10/02/2025
ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்த இரு நூல்களின் வெளியீடு.......
ஞானம் கலைக்கூடத்தின் இரண்டாவது வெளியீடாகவும் விஜய் பதிப்பகத்தின் 212 வது அச்சப்பதிப்பாகவும் சிறப்பாக வெளியீடு கண்டது..
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியினுடைய பழைய மாணவன் இரத்தினம் ஜோர்ஜ் றஜீவ்சன் என அறியப்பட்ட " உடுவிலூர்க் கவிச்சித்தனின் " #அகத்தீயின் புலம்பல் (கவிதைத் தொகுப்பு ) #இதயம் பேசுகிறது (சிறுகதைத் தொகுப்பு ) ஆகிய நூல்களின் வெளியீடு 06 மாவட்ட இலக்கிய ஆளுமைகளின் பங்குபற்றுதலுடன் 2025.02.08 (சனிக்கிழமை ) மாலை 02 மணியளவில்
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிரதி அதிபர் திரு அன்ரன் சந்திரகுமார் பிரான்சிஸ் அவர்களின் வழிப்படுத்தலில் ஆரம்பமானது.
நிகழ்விற்கு தென்னிந்திய திருச்சபையின் யாழ் ஆதினம் முன்னை நாள் பேராயர் உலகப் பேரறிஞர், அதி வண கலாநிதி திரு. சுப்பிரமணியம் ஜெபநேசன் ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
மதிப்பு மிகு அழைப்பாளர்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் பிரபல சட்டத்தரணி சுகாஷ் கனகரத்தினம் அவர்களும் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் கலாநிதி மகேந்திரன் திருவரங்கன் அவர்களும், முன்னை நாள் சங்கானை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சின்னக் குட்டிசெல்லையா அவர்களும், திருகோணமலை மண்ணின் பெண் எழுத்தாளர் முன்னை நாள் அதிபர் கலாகீர்த்தி, கலாபூசணம் கிண்ணியா சபீனா அவர்களும், யாழ்ப்பாணம் மண்ணின் ஆளுமை மிக்க பெண்ணிய எழுத்தாளரும் யாழிசைக் கவித்தடாக நிறுவுனருமான கலைமாமணி உடுவிலூர் கலா அவர்களும், திருகோணமலை மண்ணின் சிறந்த திரைத்துரை இயக்குனர் திரு. பிறிமன் அவர்களும் அவர்களும், மன்னார் மண்ணின் படைப்பாளி, பல்துறைக் கலைஞர்,எழுத்தாளர் காலக் கவி அன்பழகி கஜேந்திரா அவர்களும், தமிழரின் அரசியல்க் குரல் ஊடகவியலாளர் திரு எஸ். சசிதரன் அவர்களும், வவுனியா விஜய் அச்சுப் பதிப்பக உரிமையாளர் திரு எஸ். விஜய் அவர்களும் வருகை தந்து இருந்தனர்....
முன்னதாக அழைப்பாளர் வரவேற்புடன் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது சுடரினை நிகழ்வின் முதன்மை அழைப்பாளர் அவர்களும் உடுவிலூக் கவிச்சித்தன் அவர்களை ஈன்ற தாயார் திருமதி மல்லிகாமலர் இரத்தினம் அவர்களும் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து அக வணக்கம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஈழப்பண் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து வரவேர்புரையுடன் கூடிய தலைமையுரையினை "இளைய கவி " திரியாயூரன் நிகழ்த்தினார். அத்தோடு வரவேற்பு நடனத்தை கேதீஸ்வரி சிவதாஸ் ஆசிரியரின் மாணவிகள் ஆற்றுகை செய்தனர்.
ஆசியுரையினை திருமதி மல்லிகாமலர் இரத்தினம் (நூலாசிரியரின் தாயார்)அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து முதன்மை அழைப்பாளருக்கான மதிப்பளிப்பை உடுவிலூர்க் கவிச்சித்தனின் உடன்பிறந்த சகோதரர்கள் பிறிஸ்லா, டெனிசன் ஜேம்சன் பற்றீசன் ஆகியோர் நிகழ்த்தினர்.
அதன் பின்னர் முதன்மை அழைப்பாளர் உரை மிகச் சிறப்பாக இடம்பெற்றது. நூலாசிரியரின் ஆசிரியரும் ஆயருமான அவர் பல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து மதிப்பு மிகு அழைப்பாளர் உரையினை சட்டத்தரணி சுகாஷ் கனகரத்தினம் அவர்கள் நூலாசிரியரின் சகபாடியாக சுவாரசியமாக நிகழ்த்தினார்.
