Vaanoli mandram vaanoli mandram

Vaanoli mandram vaanoli mandram உலக தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி

10/24/2022
வானொலிக் குடும்பத்தின் மற்றொரு உறவு இன்று விடை பெற்றது…ஜோக்கிம் fபெர்ணான்டோ (இன்று நண்பகல் 12.40 அளவில்) காலமானார் என்ற ...
08/17/2021

வானொலிக் குடும்பத்தின் மற்றொரு உறவு இன்று விடை பெற்றது…
ஜோக்கிம் fபெர்ணான்டோ (இன்று நண்பகல் 12.40 அளவில்) காலமானார் என்ற துயரச்செய்தியை சற்று முன்னர் சகோதரி நாகபூஷணி தெரிவித்தார்.
வயதாலும், வானொலி அனுபவத்தாலும் மூத்தவரான அவரும் நானும் ஒன்றாகவே வானொலி அறிவிப்பாளர்களாகத் தெரிவானோம். மிகச்சிறந்த வானொலிக் கலைஞராக, கல்விச்சேவை, மாதர் பகுதி, தேசியசேவை நாடகங்கள் என ஏற்கனவே நாம் இருவரும் இணந்து நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டிருந்தாலும், 1967ன் இறுதியில், அறிவிப்பளர்களாகத் தெரிவாகி, ஒன்றாகப் பணியாற்ற ஆரம்பித்த பின்னர்தான் நெருங்கிப் பழகினோம். எவரோடும் முரண்படாமல் தோழமையுடன் பழக அவரால் எப்படி முடிகிறது என பலதடவைகள் நான் ஆச்சரியப்பட்டதுண்டு. வங்கியில் வகித்த நிரந்தரப் பதவியைக்கூட, (சகோதர மொழி கட்டாயமாக்கப்பட்தால்) உதறித் தள்ளிவிட்டு, இறுதிக்காலம் வரை பகுதிநேர அறிவிப்பாளராகவே, வானொலிக்குத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர். எல்லோருக்கும் நல்லவரான என் அருமைச் சகோதரனின் ஆன்மா நற்பேறு அடைய பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அப்துல் கமீர்

முதன் முதலில் மதுரையில் நடந்த பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி
06/22/2021

முதன் முதலில் மதுரையில் நடந்த பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி

05/08/2021

அன்னையர் தின வாழ்த்துகள்

இதே நாளில் அன்று (30.4.2017) கடந்த வருடம் BBC தமிழோசையின்   சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது !BBC தமிழோசை என்பது பிபிசி...
05/02/2021

இதே நாளில் அன்று (30.4.2017)
கடந்த வருடம் BBC தமிழோசையின்
சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது !

BBC தமிழோசை என்பது
பிபிசி உலக சேவை வானொலியின்
தமிழ் சேவையாகும்.

இவ் வானொலி சேவையானது
1941 மே 3 ஆம் நாள் முதல்
இயங்கி வந்தது.

இவ் வானொலி நாள்தோறும்
30 நிமிடங்கள் தமிழ் மொழியில் உலகச் செய்திகளையும் வேறு பல நிகழ்ச்சிகளையும்
வழங்கி வந்தது.

இந்திய, இலங்கைச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு செய்தியரங்கம் பகுதியில் அவை விரிவாக ஆராயப்பட்டது.

தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் இச்சேவை சிற்றலையில் வானலைகளில் ஒலிபரப்பானது, ஏனைய பிரதேசங்களில் இணைய தளத்தில் ஒலிபரப்பானது.

இந்நிகழ்ச்சிகளை
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
தனது தேசிய சேவையில்
மறு ஒலிபரப்பு செய்தது.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி அன்று 74 ஆண்டுகளை நிறைவு செய்து, 75 ஆவது ஆண்டில்
அடியெடுத்து வைத்து தமிழோசைக்கு பவளவிழாவை கொண்டாடியது.

