ER STORY ENG

ER STORY ENG Welcome to MANABIRUNTHA

11/10/2025

Tamil Motivation |

My favourite hoby... ✍🏻😇
06/12/2024

My favourite hoby... ✍🏻😇

Your biggest enemy is your uncontrolled mind 🧠
06/12/2024

Your biggest enemy is your uncontrolled mind 🧠

30/11/2024

அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான்.

பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின்

வீட்டில் தங்கினான்......!!

அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது.....!!

யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என

நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்......!!

அரசன் காலையில் எழுந்து கொண்டபோது ,

நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான்.....!!

அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது.....!!!

அரசன் அந்த நெசவாளியிடம்

"இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான்......!!

‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது.......!!!

குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’

என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.

அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது......

‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன்.......!!!

‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்......!!

இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன்......!!!

இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்......!!

அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான்.....!!

‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.....!!

‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது.

அதன் தொல்லையை சமாளிக்க,

இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!’’

என்று பதில் சொன்னான்.....!!

அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது.....!!

நெசவாளியைப் பார்த்து ,

‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.

‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக்கும்போது வாய் சும்மாதானே இருக்கிறது.......!!

அதனால்,

அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன்..... !!

அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்......!!!

‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்.....?

உள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன்.....!!

அதற்கு நெசவாளி சொன்னான்:

‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது....!!

ஆகவே,

அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள

மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன்.....!!!

என்னிடம் பாடம் கேட்கும்போது,

அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.......!!!

ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா...??

என அரசனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை.....!!!

நெசவாளி சொன்னான்:

‘‘இது மட்டுமில்லை.

என் மனைவி கிரேக்கத்துப் பெண்.

ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள்....,!!

வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’...!!!

ஒருவன் விரும்பினால் ,

ஒரே நேரத்தில் ,

கற்றுக்கொள்ளவும் ,

கற்றுத் தரவும் ,

வேலை செய்யவும் ,

வீட்டை கவனிக்கவும்

முடியும் என்பதற்கு

இந்த நெசவாளி தான் சாட்சி....!!

நமது சோம்பேறித்தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல்... !!

தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்....!!

உழைப்பே உயர்வினை தரும்.....!!

அதுவே நிம்மதியான நிலையான சந்தோஷமான வாழ்வினை தரும்....

தன்னை உயிராய் நேசிப்பவனிடம்...."என்னால் உன்னைக் காதலிக்க முடியாது உன் காதலை மதிக்கிறேன் என்றாள்".அவன் அவளுடைய முடிவை மதி...
24/11/2024

தன்னை உயிராய் நேசிப்பவனிடம்....

"என்னால் உன்னைக் காதலிக்க முடியாது உன் காதலை மதிக்கிறேன் என்றாள்".

அவன் அவளுடைய முடிவை மதித்தான்.....!

பின் ஒரு நாள்,

இருவரும் சேர்ந்து தேநீர் அருந்துவதற்காக நேரம், இடம் குறித்தார்கள்.....

மாலை நேரம்......,

அவனிடமிருந்து அழைப்பு வந்தது
அவள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னாகவே வந்து சேர்ந்திருந்தாள்..........

இப்போது தன்னால் வரமுடியுமா என்பது தெரியவில்லை என்றான்.

வேலையில் சிக்கிக்கொண்டான் அவன்,
சந்திப்பை ஒத்திப்போடச் சொன்னான்............

அவனால் இப்போது வரவேமுடியாது என்று நன்கு தெரிந்த பின் அவனுக்காக தேநீர்க் கடையில் இரவு வரை காத்திருந்தாள் அவள்.............

இரவின் முன்மத்தியில் (10.00 மணி) குறுஞ்செய்தி அனுப்பினாள்,

"நான் கிளம்பட்டுமா?"

அடுத்த சிறிது நேரத்தில் அடித்தோடி அரக்க பறக்க வந்து சேர்ந்தான் தன்னுயிர்ப்பெண் அவளைக் காக்க வைத்ததை தாங்கிக் கொள்ள முடியாமல்.......

கண்களில் நீரரும்ப நின்றான்.

"நாந்தான் உங்கள போகச் சொன்னேனே! ஏன் எனக்காக காத்திருக்கிங்க? அதுவும் இவ்வளோ நேரம், தனியா!

மாபெரும் குற்ற உணர்வுக்குள் உள்ளிருந்தான்....

உங்கள் இந்த சுயவதை என்னை கலங்கடிக்கத்தானா?"

இல்லை! என்னால் உனக்குப் பரிபூரணமாக தரமுடிந்தது இந்தக் காத்திருப்பை மட்டும்தான்.

காதல் பல ரூபம்....

-சித்திரம் பேசுதடி

வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால்கையில் சேரவில்லை...............!காற்றில் எங்கும் உன் வாசம்வெறும் வாசம் வாழ்க்கையில்லை.......
24/11/2024

வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால்
கையில் சேரவில்லை...............!

காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை...................!

உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ.............!!!

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா?

கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா?

நெஞ்சு நனைகின்றதா இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா?

காற்றில் கண்ணீரை ஏற்றி........,

-இவள் சித்திரம்

Address

Istanbul

Website

Alerts

Be the first to know and let us send you an email when ER STORY ENG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share