17/05/2024
இக்காமா காலாவதி ஆகி ஐந்து மாதமாக நாட்டிற்கு செல்ல முடியாமல் இருந்த நான்கு தமிழர்களுக்கு எக்சிட் விசா வழங்கி நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது*.
*Finally 4 Iqama Expired Tamilans Departed to India ☺️
அவர்களை பல முயற்சிகள் மேற்கொண்டு நாட்டிற்கு அனுப்பி வைத்த வேலூர் யை சேர்ந்த அண்ணன் ஜேர்மியா மற்றும் அவருக்கு துணை உதவியாக இருந்த Mrs Angel , அருள் ஆகாஷ் , அண்ணன் ஜார்ஜ், அவர்களுக்கு நஜ்ரான் தமிழ் மன்றம் சார்பாக பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 👏🏻☺️💯
அவர்களுக்கு உதவி தொகை கொடுத்த OICC Najran Committee மற்றும் நஜ்ரான் சர்ச் நபர்களுக்கு நஜ்ரான் தமிழ் மன்றம் சார்பாக மனமார்ந்த நன்றிகள் 🙏🏻
தன் கபில் யிடம் நான்கு மாதம் சம்பளம் இல்லாமல் வேலை செய்து இக்கமா காலாவதி ஆகி கடந்த ஐந்து மாதம் ஆக தமிழ் நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தனர்.
இந்நிலையில்
நஜ்ரான் ல் 30 வருடங்களாக பணிபுறியும் வேலூர் யை சேர்ந்த நம் அண்ணன் ஜெரிமியா அவர்கள் அந்த நான்கு நபரை ஐந்து மாதமாக தன் வீட்டில் வெளியில் உள்ள ஒரு அறையில் தங்க வைத்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவியும் செய்து பாஸ்போர்ட் எடுத்து பல முயற்சிகள் மேற்கொண்டு எக்சிட் விசா அடித்து நாட்டிற்கு அனுப்பி வைத்து உள்ளார்.அண்ணன் ஜெர்மியா அவர்களின் மனைவி Angel அந்த நான்கு நபர்களுக்கு புது ஆடைகள் வாங்கி கொடுத்து ஏர்போர்ட் சென்று தன் குடும்பத்தில் ஒருவரை வழி அனுப்புவது போல் அனுப்பி வைத்தனர்..நல் உள்ளம் கொண்ட அவர்களுக்கு நன்றி 👌🏻
அவர்கள் நான்கு நபர்களும் ஜூபைல் இந்திய தூதரகம் செல்ல போக்குவரத்து செலவுக்காக நஜ்ரான் ல் ஜெர்மியா அவர்கள் நடத்தும் சர்ச் மூலம் 2000 ரியால் மற்றும் நஜ்ரான் சபை ஆகிய சர்ச் மூலம் 2000 ரியால் வசூலித்து கொடுத்து உதவி செய்து உள்ளார்கள்.
OICC நஜ்ரான் கமிட்டி 1000 ரியால் உதவி செய்து உள்ளனர்.
உதயம் ஹோட்டல் மற்றும் அவர்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நஜ்ரான் தமிழ் மன்றம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்🙏🏻☺️