தமிழோசையின் 76 ஆண்டு கால சிற்றலை ஒலிபரப்பு,
இதே நாளில் (30.4.2017) முதல் நிறுத்தப்பட்டது.

இந்தியாவிலும் இலங்கையிலும் தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்களின் தாக்கத்தால் ஆதரவு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக தமிழோசையின் ஒலிபரப்பு நிறுத்தப்படுவதாகவும்
இனி தற்கால சூழலுக்கேற்ப
இணையத்தின் வழியாக
BBC தமிழோசை நிகழ்ச்சிகள் நேயர்களை சென்றடையும் என
BBC தெரிவித்தது.

உடனடியாக விண்ணப்பியுங்கள். உங்கள் அயலவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். உங்களின் ஒரு சிறிய உதவியால் ஒரு குடும்பமே நலன்பெற...
12/28/2020

உடனடியாக விண்ணப்பியுங்கள். உங்கள் அயலவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். உங்களின் ஒரு சிறிய உதவியால் ஒரு குடும்பமே நலன்பெறலாம்.

இன்று அதிகமானவர்கள் தனக்கு தெரிந்த நல்ல தகவல்களை அயலவருக்குக்கூட அறியப்படுத்துவதில்லை.

Share பண்ணிவிட்டு நிறுத்திவிடாதீர்கள். இளையோருக்கு எடுத்துச்சொல்லுங்கள்.

தரம் 9, 10 மற்றும் O/L. வுடன் பாடசாலை இடைவிலகியவர்களுக்கு, அரசாங்க இலவச NVQ பாடநெறிகள் சகல துறைகளிலும் வழங்கப்படுகின்றது.

6 மாதம் அல்லது 01 வருட பயிற்சிநெறிகள்

வயதெல்லை 17 தொடக்கம் 29 வரை.

www.dtet.gov.lk

விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள கீழுள்ள Linkய் பயன்படுத்துங்கள்.

NVQ 3 - 4, Closing Date 30-12-2020

http://www.dtet.gov.lk/wp-content/uploads/2020/12/2021-TAMIL-3-4.pdf

NVQ 5 - 6, Closing Date 29-01-2021

http://www.dtet.gov.lk/wp-content/uploads/2020/12/2021-TAMIL-5_6.pdf

முழுநேர அல்லது பகுதி நேர வகுப்புகளும் உள்ளன.
இலவச போக்குவரத்து,
மாதாந்தம் 1,000/- கொடுப்பனவுடன்.
விரும்பிய மாவட்டத்தில் கற்கலாம்.
இருமொழிகளிலும் நடாத்தப்படுகிறது.

மேலதிக தொடர்புகளுக்கு 011-2348893.

நல்ல அறிவிப்பாளர் கூட்டம், நல்ல தெளிவு. நீங்களும் கேட்டு பாருங்கள்.
12/18/2020

நல்ல அறிவிப்பாளர் கூட்டம், நல்ல தெளிவு. நீங்களும் கேட்டு பாருங்கள்.

இளையராஜாவின் பாடல்களோடு இணைந்து இருப்போம்....

ஒரு வானொலி இருந்திருந்தால்....! **************************************************** சிறப்பு கட்டுரை !! ****************...
12/15/2020

ஒரு வானொலி இருந்திருந்தால்....!
****************************************************
சிறப்பு கட்டுரை !!
**************************
வெள்ள நாட்களில் சென்னையில் யாரும் யாருடனும்
செல்பேசி / தொலைபேசி ஊடாகத் தொடர்புகொள்ள முடியவில்லை.

நிமிடத்துக்கு ஒரு முறை செல்பேசி மூலம் ‘அப்டேட்’ கொடுப்பவர்கள் அன்றைக்கு யார் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றுகூட அறிந்துகொள்ள முடியாத சூழலில், பித்துப்பிடித்தவர்கள்போல் ஆயினர்.

