Gulf Tamil

Gulf Tamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gulf Tamil, News & Media Website, Main Street, Kalmunai, Kalmunai.

10/12/2025
06/12/2025

மண்ணுக்குள் சிக்கித் தவித்த குடும்பம் மூன்று நாட்களின் பின் உயிருடன் மீட்பு! ZOHAN Photography

03/12/2025

FSMA-Q இன் அனர்த்த நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உதவும் நோக்குடன், கத்தார் வாழ் இலங்கை முஸ்லிம் சங்கங்களின் கூட்டமைப்பு (FSMA) ஒரு அவசர மனிதாபிமான ஆதரவு முயற்சியை ஆரம்பித்துள்ளது.

கத்தார் வாழ் உறவுகளாகிய உங்களது பங்களிப்பை அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.

📦 சேகரிக்கப்படும் பொருட்கள்
பாதிக்கப்பட்டவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பின்வரும் பொருட்களை அன்பளிப்பு செய்யலாம்:

📚 பாடசாலை அப்பியாசப் பொருட்கள் (புத்தகங்கள், எழுதுபொருட்கள் போன்றவை)

🍚 உலர் உணவுப் பொருட்கள் (அரிசி, பருப்பு, நூடுல்ஸ், பாஸ்தா போன்ற உணவுப் பொருட்கள்)

👕 புதிய ஆடைகள் (குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கானது)

📍 பொருட்கள் ஒப்படைக்க வேண்டிய இடம் மற்றும் நேரம் நீங்கள் உங்களது பொருட்களை நேரடியாக FSMA அமைப்பிடம் ஒப்படைக்கலாம்.

இடம் : Lanka Restaurant, BinMahmoud

https://maps.google.com/?q=25.279730,51.510075

காலம்: இன்று முதல் 02/12/2025 தொடக்கம் 05/12/2025 வரை.

நேரம் தினமும் காலை 7:00 மணி தொடக்கம் இரவு 11:00 மணி வரை.

🚗 குறிப்பு: பொருட்களை ஒப்படைப்பதற்கு வாகன வசதி இல்லாதவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு இலக்கங்களை தொடர்பு கொண்டு, உங்களது பொருட்களை கையளிக்க ஏற்பாடு செய்யலாம்.

📞 மேலதிக தகவல்களுக்கு தொடர்புக்கு:

சகோ. இல்ஹாம் 33651143
சகோ. முனாபர் 70424532
சகோ. பைசல் 55734734
சகோ. றிஷாட் 66301931

FSMA Q MEDIA

11/07/2025

அண்மையில் மரணித்த சகோதரர் முஹம்மது அஸ்மீர் அவர்களின் அன்புப் புதல்வனும், கமு/இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவனுமான முஹம்மது ஷஹீட் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தி பெற்று சாதனை.

அல்ஹம்துலில்லாஹ்!

மென்மேலும் கல்வியில் பல சாதனைகளைப் பெற, யங் மௌன்ட் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

10/05/2025

வார்த்தைகள் இல்லாத வடிவம் அப்பா🥰

கட்டார் வாழ் இலங்கை தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர் ஒன்றிணையும் வாய்ப்பு!📅 எதிர்வரும் 19ம் திகதி – மாலை ...
14/04/2025

கட்டார் வாழ் இலங்கை தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர் ஒன்றிணையும் வாய்ப்பு!

📅 எதிர்வரும் 19ம் திகதி – மாலை 7:00 மணி
🍽️ இரவு உணவுடன் ஒரு விசேட சந்திப்பு
📍 The Grand Lux Hotel, Al Sadd – Doha

🤝 முதலீட்டாலர்கள், முயற்சியாளர்கள், அனுபவசாளிகள் ஒன்றுகூடும் ஒரு அரிய சந்தர்ப்பம்!
நிறைவான நெட்வொர்க்கிங், புதிய வாய்ப்புகள், இன்ஸ்பிரேஷன் எல்லாம் ஒரே இடத்தில்!

