Ceylon Flash News

Ceylon Flash News Fast | Accurate | Trusted

சவுதி அரேபியாவின் பாதுகாப்பும் : அரபுப்பிராந்திய இஸ்திரத்தன்மையும்(எழுத்து - வை.அறபாத்)சவுதி அரேபியா மீதான தற்கால பிராந்...
09/18/2026

சவுதி அரேபியாவின் பாதுகாப்பும் : அரபுப்பிராந்திய இஸ்திரத்தன்மையும்

(எழுத்து - வை.அறபாத்)

சவுதி அரேபியா மீதான தற்கால பிராந்திய அச்சுறுத்தல்களும் யமன் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் மாபெரும் கேள்விக்குறியாக்கியுள்ளன.

சவுதி அரேபியாவின் இறையாண்மையை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இத்தகைய வன்முறைச்செயல்கள், அப்பிராந்தியத்தின் இஸ்திரத்தன்மையை குலைப்பதோடு, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தையும் இஸ்தம்பிக்கச் செய்து சாதாரண பொதுமக்களின் இயல்பான வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுள்ளன.

புனிதத்தலங்களைக் கொண்டுள்ள இப்பிரதேசத்தின் பாதுகாப்பு பாதிக்கப்படும் போது, அது உலகெங்கிலுமிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் ஆன்மீக மற்றும் பிராந்திய மையத்தையே நேரடியாக அச்சுறுத்துவதாக அமைகிறது.

யமன் முனையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் சவுதி அரேபியாவின் பிராந்தியப் பாதுகாப்பையும் பொதுமக்களின் உயிரையும் குறிவைப்பது சர்வதேச சட்டங்களுக்கும் மனிதநேய நெறிமுறைகளுக்கும் முரணான செயலாகும்.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் இத்தாக்குதல்கள் வெறும் அரசியல் அதிகாரப்போட்டி மட்டுமல்லாமல், சவுதி பூமிக்குள் பயத்தையும் இஸ்திரமின்மையையும் விதைக்கும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகளாகும்.

சவுதி அரசு தனது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் எடுக்கக்கூடிய தற்காப்பு நடவடிக்கைகளும் பிராந்திய அமைதியை நிலைநாட்ட முன்னெடுக்கும் முயற்சிகளும் தற்காலச்சூழலில் மிகவும் அவசியமானவையாகும்.

இச்சூழலில் குழப்பங்கள் நீடிப்பதும், பாதுகாப்புக் குலைக்கப்படுவதும் பிராந்தியத்தின் பொருளாதாரத்தையும் சமூக வளர்ச்சியையும் கடுமையாகப்பாதிக்கும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்.

பொதுவான மனிதநேய மற்றும் தார்மீகப் பார்வைகளின்படி, எந்தவொரு நாட்டின் அமைதியைக் குலைப்பதும், அப்பாவி மக்கள் மீது ஆயுதத் தாக்குதல்களை நடத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க குற்றமாகும்.

உலகளாவிய ஒழுக்கநெறிகள் எப்போதும் அமைதிப் பேணலுக்கும், மனித உயிர்களின் பாதுகாப்பிற்கும் முதலிடமளிக்கின்றன. போர்ச்சூழலிலும் கூட பொதுமக்களை பாதுகாக்க வேண்டுமென்ற சர்வதேச விதிமுறைகளும் மனிதாபிமானக் கோட்பாடுகளும் வலியுறுத்தப்படுகின்றன.

எனவே, நியாயமற்ற முறையில் அப்பாவி மக்கள் மீதும் முக்கியமான பிராந்தியங்கள் மீதும் பயத்தை ஏற்படுத்துவது நாகரிக சமூகத்தின் விழுமியங்களுக்கு முற்றிலும் முரணான செயலாகும்.

இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில், சவுதி அரேபியாவின் பாதுகாப்பு மற்றும் அதன் இறையாண்மைக்கு உலகளாவிய சமூகம் மற்றும் பிராந்திய நலனில் அக்கறையுள்ள அனைவரும் உளப்பூர்வமாக துணையாக நிற்க வேண்டியது அவசியமான கடமையாகும். சவுதி அரேபியாவின் இஸ்திரத்தன்மை என்பது பிராந்தியத்தின் பலத்துடன் நேரடியாகத் தொடர்புடையது.

எனவே, எல்லைகளுக்கப்பால் ஒற்றுமையுடனும், சவுதியின் பாதுகாப்புக்கு ஆதரவாகக்குரல் கொடுப்பதன் மூலமாகவும் மட்டுமே இப்பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களைத் தணிக்க முடியும்.

ஆயுத மோதல்களும் வன்முறைகளும் எப்போதுமே நிலையான தீர்வைத்தராது என்பதால், பேச்சுவார்த்தை மற்றும் சர்வதேச இராஜதந்திர வழிகள் மூலமாகவே பிராந்தியத்தில் நிரந்தர நிம்மதியையும் பாதுகாப்பையும் மீட்டெடுக்க இயலும்.

In the Name of Allah, the Most Gracious, the Most Merciful.To His Majesty the Custodian of the Two Holy MosquesKing Salm...
09/18/2026

In the Name of Allah, the Most Gracious, the Most Merciful.

To His Majesty the Custodian of the Two Holy Mosques
King Salman bin Abdulaziz Al Saud
May Allah protect and preserve him
(Royal Court)

Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuh,

Subject: Appeal for Royal Clemency or Direction to Reconsider the Judicial Sentence Imposed on Sri Lankan Citizen Mr. Anujan.

I have the honour to submit this petition to Your Majesty, seeking, first from Almighty Allah and then through Your Majesty’s gracious compassion and mercy, your kind consideration of the circumstances of the Sri Lankan citizen, Mr. Anujan, who has been convicted in a case relating to an offence concerning disrespect towards the Prophet Muhammad (peace and blessings of Allah be upon him), and sentenced to five years’ imprisonment together with a financial fine of three million Saudi Riyals.

While affirming our full respect for the Saudi judiciary and its independence, as well as for the rulings of Islamic Shariah and the laws and regulations in force in the Kingdom of Saudi Arabia, this petition is not intended to challenge or contest the judicial judgment. Rather, it is a humanitarian appeal respectfully submitted to Your Majesty, requesting Your Majesty, within the powers granted under the applicable laws and regulations, to consider directing that his circumstances be reviewed in accordance with the law, or, if his case falls within the scope permitted under the relevant laws and instructions, to graciously consider extending royal clemency to him.

This petition is based on the following considerations:
First: The convicted person has expressed sincere remorse for what he did and has issued a public apology through social media, seeking forgiveness from Muslims and affirming his respect for the status of the Messenger of Allah (peace and blessings of Allah be upon him) and for the sentiments of Muslims.

Second: The circumstances surrounding the incident indicate that his action was an emotional reaction to an insult directed through social media against one of the sacred beliefs of the Hindu faith. While this does not justify his conduct, it may nevertheless be a circumstance worthy of consideration when assessing his individual situation.

Third: The convicted person is a modest-income worker who supports a large family in Sri Lanka and has no financial capacity to pay the substantial fine imposed upon him. This places an additional burden on his family, which depends upon his limited income for its livelihood.

Fourth: He had been preparing to marry a young woman from a low-income family in his village in Sri Lanka during his scheduled leave at the end of this year. The judgment has consequently disrupted this intended family arrangement, with the resulting social and humanitarian consequences for both families.

