Dr.Harinarayanan

  • Home
  • Dr.Harinarayanan

Dr.Harinarayanan I’m a Scientist, Science Writer, and Wellness Advocate (USA). Follow for Daily content in Tamil. Contact: [email protected]

Cancer, Manifestation, Affirmation, Motivation, Psychology, Subconscious Reprogramming, and Life Tips.

12/09/2026

Boundaries செட் பண்றதுனா மத்தவங்களை Control பண்றது இல்ல… உங்க Peace-அ Protect பண்ணிக்கிறது! 🛑✨

யாராவது உங்களை Guilt-trip பண்ணா, அவங்களுக்கு நீங்க எந்த Explanation-உம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்ல.

“என்னால இதை செய்ய முடியாது” அல்லது “நான் ஏற்கனவே என் முடிவை சொல்லிட்டேன்” – இதுவே போதும்.

அவங்க உங்க Boundary-ஐ மதிக்கலனா, அதுக்கான Consequence-ஐக் காட்டுங்க —

Call-அ Cut பண்ணுங்க,

அங்கிருந்து கிளம்புங்க,

தேவையான Space எடுங்க.

உங்களை உண்மையாவே மதிக்கிறவங்க உங்க “NO”-வையும் மதிப்பாங்க! 💯

இதே மாதிரி Situation-ல இருக்குற உங்க Friend-க்கு இதை Share பண்ணுங்க! 📌

📌 Remember:

Boundary-ங்றது “நீ என்ன செய்யணும்”ன்னு சொல்றது இல்ல… “நீ இப்படிச் செய்தால், நான் என்ன செய்வேன்”ன்னு முடிவு பண்றது!

07/09/2026

அவங்க உங்களை காயப்படுத்துவாங்க… பிறகு ரொம்ப அன்பா நடந்துப்பாங்க…

நீங்க மீண்டும் நம்ப ஆரம்பிச்சதும், மறுபடியும் காயப்படுத்துவாங்க.

இதுதான் Intermittent Reinforcement — அன்பும் காயமும் மாறி மாறி வருவதால், நீங்க அந்த relationship-ல இருந்து வெளியே வர முடியாமலும், முழுசா நம்ப முடியாமலும் தவிப்பீங்க.

ஒரு நாள் அவங்க காட்டுற sweetness-ஐ விட, பல நாட்களாக அவங்க காட்டுற pattern-ஐ பாருங்க.

மன்னிப்பது வேறு.
மீண்டும் மீண்டும் உங்களை காயப்படுத்த அனுமதிப்பது வேறு.

உங்க peace-க்கு ஒரு boundary தேவை. ❤️

இந்த அனுபவம் உங்களுக்கு இருந்திருந்தால், இந்த reel-ஐ save பண்ணுங்க.

இதே pattern-ல சிக்கியிருக்கும் ஒருத்தருக்கு share பண்ணுங்க.

“No more” என்று comment-ல் சொல்லுங்க. 👇

02/09/2026

உங்க எதிர்காலத்தில் இருக்கும் நீங்கள், இன்றைய உங்களை விட உங்களை அதிகமாக நம்பி இருக்கலாம்… ✨

உளவியலில் இதை Self-Continuityன்னு சொல்றாங்க.

அதாவது, இன்றைய நீங்களும், எதிர்காலத்தில் நீங்கள் ஆகப்போகிற நீங்களும் இரண்டு வேறு நபர்கள் இல்ல;

ஒரே வாழ்க்கைப் பயணத்தின் தொடர்ச்சி என்று உணர்வது.

ஆராய்ச்சிகள் சொல்வது என்னன்னா, தங்களோட எதிர்காலத் தோற்றத்துடன் நெருக்கமாக உணர்கிறவர்கள், நீண்டகால இலக்குகளுக்காக இன்றே நல்ல முடிவுகளை எடுக்க அதிக வாய்ப்பு இருக்கலாம்.

அதனால், இன்று ஒரு வாய்ப்பை எடுத்துப் பாருங்க.

ஒரு சின்ன அடியை எடுத்து வையுங்க.