எனக்கு வானொலிகளின் காலம் ஞாபகத்துக்கு வந்தது.
எனக்குத் தெரிந்து இன்றைக்கு எந்த அலுவலகத்திலும் வானொலிப் பெட்டிகள் இல்லை.

இப்போது செல்பேசிகள் டார்ச், வானொலி என்று எல்லா வசதிகளையும் உள்ளடக்கியவையாக மாறிவிட்டன.
ஆனால், வீட்டுக்கு ஒரு சின்ன வானொலி இருந்திருந்தாலும் மழை பாதித்த நேரத்தில் பேட்டரியில் இயங்கவைத்து வெளியில் என்ன நிலவரம் என்பதை அறிந்துகொண்டிருக்கலாம்.

‘இப்போது மட்டும் வானொலி இருந்திருந்தால்’ என்ற ஏக்கத்தில் இருந்தவர்களை அந்த நேரத்தில் பார்க்க முடிந்தது.

கடந்த ஒரு வார காலமாக சென்னை மக்கள் வெள்ளத்தால் பெரிதும் அவதிப்பட்டு வருவதை நாம் அறிவோம்.

நகர் முழுவதும் வெள்ளக்காடாக இருக்கிறது.
கான்கிரீட் காடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
வெளியே எங்கும் செல்ல முடியவில்லை.
மின்சாரம் இல்லை.

அத்தியாவசியப் பொருட்களும் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு. தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்தும் செயலிழந்துவிட்டன.

இப்படியான சூழலுக்கு வானொலி மிகச் சிறந்த நண்பன்.
காரணம், அதற்கு குறைந்த சக்தி மின்சாரம் இருந்தால் போதும்.
இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் டைனமோ வானொலிப் பெட்டிகள் எல்லாம் சந்தையில் கிடைக்கின்றன.

பத்து முறை சுற்றினால் பேட்டரி சார்ஜ் ஆகி
இரண்டு மணி நேரம் பாடும்.
ஆனால், நாம் அதை மறந்துவிட்டோமே!
எனக்கு 75 வயது மதிக்கத்தக்க ஒரு வானொலி நண்பர் இருக்கிறார்.

செல்பேசி சேவை கிடைத்த பிறகு, நேற்று பேசினேன். பதற்றத்தோடு, எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டேன்.
அகில இந்திய வானொலியில் வானிலை அறிக்கையைத் தொடர்ந்து கேட்டதன் பயனாக தனக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி வைத்துக்கொண்டதைச் சொன்னார்.

பாதுகாப்பான இடம் நோக்கி நகர்ந்துவிட்டதையும் சொன்னார்.
வானொலிப் பெட்டியைப் பற்றிப் பேசும்போது இன்னும் ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.
நம்மில் எத்தனை பேருக்கு ஹாம் அல்லது அமெச்சூர் வானொலிகளைப் பற்றித் தெரியும்?

போலீஸாரின் கைகளில் உள்ள வயர்லெஸ் வாக்கி டாக்கிகளைப் பார்த்திருப்பீர்கள்.
அதனை ‘வாக்கி டாக்கி’ என்று கூறுவதே தவறு.
‘வாக்கி டாக்கி’ என்பது நகரின் பெரிய மால்களிலும் தியேட்டர்களிலும் உள்ள பணியாளர்கள் பயன்படுத்துவார்களே, அதைத்தான் வாக்கி டாக்கி என்பர்.
போலீஸ் வைத்திருப்பது வயர்லெஸ் வானொலிகள்.
வாக்கி டாக்கி என்பவை 500 மீட்டர் முதல் ஒரு கி.மீ. சுற்றளவு மட்டுமே தனது சக்தியைப் பொருத்து எடுக்கும் திறன் கொண்டது. ஆனால், போலீஸார் வைத்திருப்பது 10 கி.மீ. சுற்றளவு வரை எடுக்கக் கூடியது.
‘ரிப்பீட்டர்கள்’ கிடைத்தால் மேலும் 50 முதல் 100 கி.மீ வரை கூடத் தொடர்புகொள்ளலாம்.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், காவலர்கள் வைத்திருக்கும் இதே போன்ற கருவியை நீங்களும் வைத்துக்கொள்ள அரசு அனுமதி அளிக்கிறது.
நான் வைத்திருக்கிறேன், உரிமத்துடன்.