Fifth: This case has repercussions within Sri Lankan society and could potentially be exploited by certain parties to create tension among different communities, thereby adversely affecting efforts to promote peaceful coexistence and national harmony, particularly during the post-conflict period following the prolonged civil war in Sri Lanka.

In light of the foregoing, we respectfully appeal to Your Majesty, renowned for wisdom, justice and compassion, to kindly consider this humanitarian case and to issue such direction as Your Majesty may deem appropriate in accordance with Islamic Shariah and the applicable laws and regulations whether by directing a review of the convicted person’s circumstances to the extent permitted by law, or by graciously extending royal clemency should the competent authorities determine that the applicable conditions for such clemency are fulfilled.

We beseech Almighty Allah to protect Your Majesty and to perpetuate the security, stability and prosperity of the Kingdom of Saudi Arabia, and to reward Your Majesty abundantly for your service to Islam and Muslims and for upholding the values of justice and mercy.

Please accept, Your Majesty, the assurances of my highest respect and esteem.

Inamullah Masihudeen
Former Consul General of the Republic of Sri Lanka in Jeddah
Former Political Expert at the Embassy of the Kingdom of Saudi Arabia in Sri Lanka

நபிகளாரை இழிவாக பேசியதற்காக அனோஜனுக்கு மரண தண்டனை கிடைத்துள்ளதாக அறியக்கிடைக்கிறது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸஸல்ல...
09/17/2026

நபிகளாரை இழிவாக பேசியதற்காக அனோஜனுக்கு மரண தண்டனை கிடைத்துள்ளதாக அறியக்கிடைக்கிறது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸஸல்லம் கொண்டு வந்த உன்னதமான ஒரு மார்க்கம் தன் சுயத்தை இழந்து நிற்கிறது. ஒரு சிறிய அளவு சகிப்புத்தன்மை இல்லாமல் நாயகத்தை பற்றி எந்த புரிதலும் இல்லாத ஒருவரின் ஒரு கமன்ட்டுக்கு உயிரை எடுக்கும் அளவுக்கு வன்முறை தலைக்கேறியிருக்கிறது.

அதன் அமைதியும், தியானமும், அது கொண்டுவந்த இறைவனையும் சரிவர போதித்திருந்தால் இந்த கடும்போக்கிலிருந்து ஒரு அழகான முன்மாதிரியை காட்டியிருக்கலாம்.

இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன். இவர்களின் இந்த பழிவாங்கும் குணம் ரசூலின் மீதான அன்பு அல்ல. அது பெருமை. தன் அதிகாரத்தை பயன்படுத்தி அப்பாவியை ஒடுக்கும் கொடிய செயல். மதநெறி வழிமாறி மதவெறியாகிக்கொண்டிருக்கிறது.

இந்த போலி மார்க்கவாதிகளிடமும், இவர்களின் அதிகார வெறியிடமும் இருந்து காத்திடு ரஹ்மானே.

I would rather go to hell than living with this morons in heaven.

-Rimas

சுமார் 2 தசாப்தங்களின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார் அக்கரைப்பற்று மேயர் அதாஉல்லாஇதற்கமைய, தனத...
09/16/2026

சுமார் 2 தசாப்தங்களின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார் அக்கரைப்பற்று மேயர் அதாஉல்லா

இதற்கமைய, தனது தாய்க் கட்சியான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் இன்று மாலை காத்தான்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தலைவர் அஷ்ரப் தின நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

09/16/2026

எதிர்வரும் 24 ஆம் திகதி FCID இற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் ஷிரந்தி ராஜபக்ச இன்று அதிகாலை சிங்கப்பூர் சென்றார்!
Ceylon Flash News

முஸ்லிம் காங்கிரஸின் 32வது பேராளர் மாநாடும் அஷ்ரஃபின் 26வது நினைவேந்தலும் : அடுத்த கட்ட நகர்வுகளும்!(எழுத்து : வை.அறபாத்...
09/14/2026

முஸ்லிம் காங்கிரஸின் 32வது பேராளர் மாநாடும் அஷ்ரஃபின் 26வது நினைவேந்தலும் : அடுத்த கட்ட நகர்வுகளும்!

(எழுத்து : வை.அறபாத்)

இலங்கைச் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் முகவரியாகவும் அவர்களின் அரசியல் தன்னாதிக்கத்தின் குரலாகவும் திகழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தனது வரலாற்றுச்சிறப்புமிக்க 32வது தேசிய பேராளர் மாநாட்டை இயக்கம் உதித்த காத்தான்குடி மண்ணில் எதிர்வரும் செப்டம்பர் 16ம் திகதி புதன்கிழமை நடாத்தவுள்ளது.

1981 செப்டம்பர் 21ல் காத்தான்குடியில் மர்ஹூம் அஹமத் லெப்பை சேர்மன் அவர்களின் தலைமையில் இயக்கமாகத்தோற்றுவிக்கப்பட்டு, பின்னர் 1986 நவம்பர் 26ல் கொழும்பு பாஷா விலா மண்டபத்தில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களால் அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்ட இக்கட்சி, இயக்கமாகி 45 ஆண்டுகளையும் அரசியல் கட்சியாகி 40 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும் வரலாற்று மைல்கல்லில் கால்பதித்துள்ளது.

மர்ஹூம் தலைவர் அஷ்ரஃப் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்த அதே வரலாற்று நாளான செப்டம்பர் 16 அன்றே, அவரின் 26வது நினைவேந்தலோடு இணைந்து இம்மாநாட்டை மீண்டும் காத்தான்குடியில் கூட்டுவது, தன் கடந்த கால வரலாற்றையும் எதிர்காலப் பாதையையும் சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான மிக முக்கியமானதொரு தருணமாகும்.

வரலாற்றுப் பின்னணியும் அஷ்ரஃபின் தீர்க்கதரிசனமும்

சுதந்திரத்திற்குப்பிறகு கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தனக்கென ஒரு சுயசார்பான தேசிய அரசியல் முகவரியின்றி பிற கட்சிகளைச்சார்ந்திருந்த முஸ்லிம் சமூகத்தின் நிலையை மர்ஹூம் தலைவர் அஷ்ரஃப் அவர்கள்: "40 வருடங்கள் மலடாயிருந்த ஒரு தாய், பெரும் போராட்டத்திற்குப்பிறகு பெற்றெடுத்தக் குழந்தையே இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். இக்குழந்தையை நாம் பாதுகாத்துக் கொள்ளத் தவறினால் அல்லது இழந்து விடுவோமாக இருந்தால், மீண்டுமொரு குழந்தையைப் பெற்றெடுக்க இச்சமூகத்திற்கு இன்னும் எத்தனை தசாப்தங்கள் பிடிக்குமோ!" என்று உருக்கமாக உவமிப்பார்.

அஷ்ரஃப் அவர்களின் காலத்தில் கொடூரமான யுத்தமும் வடக்கு-கிழக்கில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட வெளியேற்றங்கள், உயிரிழப்புகள் மற்றும் நில இழப்புகள் போன்ற மிக மோசமான யதார்த்தங்களும் நிலவின. அன்றைய காலகட்டத்தில், தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு ஈடுகொடுக்கவும் ஆட்சியைப் பிடிக்கவும் தென்னிலங்கை பெரும்பான்மை அரசியல் தலைமைத்துவத்திற்கு முஸ்லிம்களின் ஆதரவு அத்தியாவசியமாக இருந்தது.