உங்க எதிர்காலத்துக்கு உதவும் முடிவை, இன்றே தேர்வு செய்யுங்க. ❤️

29/08/2026

“நீ தான் கோபக்காரன்… பிரச்சனை உன்னாலதான்!” 😔

இந்த வார்த்தையை நீங்க அடிக்கடி கேட்கிறீங்களா?

சில உறவுகளில், ஒருவர் தொடர்ந்து உங்களை provoke பண்ணலாம், அவமானப்படுத்தலாம், குற்றம் சாட்டலாம் அல்லது emotional-ஆ அழுத்தம் கொடுக்கலாம்.

நீண்ட நாட்கள் பொறுத்துக்கொண்ட பிறகு, ஒரு கட்டத்தில் நீங்க கோபமாக react பண்ணலாம்.

அப்போ என்ன நடக்கும்?

அவர்கள் செய்த எல்லாவற்றையும் மறந்துட்டு… உங்க reaction-ஐ மட்டும் காட்டி, “பார்த்தியா? பிரச்சனை உன்னிடம்தான்!”ன்னு சொல்லலாம்.

இந்த மாதிரியான pattern-ஐ Reactive Abuse என்று குறிப்பிடுவார்கள்.

ஆனால் ஒரு முக்கியமான விஷயம்: கோபமாக react பண்ணுவது சரி என்று இதனால் அர்த்தமில்லை. அதே நேரத்தில், ஒருவரின் reaction-ஐ மட்டும் பார்த்து முழு கதையையும் தீர்மானிக்கக் கூடாது.

இந்த video உங்களுக்கு relatable-ஆ இருந்தா SAVE ❤️

ஒருவருக்கு இது தேவைப்படலாம்… SHARE பண்ணுங்க.


25/08/2026

“எல்லாம் தவறாக போயிடுமோ?” 😰

உண்மை என்ன தெரியுமா?

நடக்காத ஒரு future-க்காக,
இன்றைய peace-ஐ இழக்காதீங்க. 🧠

உங்க mind prediction machine… future பார்க்கும் machine கிடையாது. 🔥

இதை overthink பண்ணுற ஒருத்தருக்கு SHARE பண்ணுங்க. ❤️

“நான் பயப்பட மாட்டேன்” என்று COMMENT பண்ணுங்க. 👇

22/08/2026
19/08/2026

Decision எடுக்க முடியாம குழப்பமா? 🤯

Perfect decision-னு ஒன்று கிடையாது.

உங்களுக்கு Peace தருவது எது?
உங்களை Grow பண்ணுவது எது?

அதை choose பண்ணுங்க. ❤️

ஏன்னா… சரியான decision-ஐ தேடாதீங்க. எடுத்த decision-ஐ சரியானதாக மாற்றுங்க. 🔥

இந்த video உங்களுக்கு useful-ஆ இருந்தா SAVE பண்ணுங்க 📌
Decision எடுக்க முடியாம struggle பண்ணுற ஒருத்தருக்கு SHARE பண்ணுங்க. ❤️

“நான் முடிவு எடுக்கிறேன்.” என்று comment பண்ணுங்க. 👇

TamilMotivation

14/08/2026

உங்க Problem-ஐ மட்டும் பார்த்துட்டே இருந்தா… Solution தெரியாது. 🧠

Problem வந்தவுடன் Panic ஆகாம, உங்க Mind-ஐ Solution Mode-க்கு மாற்ற இந்த 3 Steps-ஐ Try பண்ணுங்க! 🔥

✨ STEP 1 — ASSUME
“இது எனக்கு எதிராக இல்லை… என்னோட நன்மைக்காகத்தான் நடக்குது” என்று நினைத்துப் பாருங்க.

✨ STEP 2 — ORDER
“எனக்குள்ள இருக்குற அறிவு, இந்த Problem-க்கான Solution-ஐ சரியான நேரத்தில் எனக்கு காட்டும்” என்று சொல்லுங்க.

✨ STEP 3 — LET GO
அதே Problem-ஐ திரும்பத் திரும்ப யோசித்து உங்க மனசை கஷ்டப்படுத்தாதீங்க.

