) அத்தளங்கள் இணங்குவதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் தொடர்பாக பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கேப்டன் அஜஹரி ஹாசான் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஜில் அவ்வாறு வ
விளக்கமளித்திருந்தார்.
இந்த சட்டவிரோத இணைய சூதாட்டங்கள் தொடர்பில் MCMC பல்வேறு ஆக்ககரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சட்டவிரோத தளங்கள் அல்லது உள்ளடக்கங்கள் நீக்கப்படுவது சிறந்த நடவடிக்கையாகும் என்று சிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர் சங்கத்தின் ஆலோசகர் ஆறுமுகம் செல்லப்பா MCMCக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.