அதனால் அஷ்ரஃபின் வீச்சுமிக்க ஆளுமையையும், முஸ்லிம்களின் சுயாதீனப்பேரம்பேசும் சக்தியையும் தேசியக்கட்சிகள் சகித்துக்கொண்டு, அரவணைத்துச் செல்ல வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் நிலவியது.

இவ்வாறாக, இலங்கை முஸ்லிம்களின் தேசிய அரசியல் எழுச்சி பெருந்தலைவர் அஷ்ரஃபின் தீர்க்கதரிசனமிக்க அரசியல் நகர்வுகளினாலும் கம்பீரமான குரலினாலும் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த ஒரு மிக முக்கியமான வரலாற்றுக் காலகட்டத்தில், 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று அவரின் அந்த அகால மரணம் சம்பவித்தது.

பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் உயிர் பிரிந்த அதே செப்டம்பர் 16-ஆம் திகதியில், அவரின் பேரன்பிற்குரிய இயக்கத்தின் தேசிய பேராளர் மாநாடும் அதே மண்ணில் ஒருங்கிணைவது வெறுமனே திகதிகள் ஒத்துப்போகும் தற்செயல் நிகழ்வல்ல;

மாறாக, அவர் விட்டுச்சென்ற அரசியல் அமானிதத்தை அதே உத்வேகத்துடன் கையிலேந்தி நிற்கும் ஒரு உணர்வுபூர்வமான வரலாற்றுச் சங்கமமாகும்.

சவால்களுக்கு மத்தியில் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவம்

மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் மரணிப்பதற்கு முன்பே, கட்சிப்பணிகளின் அயராத நெருக்குவாரங்களுக்கு மத்தியில் ரவூப் ஹக்கீம் தனக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கையாகவும் பலமாகவும் இருந்தார் என்பதை உணர்த்தும் வகையில், அன்று அவர் எழுதிய 'தலைவர் குறிப்பில்': "முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அயராத போராட்ட வேலைகளுக்கு மத்தியில் நமக்குக் கிடைக்கும் ஆறுதல்களோ மிகவும் அரிது. அவற்றில் ஒன்று தான் நமது கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்கள்" என்று நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருந்தார்.

அஷ்ரஃபின் திடீர் மறைவைத்தொடர்ந்து, கட்சிக்குள் உருவான பாரிய அரசியல் இடைவெளியும், உட்கட்சிப் பூசல்களும், 'இணைத்தலைமை' போன்ற சிக்கலான சோதனைகளும் இயக்கத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துப்பார்த்தன.

இத்தகைய புயல் வீசிய நெருக்கடிமிக்க சூழலில் தான், தலைவரை இழந்து தவித்த இயக்கத்தின் சுமையை ஏந்தி, அனைத்து எதிர்ப்புகளையும் மிக நிதானமாக எதிர்கொண்டு ரவூப் ஹக்கீம் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இயக்கத்தின் பிளவுபடாத ஒருமைப்பாட்டைக் காத்து ஒற்றைத்தலைமையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவர் எதிர்கொண்ட ஆரம்பகால இராஜதந்திரப்போராட்டங்கள் மிகவும் கனதியானவை.

தலைமைப் பொறுப்பேற்ற ரவூப் ஹக்கீமின் காலகட்டம், மிக மோசமான போரினதும் அதற்குப் பிந்தைய நுட்பமான அரசியல் மாற்றங்களினதும் இருவேறு சவால்களைத் தன்னுள் கொண்டதாகும். ஆரம்பத்தில் கொழுந்துவிட்டு எரிந்த போர்ச்சூழலுக்கு மத்தியிலும், 2009-இல் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து உருவான முற்றிலும் புதிய வடிவிலான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

போர் ஓய்ந்த பின்னர் தென்னிலங்கையில் மேலெழுந்த தீவிர இனவாதப்போக்குகள், ஹலால் விவகாரம், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், அளுத்கம, திகன அசம்பாவிதங்கள் மற்றும் கொவிட் கட்டாய ஜனாஸா எரிப்பு வரை முஸ்லிம்கள் மீது ஏவப்பட்ட சித்தாந்த ரீதியான நெருக்குவாரங்கள் அனைத்தையும், எவ்வித தீவிரப்போக்கிற்கும் இடமளித்துவிடாமல் நாட்டின் அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்புக்குட்பட்டு நிதானத்துடனும் சமரசமின்றியும் கையாண்டு சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் கனதியான பாத்திரத்தை அவர் திறம்பட முன்னெடுத்து வந்துள்ளார்.

சர்வதேச இராஜதந்திரமும் சட்டப்போராட்டங்களும்

முஸ்லிம்களின் தனித்துவ உரிமைகளுக்கான போராட்டத்தை பாராளுமன்ற ஜனநாயகத்திற்குள் நகர்த்தியதோடு நின்றுவிடாமல், தனது அபாரமான மும்மொழிப் புலமையைப் பயன்படுத்திச் சமூகத்தின் குரலை சர்வதேச ராஜதந்திர அரங்குகள் வரை எடுத்துச் சென்ற வீரியமிக்க ஆளுமையாக ரவூப் ஹக்கீம் திகழ்கிறார்.

முஸ்லிம்கள் மீது இனவாத நெருக்குவாரங்களும் கட்டாய ஜனாஸா எரிப்பு போன்ற மனித உரிமை மீறல்களும் ஏவப்பட்ட போதெல்லாம், ஐநா மனித உரிமைகள் பேரவை, சர்வதேசத்தூதரகங்கள் மற்றும் உலக முஸ்லிம் அமைப்புகளின் கவனத்திற்கு அவற்றைக் கொண்டுசென்று நீதிகோரினார்.

அதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கப்பால், ஒட்டுமொத்த இலங்கையின் ஜனநாயகப்பாதுகாப்பு, அரசியலமைப்பு வீழ்ச்சி மற்றும் சர்வாதிகாரப் போக்குகளுக்கெதிராகத் தெருவில் இறங்கிப்போராடவும் அவர் தயங்கியதில்லை.

பாராளுமன்றத்திலும் வீதிகளிலும் இறங்கி ஜனநாயகப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய அவரின் இந்த துணிச்சல்மிக்க ஆளுமை, முஸ்லிம் காங்கிரஸை வெறும் ஒரு சிறுபான்மை அமைப்பாக மட்டுமன்றி, தேசிய ஜனநாயகப் பாதுகாப்பின் முதன்மைத் தூணாகவும் உயர்த்திக் காட்டியது.

அரசியல் களத்தில் ஒரு சிறுபான்மைத் தலைவராக மட்டுமன்றி, தேசிய மட்டத்தில் ஊழலற்ற நேர்மையான அரசியலுக்கும், சட்டத்தின் ஆட்சியைப் பேணிக் காப்பதற்கும் முன்னின்ற ஒரு முற்போக்கான தேசியத் தலைவராகவும் ரவூப் ஹக்கீம் தனது தடத்தைப் பதித்துள்ளார்.

