நம்ம ஆம்பலாப்பட்டு .#Namma Ambalapattu

நம்ம ஆம்பலாப்பட்டு .#Namma Ambalapattu Get to know about Ambalapattu updates

நேற்று 07.10.25 கோட்டூர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ,2025-26 ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 50 மற்றும் அதற்கும் கூ...
08/10/2025

நேற்று 07.10.25 கோட்டூர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ,2025-26 ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 50 மற்றும் அதற்கும் கூடுதலாக மாணவர்களை சேர்த்துள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களை பாராட்டி மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மகிழ்ச்சியான நிகழ்வு!!

நம் பள்ளிக்கு சுமார் 35,000 மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் பரிசளிப்பு செய்த முன்னாள் மாணவர்கள்1.N.ராகேஷ் குமார் 2.R.தெ...
19/09/2025

நம் பள்ளிக்கு சுமார் 35,000 மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் பரிசளிப்பு செய்த முன்னாள் மாணவர்கள்
1.N.ராகேஷ் குமார்
2.R.தெய்வா என்கிற கார்த்திகேயன்
3.S.சதீஷ்குமார் ஆகிய மூவருக்கும் வாழ்த்துக்கள்!! நன்றிகள்!! ஒன்றினைந்து செய்த ம.செந்தில்குமார் அவர்களுக்கு நன்றி!!!

நமது மேல்நிலைப் பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், பெரிய ஒளி பெருக்கி (projector) மற்றும் இயந்திர மணி கீழ் கண்ட ...
17/09/2025

நமது மேல்நிலைப் பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், பெரிய ஒளி பெருக்கி (projector) மற்றும் இயந்திர மணி கீழ் கண்ட கொடையாளர்களால் வழங்கப்பட்டது. வாழ்த்துக்கள்!! நன்றிகள்!!
நன்கொடையாளர்கள் பெயர்கள்
1.டாக்டர் R.அன்பரசன் அவர்கள்
2.திரு நேதாஜி அவர்கள்
3.திருமதி சாந்தி கருணாநிதி அவர்கள்
4.M.மணவாளன் வழக்கறிஞர் அவர்கள்

ஒரத்தநாடு வட்டார அரசு பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற  #குறும்பட உருவாக்க போட்டியில் கலந்து கொண்டு  #முதலிடம் பெற்ற நமது மேல...
12/09/2025

ஒரத்தநாடு வட்டார அரசு பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற #குறும்பட உருவாக்க போட்டியில் கலந்து கொண்டு #முதலிடம் பெற்ற நமது மேல்நிலைப் பள்ளி மாணவன் #சச்சுதன் ஆம்பல் வீர. இளங்கோவன் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்!! மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்!!!🌹🌹

ஏரிக்கரை அய்யனார் கோவில் முன் மண்டப பணி துரிதமாக நடைபெற்று வருகிறது!!!!
09/09/2025

ஏரிக்கரை அய்யனார் கோவில் முன் மண்டப பணி துரிதமாக நடைபெற்று வருகிறது!!!!

 #சீதனத்தின் முன்னெடுப்பில்  நமது மேல்நிலைப் பள்ளியில்  #சதுரங்க விளையாட்டு பயிற்சி வகுப்பு தொடங்கி நடைபெறும். பயிற்சிக்...
02/09/2025

#சீதனத்தின் முன்னெடுப்பில் நமது மேல்நிலைப் பள்ளியில் #சதுரங்க விளையாட்டு பயிற்சி வகுப்பு தொடங்கி நடைபெறும். பயிற்சிக்கான அணைத்து #உபகரணங்கள் தலைமை ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
#பயிற்சி வகுப்பு #நேரம்: 4-5 மாலை.
மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு வெற்றி வாகை சூட #வாழ்த்துக்கள்!!!💐💐💐

நமது மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க விளையாட்டு பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகிறது!!!
27/08/2025

நமது மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க விளையாட்டு பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகிறது!!!

கண்டியர் தெருவில் வடகாடு வாய்க்கால் பாசன பகுதி விவசாயிகள் முன்னெடுப்பில் தூர் வாரப்பட்டது!!! கடைசி நான்கு புகைப்படங்கள் ...
24/08/2025

கண்டியர் தெருவில் வடகாடு வாய்க்கால் பாசன பகுதி விவசாயிகள் முன்னெடுப்பில் தூர் வாரப்பட்டது!!! கடைசி நான்கு புகைப்படங்கள் தூர் வாரும் பணிக்கு முன்பு!!

பள்ளி தொடங்கும் முன் காலை வேளையில் நூலகத்தை பயன்படுத்தும் பள்ளி மாணவ மாணவிகள்!!
22/08/2025

பள்ளி தொடங்கும் முன் காலை வேளையில் நூலகத்தை பயன்படுத்தும் பள்ளி மாணவ மாணவிகள்!!

நமது மேல்நிலைப் பள்ளி மாணவி நெ.மதுமிதா தஞ்சாவூர் மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய தந்தை பெரியார்  பிறந்தநாள் பேச்ச...
22/08/2025

நமது மேல்நிலைப் பள்ளி மாணவி நெ.மதுமிதா தஞ்சாவூர் மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சு போட்டியில் பங்கு பெற்று 2000 சிறப்பு பரிசு பெற்றார் !!!

ஜுனியர் ரெட் கிராஸ்               ஜெனிவா ஒப்பந்த நாள் விழாவில் நம் பள்ளி மாணவர்கள்  #மாவட்ட அளவில் நடைபெற்ற ஜூனியர் ரெட்...
20/08/2025

ஜுனியர் ரெட் கிராஸ்
ஜெனிவா
ஒப்பந்த நாள் விழாவில் நம் பள்ளி மாணவர்கள் #மாவட்ட அளவில் நடைபெற்ற ஜூனியர் ரெட் கிராஸ் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளார்கள்!!! வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் மேலும் பல வெற்றிகளை பெற!!

#கிருஷ்ணவேணி 9B
#கட்டுரை போட்டியில் மூன்றாமிடம்
#வர்ஷிகா 10 A
#நடன போட்டியில் இரண்டாமிடம்
#மஹதி 6A
#பேச்சு போட்டியில் இரண்டாமிடம்
#வெங்கடேசன் 9B
#பாட்டு போட்டியில் முதலிடம்
#நிதர்சனா 6B
#நடன போட்டியில் முதலிடம்

பல்வேறு முன்னெடுப்பின் பயனாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் சீரிய முயற்சியால் வேளானி கரையில் இருந்து ஆண்டாள் ஏரி வரை நீர் வழி...
19/08/2025

பல்வேறு முன்னெடுப்பின் பயனாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் சீரிய முயற்சியால் வேளானி கரையில் இருந்து ஆண்டாள் ஏரி வரை நீர் வழிப்பாதை தூர் வாரப்பட்டது!!!*
#மாவட்ட_ஆட்சியர்_தஞ்சாவூர் அவர்களுக்கு நன்றி!!! #பொதுப்பணித்துறை

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம ஆம்பலாப்பட்டு .#Namma Ambalapattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to நம்ம ஆம்பலாப்பட்டு .#Namma Ambalapattu:

Share

Category