📝 முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளவும்:

🔗 https://forms.gle/etjfq5KwD9pEGEEy5

⚠️ இன்னும் 10 சீட்டுகளே உள்ளன! இப்போதே பதிவு செய்யுங்கள்.

By Ceylon Business Builders – Qatar (CBBQ)

08/04/2025

🌿 உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான FSMA-Q வின் விழிப்புணர்வு முயற்சி.🌿

கத்தாரில் உள்ள இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான FSMA-Q, எங்கள் சமூக இளைஞர்களிடையே திடீர் மரணங்கள் அதிகரித்து வருவது குறித்து ஆழ்ந்த கவலை அடைகிறது.

2020 ஆம் ஆண்டின் இறுதியில் நாம் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்திருந்தாலும் இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை இன்று அதிகம் உணரப்படுகிறது. மார்ச் மாதத்தில் 40 வயதிற்கு கீழ் உள்ளவர்களில் திடீர் மரணங்கள் அதிகரித்துள்ள செய்தி, எங்கள் சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சவாலான நிலையை எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வை அதிகரிப்பது அவசியம்.
எமது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பு என்ற வகையில் இதை நெறிப்படுத்துவதை எம் தார்மீக கடமையாக கருதுகிறோம்.

🟢 முக்கிய காரணிகள்:

- சீரற்ற உணவு முறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு

- தொடர்ச்சியான உடற்பயிற்சி இல்லாமை.

- வேலை தொடர்பான அதிகமான மன அழுத்தம்.

- சில இலங்கை உணவகங்களில் தரம் குறைந்த மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்கள் அதிகரித்துள்ளமை.

🟡 எமது அங்கத்துவ அமைப்புக்களிடம் நாம் வைக்கும் வேண்டுகோள்:

- இந்த செய்தியை உங்கள் உறுப்பினர்களுக்கு பரவலாக பகிரவும்.

- உடல் உள ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்துவதன் அவசியத்தை எத்தி வையுங்கள்.

- உங்கள் சக்திக்கு ஏற்ப ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகள், உணவுப் பழக்கங்கள் பற்றி மக்கள் மயப்படுத்துங்கள்.

🟠எவ்வாறு பங்களிக்கலாம்:

நிதி உதவியாகவோ அல்லது தன்னார்வத் தொண்டராகவோ இக்கூட்டு முயற்சியில் பங்கேற்க விரும்பினால், கீழே உள்ள ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.

• சகோதரர் அர்ஷாத் - ஊடக ஒருங்கிணைப்பாளர் - 33780337 (FSMA)

• சகோதரர் ஸஹ்ரான் - நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் - 30024748 (FSMA)

• சகோதரர் முனாபர் - பொதுச் செயலாளர் - 77607166 (FSMA)

எம் இளைஞர்களின் நலத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியமான, அறிவார்ந்த சமுதாயத்தை வளர்க்கவும் நாம் ஒன்றுசேர்ந்து பணியாற்றுவோம்.

28/03/2025

கத்தார் வாழ் இலங்கையர்களுக்கான
நோன்புப் பெருநாள் தொழுகை.

இஸ்லாமிய கலாசார அமையம் அவ்காபின் அனுமதியுடன் FSMA-Q ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் கத்தார் வாழ் இலங்கையர்களுக்கான புனித நோன்பு பெருநாள் தொழுகையும், தமிழ் மொழி மூல குத்பாவும்
இன்ஷா அல்லாஹ் வழமை போன்று இம்முறையும் Stafford Sri Lanka School வளாகத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்.

நோன்பு பெருநாள் தொழுகையில் கத்தார் வாழ் அனைத்து இலங்கை உறவுகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்பாய் அழைப்பதுடன்.