அரச அதிகாரத் துஷ்பிரயோகங்கள், அரசியலமைப்பு மீறல்கள் மற்றும் பொதுச்சொத்துகள் சூறையாடப்பட்ட ஊழல் விவகாரங்களுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத்தட்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் அவர் ஆற்றிய பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, அண்மைய காலத்தில் நாட்டிற்குப் பாரிய நிதி இழப்பையும் இறையாண்மைப் பாதிப்பையும் ஏற்படுத்தவிருந்த சர்ச்சைக்குரிய "ஈ-விசா" (e-Visa) முறைகேட்டிற்கெதிராக, எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து ஒரு சட்டத்தரணியாகவும் மக்கள் பிரதிநிதியாகவும் உச்ச நீதிமன்றத்தை நாடி, அந்த ஊழல் ஒப்பந்தத்தை இடைநிறுத்தச்செய்து நாட்டின் பில்லியன் கணக்கிலான நிதியை மீட்டெடுத்த இராஜதந்திர நடவடிக்கை இதற்குச்சிறந்த சான்றாகும்.

பல தசாப்தகால அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற அனுபவங்களைக் கொண்டிருந்த போதிலும், எவ்வித ஊழல் கறைகளுமற்ற தூய்மையான அரசியல்வாதியாகவும், சட்டத்தின் மேலாதிக்கத்திற்கு மதிப்பளித்து நீதிமன்றங்கள் மூலம் தேசிய ரீதியிலான மாற்றங்களுக்கு வழிகோலிய சட்ட வல்லுநராகவும் அவர் நிமிர்ந்து நிற்பது, நாட்டின் தேசிய அரசியல் அரங்கில் அவருக்குரிய தனித்துவமான மரியாதையை உறுதிசெய்துள்ளது.

தலைமைத்துவச்சுமைகளும் தற்போதைய நெருக்கடிகளும்

ஒரு தேசிய இயக்கத்திற்குத் தலைமை தாங்குவது என்பது வெறும் பூமாலைகளையும் பாராட்டுக்களையும் பெறுவது மட்டுமல்ல.

மாறாக, கட்சிக்குள் எழும் அனைத்து புயல்களையும் தாங்கும் இடிதாங்கியாக நிற்பதுமாகும். தங்களின் சுய அரசியல் இலாபங்களுக்காகவும், கட்சி மாறி பதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் அரசுகளோடு இணைந்து கொள்ளும் சிலரின் சுயநலப் போக்குகளும், அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு கட்சியை விட்டு விலகிச்செல்லும் சவால்களும் கட்சிக்குள் அடிக்கடி உருவெடுத்த போதிலும், ரவூப் ஹக்கீம் நிதானமிக்க அரசியல் ஆளுமையால் கட்சியைச் சிதையாமல் பாதுகாத்து வந்துள்ளார்.

இங்கு தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் ஒருமுறை தனது கட்சிப்பொதுக்குழு உரையில் அங்கலாய்த்துப் பேசிய ஒரு வரலாற்றுச்சம்பவம் நினைவுக்கு வருகிறது:

"கட்சிக்கு நிதி திரட்டுவது முதல், கூட்டங்களை நடத்துவது, ஏச்சுப்பேச்சுக்களை வாங்குவது வரை அனைத்துப்பழிகளையும் சுமையையும் நானே சுமக்க வேண்டியிருக்கிறது" என அவர் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிதர்சனமான நிலையைப்போலவே, இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலும் கட்சிக்கு நிதி திரட்டுவது முதல், கூட்டங்களை நடத்துவது, ஏச்சுப்பேச்சுக்களை வாங்குவது வரை ரவூப் ஹக்கீமே முன்னின்று சுமக்க வேண்டியுள்ளது.

கட்சிக்குள் யார் தவறு செய்தாலும், எந்தப்பின்னடைவு ஏற்பட்டாலும் தன் மீதே அத்தனை பழிகளையும் தாங்கிக்கொண்டு, இயக்கத்தின் இருப்புக்கும் சமூகத்தின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக்கும் அரணாக நிற்கும் ஒரு தலைமையாகவே அவர் நிமிர்ந்து நிற்கிறார்.

இருப்பினும், இன்றைய அரசியல் சூழலில் தலைமைத்துவம் சந்திக்கும் சவால்கள் மிகவும் சிக்கலானவை. ஒருபுறம் சமூகப்பிரச்சினைகளுக்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் எழுப்பும் போது "அரசியல் செய்கிறார்கள்" என்றும், மறுபுறம் இராஜதந்திர ரீதியாக நிதானத்தைக் கடைப்பிடிக்கும் போது "ஏன் அமைதியாக இருக்கிறார்" என்றும் இருமுனை விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அரசியல் ஆதாயங்களுக்காகத் தலைமையின் நடவடிக்கைகளைத் தவறாகச் சித்தரிக்கும் எதிரணிகளின் பிரசாரங்களும், குறுகிய நோக்கம் கொண்ட சக முஸ்லிம் அரசியல் தரப்புகளின் நகர்வுகளும் சமூகத்தின் பேரம் பேசும் சக்தியைப் பலவீனப்படுத்தவே முயல்கின்றன.

இத்தகைய நெருக்கடிமிக்க சூழலில், அனைத்து ஏச்சுப் பேச்சுக்களையும் பழிகளையும் தன்மீது தாங்கிக்கொண்டு தேசிய இயக்கத்தைப் பாதுகாக்கும் தலைமையின் பாத்திரம் மிகவும் கனதியானது என்பதைச் சமூகம் உணர வேண்டியுள்ளது.

32வது மாநாடும் இளையோர் எதிர்காலமும்

இவ்வாறானதொரு பின்னணியில், காத்தான்குடியில் நடைபெறவுள்ள 32வது பேராளர் மாநாடு என்பது வெறும் வழக்கமான தீர்மானங்களை நிறைவேற்றும் அரசியல் கூட்டமாக மட்டும் அமைந்து விடக்கூடாது.

இன்றைய இளைய தலைமுறையினர் அரசியலின் ஆழமான யதார்த்தங்களையும், இலங்கை அரசியலின் வரலாற்று நுணுக்கங்களையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல், சமூக வலைதளங்களில் மேலெழுந்தவாரியாக முன்வைக்கப்படும் கவர்ச்சி வாதங்களினாலும் தேவையற்ற விமர்சனங்களினாலும் ஈர்க்கப்பட்டு ஒருவித அரசியல் மோகத்திற்குள் தள்ளப்படும் போக்கு அதிகரித்து வருகிறது.

உண்மைத் தன்மையை உணராமல், ஆழந்தெரியாமல் அவசரப்பட்டு இளைஞர்கள் எடுக்கும் உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள், ஒரு நீண்ட அரசியல் பயணத்தைக் கொண்ட கட்சிக்கும், ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்காலத்திற்கும் பாரிய ஆபத்தாக முடிந்து விடக்கூடாது.

பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்கள் எச்சரித்தது போல், 40 ஆண்டுகள் மலடாயிருந்து பெரும் போராட்டத்திற்குப்பின் பெற்றெடுத்த இந்த அரசியல் முகவரியை, இளையோர் தங்கள் அறியாமையினாலும் அவசரப்போக்கினாலும் இழக்க நேரிட்டால், அதன்பின் அழுது புலம்புவதிலோ வருந்துவதிலோ எந்தப்பயனும் இல்லை.

ஏனெனில், இழந்த பிறகு மீண்டுமொரு தேசிய முகவரியைப் பெற்றெடுப்பது என்பது இச்சமூகத்திற்குச் சாத்தியமற்ற ஒன்றாகவே மாறி விடும்.