“இந்த Problem முடிஞ்சுப் போச்சு. நான் Solution-ஐ நோக்கி போய்க்கிட்டிருக்கேன்” என்று உங்க கவனத்தை மாற்றுங்க. ❤️

நினைவில் வையுங்க: எல்லா Problems-க்கும் உடனடி Solution கிடைக்காது. ஆனால் Solution-ஐ தேடக்கூடிய மனநிலைக்கு உங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

📌 இந்த 3 Steps-ஐ மறக்காமல் இருக்க SAVE பண்ணிக்கோங்க.

இன்னைக்கே Try பண்ணப் போறீங்கன்னா “DONE” என்று Comment பண்ணுங்க! 🔥

இந்த வீடியோ இப்போ ஒரு Problem-ஐ எதிர்கொண்டிருக்கிற ஒருவருக்கு தேவைப்படலாம். அவர்களுக்கு SHARE பண்ணுங்க. ❤️

07/08/2026

அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சின்ன சவால்… ✨

நாளை காலை உங்கள் முதல் காபி அல்லது டீயை குடிக்கும் முன், ஒரே ஒரு வாக்கியத்தை மனதார சொல்லுங்கள்:

“எல்லாமே எனக்கு சாதகமாகவே நடக்கிறது.” ❤️

ஒரே நாளில் வாழ்க்கை மாறாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் உங்களிடம் பேசும் வார்த்தைகள் உங்கள் மனநிலையையும், உங்கள் செயல்களையும் மாற்ற முடியும்.

நல்லதை எதிர்பாருங்கள். நல்ல வாய்ப்புகளை கவனிக்கத் தொடங்குங்கள்.

💬 கமெண்டில் “எல்லாமே எனக்கு சாதகமாகவே நடக்கிறது” என்று எழுதுங்கள்.

💾 இந்த Reel-ஐ Save செய்து, நாளை காலை மீண்டும் பாருங்கள்.

📤 இதை நம்பிக்கை தேவைப்படும் ஒருவருக்கு Share செய்யுங்கள்.

#மனநிலை #தமிழ்

05/08/2026

சிலர் உங்களிடம் பொய் சொல்ல மாட்டார்கள்… அதைவிட ஆபத்தான ஒரு விஷயத்தை செய்வார்கள்.

உங்களுடைய உண்மையையே நீங்கள் சந்தேகப்பட வைப்பார்கள்.

“நீ ரொம்ப Overthink பண்ணுற…”
“நீ ரொம்ப Sensitive…”
“இதெல்லாம் உன் கற்பனை…”

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்:

ஆரோக்கியமான உறவு உங்கள் குரலை மதிக்கும். Manipulation உங்கள் குரலை மௌனமாக்கும்.

இன்று இந்த ஒரு கேள்வியை மட்டும் உங்களையே நீங்கள் கேளுங்கள்:

“இந்த மனிதருடன் பேசிவிட்டு வந்த பிறகு, நான் என்னைப் பற்றி அதிக நம்பிக்கையோடு இருக்கிறேனா… அல்லது என்னையே சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டேனா?”

உங்கள் மன அமைதியை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். சரியானவர்கள் உங்கள் நம்பிக்கையை வளர்ப்பார்கள்; தவறானவர்கள் அதை உடைப்பார்கள்.

💬 இந்த Reel உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், “I DESERVE BETTER” என்று கமெண்ட் செய்யுங்கள்.

இதை இப்படிப்பட்ட ஒருவரை சந்தித்து கொண்டிருக்கும் நண்பருக்கு கண்டிப்பாக Share செய்யுங்கள்.

இந்த Reel-ஐ Save செய்து வைத்துக்கொள்ளுங்கள். ஒருநாள் இது உங்களுக்கோ அல்லது வேறு யாருக்கோ மிகவும் தேவைப்படலாம்.

Address

SC

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+18436055791

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Harinarayanan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr.Harinarayanan:

  • Want your business to be the top-listed Media Company?

Share