தொழுகைக்கு வரும் போது தொழுகை விரிப்புடன் வுழு செய்து கொண்டு வருவதோடு பிரதான நுழைவாயில்களை மறைக்காமல் உங்கள் வாகனங்களை volunteers ஆக கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களின் அறிவுருத்தல்களுக்கு அமைவாக விசேடமாக ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம்.

🟢 ஆண்கள் பிரதான நுழைவாயில் (Main Entrance) : Gate no 01 மூலமாக உட்பிரவேசிப்பதுடன் உங்கள் வாகனங்களை mcdonlds முன்பாகவுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்துமாறும்

🟢 பெண்கள் பிரதான நுழைவாயில் (Primary Entrance): Gate no 02 மூலமாக உட்பிரவேசிப்பதுடன் உங்கள் வாகனங்களை gate no 2 முன்பாகவுள்ள பகுதிகளில் நிறுத்துமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.

_பெருநாள் தொழுகைக்கான நேரம் மற்றும் மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்!

தகவல்
ஊடகப் பிரிவு,
FSMA-Q

கத்தார் வாழ் இலங்கையர்கள் ஒன்றிணையும் நோன்புப் பெருநாள் தொழுகைFSMA-Q ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் கத்தார் வாழ் இலங்...
26/03/2025

கத்தார் வாழ் இலங்கையர்கள் ஒன்றிணையும் நோன்புப் பெருநாள் தொழுகை

FSMA-Q ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் கத்தார் வாழ் இலங்கையர்களுக்கான புனித நோன்பு பெருநாள் தொழுகையும், தமிழ் மொழி மூல குத்பாவும் இன்ஷா அல்லாஹ் வழமை போன்று இம்முறையும் Stafford Sri Lanka School வளாகத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்.

நோன்பு பெருநாள் தொழுகையில் கத்தார் வாழ் அனைத்து இலங்கை உறவுகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்பாய் அழைப்பதுடன்..

தொழுகைக்கு வரும் போது தொழுகை விரிப்புடன் வுழு செய்து கொண்டு வருவதோடு பிரதான நுழைவாயில்களை மறைக்காமல் உங்கள் வாகனங்களை ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம்.

🔹ஆண்கள் பிரதான நுழைவாயில் (Main Entrance) : 01 மூலமாகவும்,

🔹பெண்கள் பிரதான நுழைவாயில் (Primary Entrance): Gate no 02 மூலமாகவும் உட்பிரவேசிக்க முடியும்.

_பெருநாள் தொழுகைக்கான நேரம் மற்றும் மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்._

தகவல்: ஊடகப் பிரிவு
FSMA-Q

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம்கேட்கிறான்.."உன்னுடைய இப்போதைய அம்மாஎப்படி"....
26/03/2025

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம்
கேட்கிறான்..

"உன்னுடைய இப்போதைய அம்மா
எப்படி".என்று.

அப்போது அந்த மகன் சொன்னான் .
"என் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக
இருந்தாள். ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்வது இல்லை"

இதைகேட்ட தகப்பன் கேட்டான்..!
" அப்படி உன் அம்மா உன்னிடம் என்ன பொய்
சொன்னாள்?"

அந்த குழந்தை சிறு சிரிப்புடன் தன்
தகப்பனிடம் சொன்னான் .....
"நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா
சொல்வாள், எனக்கு இனிமேல் சாப்பாடு
தரமாட்டேன் என்று .

ஆனால் கொஞ்சநேரம் கழிந்த பிறகு என்னை தன்னுடைய மடியில்
அமர்த்தி பாட்டுபாடி , நிலாவைக்காட்டி
கதை சொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய # பாசம் இருக்கும்..

ஆனால்..
இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் 'உனக்கு சோறு
தரமாட்டேன்' என்று . இன்றுடன் சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிறது".

பெற்ற தாய்க்கு நிகர் இந்த உலகில்
யாருமில்லை...!💔

Address

Main Street, Kalmunai
Kalmunai
00000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gulf Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gulf Tamil:

Share