எனவே, வெறும் உணர்ச்சிப் பெருக்குக்கு பலியாகாமல், இளைஞர்களுக்குச் சரியான அரசியல் விழிப்புணர்வையும் வழிகாட்டலையும் வழங்க வேண்டிய தார்மீகப்பொறுப்பு தாய் இயக்கமான முஸ்லிம் காங்கிரஸுக்கு உண்டு.

இளைஞர்களின் எழுச்சியையும் ஆற்றலையும் சரியான திசையில் திருப்பி, 'Gen-Z' தலைமுறையை முடிவெடுக்கும் முக்கிய இடங்களிலும், கட்சியின் முக்கிய பொறுப்புகளிலும் உள்வாங்கி, கட்சியின் எதிர்காலத்தையும் சமூகத்தின் பாதுகாப்பையும் தொலைநோக்கோடு கட்டியெழுப்புவதே இந்த 32வது பேராளர் மாநாட்டின் வரலாற்றுச்சிறப்புமிக்க கடமையாகவும், அஷ்ரஃபின் 26வது நினைவேந்தலுக்குச் செய்யும் உண்மையான நன்றிக்கடனாகவும் அமைய முடியும்.

திருகோணமலை ஈரானியக்கப்பல் மாலுமிகள் தொடர்பில் கேள்வியெழுப்பிய ரவூப் ஹக்கீம் - பதிலளித்த பிரதியமைச்சர்நேற்று (செப்டம்பர் ...
09/13/2026

திருகோணமலை ஈரானியக்கப்பல் மாலுமிகள் தொடர்பில் கேள்வியெழுப்பிய ரவூப் ஹக்கீம் - பதிலளித்த பிரதியமைச்சர்

நேற்று (செப்டம்பர் 11) பாராளுமன்ற அமர்வின் போது, திருகோணமலையில் தரித்து நிற்கும் ஈரானியக் கடற்படைக்குச்சொந்தமான "புஷேர்" கப்பலிலுள்ள மாலுமிகளை மாற்றுவது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதியமைச்சரால் பதிலளிக்கப்பட்டது.

நான் இக்கேள்வியை வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு முன்வைக்கின்றேன். திருகோணமலையில் தற்போது தரித்து நிற்கும் ஈரானியக் கடற்படைக்குச்சொந்தமான "புஷேர்" (Bushehr) கப்பலிலுள்ள மூன்று ஈரானிய மாலுமிகளை மாற்றுவதற்காக ஒரு இராஜதந்திரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதென்பது தெரியுமா? மேலும், அவர்களை மாற்றுவதற்காக ஈரானிலிருந்து புதிதாக மூன்று மாலுமிகளை அனுப்புவதற்குப் பாதுகாப்பமைச்சு அனுமதி வழங்கியுள்ளதென்பதும் தெரியுமா?

இயற்கையான சேவைத்தேவைகள், நீண்டகாலக் கடமையால் ஏற்பட்ட சோர்வு மற்றும் களைப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இம்மாற்றீடு எவ்விதத் தாமதமுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே, தேவையான அனுமதியை வழங்குவதற்கு அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லையெனில், ஏன்?

இக்கேள்விக்குப் பதிலளிப்பதற்காகச் சமூகமளித்துள்ள பிரதி அமைச்சரின் கவனத்திற்கு நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தியாவிலும் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான இது போன்றதொரு கப்பலுள்ளது.

அங்கு ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையை இந்திய அரசாங்கம் பரிசீலித்து, ஈரானிலிருந்து முப்பது மாலுமிகள் மாற்றப்பட்டுள்ளதுடன், அதற்கான முழு அனுமதியையும் இந்தியா வழங்கியுள்ளது.

தற்போது போர் நடைபெறுவதால் இதனை அனுமதிக்க முடியாதென்று சில 'பண்டிதர்கள்' கூற முற்படுவதாக எனக்குத்தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தியா கடந்த ஆகஸ்ட் 25ம் திகதியன்று இதற்கு அனுமதியளித்துள்ளது. போர் மீண்டும் தொடங்கியிருந்த சூழலில், கடந்த ஆகஸ்ட் 25ம் திகதியன்று அதனை அனுமதித்துள்ளனர்.

இத்தகைய கோரிக்கைகள் அமைதிக்காலத்தில் கூட விடுக்கப்பட்டுள்ளன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக எமது அரசாங்கமும், எமது வெளிநாட்டலுவல்கள் அமைச்சும், மாலுமிகளை மாற்றும் இந்த எளிய கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பாடுபடாமல் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஆரம்பத்தில் 13 மாலுமிகளை மாற்றுமாறு கோரப்பட்டிருந்தது. எனினும், பாதுகாப்பமைச்சு மூன்று பேரை மாற்றுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறாயினும், இளம் மாலுமிகள் தங்கள் வீடு திரும்புவதற்காகக் கவலையுடன் காத்திருக்கும் பெற்றோரின் நிலைமையை கருத்திற்கொண்டு, நட்பு நாடான ஈரானுடன் தேவையற்ற இராஜதந்திர மோதலைத்தவிர்ப்பதற்காக அரசாங்கம் தயவுசெய்து மேலும் தாமதமின்றி இதனைப்பரிசீலிக்குமா?

இதற்குப்பதிலளிக்கும் வகையில் வெளிநாட்டலுவல்கள் துறை சார்பாகப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதியமைச்சர், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கிக்கூறினார்:

ரவூப் ஹக்கீம் எழுப்பிய குறிப்பிட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு முன்னர், இவ்விவகாரத்தைப் பரந்த பின்னணியில் சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறேன். இலங்கை, எமது நடைமுறையிலுள்ள முறைமைகள் மற்றும் தேசியப்பொறுப்புகளுக்கு இணங்கச் செயற்படும் அதேவேளையில், மனிதாபிமானக் காரணிகள், பொறுப்புணர்வு மற்றும் ஆக்கபூர்வமான இராஜதந்திர ஈடுபாடு ஆகியவற்றுடன் இவ்விசேட சூழ்நிலையைத் தொடக்கத்திலிருந்தே அணுகியுள்ளது.

தொடக்கம் முதலே, சம்பந்தப்பட்ட ஈரானியப் பணியாளர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கு அரசாங்கம் உரிய கவனஞ்செலுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களைக்கௌரவமான முறையில் தாய்நாட்டுக்கு அனுப்ப இலங்கை வசதி செய்துள்ளதுடன், 238 ஈரானிய மாலுமிகள் ஈரான் திரும்புவதற்கும் உதவி புரிந்துள்ளோம்.

பொருத்தமான இலங்கை அதிகாரிகளுக்கிடையே நெருங்கிய ஒருங்கிணைப்புடனும், ஈரானியத்தரப்புடன் கலந்தாலோசித்தும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அவசியமான சூழல்களில் மனிதாபிமான உதவிகளை நீட்டிக்கும் இலங்கையின் நீண்டகால அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது.

தொடர்புடைய இராஜதந்திர, பாதுகாப்பு மற்றும் நிர்வாகக்கட்டமைப்புகளூடாக எஞ்சிய விவகாரங்களை அரசாங்கம் தொடர்ந்தும் பேசி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மனிதாபிமானக்கருத்தீடுகள், இலங்கையின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சர்வதேசப்பொறுப்புகள் ஆகியவற்றுக்கு உரிய முக்கியத்துவமளிக்கப்படுகிறது.