யாருடன் பேச?

உலகம் முழுவதும் நம்மைப் போல் உரிமம் வாங்கி வைத்துள்ள அனைவருடனும். இப்படி உரிமம் வாங்கிப் பயன்படுத்துபவர்களைத்தான் நாம் ஹாம் வானொலி உபயோகிப்பாளர்கள் என்கிறோம்.

இதுபோன்ற ஆபத்துக் காலங்களில் இந்த ஹாம் வானொலிதான் தகவல் தொடர்புக்கு உலகெங்கும் கை கொடுத்தது, கொடுத்தும்வருகிறது.

உலகிலேயே அதிகம் ஹாம் ரேடியோக்களைப் பயன்படுத்துபவர்கள் ஜப்பானியர்கள்.
அவர்கள் அதிக பேரிடர்களை எதிர்கொள்வதே இதற்குக் காரணம்.

ஹாம் வானொலியைப் பயன்படுத்த எந்த ஒரு செல்பேசி கோபுரமும் தேவையில்லை.
மின்சாரமும் குறைந்த அளவே தேவை.
எங்கே இருக்கிறோமோ அந்த நொடியில் அங்கு இருந்து உலகம் முழுவதும் தொடர்புகொள்ள முடியும்.
மாதம் ஆனதும் சர்வதேச அழைப்புகளுக்குப் பில் தொகை எகிருமே என்ற கவலையும் வேண்டாம்.
தனிநபர்களால் வாங்க முடியாத சூழலில் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்புகள் தெரிவிக்கும் வகையில் அமைப்புகளேனும் வாங்கிப் பயன்படுத்தலாம்.

எனக்குத் தெரிந்து சென்னையில் உள்ள எந்த ஊடகமும் ஹாம் வானொலிப் பிரிவைத் தன்னகத்தே கொண்டதாகத் தெரியவில்லை.
இனியேனும் யோசிப்போமா?

- தங்க. ஜெய்சக்திவேல்,
உதவிப் பேராசிரியர்,
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்.
தொடர்புக்கு: [email protected]
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ்

இன்று உலக தொலைக்காட்சிகள் தினம்...முன்பெல்லாம் 10 வீட்டுக்கு ஒரு டிவி வடக்கில் இலங்கை அலைவரிசைகள் இயங்காவிட்டாலும் 40 அட...
11/21/2019

இன்று உலக தொலைக்காட்சிகள் தினம்...

முன்பெல்லாம் 10 வீட்டுக்கு ஒரு டிவி வடக்கில் இலங்கை அலைவரிசைகள் இயங்காவிட்டாலும் 40 அடிக்கு அன்ரனா கட்டி அதில் பொதிகை செனல் பார்ப்பதில் அப்படி ஒரு ஆனந்தம். இன்று நேத்ரா எப்படியோ அப்படி தான் பொதிகை கிரிக்கெட் நடந்தால் நேசனல் ஆகிவிடும் மெச் என்றால் ஒரு பட்டாளமே இருக்கும் அதில் இடையே சண்டைகளும் வந்துவிடுவதுண்டு என்ன ஒரு ஆனந்தம்...