தொடர்ந்து நூல் அறிமுக உரையினை யாழ்ப்பாண பெண் ஆளுமை எழுத்தாளர் ஊடகவியலாளர் கோபிகை நிகழ்த்தினார்
தொடர்ந்து #அகத்தீயின்_புலம்பல் கவிதைத் தொகுப்பு நூலினை திருமதி மல்லிகாமலர் இரத்தினம் அவர்களும் ,நூலாசிரியரின் உடன் பிறப்புகளான இரத்தினம் பிறிஸ்லா,இரத்தினம் டெனிசன்,இரத்தினம் ஜேம்சன்,இரத்தினம் பற்றீசன் ஆகியோரும் வெளியீடு செய்ய முதற்பிரதியை முதன்மை அழைப்பாளர் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து அகத்தீயின் புலம்பல் கவிதை நூலுக்கான நயப்புரையினை நயவுரைஞர் பேராசிரியர் பல்கலை வினோதனுமான திரு நவரத்தினம் குகபரன் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் உடுவிலூர்க்கவிச்சித்தனின் கவிதைகளில் கையாளளப்பட்டுள்ள மொழிஆளுமை, புதிய சொற்கள், 07 வகையில் ஆளுமை மிக்க கவிதைகள் வடித்தமை சார்ந்து காத்திரமான உரையினை நிகழ்த்தினார்.
தொடர்ந்து #இதயம்_பேசுகிறது சிறுகதை தொகுப்பு நூல் வெளியீடு கண்டது நூலினை திருமதி மல்லிகாமலர் இரத்தினம் அவர்களும் பிள்ளைகளும் வெளியீடு செய்ய யாழ்ப்பாண மண்ணில் தொடர்ந்து எது வித பிரதி பலனையும் எதிர்பாராது ஏழைகளின் பசி போக்கும் #இணுவையூர்_சிவருஷி அவர்கள் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
இந் நூலுக்கான நயப்புரையினை அரச இலக்கிய விருதாளரும் இலக்கிய ஆளுமையுமான வள்ளுவர்புரம் யோ. புரட்சி அவர்கள் நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் உடுவிலூர்க் கவிச்சித்தனின் சிறுகதைத் தொகுப்புப் பாங்கு, பழைய சொற்கையாடல், தாயக வேட்கை சார் கதைகள், சமூக நோக்கு என பல ஆளுமை மனிதர்களின் இலக்கியங்களோடு இதயம் பேசுகிறது நூலினை ஒப்பீடு செய்து நயந்தார்.
தொடர்ந்து வாழ்த்துக் கவிதையினை படைப்பாளி தமிழ்மொழி நிழ்த்தினார்.
மேலும் மன்னார் மண்ணின் படைப்பாளி காலக் கவிஞரான ஆயிரங் கவிப் படைப்பாளர் அன்பழகி கஜேந்திரா அவர்களும் சிறப்புக் கவிதையினை வழங்கினார்.
தொடர்ந்து வாழ்த்துரையினை யாழ்ப்பாணம் மண்ணின் ஆளுமை மிக்க பெண்ணிய எழுத்தாளரும் யாழிசைக் கவித்தடாக நிறுவுனருமான கலைமாமணி உடுவிலூர் கலா அவர்கள் நிகழ்த்தி படைப்பாளருக்கான மதிப்ளிப்பை நிகழ்த்தினார்.
தொடர்ந்து வாழ்த்துரையினை பல்கலைக்கழக மாணவி சலோமி அவர்கள் ஆங்கில மொழி மூலம் நிகழ்த்தினார்.
தொடர்ந்து வாழ்த்துரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் கலாநிதி மகேந்திரன் திருவரங்கன் அவர்களும், முன்னை நாள் சங்கானை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சின்னக் குட்டிசெல்லையா அவர்களும், திருகோணமலை மண்ணின் பெண் எழுத்தாளர் முன்னை நாள் அதிபர் கலாகீர்த்தி, கலாபூசணம் கிண்ணியா சபீனா அவர்களும்
நிகழ்த்தினார்.
தொடர்ந்து உடுவிலூர்க் கவிச்சித்தனின் உறவுகளின் வாழ்த்துரையினைப் பகிர்ந்திட
அழைப்பாளர்கள் மதிப்பளிப்பும் இடம்பெற்றது.
மதிப்பளிப்பினை உடுவிலூர்க் கவிச்சித்தனின் உறவுகள் நிகழ்த்தினர்.
தொடர்ந்து இணையவழி ஊடாக ஞானம் கலைக்கூட நிறுவுனர் திருமதி நதியா சுதர்சன் அவர்கள் இணைந்து வாழ்த்துரையாற்றினார்.
ஆசிரியரின் மூத்த அண்ணன் இரத்தினம் பிறைசன் அவர்களும் ஆசியுரையோடு இணைந்து கொண்டார்.
தொடர்ந்து ஏற்புரையினை இணைய வழி ஊடாக உடுவிலூர்க்கவிச் சித்தன் இணைந்து ஏற்புரையினை வழங்கினார். நன்றியுரையினை திரு இரத்தினம் பற்றீசன் நிகழ்த்தினார்.
"ஈழத்து இலக்கிய உலகில் உடுவிலூர்க்கவிச் சித்தனின் வருகை பெரிதும் பேசப்பட்டது " அவரின் இரு நூல்களையும் காத்திரமான படைப்புகளாக இலக்கிய ஆளுமைகள் நயன்தனர்...
திரியாயூரன் ✍🏻