அப்பின்னணியுடன் ரவூப் ஹக்கீம் எழுப்பிய குறிப்பிட்ட கேள்விகளுக்கு இப்போது பதிலளிக்கிறேன்.

பாதுகாப்பு அமைச்சின்படி, ஏனைய தரப்பினரின் முடிவுக்குட்பட்டு, மனிதாபிமான அடிப்படையில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றத்திற்கு இலங்கை கடற்படை எத்தகைய எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

தாமதமின்றி அவர்களை தாய்நாடு திரும்பச் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து, ஈரானியக் கோரிக்கையை எளிதாக்குவதற்கான அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இப்பதிலைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மீண்டும் வலியுறுத்திக் கேட்ட போது, மாலுமிகள் வீடு திரும்புவதற்காக அவர்களின் குடும்பங்கள் ஆவலுடன் காத்திருப்பதால், இதற்கான ஒரு காலக்கெடுவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் இவர்கள் நீண்டகாலமாகப் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் இளம் மாலுமிகளும் பயிற்சிப்பணியாளர்களுமாவர்.

அமைச்சு மற்றும் அரசாங்கம் என்ற முறையில் உலகளாவிய தரநிலைகளுக்கிணங்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். மாலுமிகள் கூடிய விரைவில் அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச்செல்வதை நாங்கள் உறுதி செய்வோம் எனப்பதிலளித்தார்.

(நிசப்தம்)

நாமல் ஜனாதிபதியானால் என்ன நடக்கும் ?பிள்ளையான் வெளியே வருவான்.பிள்ளையான் , டக்ளஸ் , அர்ச்சுனா , வியாளேந்திரன் போன்ற தமிழ...
09/13/2026

நாமல் ஜனாதிபதியானால் என்ன நடக்கும் ?
பிள்ளையான் வெளியே வருவான்.

பிள்ளையான் , டக்ளஸ் , அர்ச்சுனா , வியாளேந்திரன் போன்ற தமிழர்கள் அமைச்சர்கள் அல்லது ராஜாங்க அமைச்சர்கள் ஆவார்கள்.

விமல் வீரவன்ச , உதய கம்மன் பில, ஜோன்சன் பெர்ணான்டோ, திஸ்ஸ குட்டியாராச்சி போன்றோர் சிங்கள அமைச்சர்களாவார்கள்.

பசில் ராஜபக்சே மீது இருக்கும் வழக்களில் இருந்து விடுதலை ஆவார். நாட்டுக்கு வந்து அரசில் முக்கிய பொறுப்பு வகிப்பார். ஹெகலிய ரம்புக்வல விடுதலையாவார். இப்போது பிடிபட்டுள்ள பல போதைப்பொருள் , கொலை குற்றவாளிகள் பொது மன்னிப்பில் வெளியே வருவார்கள்.

சிறிலங்கா எயார் லைன் , சதோசா போன்ற அரச நிறுவனங்களில் ராஜபக்சே குடும்பத்தில் எட்டாம் வகுப்பு கூட தாண்டாதவனும் தலைவராகும் நிலமை வரும் .

எல்லோருக்கும் ஊழல் செய்ய வாய்ப்பளிக்க, அமைச்சர் , இராஜாங்க அமைச்சர் என புதிய புதிய அமைச்சுக்களுடன் அமைச்சரவை 50 யிற்கும் அதிகமாகும் .

நாமலின் மனைவி நாட்டின் முதல் பெண்மணி என்று பகடாக லட்சக்கணக்கான டொலர் செலவழித்து நாடு நாடாகப் பயணம் செய்வார்.

யாரோ ஒரு ரவுடி போன்றவன் எந்த தகுதியும் இல்லாமல் பிரதம மந்திரி ஆவான்.

மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் நாமலின் இப்படியான ஒரு ஆட்சி தேவையா, இல்லை இப்போது இருக்கும் அநுர ஆட்சி பரவாயில்லையா ?

NPP ஆட்சி வினைத்திறனாக செயற்பட வில்லை என்பது உண்மை.

ஆனால் பல நல்ல விடயங்களின் தொடக்க புள்ளியாக இருக்கிறது.

இங்கிலாந்து பிரதமரின் மனைவி, பிள்ளைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது , அவர்கள் ஊடகங்கள் முன்னே வந்து பிரதமரின் குடும்பம் என்று பந்தா காட்ட முடியாது.

ஆனால் இலங்கையில் ராஜபக்சே குடும்பம் ஆட்சியில் இருந்தபோது அந்த குடும்பம் காட்டிய பந்தாவை நான் சொல்ல தேவையில்லை ..
இதுவரை இருந்த இலங்கை அமைச்சர்களின் பிள்ளைகள் காட்டிய பந்தாக்கள், அதிகார துஷ்பிரயோகங்களை நான் சொல்லத் தேவையில்லை.

ஆனால் இப்போது அநுரவின் குடும்பம் யாரென்றே யாருக்கும் தெரியாது.
எந்த அமைச்சரின் குடும்பமோ , பிள்ளைகளோ முன்னிலைப்படுத்தி காணவில்லை.

பெருமையாக பாடசாலை பிள்ளைகள் எங்கள் பிரதமர் என்று சொல்லக் கூடியவர் பிரதமராக இருக்கார்.

எனது பிள்ளை இலங்கையில் இருந்து ஜனாதிபதி யார் , பிரதமர் யார் என்று பொது அறிவுக்காக பாடமாக்க வேண்டிய தேவை வந்தால் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அல்லது திஸ்ஸ குட்டியாராச்சி பிரதமர் என்று படிப்பதை விட ஹரிணி அமர சூரிய பிரதமர் என்று படிப்பதையே விரும்புவேன்.

அநுர அரசு பொருளாதார ரீதியாக முதலீடுகளை ஈர்ப்பதில் பெரிதாக சாதிக்கவில்லை.

ஆனால் அதைத்தவிர அவர்கள் விட்ட பிழைகள் என்ன ?

மற்ற ஆட்சிகளின் போது வெளிப்படையாக நடந்த ஊழல்கள் கூட பூசி மெழுகப்பட்டன.
வெளிப்படையாக கொலைகள் நடந்தன. அப்பட்டமாக சாட்சிகள் மாற்றப்பட்டன.
இப்போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதில்லை. எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் கொல்லப்படுவதில்லை.

எதிர்த்து தேர்தலில் நின்ற காரணத்திற்காக சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு குறுகிய காலத்திற்குள் வழக்கு நடத்தப்பட்டு ஜெயிலுக்குப் போனார். ஆனால் இந்த அரசில் அப்படியான பலிவாங்கள்கள் இல்லை. ஊழல் வழக்குகளே நடக்கின்றன.
உண்மையைச் சொல்லுங்கள் பிள்ளையான் விசாரிக்கப்பட வேண்டிய ஆள் இல்லையா ? நாமல் விசாரிக்கப்பட வேண்டிய ஆள் இல்லையா ?
பிள்ளையான் ஏற்கனவே ஜெயிலில் தான் இருந்தான். கோத்தா வந்ததும் விடுதலையாகி எம்பி ஆனான் . எவ்வளவு கேவலம் இது ?

எனக்கு சமூக மட்டத்தில் மிக உயர் மட்டம் முதல் , அடித்தட்டு மக்கள் வரை தொடர்பு உள்ளது. நண்பர்கள் உள்ளார்கள்.