முன்பெல்லாம் திருமண வீடு, சாமத்திய வீடுகள் நடந்தால் அப்படி ஒரு சந்தோசம் நிகழ்வு நடந்த அடுத்த நாள் அந்த வீட்டில் திரை கொண்டாட்டம் தான். இரவு 8 மணிக்கு இழுக்கப்படும் டைகர் இஞ்சின் அதிகாலை 5 மணிவரை இயங்கும் இரவிரவாக அயலவர்களுடன் சேர்ந்து ஒரே நாளில் 5 படங்கள் பார்ப்பதும் மறுநாள் பாடசாலையில் படங்களை பற்றி விவாதிப்பதும் அதற்காக சண்டையிடுவதும் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம். அன்று அதுவே எங்களை ஒற்றுமையாக வைத்திருந்தது என்று கூட சொல்லலாம்... 10 பேர் டிவி பார்க்க மாறி மாறி டைனமோ சுத்தியதும், பெட்ரி வாடகைக்கு எடுத்து டிவி இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கும்

ஆனால் இன்று வீட்டுக்கு 2 அல்லது 3 டிவி யாருடைய முகத்தையும் பார்த்தும் கதைப்பதில்லை. கைப்பேசி வந்ததால் ஒருப்பக்கம் டிவி ஒடும் மறுப்பக்கம் போனை நோண்டுவது. புதிய படங்களை எத்தனை பேர் முழுமையாக பார்க்கின்றோம் சந்தேகமே...

நான் இறுதியாக குடும்ப உறுப்பினர்கள் எல்லோருடனும் ஒன்றாய் இருந்து பார்த்தது தேர்தல் முடிவுகள்... நீங்கள் பார்த்தது.

இது இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற 1982 இல் அக்டோபர் 20 ஆம் திகதி தேர்தல் முடிவ...
11/18/2019

இது இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற 1982 இல் அக்டோபர் 20 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்....

இன்று கணினி வரைகலை வளர்ச்சிகள் காணப்பட்டாலும் அவ்வாறான ஒரு வசதிகள் இல்லாத காலப்பகுதி, இலங்கைய தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலத்தில் தேர்தலை சந்தித்தமையால் தேர்தல் முடிவுகளை வழங்குவது பாரிய சவாலாக காணப்பட்டது இருந்த போதும் அதனை தங்களிடமிருக்கும் சிறிய தொழில்நுட்ப வசதியோடு செய்து காட்ட முடிவெடுத்து இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி அதன்படி தொகுப்பாளர் தேர்தல் முடிவுகளை வாசிக்க 06 வேட்பாளர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்ட பாரிய பெயர் பலகை தொகுப்பாளரிற்கு பின்புறம் வைக்கப்பட்டிருந்ததோடு அவர்கள் பெற்ற வாக்கு விபரம் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படும். அதேவேளை அவர்கள் பெற்ற வாக்குகளுக்கான இடங்களை குறிப்பிட இலங்கையின் பெரிய வரைப்படம் காட்சிக்குட்பட்டிருந்ததோடு அவற்றை விளங்கப்படுத்த ஒரு தொகுப்பாளர் தயாராக இருப்பார். சவால் மிக்க அந்த சமூக பணியை பாரிய தொழில்நுட்பம் இல்லாமல் சிறப்பாக செய்துக்காட்டியது இலங்கை ரூபவாகினி தொலைகாட்சி.

தேர்தல் முடிவுகளை வாசிப்பவர்: சுமனா நெல்லம்பிட்டியா

ஆல் இந்தியா ரேடியோ கோயம்புத்தூர் FM ரெயின்போ 103.0 பண்பலையில் இன்று 'எதிர்நீச்சல்' நிகழ்ச்சியில் பங்கேற்று தனது வாழ்க்கை...
09/16/2019

ஆல் இந்தியா ரேடியோ
கோயம்புத்தூர் FM ரெயின்போ 103.0 பண்பலையில்
இன்று 'எதிர்நீச்சல்' நிகழ்ச்சியில் பங்கேற்று
தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்
வாள்சண்டை வீராங்கனை ஹேமா.

சிறுவயதிலேயே போலியோ பாதிப்புக்குள்ளானவர்,
சர்வதேச வாள்சண்டை போட்டியிலும் தேசிய அளவிலான பல்வேறு தடகளப் போட்டிகளிலும் முத்திரை பதித்தவர்.

மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காக
சமுதாயப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

Address

Dallas, TX

Telephone

+12145742168

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vaanoli mandram vaanoli mandram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category