அநேகமான பொதுமக்கள் , அதாவது எந்த அரசியல் கட்சி பின்னாலும் வால் பிடிக்காத ஆட்கள் சொல்லுகிற விடயம் , "இப்ப எவ்வளவோ மாறிவிட்டது. சந்தோசமாக உள்ளோமோ தெரியாது ஆனால் நிம்மதியாக உள்ளோம்."

சபாநாயகர் பொய் சான்றிதழ் கொடுத்தது தெரிந்ததும் பதவி விலகினார். அதையாவது செய்தார். ஆனால் நாமல் ஆட்சியாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் அதை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர் மிரட்டப் பட்டு காணாமல் போயிருப்பார். சபாநாயகர் தொடர்ந்து இருந்திருப்பார் .

நான் கடந்த டிசம்பர் மாதம் இலங்கை சென்றபோது பல நல்ல மாற்றங்களை உணர்ந்தேன் . லஞ்சம் வாங்குவதை தொழிலாக கொண்ட பலர் லஞ்சம் வாங்க பயப்படுகிறார்கள்.

ஒரு மருத்துவ நிபுணரின் வாகன ஓட்டுனர் லைசன்ஸை பொலிஸ் செக் பண்ணிய போது ஒரு மாதம் முன்பே அது காலாவதி ஆகியிருந்தது . அதை அவர் கவனிக்க வில்லை. முன்பென்றால் மருத்துவ நிபுணர் என்றதுமே பொலிஸ் கண்டுக்காமல் விட்டு இருக்கும்.
ஆனால் இப்போது அது சாத்தியமில்லை . அந்த வைத்திய நிபுணர் நீதிமன்றத்தில் வழக்குக்கு செல்ல வேண்டி வந்தது.

எனது இலங்கை சாரதி அனுமதிப்பத்திரமும் காலாவதி ஆகிவிட்டது என்று உணர்ந்து , திரும்ப ஒரு நாள் விமான நிலையம் சென்று எனது இங்கிலாந்து அனுமதிப்பத்திரமும் 15 ஆயிரம் பணமும் கொடுத்து தற்காலிக இலங்கை அனுமதிப்பத்திரம் எடுத்து தான் இலங்கையில் கார் ஓடினேன்.

அதற்குப் பிறகு பலரிடம் ஊழல் பற்றி விசாரித்த போது எல்லோரும் சொல்லிய விடயம் , " முன்பு போல் இப்போது இல்லை எல்லாம் மாறிவிட்டது ".
இது உண்மையில் நல்ல மாற்றம்தானே.

அநுர அரசு நூறு வீதம் சரி என்று சொல்லவில்லை.
ஆனால் இலங்கை அரசியலில் இதை ஆரம்பமாக எடுக்க வேண்டும். சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து , இப்போதுதான் இந்த மாற்றம் சிறிதளவேனும தொடங்கி உள்ளது.
இது தொடர வேண்டும்.

இன்று அநுர பொலனறுவையில் சொன்ன ஒரு வார்த்தை அப்படியே நான் எனது பதிவுகளில் எழுதும் வார்த்தையை ஒத்திருந்தது .
அநுர சொன்னது இதுதான் ,

" இனியொரு ஆட்சி மாற்றம் வந்தால் அது எங்களைவிட சிறந்து ஒரு ஆட்சியிடம் செல்லும் மாற்றமாகவே இருக்க வேண்டும். மாறாக எங்களை விட மோசமான ஆட்சி கொடுக்கும் கூட்டத்திடம் செல்லக்கூடாது ".

இதைத்தான் நானும் சொல்கிறேன்.

ஒரு ஜனநாயக ஆட்சியில் விமர்சனம் , எதிர்ப்பு எல்லாம் வரவேண்டும். இல்லாது விட்டால் அது சர்வாதிகார ஆட்சியாகிவிடும்.

ஆனால் அந்த எதிர்ப்பு சரியானதாக இருக்க வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டில் விசாரணை செய்வதற்கெல்லாம் எதிர்ப்பு நடத்தி காமடி பண்ணக் கூடாது.

அதாவது அநுர அரசை விமர்சியுங்கள்..பிழை விட்டால் . நானும் ஏ விமர்சிப்பேன். எனது புரோபைலில் சில பதிவுகளுக்கு முன் போய் பாருங்கள் சுகிர்த ரூபன் சிவா , என்ற எம்பி ரஜீவனின் உறவினரான அல்லக்கை NPP ஆளை எப்படி கிழித்து உள்ளேன் என்று. யாருக்கும் முட்டுக் கொடுக்கத் தேவையில்லை . ஆனால் சரியானதையும் பேச வேண்டும்.

இந்த கட்டுரைகளை இலங்கை சார்ந்ததாக மட்டுமே எழுதுகிறேன்.

தமிழர்களின் பிரச்சினை சார்ந்ததாக அநுர அரசு கூட ஏமாற்றுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . ஆனால் அநுர அரசு ஏமாற்றுவதை விட தமிழ் அரசியல்வாதிகள் ஏமாற்றுவது அதிகம் என்பதால் அதைப்பற்றி பேசி இனி என்ன பிரயோசனம் ?

ஈரானிய மாலுமிகளை தாயகம் அனுப்ப வெளிவிவகார அமைச்சு தாமதிப்பது ஏமாற்றமளிக்கிறது – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் சுட்டிக்க...
09/10/2026

ஈரானிய மாலுமிகளை தாயகம் அனுப்ப வெளிவிவகார அமைச்சு தாமதிப்பது ஏமாற்றமளிக்கிறது – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டு!

ஈரானிய கப்பலில் தங்கியுள்ள மூன்று மாலுமிகளை அவர்களின் குடும்பத்தாரிடம் திருப்பியனுப்புவதற்கு இலங்கை பாதுகாப்பமைச்சு அனுமதி வழங்கியுள்ள போதிலும், வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து மௌனம் காத்து நடவடிக்கையெடுக்காமலிருப்பது ஏமாற்றமளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற பாதுகாப்பு பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
பாதுகாப்பு பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு குறித்து தாம் விவாதிப்பதாகவும், நாட்டில் யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இத்தகையதொரு பதவி அவசியமற்றது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வதால் செலவினங்களைக்குறைக்கும் நோக்கில் இப்பதவியை இரத்து செய்வதை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை, இன்றைய நாளிதழ்களைப் பார்க்கும் போது, இந்தியப்பெருங்கடலில் நமது நாடு எவ்வளவு முக்கியத்துவமிக்க மூலோபாய அமைவிடத்தில் அமைந்திருக்கின்றதென்பதை உணர முடிகின்றது. இந்த அமைவிடம் சர்வதேச வல்லரசுகளுடனான நமது இராஜதந்திர உறவுகளில் ஒரே நேரத்தில் சாதகமாகவும், அதே வேளையில், சவாலாகவும் அமைகின்றது.

பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட இந்திய பாதுகாப்பமைச்சர் இங்கு வருகை தந்துள்ளதை நாம் காண்கின்றோம். மேலும், அமெரிக்கத்தூதுக்குழுவினர் இங்கு வருகை தந்து கடல்சார் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவிருந்ததையும் கண்டோம்.

அதேபோல, நமது கடல் பிராந்தியத்தில் மூலோபாய நலன்களைக்கொண்டுள்ள சீனா போன்ற ஏனைய போட்டி வல்லரசுகளும் இங்கு பிரசன்னமாகியுள்ளன.

இப்போது நான் ஒரு விடயத்தைச்சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகின்றேன். ஜனாதிபதி அண்மையில் பேருவளையில் உரையாற்றிய போது ஒரு சிறிய பேச்சுப்பிழையை (வார்த்தைத் தவறைக்) விட்டிருந்தார்.

எனினும், நான் அதனைப்பெரிதுபடுத்த விரும்புவதில்லை. பொதுக்கூட்டங்களில் பேசும் போது அரசியல் தலைவர்களுக்கு இவ்வாறான வார்த்தைப் பிழைகள் நேர்வது இயல்பு. இதற்கு முன்புகூட பாராளுமன்றத்தில் நாட்டின் அளவை விவரிக்கும் போது 'ஹுண்டுவக்' (ஒரு சிறியளவு) என்று அவர் கூறியது அரசாங்கத்திற்குள் பெரிய சர்ச்சையானதை நாமறிவோம்.

அதேவேளை, நாட்டின் தலைவர் பேசும் போது அனைவரும் பாராட்டும் வகையில் சிறப்பான கருத்துக்களை முன்வைக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு. அதனை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

குறிப்பாக, ஈரானியப்போர்க்கப்பல் மீது அமெரிக்கப் படைகளால் டார்பிடோ தாக்குதல் நடத்தப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்திற்குப்பிறகு, ஜனாதிபதி கூறிய உரையை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்:

"ஈரானிய மாலுமிகளுக்கு இலங்கை வழங்கும் மனிதநேய உதவிகள் அமெரிக்காவைக் கோபப்படுத்துமா? எனக்கேட்கப்பட்டதற்கு ஜனாதிபதி அவர்கள்: 'இது எந்த வகையிலும் போருக்கு ஆதரவளிப்பதாகாது. இது மனித உயிர்கள் சம்பந்தப்பட்டது. ஒரு நாடாக அவர்களைப் பாதுகாப்பது நமது கடமை. அதுவே நமது அணுகுமுறை. இது போன்ற சூழ்நிலையில் உதவி தேவைப்படும் எந்தவொரு நாட்டிற்கும் இலங்கையின் ஆதரவு கிடைக்கும். சர்வதேச உடன்படிக்கைகளின்படி நாம் செயற்படவில்லை என்றால் மட்டுமே அவர்கள் கேள்வியெழுப்ப வேண்டும்' எனக்குறிப்பிட்டார்."

ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டிற்கு அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் கிடைத்தன. இலங்கை ஒரு சுயாதீனமான, அணிசேரா மற்றும் நடுநிலையான நாடாகத்தொடர்ந்து இருக்குமென்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்:

"நாம் எந்த நாட்டிற்கும் சார்பானவர்களுமல்ல, எந்த நாட்டிற்கும் பணிந்து போகவும் மாட்டோம். நாம் ஒரு இறையாண்மையுள்ள தேசம். அரசாங்கத்தின் முதன்மைப்பொறுப்பு நாட்டிற்கும், அதன் மக்களுக்கும், நமது கடல் எல்லைக்குமே உரியது."

அவர் கூறிய இந்த வார்த்தைகளை எண்ணி நாம் அனைவரும் பெருமையடைகின்றோம்.
ஆனால், இதற்கிடையே மார்ச் 06ம் திகதி சர்வதேச செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஈரானியக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 'Iris Bushahr' என்ற ஈரானியக்கப்பலை இலங்கை தனது பாதுகாப்பின்கீழ் கொண்டு வந்தது.

அதிலிருந்த 204 மாலுமிகள் கொழும்புக்கு அருகிலுள்ள வெலிசறை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர். கப்பலில் ஏற்பட்ட பழுதினை சரி செய்ய இலங்கை கடற்படையினருக்கு உதவ மேலும் 15 மாலுமிகள் கப்பலிலேயே தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் அக்கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இலங்கையின் காவலில் வைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் கூறுகையில்:
"ஒரு எஞ்சின் பழுதடைந்ததைத்தொடர்ந்து, ஈரானிய அதிகாரிகள் மற்றும் கப்பலின் தலைவருடன் நடத்திய கலந்துரையாடலுக்குப்பின்னரே கப்பலை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத்தீர்மானித்தோம். இது சாதாரண சூழ்நிலையல்ல. சர்வதேச உடன்படிக்கைகளின்படியே நாம் இதனைப் பரிசீலித்தோம். போர்களில் எந்தவொரு பொதுமகனும் இறக்கக்கூடாது. ஒவ்வொரு மனித உயிரும் எமது உயிரைப்போன்றே மதிப்பானது" எனத்தெரிவித்திருந்தார். நாங்களும் இந்த நல்ல நிலைப்பாட்டை வரவேற்கின்றோம்.

ஆனால், தற்போதைய சூழலில் ஈரானியத்தூதரகம் எமது பாதுகாப்பமைச்சிடம் ஒரு இராஜதந்திர கோரிக்கையை முன்வைத்துள்ளது. குறிப்பிட்ட அக்கப்பலிலுள்ள 3 மாலுமிகள் 6 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து கப்பலிலேயே தங்கியுள்ளதால், அவர்கள் கடுமையான உடல் சோர்விற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

எனவே, அந்த 3 பேருக்குப்பதிலாக 3 புதிய மாலுமிகளை நியமித்து, இவர்களைத்தாயகம் திரும்ப அனுமதிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேபோன்றதொரு சூழலில், இந்தியாவில் நங்கூரமிட்டிருந்த ஈரானியக்கப்பலில் இருந்த 31 மாலுமிகளை மாற்றி, அவர்களைச்சொந்த நாட்டிற்குச் செல்ல இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது.

இங்கு நமது பாதுகாப்பமைச்சு இந்த மாலுமிகளை மாற்றுவதற்கு 'எந்த ஆட்சேபனையும் இல்லை' என அனுமதி வழங்கி விட்டது! ஆனால், துரதிர்ஷ்டவசமாக, எமது வெளிவிவகார அமைச்சு இதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருகின்றது. இதனால் அந்த மாலுமிகளும் அவர்களின் குடும்பத்தினரும் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

தற்போது ஹோர்முஸ் நீரிணை முற்றுகையிடப்பட்டுள்ளதால், முழுமையான கப்பலும் ஈரான் திரும்ப முடியாத நிலை இருக்கலாம். ஆனால், மனிதநேய அடிப்படையில் இந்த 3 மாலுமிகளை மட்டும் பிரதியீடு செய்து திருப்பியனுப்ப முடியும்.

எனவே, சபையின் முதல்வர் மூலமாக நான் கேட்டுக்கொள்வது, வெளிவிவகார அமைச்சுடன் உடனடியாகப்பேசி, இந்த 3 மாலுமிகளும் தமது குடும்பங்களுடன் சேருவதற்குத் தேவையான அனுமதியை எவ்வித தாமதமுமின்றி வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டுமெனக் கோருகின்றேன்" என ரவூப் ஹக்கீம் தனதுரையில் குறிப்பிட்டார்.

(நிசப்தம்)

Address

Ottawa
Ontario, CA
K0G0A0

Alerts

Be the first to know and let us send you an email when Ceylon Flash News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ceylon Flash News:

Shortcuts

Share